Advertisement

இதோ பத்திரப் பதிவு இன்று , பதிவை முடிப்பதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்தில் காத்திருந்தனர்.
பதினொன்றரை மணி சொல்லியிருக்க இதோ ஒரு மணியாகி விட்டது அழைப்பது போல காணவில்லை.
அந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்தது பத்திரப் பதிவு அலுவலகம் அமர்வதற்கு இடம் கிடைக்கவில்லை.
கண்ணனும் சுந்தரியும் ஒரே மாதத்தில் பணம் பிரட்டியிருந்தனர். மலையை புரட்டிய வேலை தான் ஆனால் செய்து முடித்திருந்தான் கண்ணன்
அவனுக்கும் இது புதிதே, சுந்தரிக்கு உழைக்க தெரியும் பணத்தை பெருக்க தெரியும் ஆனால் அதை கையாள தெரியாது.
அதாகப் பட்டது சுந்தரியிடம் நீ உன் அப்பா குடுத்ததுன்னு ஒரு தடவை குட்டியா குட்டியா கட்டி தங்கம் வெச்சிருந்தியே அது எங்கே உன் கிட்ட என்ன என்ன நகை இருக்கு நான் பேங்க் ல போட்டது இல்லாம வேற பணம் வெச்சிருக்கியா என்று கேட்க
சாமி அறை என்று தனியாக எதுவும் இல்லை ஒரு அலமாரி அடித்து அதில் சாமி அறை வைத்திருந்தனர். அதற்கு கீழே ஒரு ட்ரன்க் பெட்டி இருக்க அதற்கு மேல் பூஜை பொருட்கள் இருக்க, இந்த பொட்டிக்குள்ள  இருக்கு என்றாள்
சிலது பீரோவில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்
அம்மாடி என்று அசந்து விட்டான்
அவர்களின் தோற்றத்தை வைத்து இருப்பிடம் வைத்து அவர்களின் நடை உடை பாவனை வைத்து இவ்வளவு வசதி என்று யாரும் அனுமானிக்க கூட மாட்டார்
அதில் குட்டியாக நூறு கிராம் தங்கக் கட்டிகள்,   
இதற்கு தான் அவ்வளவு பிடிவாதம் பிடித்து என் அப்பா என்னை கட்டிக் கொடுத்தாரா என்று தான் தோன்றியது.
ஆம் பல சமயம் அவன் அப்பா அவனை திருமணம் செய்து கொடுத்து விட்டதாக தான் தோன்றியது அவன் சுந்தரியை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தோன்றவில்லை
அந்த மனிதனை நினைவு படுத்தி பார்த்தான், நியாபகத்தில் வரவில்லை சுற்றி பார்க்க அவரின் படம் சுவரில் மாட்டியிருந்தது.
அனுபவிக்க தெரியாத மனிதன்!
அவனின் பார்வை அப்படி!
ஆனால் உண்மையில் வாழ்க்கையில் பணத்திற்கும் வசதி வாய்ப்புகளுக்கும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காத மனிதன் என்பது தான் உண்மை. இது சேர்த்தது எல்லாம் கூட மகளுக்காக மட்டுமே. அவருக்கு பணம் காசு ஒரு பொருட்டில்லை ஆனால் செல்வம் அவரது உழைப்பில் குவிந்தது.
அது கண்ணனின் அப்பாவிற்கு தெரியும் அதுதான் அத்தனையும் தன் மகனிற்கு வரவேண்டும் என்று கிடைத்த சந்தர்ப்பம் விடாமல் திருமணம் முடித்தார்.
கண்ணனோ திருமணத்தை முடித்தே விட்டான் , அவர் ஆக்க முடிக்க இவன் அழிக்க முடித்து விட்டான்.       
இந்த தீவிர சிந்தனையில் இருந்ததால் சுந்தரியை கவனிக்கவில்லை ஆனால் அவள் கண்ணும் கருத்துமாய் இவனை தான் பார்த்திருந்தாள்
இவன் கவனம் கலைந்து அவளை பார்த்தவன் இத்தனை வசதி இன்னும் நல்ல வசதியான குடும்பம் பார்த்திருக்கலாம் என்னை ஏன் பார்த்தாரு உங்கப்பா என
அதை எங்கப்பாவை தான் கேட்கணும் என்று பிகு எல்லாம் செய்யவில்லை
எங்கப்பாக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அதுவும் உங்கப்பா வரும் போது என் பையன் பாருடா என்னமா இங்கிலீஷ் பேசறான் சொல்வாரு உங்க மார்க் சொல்வாரு எப்பவும் புகழ்ந்து சொல்வாரு
அதுவுமில்லாம உங்களை அப்பப்ப பார்த்தாரு தானே அவருக்கும் உங்களை பிடிக்கும் அதுதான் அவருக்கு உடம்பு சரியில்லை எதுவும் ஆகிடுமோன்னு அவசர அவசரமா பேசி உங்களுக்கு கல்யாணம் கட்டி வெச்சாரு
அதுவும் நான் வீட்டுக்கு திரும்ப வந்த பிறகு தப்பு பண்ணிட்டமோன்னு ஒரு குற்ற உணர்ச்சி அவரை மொத்தமா முடிச்சிருச்சு
மன்னிச்சுக்கோ கண்ணு தெரியாம தப்பு பண்ணிட்டேன் பல முறை என்கிட்டே சொல்லிட்டே இருப்பாரு,  என்ன இப்போ நீ இந்த குழந்தையை கலைச்சிடு, நான் இன்னொரு கல்யாணம் செஞ்சு வைக்கறேன் உன்னை தனியா விட்டுட்டு எப்படி போவேன்னு சொன்னாரு
இதை கண்ணன் அதிர்ந்து கேட்க, அவள் நிறுத்தாது பேசினாள்  
ஆனா நான் சொல்லிட்டேன் அந்த பையனும் இப்படி இருந்தா நீ என்ன பண்ணுவப்பா ன்னு, ஒரு கல்யாணம் போதும் எனக்கு , இனி நீ இப்படி குழந்தையை கலைக்க எல்லாம் பேசக் கூடாதுன்னு கண்டிசனா சொல்லிட்டேன்
சொல்லப் போனா நீங்க விவாகரத்து நோட்டிஸ் அனுப்பறதுக்கு முன்னமே இதை சொல்லிட்டார், உங்க வீட்ல பேசின பேச்செல்லாம் அவர் மனசை ரொம்ப நோகடிசிடுச்சு அவன் வேணாம் உனக்கு கண்ணு என் கண் முன்ன வளர்ந்த பையன்னு நம்பி மோசம் போயிட்டேன்னு சொன்னாரு
என் கவலை தான் அவரை சீக்கிரம் அடிச்சிடுச்சு, இல்லைன்னா இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருப்பார்  
எப்போன்னு தெரியாம தூக்காதிலேயே போயிட்டார் என்று பேசப் பேச அவளின் கண்களில் கண்ணீர்   

Advertisement