Advertisement

வீடு வந்து விட்டனர். வீட்டை நிர்வகிக்கும் சமைக்கும் கணவன் மனைவிக்கு விடுப்பு கொடுத்து விட்டதால் கௌசல்யா எல்லா பொறுப்பையும் வீடு வந்த வுடனே தனதாக்கி கொண்டாள்.
ரூமிற்கு சென்று படு என்றதற்கு இல்லை ஹால்ல இருக்கேன் என்று ஷர்மி அங்கேயே தான் இருந்தாள். ஹாஸ்பிடலில் இருந்த வரை படுத்து தானே இருந்தாள்
எதுன்னாலும் எனக்கு போன் பண்ணு, பாக்டரி எல்லாம் போட்டது போட்டபடி வந்துட்டேன். என்னனு பார்த்துட்டு சீக்கிரம் வந்துடறேன் என்று சொல்லி சென்றான்.
சந்தோஷும் இவளை விட்டதும் கிளம்பி இருந்தான், ஈவ்னிங் வர்றேன் பேபி என்றபடி. 
அப்போதே மணி பன்னிரண்டு கௌசல்யா மதிய உணவிற்கு தயார் செய்ய, வாசன் மகளுக்கு உதவ சமையல் அறையில் இருந்தார்.
வேகமாக உணவை தயார் செய்த போது ஒன்றரை மணி நேரம் ஆகி விட,
வேகமாய் கொண்டு வந்து உணவு மேஜையில் வைத்த கௌசி, அண்ணி சாப்பிட வாங்க என்றாள்
ஷர்மிக்கும் நல்ல பசி, உண்டு முடித்தவள், நான் போய் தூங்கட்டுமா என்று கேட்க
என்ன அண்ணி நீங்க என் கிட்ட பெர்மிஷன் கேட்கறீங்க
இல்லை எனக்கு பெருசா எதுவும் தெரியாது ஆனா ஹெல்ப் பண்ணலாம் வரலாம்னா அந்த சமைக்கற ஸ்மெல் ல எனக்கு வாமிட்டிங் சென்சேஷனா இருக்கு அது தான் வரலை என்று விளக்கம் கொடுக்க,
அண்ணா க்கு ரொம்ப கோபம், அம்மாவை திட்டி எங்களை அப்போவே ஊருக்கு அனுப்பிட்டார். திரும்ப முந்தா நேத்து நைட் நீங்க ஹாஸ்பிடல் ல அட்மிட் ஆகியிருக்கரத்தை விசாலி அத்தை அம்மா கிட்ட சொல்லியிருப்பாங்க போல,
அம்மா என்கிட்டே சொன்னாங்க நான் அப்பா கிட்ட சொன்னேன்
தாதாத்வும் பாட்டியும் என்னவோன்னு பயந்துட்டாங்க அவங்க ஊருக்கு வர்ரேன்னு பிடிவாதம், அப்பா தான் நாங்க முதல்ல போய் பார்க்கரோம்னு என்னை கூட்டிட்டு வந்துட்டார் என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
ஒஹ் என்று முடித்துக் கொண்டாள் ஷர்மிளா வேறு எதுவும் கேட்கவில்லை, பின் உறங்க சென்று விட, ரவீந்திரன் வந்த போது மாலை ஐந்து மணி
நேரே சென்று ஷர்மியை பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில், பின் உணவு உண்ண வந்தவன் வேகமாய் உண்பதிலேயே அவனின் பசியின் அளவு தெரிய,
இல்லை கௌசி வந்துடலாம்னு இருந்தேன் அதான் எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துட்டேன், இனி நாளைக்கு தான் போகணும் என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே, விசாலியும் கேசவனும் வந்தனர் கூட விசாலியின் அம்மாவும் தம்பியும்.
நேற்று ஹாஸ்பிடல் வந்தது தான் கேசவனும் விசாலியும், நாளை டிஸ்சார்ஜ் வர வேண்டியதில்லை என்று ரவி சொல்லியிருக்க அவர்கள் வந்திருக்க வில்லை
விசாலியின் அம்மா ஹாஸ்பிடலில் வந்து பார்க்க கேட்டிருக்க அதற்குள் ஷர்மி டிஸ்சார்ஜ் ஆகியிருக்க, பார்க்க வந்தனர்.
அவர்களை பார்த்த ரவிக்கு முகம் மாறாமல் வாங்க என்று சொல்ல வெகுவாய் சிரமப் பட்டு போனான்
நிச்சயம் இன்றைய மனநிலையில் ஷர்மி அதை எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாது. உண்மையில் ஷர்மியை விட அவனுக்கு தான் பொறுக்க முடியாமல் போகப் போகிறது என்று தெரியவில்லை. ஹி இஸ் லைக் அ மான்ஸ்டர் என்ற கூற்றை உறுதிப் படுத்தப் போகிறான் என்று தெரியவில்லை.     
அது ஷர்மி ஹாஸ்பிடல்ல இருந்தா இல்லையா அம்மா பார்க்கணும்னு பிடிவாதம் என்று விசாலி தயங்கி தயங்கி சொல்ல
என்ன பதில் சொல்வது என்று கூட ரவிக்கு வரவில்லை.
அதனால என்ன அத்தை இருக்கட்டும் ஆனா அண்ணி இப்போ தான் தூங்கினாங்க டாக்டர் தூங்கும் போது எழுப்ப வேண்டாம் சொல்லியிருக்காங்க, நீங்க பேசிட்டு இருங்க அண்ணி எழுந்தா பாருங்க இல்லை இன்னொரு நாள் பார்க்கலாம் என்றாள் தெளிவாய்
அம்மாவின் சாமார்த்தியம் அண்ணனின் சாமார்த்தியம் எல்லாம் ஒருங்கே அவளுக்கு வந்திருந்தது.
என்ன சாப்பிடறீங்க காபி யா டீ யா அப்பா பேசிட்டு இருங்க என்று கேட்டு சொல்லி உள்ளே சென்றவள், அடுப்பில் பாலை சிம்மில் வைத்து, மெதுவாக யாரின் கவனுமும் கவராமல் அண்ணி ரூம் சென்றாள்
உங்களுக்கு அவங்களை பார்க்க முடியும்னா வாங்க இல்லை தூங்கறாங்கன்னு maintain பண்ணிக்கறேன் என்று சொல்ல
கௌசி யின் இந்த சுபாவம் ஷர்மியை கவர
என்ன பண்ணட்டும் நீ சொல்லு என்றாள் புன்னகையுடன்
இரண்டு நாட்களில் கௌசி அண்ணியின் முகத்தில் பார்க்கும் முதல் புன்னகை,
இப்படியே சிரிச்சிட்டே இருங்க என்று கௌசி நெட்டி முறிக்க, ரவி சரியாக உள்ளே வந்தான்.
அவனுக்குமே அதை பார்த்ததும் சிரிப்பு.
என்ன கௌசி பண்ற என
அதுவா அண்ணி அழகா இருந்தாங்க திருஷ்டி எடுத்தேன் என

Advertisement