Advertisement

தூரிகை 3 :

 

அந்த வீட்டில் அனைத்துமே கீர்த்தனாவிற்கு புதியதாய் இருந்தது. பழக்கமில்லாத மனிதர்கள்….முன் பின் அறியாத சூழல் இப்படி அனைத்தும் கலந்து அவளை சோர்வு கொள்ளச் செய்தது.

“இங்க வாம்மா கீர்த்தனா…!” என்று அன்பாய் அழைத்தார் பத்மா.

இப்ப தான் இவங்களுக்கு பேசனும்ன்னு தோணிச்சா….!”” என்று மனதில் நினைத்தவள் அமைதியாக அவரின் அருகில் சென்று அமர்ந்தாள்.

“சாரிம்மா….கல்யாண டென்சன்…அது இதுன்னு உன்கூட சரியாவே பேச முடியலை…நீ ஏதும் தப்பா எடுத்துக்காதடா…”” என்றார் ஆறுதலாய்.

அவரின் வார்த்தைகளில் கொஞ்சம் தடுமாறியவள்…””பரவாயில்லை அத்தை…நான் எதுவும் நினைக்கலை…”” என்றாள்.

“கீர்த்தனாவை மாடிக்கு அழைச்சுட்டு போ கார்த்திகா…கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணட்டும்…” என்று பத்மா சொல்ல…

“வா கீர்த்தனா போகலாம்…”!” என்று அவளை அழைத்துக் கொண்டு போனாள் கார்த்திகா.

மேலே செல்லும் போது மாடிப் படியில் இருந்த கலைப்பொருட்கள் எல்லாம் மிக அழகாகவும்,கலைநயத்துடன் இருந்தது.கீர்த்தனா அதை ஆச்சர்யமாய் பார்க்க….”என்ன பார்க்குற கீர்த்தனா…இது எல்லாம் என் தம்பி செலக்சன் தான்.அவனுக்கு இப்படி கலைப்பொருட்கள் சேகரிக்கிறது தான் பொழுது போக்கே…”” !என்றாள் கார்த்திகா.

“பரவாயில்லையே….!இவனுக்குள்ள இப்படி ஒரு கலை ரசனையா…? நாட் பேட்…” என்று மனதிற்குள் மெச்சிக் கொண்டாள் கீர்த்தனா.

“இது தான் தேவாவோட ரூம் கீர்த்தனா…நீ இங்க கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு…! நான் போய் காபி எடுத்துட்டு வரேன்…காபி குடிச்சா உனக்கும் கொஞ்சம் டையர்டு இல்லாம இருக்கும்….””! என்று சிரித்தபடியே சென்றாள் கார்த்திகா.

“பரவாயில்லையே…இவங்களும் நல்லாதான் பேசுறாங்க…!அப்பறம் ஏன் எல்லாரும் ஒதுங்கியே இருந்தாங்க….!கல்யாணத்துக்கு முன்னாடி யாரும் என்கிட்டே சரியா பேசவே இல்லையே…! என்று யோசித்தபடி அறைக்குள் நுழைந்தாள்.

“அறைக்குள் நுழைந்தவளுக்கு மனதில் பாரம் அழுத்தியது.என் வாழ்வில் என் விருப்பபடி எதுவும் நடக்கவில்லை.என் கனவுகள் அனைத்தும் சுக்கு நூறாகிவிட்டது.இது எனக்கு புது உலகமாய் தெரிகிறது.ஆனாலும் நான் இதை ஏற்றுக் கொள்ளத்தான்  வேண்டும்.எனக்காக இல்லை என்றாலும் அம்மா,அப்பாவின் சந்தோஷத்திற்காக….நான் என்னை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும்…”  என்று தனக்குத் தானே சொல்லியபடி அறையை முழுவதும் நோட்டம் விட்டாள்.

அந்த அறையில் ஏதோ வித்தியாசமாய் பட்டது…ஆனால் அந்த வித்தியாசம் என்னவென்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே….வேகமாய் நுழைந்தான் தேவா.அங்கு ஒருத்தி இருப்பதை சட்டையே செய்யாதவன் போல்….வந்தவன் எதையோ வேகமாய் தேட….

“இவன் என்ன லூசா…! இங்க ஒருத்தி குத்துக் கல்லாட்டம் இருக்குறேன்….அவன் பேசாம வந்தான்…எதையோ தேடிட்டு இருக்கான்…விளங்கிடும்….ஆரம்பமேவா..”?” என்று நொந்து கொண்டாள்

ஆனால் தேவா டென்சனாக இருந்தான்.நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்ப….ஒரு வழியாக, அவன் தேடி வந்ததை எடுத்து விட்டான்.

கையில் எடுத்த மாத்திரையை வாயில் போட்டவன்….தண்ணீரைத் தேட….அது கண்களில் படாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தான்…அவன் எதைத் தேடுகிறான் என்பதைப் புரிந்தவளாய்…தன் பின்னால் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்  கீர்த்தனா.

வேகமாய் அதை வாங்கியவன்…மடமட வென்று தண்ணீரைக் குடித்தான். குடித்து முடித்த பின் ஆசுவாசமாய் அமர …அப்பொழுது தான் கவனித்தான் கீர்த்தனாவை.

“ஹே கீர்த்தி….நீ எப்ப வந்த….?”” என்றவன்…அவளின் முறைப்பைக் கண்ட பிறகு…””ஹோ…சாரி…எனக்கு செம்ம தலைவலி.அதன் அந்த டென்சன்ல… சாரி…”!” என்றான் தலையை ஆட்டியபடி.

“ம்ம்ம்….பரவாயில்லை…”” என்றாள் கடுப்பாய்.

கீர்த்தனா…””ஆமா கல்யாணத்துக்கு உங்க பிரண்ட்ஸ் யாருமே வரலையே… நீங்க யாருக்கும் சொல்லலையா…?” என்றாள்.

அவளின் கேள்வியில் திகைத்தான் தேவா…” “நான்….எனக்கு….பிரண்ட்ஸ்…” என்று திணறியவன்….”டைம் இல்லாததால் நான் யாரையும் இன்வைட் பண்ணலை…”” என்றான் யோசனையுடன்.

“ஹோ…..நீங்க சொன்னா சரிதான்…”” என்றாள் எரிச்சலாய்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே…””நான் உள்ள வரலாமா….?”” என்றபடி வந்தாள் கார்த்திகா.

“உங்க ரெண்டு பேரையும் அம்மா கீழ வரச் சொன்னாங்க…! செழியன் மாமாவும் கலையரசி அத்தையும் உங்களை ஊருக்கு அழைச்சுட்டு போகணும்ன்னு சொல்றாங்க…! வாங்க…!””  என்றபடி சென்றாள்.

ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விஷயமே கீர்த்தனாவிற்கு சர்க்கரையாய்  இனித்தது.அவனை எதிர்பார்க்காமல் வேகாமாய் கீழே சென்றாள்.

“நீங்களும் வாங்க சம்பந்தி….! இன்னைக்கு சடங்கு எல்லாம் இருக்கு….நீங்களும் அங்க வந்தா நல்லா இருக்கும்…”” என்று செழியன் சொல்லிக் கொண்டிருக்க….

“கார்த்திகாவையும்,ராஜாவையும் அனுப்பி வைக்கிறோம்….சம்பந்தி.அவங்க அங்க தங்கியிருந்து நாளைக்கு அவங்களை கூட்டிட்டு வரட்டும்….இங்க போட்டது எல்லாம் போட்ட படி இருக்கு…””” என்றார் மாறன்.

“அங்க எதுக்கு போகணும்…?”” என்றான் தேவா.

“என்ன தேவா…! நம்ம வழக்கப்படி சாந்தி முகூர்த்தம் பொண்ணு வீட்ல தான் நடக்கும்…அதான்..””” என்றார் மாறன்.

“என்ன மாப்பிள்ளை….இது கூட தெரியாதா…?”” என்றான் ராஜா.

“மாமா…எனக்கு இது தான முதல் கல்யாணம்…அது தான் தெரியலை…””” என்று அவன் சொன்ன பாவனையில் அனைவரும் சிரிக்க…

இவனுக்கு ஒரு கல்யாணமே பெரிய விஷயம்…”” என்று மனதிற்குள் கருவினாள் கீர்த்தனா.

தேவா ஓரக்கண்ணால் அவளைப் பார்க்க….அவளின் முகமே அவனுக்கு சொல்லாமல் சொன்னது…அவன் சொன்னதை அவள் ரசிக்கவில்லை என்று.

“சம்பந்தி கீர்த்தனா எங்களுக்கு ஒரே பொண்ணு….!கொஞ்சம் செல்லமா வளர்த்துட்டோம்…அவ முன்ன பின்ன இருந்தா…நீங்கதான் அவளுக்கு எடுத்து சொல்லிப் புரிய வைக்கணும்…”” என்று ஒரு தாயாய் கலையரசி…பத்மாவிடம் சொல்ல…

இதெல்லாம் நீங்க சொல்லனுமா அண்ணி…கீர்த்தனா இனி எங்க வீட்டுப் பொண்ணு…இல்லையில்லை..என் பொண்ணு.கார்த்திகா எப்படியோ….. அப்படிதான் கீர்த்தனாவும்.நீங்க கவலைப் படாதிங்க…என்றார் பத்மா.

“அக்கா…உன்னை வச்சே சமாளிக்க முடியலை….இனி இவளையும் வச்சு அம்மா சமாளிக்கணும் இல்லையா….?”” என்றான் தேவா சிரிப்புடன்…

அது இப்பதான் உங்களுக்கு எல்லாம் தெரியுதாடா….?”” என்றான் ராஜா.

அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே கீர்த்தனாவின் செல் ஒலித்தது.எடுத்துப் பார்த்தவள்…புது நம்பராய் இருக்கவும் குழம்பினாள்.

“யாராய் இருக்கும்…?” என்று யோசித்தபடி ஆன் செய்து காதில் வைக்க…”நீ தான் கீர்த்தனாவா…?” என்ற ஆண் குரல் கேட்டது.

“ஆமா…! நீங்க யாரு…?” என்றாள் கீர்த்தனா.

நான் யாருன்றது முக்கியமில்லை.ஆனா நான் சொல்லப் போகிற விஷயம் தான் ரொம்ப முக்கியம்.நீ கல்யாணம் பண்ணியிருக்கியே தேவேந்திரன்…அவன் பணக்காரன் தான்….நல்லவன் தான்…ஆனா நீ நினைக்கிற மாதிரி கிடையாது..”” என்று எதிர் முனை சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

நீங்க யாருன்னு சொல்லுங்க முதல்ல…””! என்றாள் கீர்த்தனா.

“நான் யாருன்றது முக்கியமா…?இல்லை நான் என்ன சொல்லப் போறேன்றது முக்கியமா….? சொல்றதை மட்டும் கேள்…!தேவா ஒரு பைத்தியம்…அவன் எப்ப என்ன பண்ணுவான்னு அவனுக்கே தெரியாது…இது உனக்குத் தெரியுமான்னு தெரியலை.ஏதோ உன் வாழ்க்கைய காப்பாத்தணும்ன்னு தோணுச்சு…”!””” என்று சொல்ல…

நீங்க யாரு…? நீங்க எங்க இருந்து பேசுறிங்க…?”””” என்று கீர்த்தன கேட்டுக் கொண்டிருக்கும் போதே….எதிர்முனையில் போன்கால் கட் ஆகியிருந்தது.    

தீக் பிரமை பிடித்தவள் போல் நின்றிருந்தாள் கீர்த்தனா.யார் இது…? எதுக்காக இப்படி சொல்றாங்க…?” என்று ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

கீர்த்தனா….அங்க என்னம்மா பண்ற…சீக்கிரம் வாம்மா…!” என்ற கலையரசியின் குரலில் கலைந்தவள்….தன் குழப்பத்தை வெளியில் காட்டாத படி சென்றாள்.

“என்னாச்சு…?” என்றான் தேவா…அவளின் முகத்தை உற்றுப் பார்த்தபடி.

“ம்ம்ம்….ஒண்ணுமில்லை…”” என்றவள்…வேகமாய் சென்று காரில் அமர்ந்தாள்.

என்னாச்சு இவளுக்கு…?போன் வந்தது…அதுக்கப்பறம் முகமே சரியில்லையே…!” என்று யோசனை செய்தபடி….”சென்று காரை ஸ்டார்ட் செய்தான் தேவா.

பயணம் அமைதியில் செல்ல….கீர்த்தனாவின் மனதில் மட்டும் புயல் சின்னம் கிளம்பிக் கொண்டிருந்தது.”இவன் பைத்தியமா…?” என்று அவனை ஓரக்கண்ணால் பார்க்க…

“கருமையான முடிகள் கட்டுக்கடங்காமல் அலைபாய….சவரம் செய்யப்பட்ட முகமும்…அதில் காணப்பட்ட ஒரு கடினத் தன்மையும்…. தீட்சன்யமான கண்களும்…உடற்பயிற்சியின் மூலம் திடமாய் இருந்த உடல் அமைப்பும்…” அவளால் நம்ப முடியவில்லை.

யாரும் சத்தியம் செய்து சொன்னால் கூட நம்ப மாட்டார்கள்.அப்படி இருக்கையில் இவன் எப்படி பைத்தியமாக இருக்க முடியும்.இருக்கிற பிரச்சனை போதாதென்று இது வேறா….? கடவுளே…! என்று நினைத்துக்  கொண்டாள்.

இதைப் பத்தி யோசிச்சு யோசிச்சு…கடைசியில் எனக்கு பைத்தியம் பிடித்திடும் போல…” என்று நினைத்தவள்….அதை மறந்து வெளியில் வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள்.

கார் பழநியை நெருங்கி சென்று கொண்டிருந்தது.”இந்த ஏரியா எல்லாம் ரொம்ப அழகா இருக்கு…!” என்றான் தேவா திடுமென.

“நீ என்ன லூசா…?” என்பதைப் போல் கீர்த்தனா பார்க்க…,”என்ன….?” என்றான் தேவா.

“கோயம்பத்தூருக்கும்….இதுக்கும் ரொம்ப தூரம் இல்லை….எல்லாம் ஒரே மாதிரி இருக்க கூடிய ஏரியா தான்.கோவைல இருந்துகிட்டு இது கூட தெரியாதா…?” என்றாள் இடக்காய்.

“நோ…நோ…நான் பிறந்தது வேண்ணா கோவையா இருக்கலாம்.பட் நான் வளர்ந்தது எல்லாம் பெங்களூர் தான்…” என்றான்.

பெங்களூரா…!” என்று திகைத்தவள்….”பத்மா அத்தை இவன் இங்க படிச்சதா தான சொன்னாங்க…இவன் என்னடான்னா…நான் இங்க வளரவே இல்லைன்னு சொல்றான்…என்ன நடக்குது இங்க…?” என்று குழம்ப…

“வாவ் இங்க கொய்யாப்பழம் எல்லாம் இவ்வளவு பிரஷா இருக்கே…”! என்றான் ஆச்சர்யமாய்.

இங்க கொய்யாபழம் தான் பிரபலம்…சீசனே இல்லாத சமயத்தில் கூட இங்கு கொய்யாபழம் கிடைக்கும்.இங்க சுத்து வட்டார கிராமங்களில்  எல்லாம் கொய்யாப்பழம் தான் அதிக அளவில் விவசாயம் பண்ணுவாங்க…”” என்றாள் பெருமையாய்.

“சூப்பர்…நீ கிராமத்துலயே வளர்ந்ததால உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு… ஆமா உன்னோட பொழுது போக்கு என்ன…?””  என்றான் தேவா.

எனக்கு பொழுது போக்குறதுக்கெல்லாம்  டைம் இல்லை…” என்றாள்  விட்டேறியாய்.  

தேவா…””அப்ப நாள் புல்லா என்ன பண்ணுவ..? போரடிக்காதா….?”” என்றான்.

ஹலோ..! நான் என்ன வேலை வெட்டி இல்லாமையா இருக்கேன்….!” என்று அவள் எறிந்து விழ….இப்போது திகைப்பது அவன் முறையாயிற்று.

“என்ன வேலை…”?” என்று அவன் அமைதியாய் கேட்க…”அவனது கேள்வியில் குழம்பியவள்..

நான் ஒரு காலேஜ் ப்ரொபசர்…”! என்றாள் பட்டென்று.

அவள் சொன்னதைக் கேட்டவன்….சடனாக பிரேக் போட்டான்.”

என்னாச்சு….?” என்று கீர்த்தனா கேட்க…”ஒண்ணுமில்லை…” என்றபடி காரை எடுத்தான்.

இவ காலேஜ் ப்ரொபசரா….? ஆனா இதைப் பத்தி அம்மா என்கிட்டே எதுவும் சொல்லலையே…!” என்று யோசித்தவன்…”எந்த காலேஜ்..!” என்றான்.

அவள் காலேஜ் பேரை சொல்ல….அவளின் முகத்தை உற்றுப் பார்த்தான்.ஆனால் அவள் முகம் எப்போதும் போல் அமைதியாகத்தான் இருந்தது.

தேவாவிற்கு நடப்பது எல்லாம் விசித்திரமாய் இருந்தது.நிறைய குழப்பங்கள் இருப்பதாக உணர்ந்தான்.இதெற்கெல்லாம் பதில் தன்னுடைய அம்மாதான் சொல்ல வேண்டும் என்று நினைத்தவன்….அங்கு சென்றதும் முதல் வேலையாக அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தான்.

“நீங்க என்ன பண்றிங்க…?” என்றாள் கீர்த்தனா.

நான் என்ன பன்றேன்னும் இவளுக்குத் தெரியாதா…! சுத்தம்…” என்று சலித்துக் கொண்டான்.”தப்பு என் மேல் தான். வேலை வேலையென்று…. அதைப் பார்த்ததில் இவளிடம் பேசவும் நேரமில்லை.கிடைக்கும் நேரத்தில் பேசலாம் என்றால்….இவள் கல்யாணத்தை நிறுத்திடு என்று புராணம்  பாடினாள்.அப்பறம் எப்படி ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கறது”… என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான்.

“நீங்க என்ன செய்றிங்கன்னு கேட்டேன்…?” என்றாள் மறுபடியும்.

“””ம்ம்ன்ம்…பிஸ்நெஸ்….””! என்று பேச்சை முடித்துக் கொண்டான்.

தேவா…””சரி விடு…! உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்லு…!”” என்றான்.

அதைத் தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க…?”” என்றாள் பட்டென்று.

“இதோ பார் கீர்த்தனா…நான் கேட்டா எனக்கு பதில் வந்தாகணும்…நீ இப்படி பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும்…”” என்றான் முகம் இருக.

“மீறி பேசினா…?”” என்றாள் கேள்வியாய்.

“பேசிப் பார்…அப்பத் தெரியும் உனக்கு….”” என்று அவனும் பட்டென்று கத்தரித்துக் கொண்டான்.

அதற்குப்  பிறகு அவர்களது பயணம் அமைதியிலேயே  கழிந்தது. விருப்பாச்சி கிராமத்தின் உள்சாலையில் கார் நுழைய….சில்லென்று குளுமையான காற்று வீசியது.

கீர்த்தனாவின் வீட்டு முன் கார் நிற்க….உடனே இறங்கியவள்….வேகமாய் வீட்டிற்குள் செல்ல முற்பட…அவளின் கையைப் பிடித்து இழுத்தான் தேவா.

அவன் இழுத்ததில் கீர்த்தனாவின் கால் இடற….தடுமாறியவளை தாங்கிப் பிடித்தான் தேவா.இடுப்போடு சேர்த்தணைத்து அவளை தன்னுடன் நிறுத்தினான்.

“என்ன பண்றிங்க….?கைய எடுங்க…!” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

தேவாவோ அவளை சட்டை செய்யாமல் நிற்க….””எடுங்கன்னு சொன்னேன்..!”” என்று மற்றுமொரு முறை  அழுத்தி சொன்னாள் கீர்த்தனா.

“கொஞ்சம் பேசாம இருக்கியா….நமக்கு காலையில் தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு….நீ பேசாம வேகமா உள்ள போனா…. பார்க்குறவங்க என்ன நினைக்க மாட்டாங்க…! ஆரத்தி எடுக்குற வரை அமைதியா இரு..!”என்று அதட்டினான் தேவா.

அப்போதுதான் கீர்த்தனாவிற்கும் உரைத்தது…”!இது நமக்கு எப்படி தோணாமல் போனது….?” என்று யோசிக்க…””எப்படி தோணும்…உன் புத்தி உன் கிட்ட இருந்தாத்தானே….!”” என்று மனசாட்சி இடித்துரைத்தது.

“அதுக்காக இப்படி என் இடுப்பில் கைவைக்கத் தேவையில்லை…”” என்று அவள் சொல்ல…“அப்ப சரி…”” என்றவன்…தோளோடு அணைத்துக் கொண்டான். 

ஐயோ என்று இருந்தது கீர்த்தனாவிற்கு…”!கடவுளே…!இவன்கிட்ட இருந்து என்னை நீங்க தான்  காப்பாத்தணும்…” என்று வேண்ட…””

“அது முடியாது…” என்றான் தேவா.

“ஏன்..?”” என்று வெகுண்டவள் அவனை நிமிர்ந்து பார்க்க…தேவாவின் முகம் குறுஞ்சிரிப்பில் லயித்திருந்தது.

“நீங்க என்னதான் சிரிச்சு சிரிச்சு மயக்கினாலும்…எனக்கு உங்களை இந்த ஜென்மத்துல பிடிக்கப் போவதில்லை..”” என்றாள்.

“யாரு நான்…உன்னை…மயக்குறேன்….நல்ல காமெடி.இந்த ஜென்மத்துல நானும் அந்த மாதிரியான ஒரு தப்பை செய்ய மாட்டேன்.உனக்கு எங்களையெல்லாம் எப்படி பிடிக்கும்…உன் ரவி மாமாவை தான  பிடிக்கும்..””. என்றான் குத்தலாய்.

“ரவி…”.” என்ற பெயரைக் கேட்ட உடன் கீர்த்தனாவின் கண்கள் தானாக கலங்கியது.”இவனுக்கு ரவி மாமாவை எப்படித் தெரியும்…?” என்று மண்டை குடைய….அவள் மனதைப் படித்தவன் போல்…

“அதான் கல்யாணத்துக்கு வந்திருந்தானே…! அவன் உன்னைப் பார்க்குறதும்…நீ தலைய கீழ போடுறதும்…அட அட….முடியலைப்பா சாமி…”” என்றான் தேவா.

இவன் கவனித்திருக்கிறான்….ஆனால் ஏன் என்னிடம் கேட்கவில்லை…?”” என்று பார்வையால் அவனைப் பார்க்க…

“எனக்கு அது தேவையில்லாத விஷயம்…”” என்று அவன் பேச்சைக் முடித்துக்  கொண்டான்.

வெளிய நின்னே எவ்வளவு நேரம் பேசுவிங்க மாப்பிள்ளை…? வீட்டுக்குள்ள வாங்க…!கீர்த்தனா மாப்பிள்ளைய அழைச்சுட்டு வாம்மா…!” என்று செழியன் குரல் கொடுக்க…அவளை எதிர்பார்க்காமல் அவனே உள்ளே சென்றான்.

“ஏதோ இங்கயே பிறந்து வளர்ந்த மாதிரி உள்ள போறான்….!” என்று கடிந்து கொண்டவள்….இவ்வளவு தெளிவாய் இருப்பவன் எப்படி பைத்தியமாய் இருக்க முடியும்….?” என்று யோசிக்கத் தொடங்கினாள்.

“இவனைப் பைத்தியம்ன்னு சொல்றவங்க….கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு சொல்லியிருக்கலாமே…! ஏன் கல்யாணம் முடிந்தவுடன் சொல்லணும்…?” என்று எண்ணியபடியே….வீட்டினுள் செல்ல முற்பட…மீண்டும் அவள் செல் ஒலித்தது.

மறுபடியும் அதே நம்பரா…? என்று யோசித்தபடி செல்லைக் காதில் வைக்க…” “என்ன நான் சொன்னதை நீ நம்பலையா….? அவன் கூட கொஞ்சிகிட்டு இருக்க….அந்த பைத்தியத்துகிட்ட இருந்து விலகி இருக்குறது தான் உனக்கு நல்லது…” என்று சொல்லி…பட்டென்று  போன் வைக்கப்பட்டது.

“ஹலோ…நீங்க…”” என்று கீர்த்தனா பேச முற்பட….எதிர் முனையில் நிசப்தம் தான் நிலவியது.

இப்ப என்ன பண்றது…?” என்று யோசித்தவள்….இதை அவன்கிட்டயே நேரா கேட்டுடலாம்…இல்லை யோசிச்சு யோசிச்சு எனக்கு தலைவலியே வந்திடும்…!”என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

“தலைவலி…”” என்றவுடன் அவளுக்கு திடீரென்று நியாபகம் வந்தது..”இன்னைக்கு தலைவலின்னு சொல்லி…ஏதோ சாப்பிட்டானே…!

ஒரு தலைவலி மாத்திரையை ஏன் அவ்வளவு பதட்டமா தேடனும்….?இது எங்கயோ இடிக்குதே…!” என்று எண்ணிக் கொண்டு அவள் அறைக்கு செல்ல….

அங்கே அவளது கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் தேவா.தூங்கும் போது நிதர்சனமாய் இருந்த அவனது முகத்தைப் பார்த்தவள்…”இவன் எப்படி  பைத்தியமாய் இருக்க முடியும்…?  என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

உன் நிதர்சனமான உறக்கம் ….

என்னை நிலைகுலைய வைக்கிறது…

உன்னை அறியும் ஆவலில்…..

என்னைத் தொலைத்து விடுவேனோ….!

Advertisement