Advertisement

வீட்டினர் யாருக்கும் அப்படி ஒரு திருப்தி இல்லை… ஏன் விமலனுக்கே இல்லை என்பது தான் உண்மை.. ஆம்! அவனை எது செய்ய சொன்னாலும் செய்வான்… அவனின் உயிரே
மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் போட்ட பிச்சை தான்!
ஆனால் அவன் உயிரை கூட கொடுப்பான் அதற்காக தங்கையை கொடுக்க முடியுமா?


‘நெஞ்சம் முழுவதும் நன்றி இருந்த போதும் நன்றிக்காக அமையும் திருமண வாழ்க்கை எத்தனை சிறப்பாய் அமையும் என்று சொல்ல முடியாது அல்லவா?
ஜெயந்திக்கு மருது வை பிடிக்காது போய் விட்டால் இருவர் வாழ்க்கையும் நரகம் அல்லவா?
அதுவும் அவனின் பின்புலம் தாதா என்கின்றனர் ஏதும் கேஸ் இருக்குமோ? ஜெயில் எல்லாம் சென்று வந்திருப்பானோ ?என்கௌண்டர் லிஸ்டில் எல்லாம் இருப்பானோ?’ இப்படி தான் தோன்றியது
– – – – – – – – – – – – – – – – – – – – – –  – – – – – – – – – – – – – – — – – – – – – – – – – – – – – – – – 

பூதம் வந்தே விட்டது என்று தோன்றியது கோபாலனிர்க்கு, தடை சொல்ல முடியாது.. !!

— – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – — – – – – – – – – – – – – –    

“உனக்கு பிடிச்சிருக்க ஜெயந்தி? பிடிக்கலைன்னா அவரோட வாழ்றது கஷ்டம். உனக்கும் கஷ்டம்… அவருக்கும் கஷ்டம். யாரும் அவருக்கு சொந்தம்னு கிடையாது.. அப்போ பிடிக்காம
போச்சுன்னா அவரோட நிலைமையும் கஷ்டம்”

— – – – – — – – – – — – – – — – – — – – – – – – – — – – – – – – – – – – – – – – – – — – – – – – — – –    

சஞ்சலம் ஜெயந்திக்கு சிறிதும் இல்லை… வீட்டில் எல்லோரும்
விஷயம் கேட்டதும் ஸ்தம்பித்து விட சிறிது நேரம் யோசித்தவள் சரி ன்னு
சொல்லிடுங்கண்ணா என்று விட்டாள்
மனதில் இருந்த பாரம் குறைந்து என்னவோ ஒரு விடுதலை உணர்வு ஏன் என்று சொல்ல
தெரியவில்லை
மாலையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அப்படி.. மருதுவின் கோபம் அதையும் விட அவனின்
கண்களில் தெரிந்த அவளிற்க்கான தவிப்பு.. யோசித்த இந்த க்ஷணத்தில் கர்வமாய்
உணர்ந்தாள்.
வேண்டாம் போடி ன்னு எல்லாம் சொன்னாலும் அவனால என்னை விட முடியலை தெள்ளத்
தெளிவாய் மனதிற்கு புரிந்தது.

— – – – – – – – – – – – – – – – – – – – – – – – – — – – — – – – – – – — – – – – – – – – – – — – — – – — – –   

“ண்ணா!”,என்று விமலனை கைபேசியில் அழைத்தவள், “உங்க பெல் பாட்டாம் முதலாளி கிட்ட
நான் பேசணுமே என
எதுக்கு என்றான் அவசரமாக

—- – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –  –  –  –  

“அது யார் கூட வர்றதுன்னு தயக்கம்… என்ன பேசறதுன்னு தயக்கம்… எனக்கு யார் கிட்டயும் போய் எனக்கு பொண்ணு பார்க்க போகணும் வாங்கன்னு கேட்க பிடிக்கலை” என்று விட்டான்.

‘ஷப்பா! இவனுக்கு ஈகோ மிகவும் அதிகம்’ என்று அந்த நொடியில் தெள்ளத் தெளிவாய் புரிய…

“இந்த மாதிரி விச்கேஷதுக்கு நாலு பேர் சேர்ந்து தான் வருவாங்க இதுல நீங்க இவ்வளவு தயங்க வேண்டிய அவசியமில்லை.. நான் பார்த்துக்கறேன்..

விஷால் வந்து கேட்டா நீங்க சரின்னு சொல்லி அவனோட வாங்க போதும்” என

“ம்ம் …சரி!” என்று விட்டான் உடனே

கூடவே. ‘உனக்கு பிடிச்சு சம்மதம் சொல்லிட்டியா?’ என்று கேட்க மனது துடிக்க, இனி ஒரு சண்டை இழுக்க அவன் தயாரில்லை..

Advertisement