Advertisement

அப்படி ஒரு கோபம் கண்ணனுக்கு பொங்க, மகனுக்கு சண்டை என்று புரியக் கூடாது என்று அவளை நெருங்கி நின்று அவனையும் என்கிட்டே இருந்து பிரிச்சிடாதீங்கன்னா வேற யாரைடி உன் கிட்ட இருந்து பிரிச்சேன் என்று வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்ப,
அவ்வளவு தான் தேம்பி தேம்பி அழுதிருந்தவள் ஓ வென்று கத்தி அழ
மகனை அவசரமாய் தூக்கி கண்ணன் கையினில் வைத்துக் கொள்ள, அம்மாவை இப்படி அழுது பார்த்திராத அபி அப்படியே பயத்தில் அப்பாவின் கழுத்தை கட்டிக் கொள்ள,
அதனை பார்த்தவள் போங்க போங்க எனக்கு யாரும் வேண்டாம் போங்க நீயும் போடா என்று அழ
புடிடி உன் பையனை நீயே வெச்சிக்கோ சும்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ற என்று கண்ணன் அவளிடம் வேகமாய் குழந்தையை திணிக்க,
ஏற்கனவே தண்ணீரில் ஆட்டம் போட்ட அபிக்கு இப்போது அழுத களைப்பும் சேர்ந்து கொள்ள, சில நிமிடங்களில் உறங்க ஆரம்பித்தான்.
சுந்தரியை பார்க்கவே பரிதாபமாய் இருந்தது,
ஆனாலும் பொங்கிய கோபம் அவனை அருகில் செல்ல விடவில்லை.
அவன் எழுந்து போய் வேஷ்டியும் பனியனும் அணிந்து வந்தான்.
அப்போதும் சுந்தரி எப்படி இருந்தாலோ அப்படியே அமர்ந்திருந்தாள் மகன் வெற்றுடம்பாய் இருக்க
அருகில் சென்றவன் மகனை தூக்க அப்படியே திடுக்கிட்டு மகனை இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள் என்னவோ மகனை கண்ணன் அவளிடம் இருந்து பிரித்து தூக்கி கொண்டு போவது போல
ஏய் விடுடி அவனை ரொம்ப தான் இப்படி படுக்க வெச்சா அவனுக்கு குளிராது , இவளும் ஒரு மண்ணையும் அனுபவிக்க மாட்டா என்னையும் பையனையும் கஷ்டப் படுத்துறா எனக்கு இங்க வசதி பத்தலைன்னு கேட்டும் எனக்கு எதுவும் உன்னால வாங்கிக் கொடுக்க முடியலை இதுல பையனை விட மாட்டளாமா என் பையனையும் என்னையும் விடு உன் பணத்தை நீயே கட்டிட்டு அழு,
இல்லை தெரியாம தான் கேட்கறேன் சாரு இப்படி ட்ரெஸ் பண்ணினா நான் சொல்ல மாட்டேனா அவ கிட்டயும் இப்படி தான் சொல்வேன்  
என்னவோ இவ பெரிய இவ மாதிரி இவ அழகா இருந்தா தான் திரும்பி பார்க்கற மாதிரி ஒரு பேச்சு
பேச்சு மட்டும் தான் முதலாளி மாதிரி வேற எதுலையும் கிடையாது
உங்கப்பா உனக்கு சமமா யாரையாவது பிடிக்க வேண்டியது தானே அழுக்கு லுங்கியும் பரட்டை தலையுமா என்னை ஏண்டி தேடி வந்து பிடிச்சீங்க
விட்டுட்டு போனவன் தான் வந்துட்டேன் இல்லை அதை சொல்லி சொல்லி தினமும் குத்தி காட்டுவியா இதுக்கு தான் சொல்றது நல்லதுக்கே காலமில்லைன்னு, அப்போவும் நான் டைவர்ஸ் வேண்டாம்னு சொன்னேன் கேட்டியா நீ  
என்னவோ உழைக்கவே பிறந்தவ மாதிரி காலையில இருந்து நைட்டு வரைக்கும் வேலை செய்யற வேலை வாங்கற எதையாவது அனுபவிகிறியா இல்லை நீயும் அனுபவிக்கலை எனக்கு எதுவும் செய்யலை காசை எடுத்து பொட்டிக்குள்ள வெச்சிக்கோ செல்லரிச்சு போகட்டும்
எனக்கு காசு வேணும்னு கேட்டும் கூட நீ எனக்கு குடுக்கலை எங்கப்பா கிட்ட வாங்கிட்டு வர்றேன் வெளில போறேன் வர்றேன் பெட்ரோல் கூட காசில்லாம நிப்பனா என்று நிற்காமல் பேச
சுந்தரிக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை
நான் தப்பு தான் பண்ணினேன் மன்னிப்பும் கேட்டாச்சு இன்னும் என்ன சொல்ற எவ்வளவு பொறுமையா பேசினாலும் குத்தி குத்தி பேசற ஒரு நிமிஷமாவது நீ பண்றது சரியா இல்லையான்னு யோசிக்க மாட்டியா என்ன அவ்வளவு பிடிவாதம்
போ போ நீ எப்படியோ போ என் மகனை எப்படி நல்லா வெச்சிக்கணும்னு எனக்கு தெரியும், சொல்லணும்னு டீ சொல்லணும் எங்கப்பாவை சொல்லணும் என் வாழ்க்கையே முடிச்சிட்டார்
குடு அவனை என்று ஏறக்குறைய பிடிங்கினான். பின்பு அவனுக்கு உடை அணிவித்து தூக்கி கொண்டு வெளியில் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டான்    
 மனது வெறுத்து போனது, எவ்வளவு தான் இறங்கிப் போவது, மொத்தமாய் வெடித்து விட்டான்   
மகனை அவன் பிடுங்கி சென்றதில் தான் ஸ்மரணை வந்து புடவையை சரியாய் கட்டினாள். மனது முழுக்க வலி கண்களில் நீர் நிற்காமல் வந்தது அழக் கூட முடியவில்லை.  
அப்படியே சுவரில் சாய்ந்து அமர்ந்தவள் தான், தலையை துவட்டாத ஈரம் சேர அழுததும் சேர தலை வலி தெரிக்க ஆரம்பிக்க, உணவும் உண்ணாதது மனதின் சோர்வு எல்லாம் சேர்ந்து காய்ச்சல் வர வைத்தது.
கண்ணனுக்கு உறக்கமே இல்லை, கொசுக் கடி வேறு அதிகமாய் இருக்க அபி திரும்பி திரும்பி படுக்க , மகனை தூக்கி கொண்டு உள்ளே சென்றான் பேன் அருகில் படுக்க வைக்க

Advertisement