Advertisement

தூரிகை 5 :

 

கலையரசியும் செழியனும் தங்கள் ஒரே மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனித்தனர்.மகன் இல்லாத குறையை…தேவாவிற்கு செய்து தங்கள் குறையை பூர்த்தி செய்து கொண்டனர்.

இதில் கீர்த்தனாவிற்கு ஏகத்திற்கும் எரிச்சல் கிளம்பியது.”பெத்த பொண்ணு குத்துக் கல்லாட்டம் இங்க இருக்குறேன்….ஆனா கவனிப்பு என்னமோ அவனுக்கு தான் நடக்குது…! இந்த அம்மாவுக்கு என்னாச்சு…? அவனுக்கு என்ன ரெண்டு கொம்பா இருக்கு…!” என்று வெதும்பித் தவித்தாள்.

அவர்களின் அன்பில் தேவாவே ஒரு கட்டத்தில் திக்குமுக்காடி விட்டான்.அவர்களின் கபடமில்லாத பாசத்தில் அவன் திகைத்தான்.அவர்கள் பெண்ணின் கணவன் என்பதற்காக தன்னை அவர்கள் கவனிக்கவில்லை என்று அவன் உணர்ந்து கொண்டான்.அவர்கள் காட்டிய பாசம் அவனுக்கு புதிது.

கலையரசி அவனுக்கு உணவு பரிமாறும் போது…கீர்த்தனாவின் முகம் போன போக்கைக் கண்டவனது முகம் சிரிப்பில் ஆழ்ந்தது.

“தன்னைப் பெற்றவர்கள்…தன்னைத் தவிர்த்து மற்றவர்களுக்கு முக்கியத்துவம் தரும் போது ஏற்படும் இயல்பான பொறாமை குணம் தான் கீர்த்தனாவின் முகமும் பிரதிபலிக்கிறது….” என்பதை உணர்ந்து கொண்டான்.

“என்ன கீரு பார்க்குற….உங்க வீட்ல கவனிப்பு பலமா இருக்கே….?” என்றான் கிண்டலாய்.

அவனை முறைத்த கீர்த்தனா….”” “அதென்ன கீரு…மோருன்னு…. கீர்த்தனான்னு கூப்பிடுங்க…!“” என்றாள்.

“அதெப்படி..? நானும் உன் பேரை எப்படி எப்படியோ சுருக்கிப் பார்த்தேன்…. ம்கும்…எப்படியும் கூப்பிட வரலை….அதான் இப்படிக் கூப்பிட்டேன்…செம்ம பேரு இல்ல….”“ என்றான்.

“இல்லை….! படு மோசமா இருக்கு…!” என்றபடி முகத்தைத் திருப்பிக் கொள்ள…

“என்ன மாப்பிள்ளை…! நாம ஊருக்கு கிளம்பனும்…நியாபகம் இருக்கா…?இல்லையா…? கீர்த்தனா நீயும் ரெடியாகுமா…!” என்று ராஜா சொல்ல… கீர்த்தனாவின் முகம் விழுந்து விட்டது.

தேவா பேசிக்கொண்டிருக்கும் போதே….அவனின் தலைக்குள் வண்டு குடைவது போல இருந்தது.கண்கள் இருட்டிக் கொண்டு வர…அதை சமாளித்தவன்…வெளியில் தெரியாது முகத்தை வைத்துக் கொண்டான்.

கீர்த்தனாவின் மனநிலைக்கு அவனை கவனிக்கவில்லை.ஆனால் கார்த்திகாவின் கண்களுக்கு தேவாவின் முகம் வித்யாசமாய் தெரிய…அவனின் அருகில் சென்றவள்…”

என்னடா ஆச்சு…?” என்றாள் மெதுவாய்.

“என்னன்னு தெரியலைக்கா….! தலைக்குள்ள வண்டு குடையற மாதிரி ஒரு வலி….சில சமயம் என்னால தாங்கவே முடியலை…” என்றான்.

தேவாவின் பதிலைக் கேட்டவளது முகம் இருண்டது.”என்னடா சொல்ற…? எப்ப இருந்து வலிக்குது..?” என்றாள்.

“ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தப்ப இருந்தே இப்படித்தான் இருக்கு…அம்மாகிட்ட சொன்னேன்.அவங்க டேப்லெட் குடுத்தாங்க…அதைப் போட்டப்ப நல்லா இருந்தது…இப்ப மறுபடியும் வலிக்குது….பெங்களூர் போன உடனே பர்ஸ்ட் செக் பண்ணனும்…””“” என்றான்.

கார்த்திகாவின் முகம் கவலை கொண்டது…” பிரச்சனைகள் விடவே விடாதா…? கடவுளே…! எதுக்காக எங்களை  மட்டும் இப்படி சோதிக்கிற…?” என்றாள் மனதினுள்.

கிளம்புவதற்காக கீர்த்தனாவின் அறைக்குள் சென்ற தேவா ….அப்படியே நின்றான்.அங்கு கீர்த்தனா எதையோ பார்த்து அழுது கொண்டிருந்தாள்.அந்த அறையையே சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ம்ம்ம் அப்படி என்ன இருக்கு இந்த ரூம்ல…? பார்த்து பார்த்து அழறா…? கல்யாணம் ஆகி ரெண்டு நாள்லயே கண்ணைக் கட்டுது….எப்படித்தான் இவளை வைத்து சமாளிக்க போறேனோ…?” என்று நினைத்தவன்… ”கிளம்பலாமா..?””“  என்றான்.

அவனைப் பார்த்தவுடன்….வேகமாய் தன் உணர்வுகளை மறைத்தவள்…”நான் கிளம்பிட்டேன்…!” என்றாள் விரக்தியாய்.

“ஒன்னும் பிராப்ளம் இல்லையே…!” என்றான் கூர்ந்து.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை…!” என்றாள்.

“ஒன்னும் இல்லைன்னா நல்லது….!””“ என்றான் அவனும் பொருள் பட.

அதைப் புரிந்து கொண்ட அவள்…”” “இருந்தா….?”“ என்றாள் கேள்வியாய்.

“இருந்தா..!”“ அது உனக்கும் நல்லதில்லை…எனக்கும் நல்லதில்லை.நான் எப்பவும் இப்படி கூலா இருக்க மாட்டேன்.என்னைப் பத்தி நீ தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு…!” என்றான் திமிராய்.

“என்ன இவன் ஒரு நேரம் குழைந்து பேசுறான்…! ஒரு நேரம் திமிரா பேசுறான்…! இதில் எது இவனுடைய குணம்….!” என்று யோசித்தபடி கிளம்பினாள் கீர்த்தி.

“எனக்கு என்னாச்சு….? என்னோட ஆழ்மனசுல ஏதோ குழப்பம் மாதிரி இருக்கு….என்னால் கீர்த்தி கூட சகஜமா இருக்க முடியலை..நானும் முயற்சி பண்றேன்…ஆனா ஏதோ ஒன்னு தடுக்குது….“” என்று யோசித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

இருவரின் மனதிலும் ஒவ்வொரு  எண்ணங்கள் ஓட…அதை மனதில் போட்டுக் குழப்பியவாறு…இருவரும் கோயம்பத்தூர் போய் சேர்ந்தனர்.

“வாங்க சம்பந்தி….வாடா கீர்த்தனா…!” என்று பத்மா வரவேற்க….“அதில் ஒன்றிப் போனாள் கீர்த்தனா.

ஆனால் தேவாவோ வீட்டின் பின்புற தோட்டத்தில் சென்று அமர்ந்தான்.அவன் மனம் அமைதியில்லாமல் தவித்தது.

தலைவலி வேறு விட்டு விட்டு வர….வேகமாய் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

“என்னாச்சு…இவனுக்கு….? வந்த உடன் இவ்வளவு அவசரமா எங்க போறான்…?” என்று கீர்த்தனா மனதில் நினைக்க…

பத்மாவின் முகம் இருளடைந்தது.வேகமாய் சென்று மாறனுக்கு போன் செய்தார்.

மாறன்…”என்னாச்சு பத்மா…?எதுக்கு இவ்வளவு பதட்டமா பேசுற..?” என்றார்.

பத்மா…”தேவா காரை எடுத்துட்டு தனியா போயிருக்கான்….அதான் பயமா இருக்கு..!” என்றார்.

“அறிவிருக்கா..? உங்களை யாரு அவனை தனியா விட சொன்னது.அவன் கோயம்பத்தூரை விட்டு போய் மூணு வருஷம் ஆகுது….அவனுக்கு என்ன தெரியும்….ச்சு…நீ வை…” என்று வேகமாய் வைத்தவர்….தேவாவிற்கு போன் செய்தார்.

“சொல்லுங்கப்பா….!” என்றான் தேவா.

“எங்கப்பா இருக்க…?” என்றார் மாறன்.

“சும்மதான்ப்பா….ஒரு டிரைவ் போயிட்டு வரலாம்ன்னு….போயிட்டு இருக்கேன்…“” என்றான்.

“நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை தேவா.ஊரிலிருந்து வந்த உடனே… நீ பேசாம இப்படிக் கிளம்பி வந்தா…,உன்னோட மாமனார் ,மாமியார்  என்ன நினைப்பாங்க…? இது தான் நீ அவங்களுக்கு குடுக்குற மரியாதையா…?” என்றார்.

ஹோ…!ஆமா இல்ல…சாரிப்பா,..! எனக்கு அது தோணவே இல்லை….நான் வீட்டுக்குப்  போறேன் டாட்…!” என்றவன் போனை வைத்து விட்டு காரைத் திருப்ப….அந்த சிக்னலின் அருகில் வைக்கப் பட்டிருந்த கட்அவுட்டில் இருந்த பெண்ணின் முகத்தில் பதிந்தன அவனின் கண்கள்.

“வாவ்….!அருமையான ஓவியம்…”””“ என்று ரசித்தவன்…அப்படியே ரசித்துக் கொண்டே இருந்தான்.

அந்த உணர்வுகள் அவன் மூளையை சென்று தாக்க….நிழற்படமாய் சில நிகழ்வுகள் அவன் முன்னால் வந்து சென்றது.

ஹோ…மை காட்…என்னதிது….?” என்று தலையைப் பிடித்தவன்….அப்படியே அமர்ந்தான்.நிமிடங்கள் யுகங்களாய் கரைய…தெளிவில்லாமல் நிமிர்ந்தவன் வேகமாய் வீட்டிற்கு சென்றான்.

செழியனும்,கலையரசியும் வீட்டு ஹாலில் அமர்ந்து பத்மாவுடன் பேசிக் கொண்டிருக்க…வேகமாய் உள்ளே நுழைந்தவன்…”” “சாரி மாமா…சாரி அத்தை…ஒரு சின்ன வேலை..அதன் உடனே போனேன்…! நீங்க ஏதும் தப்பா எடுத்துக்காதிங்க…!”“ என்றான்.

ஐயோ மாப்பிள்ளை…! நாங்க எதுக்கு தப்பா எடுக்க போறோம்…” என்று கபடமில்லாமல் செழியன் சொல்ல….”” “அப்பாடா….!”“ என்று நினைத்தவன்…”

அம்மா ஒரு காபி குடுங்களேன்…”! என்றபடி  அப்படியே அமர்ந்தான்.

தன்னுடைய கணவன்தான்… தேவாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதை புரிந்து கொண்ட பத்மா…பெரு மூச்சு விட்டபடி காபி போட சென்றார்.

ஆனால் பத்மா போனில் பேசியதைக் கேட்ட கீர்த்தனாவிற்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

“இவன் வெளிய போறது என்ன ராணுவ ரகசியமா….? அதுக்கு ஏன் அத்தை இவ்வளவு கவலைப் படனும்….” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.

கீர்த்தனாவின் அருகில் வந்த கலையரசி….”” “கண்ணு….இனி இது தான் உன் வீடு.மனம் கோணாம நடந்துக்கமா….! நானும் அப்பாவும் கிளம்பறோம். மறுவீடு அழைப்புக்கு கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னு உங்க மாமியார் சொல்றாங்க….நாங்க ஊர்ல போய் பார்க்க வேண்டியதை பார்க்குறோம் கண்ணு….”“என்று பாசமாய் சொல்ல…

என்னவென்றே தெரியாமல் கீர்த்தனாவின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.இத்தனை நாட்கள் தன் அம்மா வீட்டில் இருந்த சுதந்திரம் இங்கு கிடைக்குமா…? என்று அவளுக்கு தெரியவில்லை.ஆனால் ஒற்றைப் பிள்ளையாய் பிறந்து அவர்களையே சுற்றி வந்தவளுக்கு…. இந்த  பிரிவை தாங்க முடியவில்லை.இருந்தாலும் தன்னை அடக்கிக் கொண்டாள்.

“நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க அத்தை….உங்க பொண்ணை நான் நல்லா பார்த்துப்பேன்….”“என்றான் தேவா.

தேவா அவளை தோளோடு அணைத்த விதத்திலேயே……அவனின் எண்ணம் வெளிப்பட…மனதில் மகிழ்ச்சியோடு சென்றனர்.

”நீ என்ன சின்ன பொண்ணா…?நீ அழுதா…அவங்க கஷ்ட்டப் படுவாங்கன்னு தெரியாது…!” என்று அதட்டியவன்…தன் கைகளால் அவளின் கன்னத்தைத தட்டி…”போ…! போய் அவங்களை சிரித்த முகமா அனுப்பி வை…!” என்றான் கனிவாய்.

அவளையறியாமல் அவளின் தலை தானாய் “சரி” என்று ஆடியது.

“குட் கேர்ள்..”“ என்றவன்…துள்ளலுடன் படியேறினான். 

அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.”இவர் நல்லவர் தான்….ஆனா நான் தான் இவருக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவள்..! இதை எப்படி தேவாவுக்கு புரியவைக்கப் போகிறேன்…?” என்று தவித்தாள்.

மேலே சென்றவன் ஒரு அறையைக் கடக்க….திரும்பவும் அதனருகில் வந்தான்.”இதென்ன இந்த வீட்ல இந்த ரூம் மட்டும் பூட்டியிருக்கு…? இத்தனை நாளா நான் இதை கவனிக்கவே இல்லையே…?” என்று மனதிற்குள் சொல்ல…”நீ இங்க வந்தே ஒரு மாதம் தான் ஆகப் போகுதுடா லூசு…!” என்று மனசாட்சி கிண்டல் செய்தது.

இதை மட்டும் ஏன் லாக் பண்ணி வச்சிருக்காங்க….?” என்று யோசித்தவன்…”இது இப்ப ரொம்ப முக்கியமா…?” என்று எண்ணியவன்…தன் போக்கில் சென்றான்.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கீர்த்தனா முழித்துக் கொண்டு நிற்க…”நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுமா…!” என்றார் பத்மா.

ஐயோ  கடவுளே…! மறுபடியும் முதல்ல இருந்தா…!” என்று எண்ணியவள்…அறைக்கு செல்ல…அங்கு லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.

அவள் வருகையைக் கண்டவன்…”” “ஹேய் கீரு…வா..வா…”” “ என்று அவளின் கையைப் பிடித்து உட்கார வைத்தான்.

கீர்த்தனா அவனின் கையைப் பார்த்து முறைக்கவும் சட்டென்று கைகளை எடுத்துக் கொண்டான்.

“கீரு எனக்கு செம்மையா போர் அடிக்குது…எங்கயாவது வெளிய போகலாமா…?” “ என்றான்.

“நான் வரலை…!” “என்றாள் பட்டென்று.

“ஏன்..?” என்றான் ஒற்றை வார்த்தையாய்.

“ஏன்னா…? எனக்கு பிடிக்கலை…!” என்றாள் கீர்த்தனா.

“வெளிய போக பிடிக்கலையா…?இல்லை என் கூட வர பிடிக்கலையா…?” என்றான் கூர்ந்து.

“ரெண்டும் தான்…!” என்றாள் கீர்த்தனா.

“அப்பறம் எதுக்காக கல்யாணம் பண்ணிகிட்ட…!” என்றான்.

“எங்க அப்பா,அம்மாக்காக தான் பண்ணிக்கிட்டேன்.மத்தபடி உங்களை பிடிச்சு எல்லாம் இல்லை…”“என்றாள் விரக்தியாய்.

“மண்ணாங்கட்டி…!” என்று கோபமாய் லேப்டாப்பை கட்டிலில் எறிந்தவன்…”என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா…? எப்படி எப்படி…உங்க அப்பா அம்மா சந்தோஷத்துக்காக என்னை கல்யாணம் பண்ணியிருக்க…!ம்ம்ம்…நான் என்ன இங்க சமூக சேவையா செய்துகிட்டு இருக்கேன்…!” என்று நிறுத்தியவன்…

“இதோ பார்….உனக்கு பிடிக்குதோ இல்லையோ…இது தான் உன் தலைவிதி.நீ எப்படி இருக்கனும்ன்னு இனி நீ தான் முடிவு பண்ணனும்…! ஆனா உடனே பண்ணு.எனக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம்…” என்றவன் ஜன்னலருகில் சென்று அமைதியாய் நின்று கொண்டான்.

அவனது அதட்டலில் விக்கித்து நின்றவள்….”சாரி…! நான்..வந்து…வேற…” என்று அவள் திணறிக் கொண்டிருக்க…

“என்ன மேடம்…? ஒரு காலேஜ் ப்ரொபசரா இருந்துகிட்டு….பேசுறதுக்கு இந்த திக்கு திக்குறிங்க…! எனக்கு உன்னோட விளக்கம் எதுவும் தேவையில்லை.நான் பெங்களூர் போகும் போது நீயும் வர…” என்று கண்டிப்பாய் ஒரு பார்வை பார்க்க..

கீர்த்தனாவின் கண்கள் கலங்கி நின்றது.கலங்கிய கண்களுடன் நிமிர்ந்தவள் அங்கு தேவாவை காணாமல் திகைத்தாள்.கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்க…

தேவா மயங்கி கீழே விழுந்திருந்தான்.    

Advertisement