அன்றைய காலை முழுவதுமே ஒரு புன்னகை முகமாகவே இருந்தான் தமிழ்செல்வன்.

மதிய உணவிற்கும் வீட்டிற்கு சென்றான். நிறைய வேலைகள் இருந்தால் எங்கே இருக்கிறானோ அங்கே கடையில் உண்டு கொள்வான் இல்லை அக்காவே வாடா சாப்பிட்டு வேலையை பார் என்று அழைத்துக் கொள்வார்.

வீட்டிற்கு வருவது அரிது.

நிலா காலையில் மில் சென்று விட்டு ஒரு இரண்டு அல்லது இரண்டரை போல வந்தால் மீண்டும் செல்ல மாட்டாள்.

அவள் வரும் நேரத்தை கணக்கிட்டு வந்தவன்,

மேஜையில் இருந்ததை எடுத்துப் போட்டுக் கொண்டே நீ சாப்டியா கண்ணு என்றான்

சாதம் குழம்பு ஒரு பொரியல் இருந்தது. அவள் உண்டு விட்டு மக்களுக்கு என்று ஏதாவது தனியாய் அவளின் கைப்பட செய்வாள்.

அமைதியாய் அவனின் எதிரில் வந்து அமர்ந்தவள்

ஏன் எல்லாம் புதுசா பண்ற என்றாள் அமைதியான குரலில்

சமாதானமா போவோமோ கண்ணு என்றான் உணவில் கைவைத்துக் கொண்டே

எப்போ சண்டை போட்டோம் சமாதானமா போவ

சண்டையில்லையா அப்போ சரி என்றவன் உண்ணுவதில் கவனம் வைத்துக் கொண்டே

நீயும் சாப்பிடு அட்லீஸ்ட் ஹவுஸ் மேட் டா இருப்போம் என்றான் மனதினில் சீக்கிரம் அவளின் ரூம் மேட் ஆக வேண்டும் என்ற வேண்டுதலோடு

என்னவோ நீ செய்யறது எதுவும் சரியில்லை என்றாள் மீண்டும்

விடு கண்ணு பசிக்கும் சாப்பிடு என்றான் உரிமையாக

அவனை முறைத்து பார்த்தவள் ஒன்றும் பேசாமல் எழுந்து கொள்ள

ஒஹ் நான் சாப்பிட்டா நீ சாப்பிட மாட்டியா என்றவன்

அவனின் தட்டை எடுத்து கீழே அமர்ந்து கொண்டு இப்போ சாப்பிடு என

அவனின் மண்டையை உடைக்கும் ஆத்திரம் கிளர்ந்தது.

சாப்பிட்டுட்டு இருக்கேன் ன்னு பார்க்கறேன் உன்னைய கீழ உட்கார சொன்னேனா நானு, மண்டையை உடைச்சிடுவேன். யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க

எந்தர்ரா முதல்ல என்று அருகில் சென்றவள் அவனின் தட்டையும் கையில் எடுக்க

தூக்கி வீச போகிறாளோ என்று பயந்தே விட்டான்.

நீ என் பசங்களோட அப்பா போஸ்ட் ல இருக்க, அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ என்று கடினமாய் சொல்ல,

மீண்டும் எழுந்து டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டான் பரிதாபமாக

பின்னே தான் அவன் முன்னே தட்டை வைத்தாள்

வேகமாக உண்டு கொண்டிருந்தவனுக்கு உணவே இறங்கவில்லை.

சாப்பிடு என்று சொல்லி சமையலறை சென்று விட்டாள்

அவன் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே ஆம்லேட் எடுத்து வந்தவள் அவனுக்கும் கொடுத்து அவளுக்கும் உணவை வைத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்

அவள் உண்டு முடிக்கும் போது தான் இவனும் உண்டு முடித்தவன்

அவள் கை கழுவி வந்ததும் கன காரியமாக, உன்னோட ஹஸ்பன்ட் போஸ்ட் அது எப்போ லைவ் ல வரும் என்றான்

அதெல்லாம் கல்யாணமான கொஞ்சம் நாள்ல யே செத்துப் போச்சு என்றாள் நிஷ்டூரமாய்

மறுபடியும் உயிர் கொடுக்கலாமே

எரிச்சலாகுது உன்னோட இந்த பிஹேவியர் எல்லாம், தயவு செஞ்சு நிறுத்திக்கோ என்றாள் அடிக்குரலில்

முகத்தை பாவம் போல வைத்தவன் முயற்சி செய்யறேன் என்று சொல்லிச் செல்ல

அவனின் பக்கத்தில் டம்பளர் ஒன்று பறந்து வந்து விழுந்தது

என் மேல படக் கூடாதுன்னு தப்பா போட்டியா இல்லை தப்பா விழுந்திருச்சா

இருந்த கோபத்தில் இப்பொது சரியாக அவனை நோக்கி ஒரு சொம்பை வீச, அதனை கேட்ச் பிடித்தவன்… அருகில் இருந்த சோபாவில் வைத்து

நாளைக்கு கண்டினியு பண்ணலாம், சாயந்தரம் பிள்ளைங்க இருப்பாங்க என்று சொல்ல

வேகமாக ரூமின் உள் சென்று கதவை அடைத்து சாத்தினாள்.

அட ரொம்ப கோபப் படுத்திட்டோமோ, சரி கொஞ்சம் கேப் விட்டு அடிப்போம் என்ற நினைப்பு தான். எதுவாகினும் பின் வாங்குவதாக இல்லை.

இப்போ போகவா வேண்டாமா, கதவு திறந்து கிடக்கு என்ன செய்ய என்று யோசித்து இருந்தான்.

பிள்ளைகள் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்க, அதற்குள் கதவு திறந்தால் செல்லலாம் இல்லை அவர்கள் வந்த பிறகு செல்லலாம் என்று நினைத்தவன், திண்ணையில் சாய்ந்த வாக்கில் அமர்ந்து கொள்ள… சில நிமிடங்களில் உறங்கிவிட்டான்.