Advertisement

நிச்சயம் அவளை விட்டு போகும் எண்ணமில்லை, ஆனால் இறங்கி போய் பேச மனதில்லை.
இன்று சுந்தரியிடம், “டீ வை” என்று சொல்ல மனதில்லாமல் அவனாய் வைத்து குடித்துக் கொண்டவன், வீட்டில் அபிக்காய் வைத்திருக்கும் பிஸ்கட் டையும் நான்கைந்து வாயில் போட்டுக் கொண்டவன் பின்பு வெளியே சென்றிருக்க பார்த்தும் பார்க்காத மாதிரி அங்கே இங்கே திரிந்த சுந்தரி க்கு தோன்றியது 
அவன் பசியில் தான் அப்படி செய்கிறான் என்பது கூட அவளுக்கு விளங்கவில்லை.
சண்டைகள் சகஜம் போல சாமாதானங்களும் சகஜமாக வேண்டும்.. கண்ணனுக்கு மனதில்லை சுந்தரிக்கு வரவில்லை  
—————————————————————————-  
“இவ்வளவு பெரிய பையன் ஆகிட்டேன்… எங்கம்மா ல்லாம் ஒரு நாள் கூட என் வயிற்ரை வாட விட்டது கிடையாது” என்றான் முறைப்பாக 
“நான் நல்ல அம்மா கிடையாது… அதனால நான் இப்படி தான்… ஆனா நீங்க ரொம்ப நல்லா அப்பா… அதான் பையன் பொறந்ததும் கைல வாங்கி அவனை ஒவ்விவொரு நாளும் ரசிச்சு அவனை பார்த்து பார்த்து வளர்க்கறீங்க”
—————————————————————————————————  
சண்டையும் இல்லை… உரிமை பேச்சுக்களும் இல்லை… ஆனால் தொழில் பேச்சுக்கள் மட்டும் இருந்தது.
டீ அவளாய் கொடுத்தால் குடிப்பான் , சமைத்து வைத்திருந்தால் அவனே பரிமாறிக் கொண்டு உண்டான், படுக்கையும் வெளியில் கயிற்ருக் கட்டிலில் தான், 
இதெல்லாம் வடிவு பாட்டிக்கு மட்டுமே தெரியும்
நேற்றிலிருந்து அவளுடன் இருக்கும் ஒரு வயதான ஜீவனின் மனம் படும் பாடு அவருக்கு தான் தெரியும்.
ஆம் அவளின் பாட்டி தான் , ராசா இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்கு இவ எதுவும் சுணக்கம் காமிச்சு திரும்ப போயிருமோ மனதினில் இது ஓட 
——————————————————————————————-  
“பேச்சுக்கு கூட இனி அப்படி சொல்லாத திரும்ப வாழ ஆரம்பிச்சிட்ட அப்போ இந்த மாதிரி பேச்சு அந்த புள்ளையை கஷ்டப் படுத்தும்.. என்ன நான் சொல்றது புரியுதா?”
“இப்போது தான் சுந்தரியோட இருக்க… அவளை பாரு… மகனை பாரு”
“நீ எதையும் குழப்பாத சுந்தரியை மட்டும் பாரு.. சின்ன வயசுல இருந்தே என் கண் முன்ன வளர்ந்த புள்ள தனியாவே இருந்துடுச்சு அதிகம் யாரோடையும் பழக்கமில்லை அதுதான் உங்கம்மா பேசவும் நீயும் விவாகரத்து அனுப்பவும் போயிடுச்சு” 
“நான் விவாகரத்து எல்லாம் குடுக்க மாட்டேன்னு சொல்ல கூட தெரியலை… பார்த்துக்கோ” 
‘என்னத்த பார்க்க’ என்ற சலிப்பு தான் அவனுள் 
———————————————————————————————-  
“இது வேண்டாம்… நீ நான் கொடுத்ததை கட்டு , அதுதான் நீ போடணும்” 
“எனக்கு அது வேண்டாம்… நான் இப்படி தான்… இப்படி தான் கட்டுவேன்!”

Advertisement