Advertisement

தூரிகை 7 :

 

வீட்டின் முன் காரை நிறுத்திய தேவா….வேகமாய் இறங்கி வீட்டினுள் சென்றான்.

இவன் பேசாம கார்ல கூட்டிட்டு வந்தான்…இப்ப என்னடான்னா அவன் பேசாம போறான்…!” என்று மனதில் நினைத்த கீர்த்தனா…அதைப் பற்றி பெரிதும் எண்ணாமல் உள்ளே சென்றாள்.

இவளைக் கண்டவுடன்…“மகாராணி வந்துட்டாங்க…!” என்றாள் கார்த்திகா.

அவளை அமைதியாய் பார்த்த கீர்த்தனா…”  “சொன்னாலும் சொல்லாவிட்டாலும்….. என்னோட அம்மா அப்பாவுக்கு நான் மகாராணி தான் அண்ணி…” “ என்று மிடுக்காய் மொழிந்தவள்….அவளை சிறிதும் சட்டை செய்யாமல் சென்றாள்.

இதைக் கண்டும் காணாமல்….மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவாவின் கண்களில் சின்ன மெச்சுதல் தெரிந்தது.

பத்மா….” “கார்த்திகா…!உன்னை எத்தனை முறை சொல்லியிருக்கேன்….இப்படி பேசாதேன்னு…!” “ என்று அதட்டினார்.

“என்னம்மா….? நேத்து வந்த மருகளுக்காக என்னையவே நீங்க திட்டுறீங்களா….?” என்று எரிந்து விழ…

அந்த சமயம் அங்கு வந்த ராஜா….” “அத்தை தலை வலிக்குது…ஒரு கப் காபி கிடைக்குமா….?” என்றான்.

“இங்க நான் கத்திகிட்டு இருக்கேன்…! உங்களுக்கு காபி கேட்குதா…?” என்றாள் கார்த்திகா.

“கார்த்திகா….ப்ளீஸ்….!எனக்கு ஏற்கனவே தலைவலி. நீ வேற ஏதாவது கத்தாத…” என்றான் சோர்ந்தவனாய்.

“நான் பேசுறது உங்களுக்கு கத்துற மாதிரி இருக்கா….?” என்று அதற்கும் திருப்பினாள்.

கீர்த்தனாவிற்கே அவனைப் பார்க்க பாவமாய் போனது.”இப்படியா ஒருத்தவங்க சிடு சிடுன்னு பேசுவாங்க…?” என்று நினைத்தபடி தன் போக்கில் தன் வேலையை செய்ய….

“இந்த வீட்ல மனுஷன் இருக்குறதா…?இல்லை வேண்டாமா….?” என்று கத்தினான் தேவா.

அவனின் ஒரு கத்தலில் அந்த வீடே அதிர…கீர்த்தனாவும் அதிர்ந்து திரும்பினாள்.தேவாவின் கத்தலில் கார்த்திகா கப்சிப் என்று அடங்கினாள்.

ராஜா நிம்மதியாய் மூச்சு விட்டபடி….தேவாவை நன்றி பார்வையுடன் பார்த்தான்.

சோபாவில் சட்டென்று அமர்ந்த தேவா.தலையின் மீது கைவைத்தவனாய்…. கண்மூடி அமர்ந்தான்.ஒரு நிமிடம் அவனையும் அவனது முகத்தையும் பார்த்த கீர்த்தனா….வேகமாய் சமையலறைக்குள் சென்று காபி போட்டு எடுத்து வந்தாள்.அப்படியே ராஜாவிற்கும் சேர்த்து காபி போட்டு கொண்டு வந்தாள்.

தன் நாசியின் அருகே வந்த காபியின் மணத்தில் கண் விழித்துப் பார்த்தான் தேவா.அந்த நிமிடம் அந்த காபி அவனுக்கு தேவையாய் இருக்க…. அமைதியாய் அதை வாங்கி பருகினான்.

அதைப் பார்த்த ராஜாவிற்கு சிறிது பொறாமையாகக் கூட இருந்தது.முகம் அறிந்து செய்யும் மனைவியின் அருமை பற்றி அவன் மட்டுமே அறிவான்.

காபியை குடித்து முடித்த தேவா…” “தேங்க்ஸ் கீர்த்தனா..!””””“ என்றான்.

அவன் அழைத்த விதம் ஏதோ வித்யாசமாய் தென்பட்டது கீர்த்தனாவிற்கு. ”

என்ன வித்தியாசம்….? இன்னைக்கு தான் உன் பேரை சரியா சொல்லியிருக்கான்…” என்று மனசாட்சி இடக்கு பண்ண…,

””“ஆமால்ல…” “ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். 

அலுவல் அறைக்குள் சென்ற தேவாவை பின் தொடர்ந்தாள் கீர்த்தனா.வேகமாய் சென்றவன் திடீரென்று நிற்க…அவன் வேகத்துக்கு பின்னால் வந்தவள்….சட்டென்று அவன் மேல் மோதிக் கொண்டாள்.

அந்த அதிர்வில் அப்படியே நின்றான் தேவா.சில வினாடிகளுக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டவன்….கோபமாய் திரும்பினான்.

“பார்த்து வரத் தெரியாது…இப்ப எதுக்காக இவ்வளவு அவசரமா என் பின்னாடி வந்த….?” என்றான் எரிச்சலாய்.

அவன் கோபமாய் பேசவும் கீர்த்தனாவின் விழிகள் சட்டென்று கலங்க…அதை வெளியில் காட்டாதவாறு மறைத்தாள் கீர்த்தனா.

அவளின் கூம்பிய முகத்தைப் பார்த்த தேவா…தன்னைத் தானே கடிந்து கொண்டவனாய்…” “சாரி….! இப்ப எதுக்காக என் பின்னாடி வர…?” என்றான் தன்மையாய்.

“அது வந்து…இல்ல…நான் இத்தனை நாள் ஹாஸ்ட்டல்ல தான் இருந்தேன்.அங்க இருந்து எனக்கு காலேஜ் ரொம்ப பக்கம்.ஆனா இங்க இருந்து போயிட்டு வர எனக்கு சிரமமா இருக்கு….அதான்…” “ என்று இழுத்தாள்.

“அதுக்கு…!” என்றான் தேவா.

“அப்பா வண்டி வாங்கித் தரேன்னு சொன்னார்.உங்க கிட்டயும் ஒரு வார்த்தை கேட்க சொன்னார்…அதான்”…“ என்றாள் மென்று விழுங்கி.

ஒரு நிமிடம் அவளையே பார்த்தவன்.. “வண்டியெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லிடு…!” என்றான்.

“ஏன்…?ஏன் வேண்டாம்…?” என்று சட்டென்று குரலை உயர்த்திக் கொண்டு போனவள்…அவனின் ஒற்றை முறைப்பில் அடங்கினாள்.

“வேண்டாம்ன்னு சொல்லிடுன்னு சொன்னா சொல்லிடனும்.அதை விட்டுட்டு ஏன்..?எதுக்குன்னு கேள்வி எல்லாம் கேட்க கூடாது…” “ என்றான்.

“எங்க அப்பா கேட்க சொன்னாரேன்னு தான் கேட்டேன்.மத்தபடி இதை எல்லாம் உங்ககிட்ட கேட்டு செய்யனும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை…” “ என்றாள் பட்டென்று.

அவசியமில்லாத பேச்சு எனக்கு எப்பவும் பிடிக்காது….போ வெளியே….!” என்றவன்…அவளை பட்டென்று வெளியே தள்ளி கதவை சாத்தினான்.

பிரமை பிடித்தவள் போல் இருந்தாள் கீர்த்தனா.”திமிர் பிடித்தவன்…. எவ்வளவு வேகமா வெளிய தள்ளுறான்.பிடிக்காத பொண்டாட்டிகிட்டயே இவ்வளவு திமிரா நடக்குறான்னா….இன்னும் பிடிச்சவளா இருந்தா…இவன் கிழித்த கோட்டை தாண்டவே கூடாதுன்னு சொல்லுவான் போல…” என்று பொருமினாள்.

கீர்த்தனாவை வெளியே அனுப்பியவனுக்கு மனம் கேட்கவில்லை. “இருந்தாலும் நீ இப்படி அவளை வெளியே தள்ளி கதவை சாத்தியிருக்க கூடாது தேவா…!” என்று அவன் உள்மனம் அவளுக்காய் இரக்கப்பட… வேகமாய் கதவைத் திறந்தான்.

ஆனால் அங்கு கீர்த்தனா இல்லாமல் போகவே….அவளைத் தேடி அறைக்கு செல்ல…அங்கு அவனை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

“பெரிய இவன்…!எங்கப்பா வண்டி வாங்கி குடுக்க…இவன் என்ன பெர்மிஷன் தர்றது…?எல்லாம் இந்த அப்பாவை சொல்லணும்…ஐயோ…! நாளைக்கு மறுபடியும் பஸ்ஸில் காலேஜ் போயி…வந்து…..ம்ம்ம்ம் கஷ்ட்ட காலம் …!கீர்த்தனா உன் பாடு இப்படியா ஆகனும்….” என்று புலம்ப….

அவளின் புலம்பலை பின்னின்று கேட்டவனது முகம் சிரிப்பில் ஆழ்ந்தது.வந்த சுவடு தெரியாமல் திரும்பி சென்றான்.

தேவா வந்ததையோ…அவன் பின்னின்று தன் புலம்பலைக் கேட்டதையோ அறியாத கீர்த்தனா….தன் வாய் வலிக்கும் வரை அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

தேவா மீண்டும் வெளியே கிளம்ப…”” “எங்கப்பா கிளம்பிட்ட..?” என்று பத்மா கேட்க…”,போயிட்டு வந்து, உங்ககிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு பார்க்குறேன்…பாய்…””’“ என்று கெத்தாய் செல்ல…

“இருந்தாலும் உங்க பையனுக்கு இவ்வளவு திமிர் ஆகாது…” “ என்று கார்த்திகா பல்லைக் கடித்தாள்.

“உனக்கு மட்டும் என்ன கம்மியாவா இருக்கு….?” என்று ராஜா துடுக்காய் கேட்க….” “ம்ம்ம்…உங்க வேலைய பாருங்க…!” “ என்று முறைத்தாள்.

                             **************** 

வீட்டின் காலிங் பெல் அடித்துக் கொண்டே இருக்க…”இந்த நேரத்துல யாரா இருக்கும்…?” என்று நினைத்தபடி வந்து கதவைத் திறந்தான் குணா.

கதவைத் திறந்தவன் வெளியே யாரையும் காணாமல் திகைத்தான்.”என்ன இது பெல் சத்தம் கேட்டதே…?ஆனா வெளிய யாரையும் காணோம்…” என்று சொன்ன படி கண்களை சுற்றும் முற்றும் அலையவிட்டான்.

அவனுக்கு பின்னால் இருந்து யாரோ தோளைத் தட்ட…திடுக்கிட்டு திரும்பினான் குணா.

“தேவா…” என்று சத்தம் வெளிவராமல் திகைப்புடன் சொன்னவன்….தட்டித் தடுமாற…”தேவா….நீயா…?” என்றான் ஆச்சர்யம் மாறாமல்.

“அதே அதே…!அதே தேவா தான்.உன் உயிர் நண்பன் தேவாவேதான்….” என்றான் தலையை ஆட்டியபடி.

“நண்பா….!” என்று மகிழ்ச்சியில் திக்கு முக்காடியவன்…பாய்ந்து தேவாவை அணைத்துக் கொண்டான்.

“எப்படிடா…இது எப்படி சாத்தியம்…நான் ஏதும் கனவு காண்கிறேனா….?” என்று மகிழ்ச்சியில் பிதற்ற…

“டேய் குணா…! பதட்டப்படாத….நான் தான்…”நானே தான்” “  என்று ஆசுவாசப் படுத்தினான் தேவா.

“உனக்கு தெரியாது தேவா…! நான் என்ன பாடு பட்டேன்னு.என்னாலையும் ஒன்னும் செய்ய முடியாம போயிடுச்சேன்னு எத்தனை ராத்திரி நான் தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா…?” என்றான் கண்கள் கலங்க.

தேவா…” “என்ன குணா இது…சின்ன பிள்ளையாட்டம் கண் கலங்கிட்டு..! உன்னை பத்தி உன்னை விட எனக்கு நல்லா தெரியும் நண்பா..” “ என்றான்.

“உனக்கு எப்போ… எல்லாம்…”“ என்று குணா முடிக்கும் முன்…

“இப்ப எதுக்கு அதெல்லாம்…இத்தனை வருஷம் கழிச்சு பார்த்திருக்கோம். எடுத்தவுடனே கசப்பான நினைவுகளைப் பத்தி பேச வேண்டாம் குணா…” என்றான் முகம் இறுக.

“சாரி மச்சான்….! என்ன சாப்பிடுற…? “ என்றான் குணா.

“அம்மா,அப்பா எல்லாம் எங்கடா…?” என்றான் தேவா.

குணா.. “”ரூபாவுக்கு குழந்தை பிறந்திருக்குடா…!அவளைப் பார்க்க அமெரிக்கா  போயிருக்காங்க….நான் போய் பார்த்தவுடன் திரும்பிட்டேன்டா…” “ என்றான்.

“ரூபாக்கு கல்யாணம் ஆகிட்டதா…?” என்றான் தேவா ஆச்சர்யமாய்.

“அவளுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு மச்சான்.என்ன…?அவ கல்யாணத்துல நீ இல்லைன்னு சொல்லி சொல்லியே ஒரு வாரம் அழுதா…!” என்றான் வருத்தமாய்.

“நல்ல விஷயங்களுக்கு எப்போதும் நான் லாயக்கில்லாதவன் ஆகிட்டேண்டா குணா…” “ என்றான் விரக்தியாய்.

“அப்படி இல்லை தேவா.இந்த மட்டும் பிரச்சனை தீர்ந்ததேன்னு நீ சந்தோசம் தான் படனும்…பெரிசா ஏதாவது ஆகியிருந்தா….?” என்ற குணாவின் முகத்தில் பரிதவிப்பு மிஞ்சியிருந்தது.

“நீயும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ தேவா…” என்றான் குணா.

“அதுக்கு அவசியமே இல்லை குணா.எனக்கு வேண்டப்பட்டவங்க எல்லாம் சேர்ந்து….என் நலனை கருத்தில் கொண்டு எனக்கு மேரேஜ் பண்ணி வச்சுட்டாங்க…!” என்றான் விரக்தியாய்.

“தேவா…!” என்று அதிர்ந்தான் குணா.

“இதுல பெரிய வேடிக்கையே….,நான் அவளை விருப்பபட்டு கல்யாணம் செய்தது தான்…” “ என்று சொல்லி நக்கலாய் சிரிக்க…

அவன் உள்ளத்தின்  வேதனையை குணாவால் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது.

“இப்படி எல்லாம் நடக்கணும்ன்னு விதி இருந்தா அதை யாரால் மாத்த முடியும் தேவா….!” என்றான் குணா.

தேவா…”ம்ம்ம்  விதியா இல்லை சதியான்னு போக போகத்தான் தெரியும்..” என்றான்.

“சிந்துவைப் பார்த்தியா தேவா…?” என்றான் குணா.

“இல்லை குணா…! யாரையும் பார்க்கும் மன நிலையில் நான் இல்லை..” என்றான்.

“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத தேவா. நடந்து போன….., உன்னைக் கடந்து போன ஒன்னை நினைச்சு இப்ப இருக்குற உன் வாழ்க்கைய கெடுத்துக்காத தேவா.

தெரிஞ்சோ தெரியாமலோ…உன்னோட மனைவியை நீ விருப்பபட்டு கட்டிகிட்ட.ஆனா மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறினா…உன்னோட சேர்ந்து அந்த பொண்ணோட வாழ்க்கையும் கெட்டுப் போகும்.

போனதை நினைத்து இருக்குறதையும் விட்டுடாதடா…..” “என்றான் குணா…உண்மை அறியாமல்.

தேவா…” “எனக்கு புரியுது குணா..!கட்டிய மனைவியை கஷ்ட்டப்படுத்துற அளவுக்கு நான் இன்னும் தரம் தாழ்ந்து போகலை.இந்த திருமணத்தில் எனக்கு இழப்பும் பெரிதாய் இல்லை.

எனக்கு நடந்த பிரச்சனைகள்,சம்பவங்கள் என்னோடு இருந்தாலும்… கீர்த்தனாவை நான் பிடிச்சு கல்யாணம் பண்ணியிருக்கேன்.

ஆனா அவளுக்கு தான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை குணா….” என்றான்.

“என்னடா சொல்ற…?” என்றான் குணா அதிர்ச்சியாய்.

குணாவின் முகத்தைப் பார்த்த தேவா…”நீ இந்த அளவுக்கு அதிர்ச்சியடைய தேவையில்லை குணா.கீர்த்தனாவை பெண் பார்க்க போகும் போது இருந்த தேவா வேற.என்னையறியாம அவளை எனக்கு பிடித்து விட்டது.

ஆனா  அப்பவும் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை.நான் தான் பிடிவாதமாய் இருந்து மேரேஜ் பண்ணேன்.ஆனா இப்ப என்னோட நிலை…” என்று தேவா கண்கலங்க..

“டேய் மச்சான்…! எதை பத்தியும் நீ கவலைப் படாத.உன் நல்ல மனசுக்கு இனி நடக்குறது எல்லாமே நல்லதாவே நடக்கும்.இப்ப என்ன..? உன்னை யாருக்காவது பிடிக்காம போகுமா….?” என்றான் குணா.

“எப்படிடா நடக்கும்….உயிர் நண்பன் உன்னையவே விட்டுட்டு இத்தனை நாள் இருந்திருக்கேன்னா…என்னை நினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு குணா..”””””..  என்றான்.

“தேவா…ப்ளீஸ்..! நீ ஏன் அப்படி நினைக்கிற.இதில் உன் தப்பு ஏதும் இல்லை.அவங்க ஆட்டத்துல கொஞ்ச நாள் உன்னையறியாம நீ பலி ஆகியிருக்க.அவ்வளவு தான்.

மத்தபடி உன்னோட பொறுப்புகள்,கடமைகள் எல்லாம் இப்பதான் ஆரம்பிச்சிருக்கு.உனக்குன்னு ஒரு மனைவி வந்துட்டா…! இனி நடக்க வேண்டியதைப் பத்தி மட்டும் யோசி…” என்று குணா சொல்ல..அவனை அணைத்துக் கொண்டான் தேவா.

“தேங்க்ஸ் மச்சான்.நீ சொன்ன மாதிரி இனி தான் என் ஆட்டம் ஆரம்பம் ஆகப் போகுது.இனி நின்னு அடிப்பேன்டா…” “ என்று தேவா கைமுஷ்டியை இறுக்க…

“வேண்டாம் தேவா…இந்த கோபம் வேண்டாம்.உன்னை நான் எப்பவும் விவேகம் உள்ளவனாத்தான் பார்த்திருக்கேன்.ஆத்திரம் கண்ணை மறைக்க கூடாது…” “ என்றான் குணா.

நண்பனின் வார்த்தைகளில் சாந்தமானான் தேவா.தனக்குள் எழுந்த கோபத்தை தனக்குள்ளேயே மண்ணிட்டு புதைத்தான்.செய்ய வேண்டிய செயல்கள் அவன் கண் முன் அணி வகுத்து நின்றன.அதற்கான அச்சாரத்தை அந்த நொடியிலிருந்தே ஆரம்பித்தான் தேவா.

“சரி எப்ப என் தங்கச்சியை கண்ல காட்டுறதா உத்தேசம்..?” என்றான் குணா.

தேவா..” “தங்கச்சியா…?”

குணா…” “அதாண்டா …உன் மனைவி…என் தங்கை கீர்த்தனா….”“என்றான்.

“இதெப்ப இருந்து குணா…? என் மனைவி உனக்கு தங்கையானா…? என் தங்கை கல்யாணி மாதிரி என் தங்கை கீர்த்தனாவா..?” என்றான் சிரிப்புடன் தேவா.

குணா…” “ஆமா அதில் தப்பென்ன இருக்கு…?””“ என்றான்.

“தப்பில்லை தப்பில்லை..எதுவும் தப்பில்லை…! சரி குணா நான் அப்ப கிளம்புறேன்.நான் சொன்ன மாதிரி நாளைக்கு நீ சரியா வந்துடு…”உனக்கொரு சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கு…”“ என்று சொன்னபடி கிளம்பினான் தேவா.

தேவா கிளம்பிப் போக….அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் குணா.”எப்படியிருந்தவன்….?” என்று அவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

  

Advertisement