அய்யா வல்லபா எந்திரியா அப்பா எழுப்ப சொல்றாரு என்று அம்மா நாயகி எழுப்ப,
அம்மாவின் ஒரு குரலுக்கே விழித்து விட்டான் வல்லபன், ஆனாலும் அப்பா எழுப்ப சொன்னாரு என்ற வார்த்தையில் மீண்டும் தேங்கி விட்டான். கண்களை திறக்கவேயில்லை
நாயகிக்கும் தெரியும் அவன் விழித்திருப்பான் என்று.
இரவு பன்னிரண்டு மணி அப்போது
வல்லபா என்ற அம்மாவின் கலங்கிய குரல் நெகிழ்த்த
என்னமா என்று தூக்க கலக்கத்தில் சோர்வாக எழுந்து உட்கார்ந்தான்
அப்பா பேசணுமாம் என்று கை பேசியை கொடுக்க
=================================
வல்லபா இங்கே ஒரே பிரச்சனை பொண்ணை காணோம்டா, நீ வா என
பொண்ணை காணோம்னா நாம என்ன பண்ண முடியும் ஏதாவது காதல் விவகாரமா இருக்கும் நீங்க ஊர் வந்து சேர்ர வழியை பாருங்க
இல்லைடா பொண்ணை சொல்லி வெச்சு தூக்கி இருக்காங்க நீ வா
பொண்ணை சொல்லி வெச்சு தூக்கினாங்கன்னா கூட இருக்குறவனுங்க எவ்வளவு உஷாரான ஆளுங்களா இருப்பாங்க, நாம கூட்டி வந்து விட்டாலும் திரும்ப தூக்குவான் எதுக்கு அவனுக்கு வேலை வெச்சிட்டு அப்படியே விடுங்க என்று எரிச்சல் குரலில் பேச
==================================
என்னப்பா நீங்க இந்த அழிச்சாட்டியம் பண்றீங்க
என்ன்னடா நீ பொண்ணு எங்க இருக்குன்னு கூட தெரியும் சொல்லிட்டு தூக்கிட்டு போறான் இங்க எவனும் போக மாட்டேங்கறாங்க என் தங்கச்சி அழுதுட்டு நிக்குது என்னை வேடிக்கை பார்க்க சொல்றியா, நீ வரலன்னா போ நான் போறேன் என்று அவர் பேச
எங்க போவீங்க எங்கயும் போக வேண்டாம் நான் வர்ரேன் என்று அந்த நேரத்தில் உடை கூட மாற்றமால் அப்படியே ஒரு சட்டையை அணிந்து கொண்டு வீட்டில் கைலி போல எப்போது வேஷ்டியை தான் அணிவான் அதனோடே கிளம்பினான்
என்னவோ தங்கச்சியாம் தொங்கசியாம் இத்தனை நாளா எங்க போயிருந்தாங்க இவங்க எல்லாம் உன் வீட்டுக்காரர் உருகு உருகுன்னு உருகறார்
வீட்டுக்கு வரட்டும் அவரை வீட்டை விட்டு இனி வெளியே விட்டா என்னன்னு கேளு என்று கிளம்ப
=============================
அம்மா ஊருக்குள்ள ஆயிரம் நடக்கும் எல்லாம் நம்ம தலை கொடுக்க முடியாது என்றான் கறாராக, உதவி பண்றேன் உதவி பண்றேன் ன்னு இருக்குற சொத்தை எல்லாம் அழிச்சு வெச்துமில்லாமல் அத்தனை பிரச்னையை வேற இழுத்து விடறார் இதை பார்க்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு என்று சலித்த படியே கதவை திறந்து வெளியே வந்தான்.
எங்கும் கும்மிருட்டு, ஆம் அவர்களின் வீடு அவர்களின் தோட்டத்தின் ஆரம்பத்தில் முதலில் அவ்வளவு பெரிய தோட்டமாக இருந்தது இப்போது ஒன்றுமில்லாமல் இரண்டு ஏக்கர் பூமி மட்டுமே இருந்தது. நேரத்திற்கு தக்கவாறு அதில் பயிரிட்டனர். அதில் சொல்லப் போனால் ஒரு வருவாயும் இல்லை.
அந்த காரிருள் யாருக்கும் பயம் கொடுக்கும் ஆனால் வல்லபனுக்கு பயம் என்பதே கிடையாது
அவன் பைக்கை உதைத்து கிளம்பிய வேகத்திற்கு மெதுவா போ கண்ணு என்ற அம்மாவின் குரல் செவியை தீண்டும் முன்னே பறந்திருந்தான்.