Advertisement

ஒரு முழு நாள் ஆனது ஷர்மியின் உடல் நிலை இயல்பிற்கு திரும்ப, ஊரில் யார்க்கும் ரவி சொல்லவில்லை. ஆனால் விசாலி சீதாவிடம், ஷர்மி க்கு உடல் நிலை சரியில்லை ஐ சீ யு வில் அட்மிட் செய்திருக்கிறான் ரவி என்று சொல்லியிருக்க, அவர் கௌசியிடம் சொல்ல, இப்படியாக கும்பகோணத்தில் வீட்டில் இருப்பவர் அத்தனை பேருக்கும் விஷயம் தெரிந்திருக்க, ஊரில் இருந்து வந்த அழைப்பு எதுவும் எடுக்கவில்லை.
உண்மையில் அவன் எந்த அழைப்பையுமே எடுக்கவில்லை. அவனும் சந்தோஷும் அந்த ஐசீயு வாசலில் இரவு முழுவதும் அமர்ந்திருந்தனர்.
இருவரும் ஒருவருக்கொருவர் பேசக் கூட இல்லை. அமைதியாய் அமர்ந்திருந்தனர். சந்தோஷ் விசாலியையும் கேசவனையும் வீட்டுக்கு அனுப்பியிருந்தான். அவளுக்கு ஒன்னுமில்லை பா , மானிடர் தான் பண்றாங்க. நீங்க கிளம்புங்க காலையில வாங்க என்று.
ரவி அரை மணிக்கு ஒரு முறை உள்ளே சென்று பார்த்து வந்தான். சந்தோஷ் செல்லவேயில்லை. தங்கை ஒரு வார்த்தை கூட தன்னுடைய உடல் நிலையை சொல்லவில்லையே என்பது அவனின் மனதை வெகுவாக பாதித்து இருந்தது.
எல்லாம் விட ஷர்மியும் ரவியை கண்களில் பார்த்துக் கொண்டாள் அவ்வளவே ரவியிடம் பேச முயற்சி செய்யவே இல்லை.            
மறுநாள் அதிகாலையில் கிளம்பி மனது கேட்காமல் வாசனும் கௌசல்யாவும் கிளம்பி வந்திருந்தனர். சீதாவை வா என்று இவர்கள் அழைக்கவேயில்லை. எல்லோருக்கும் பயம் ஷர்மிக்கோ குழந்தைக்கோ எதுவும் ஆகிவிடுமோ என்று.
சீதாவை நிற்க வைத்து தான் என்ன உனக்கு அப்படி ஒரு ஆணவம் எனக்கு தான் எல்லாம் தெரியுமென்று. அப்படி பார்த்தால் நான் தான் உன் மாமியார். நான் சொல்வதை இனி நீ கேள் பிறகு அவளிடம் சொல்வாய் என்று ஏகத்திற்கு பேசியிருந்தனர்.
இதோ ஒன்றுமேயில்லாமல் இருந்த குடும்பத்தை எடுத்து நிறுத்தி தங்கைகளை திருமணம் செய்து கொடுத்து என்று இத்தனை பொறுப்பாய்             இருக்கும் மகனை எப்போது பேசி வருத்தப் படுத்துவது மட்டுமல்லாமல் அவர்கள் இருவருக்கும் இடையில் திருமணம் ஆனா நாளே அவனை போக வைத்து பிரச்சனை செய்து, இப்போது அங்கு சென்று பிரச்சனை செய்து, இதோ பிள்ளதாச்சி பெண்ணை ஹாஸ்பிடலில் படுக்க வைத்து விட்டாய் என்று ஏகமாய் சாடி விட, வாசன் ஒரு வார்த்தை கூட பேசாமல், சீதாவை ஒதுக்கி வைத்து மகளை கூட்டிக் கொண்டு மனது கேளாமல் கும்பகோணத்தில் இருந்து வந்து விட்டார்.
இவர்கள் வந்து சேர்ந்த நேரம் தான் ஷர்மியை ஐ சீ யு வில் இருந்து ரூமிற்கு மாற்றினர்.
அங்கே இருந்து ரவி முகம் சுருக்கி தான் இவர்களை பார்த்தான். நீ போன் எடுக்கவே இல்லை என்னவோ ஏதோ ன்னு பயமாகிப் போச்சு பாட்டியும் தாத்தாவும் கிளம்பி வர்றேன்னு சொன்னாங்க, நான் பார்த்துட்டு வர்றேன்னு நான் தான் கிளம்பி வந்தேன். கூட எதுவும் தேவையா இருக்குமோன்னு கௌசியையும் கூட்டிட்டு வந்தேன் என்றார் படபடவென்று.
ஹாஸ்பிடல் ரூம் எல்லாம் கேசவனுக்கு அழைத்து தான் தெரிந்து கொண்டார். அதிலேயே அங்கிருந்தவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்று தெரிந்து தான் இருந்தது.  
அவருக்கு பயம் எங்கே மகன் எல்லோர் முன்னும் எதுக்கு வந்தீங்க என்று கேட்டு விடுவானோ என்று
அவருக்கு ரவி என்ன செய்வான் பேசுவான் என்ற அனுமானம் எல்லாம் இல்லை.
அங்கே தான் கேசவனும் விசாலியும் சந்தோஷும் இருந்தனர். சற்று பெரிய ரூம் என்றாலும் ஆறு பேர் இருக்கவும் கசகசவென்று இருக்க, பா நாம வெளில இருக்கலாம் என்று சந்தோஷ் விசாலியையும் கேசவனையும் நாசூக்காய் அழைத்து சென்றான்.
ஷர்மிக்கு இவர்கள் ஊருக்கு சென்றதும் திரும்ப வந்ததும் தெரியாது. ஏன் இப்படி பேசுகிறார் என்று பார்த்திருந்தாள். கௌசி அண்ணன் ஏதுவும் திட்டி விடுவானோ என்று பதட்டத்துடன் பார்க்க
எல்லோர் முனமும் விளக்கம் குடுத்து ஏன் இப்படி பண்றீங்க, ஏன் பா எல்லோரும் என்னை மாத்தி மாத்தி கீழ இறக்கி இப்படி பண்றீங்க.
நீதான் போன் பண்ணினா எடுக்கலை,
எனக்கு என்ன தெரியும் நீங்க ஷர்மி ஹாஸ்பிடல் ல இருக்குறது கேட்கறதுக்காக கூப்பிடறீங்கன்னு ஷர்மி இங்க இருக்கானு நான் சொல்லவே இல்லை அப்போ எனக்கு நீங்க அதுக்கு கூப்பிடறீங்கன்னு எப்படி தெரியும்
எனக்கு இவ டென்ஷனே பெருசு, அதுல யார் கூடவும் பேச பிடிக்கலை ஏன்பா என்றவனின் குரலில் அப்படி ஒரு வருத்தம்
வில்லன் ரேஞ்ச்க்கு ட்ரீட் பண்றீங்க என்னை அப்படி தான் நடந்துக்க வெக்கறீங்க, இவ்வளவு நாள் என் குடும்பம்னு உழைச்சதுக்கு அர்த்தமே இல்லாம பண்ணறீங்க  என்றான் சலிப்பான குரலில். ஷர்மி அவனையே தான் பார்த்திருந்தாள்.

Advertisement