Advertisement

“போகனுமா ?”என்று ஒரு வாரமாகவே கேட்டுக் கொண்டே இருந்தான்

“இது என்னோட அச்சிவ்மென்ட்… ரொம்ப பிரச்டிஜியஸ் வேலை …எல்லோருக்கும் சுலபமா கிடைக்காது… என் ஆசைக்கு கொஞ்சம் நாள் வேலை பார்த்துட்டு வர்ரேன்”

“எவ்வளவு நாள்?”

கு”றைஞ்ச பட்சம் ரெண்டு வருஷம்… அதுதான் காண்ட்ராக்ட்..”

அப்போதிருந்தே முகத்தை தூக்கி வைத்து தான் சுற்றிக் கொண்டிருந்தான்

அவளின் படிப்பு, அவளின் கனவு, தடை சொல்வது சரியல்ல என்று புரிந்த போதும் அவள் தானே அவனின் வாழ்க்கை இவ்வளவு நாள் தனியாய் இருந்த வாழ்க்கையில் வந்த உடனே செல்வது என்பது அவனால் முடியவில்லை

“அப்போ ஏன் முன்னமே மாத்தலை?”

“அதெல்லாம் மாத்தி உனக்கு என்னை பிடிக்க வைக்கனும்னு தோணலை, நீ வேற என்னை என்னவோ வயசானவன் மாதிரி பார்த்தியா..அதனால எப்போவும் விட என்னோட தோற்றத்துல அக்கறையை குறைச்சிட்டேன் … உனக்கும் எனக்கும் எழுவருஷ வித்தியாசம் தான் !”

‘என்னடா கான்செப்ட் இது?’ என்று மனதிற்குள் நினைத்தவள்,

“இப்போ மட்டும் ஏன் மாத்துனீங்க?”

“நீ அதையும் இதையும் பேசாம என்னோட மனைவியா முழுசா மாறிட்ட இல்லையா…உன்னை எனக்கு கொடுதுட்ட இல்லையா… அதுக்கு நான் உனக்கு ஏதாவது பரிசு குடுக்கணும்ன் தோணிச்சு… சோ மாறிட்டேன்”

‘காதலித்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறான்… அவளோடு வாழ்வும் ஆரம்பித்து விட்டான் என்ற சந்தோசம்’ என்று நினைத்தாள்.

அது இல்லை! அவனுக்காக ஒரு உறவு என்பது தான் அவனின் மகிழ்வுக்கு காரணம்.. யாரவது அவனுக்காய் யோசிக்க வேண்டும் காத்திருக்க வேண்டும் வாழ வேண்டும்… அவனின் எதிர்பார்ப்புகள் வேறு… அவனின் தேடல்கள் வேறு.

அதை உணரும் பக்குவம் ஜெயந்திக்கு இல்லை… அவளை உடலளவில் தேடுகிறான் என்று நினைத்தாள் அதுவும் இருந்தது அது ஜெயந்திக்கும் பிடித்து இருந்தது.

“ஏன் என் போன் எடுக்கலை?”

“எதுக்கு எடுக்கணும்?” என்றான் பட்டென்று

“என்ன கோபம்?” என்றாள் குரல் இறங்கியவளாக..

“டிக்கெட் அனுப்பி கூட உன்னால வரமுடியலைல்ல”

“நான் தான் வரமாட்டேன்னு தானே சொன்னேன்”

அவனின் கோபம் ஒரு அழுகையை கொடுக்க, அமைதியாகி விட்டாள்,

“பேசு…. பேசுன்னு சொல்றேன்ல!” என்று அதற்கும் கத்தினான்

ஏற்கனவே சென்றிருக்க வேண்டுமோ என்ற ஒரு குற்றவுணர்சியில் இருந்தவளுக்கு அவனின் கோபம் அப்படி ஒரு அழுகையை கொடுக்க… அலைபேசியிலேயே அவளின் தேம்பல் கேட்டது..

“என்ன தான் உன் பிரச்சனை ஜெயந்தி?” என்று அதற்கும் கத்தினான்

“ஒன்னுமில்லை… நான் அப்புறம் கூப்பிடறேன் “ என்று வைத்து விட்டாள்.  

Advertisement