Advertisement

மேலும் ” எப்போதிருந்து தெரியுமா??” என்ற ஹர்ஷிதா கணவனின் மேல் தான் உணர்ந்த காதல் வேளையை அவனுக்கு உணர்த்திவிட விழைந்தாள்.

ஹேர்கட் செய்துவிட்டு வந்து வீட்டில் அழிச்சாட்டியம் பண்ணிய தினத்தன்று தூங்காமல் அமர்ந்திருந்தவளின் அருகில் சென்று ” இப்போ என்னாச்சு?? அதான் உன் பி.டி நல்லாயிருக்கு என்று சொல்லிவிட்டார் தானே…. பிறகும் என்ன??” மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டு அன்று முழுவதும் திரிந்தவளை சமாதானம் செய்யும் பொருட்டு அத்தை வீட்டிற்கு வந்த அத்விக் கூறினான்.

வழக்கம் போல் அவன் பேச்சில் எரிச்சலடைந்தவள் “நீ போ தடிமாடு….. இருக்கிற கடுப்பில் குளிர் காய வந்துகிட்டு” வேகமாக சிலுப்பியவளின் முடி கற்று முகத்தில் வந்து மோத

“அம்மாடி பிசாசு தோத்துவிடும்… அவ்வளவு பயங்கரமாக  இருக்கிறாய் …. உன்கிட்ட பார்க்கிற மாதிரி இருந்ததே அந்த லாங் ஹேர்  தான்… சீக்கிரமாக வளர்த்துவிடு…. அப்போதுதான் கொஞ்சமாவது ஐயாவிற்கு சமமாக இருப்பாய்” என்று காலரை தூக்கி விட்டான். அவனை தூக்கி போட்டு பந்தாடியவள் முறைத்தபடி

” நான் தான் பிசாசு போல் உனக்கு சமமாக இல்லையே ….பெட்டர் உனக்கு மேட்சாக வேறொரு கொரில்லாவை தேடி பிடிச்சு கட்டிக்கோ ” என்றாள்.

அதில் கோபமடைந்தவன் “ஒன்றை எப்போதும் உன் நினைவில் வை…. நீ எவ்வளவு கேவலமாக மாறினாலும் சரி இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான் என் பொண்டாட்டி” மொழிந்துவிட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினான் அத்விக்.

அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து அவன் பின்னால் சென்ற அவள் மனதை தடுக்க தோன்றாது சிலையென சமைந்து நின்றாள்  ஹர்ஷிதா. அப்பதின் நிலவில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவிலும் தன் தூங்கா இரவில் ஆயிரம் கோட்டைகளை இதய வடிவில் உருவகப்படுத்த சிரித்த வண்ணமாய் அவற்றிற்கு எல்லாம் மறக்காமல் சிவப்பு முலாம் பூசி பூரித்து போனாள்.

அடுத்த நாள் காலையில் தன் மனதை தன் மன்னனானவனிடம் வெளிப்படுத்திவிட எண்ணி ” லவ்வ பத்தி என்ன நினைக்குற அத்வி?” என்றாள் மென்மையாக.

என்னது இது காலங்காத்தால வந்து லவ்வ பத்தி பேசுறா?? கோகுல் போல வேறு ஏதாவது காளான் முளைத்திருக்குமோ ??? என்ற கோபத்தில் ” ஸ்கூல்ல எவனாச்சும் வம்பு பண்றானா??” என்றான் அத்விக்.

“உன்கிட்ட போய் கேட்டேன் பாரு ” என்றவளின் தலையில் அவள் காதல் ஒரு குட்டு வைக்க ” சொல்லு அத்தான் கேட்கிறேன்ல…… உன் காலேஜ்ல எத்தனை பேர் லவ் பண்ணிருப்பாங்க…. உனக்கு எப்பவாச்சும் லவ் பண்ணனும்னு தோனிற்கா அத்தான்???!!!” கண்களில் ஆசையை நிரப்பி கேட்டவளை சற்றும் உணராதவனாய்

அத்தான் என்கிறாள்!!!! மயங்கி தொலைக்காதேடா அத்வி….  எதையோ பெருசாக பிளான் போட்டிருக்கிறாள்…. அவள் தன்னிடமிருந்து எதையோ ஆட்டையப் போட நினைக்கிறாளா?! அல்லது அவளை தன்னிடமிருந்து எவனோ ஆட்டையப் போட நினைக்கிறானா??!! குழம்பி நின்றவனின் பதில் வேண்டி அவன் விழி மேல் அவள் விழி பதித்து அதனுள் தனக்கான விடையை தேடி கொண்டிருந்தாள்.

” ஹே அரிசிமூட்டை….. லவ்வ பத்தி இவ்வளவு கேட்டு எக்ஸாமா எழுத போற!!! லவ்லாம் சுத்த வேஸ்ட்…. எங்க காலேஜ்ல லவ்னு சுத்துறவங்களை பார்த்தாலே காண்டாகும்…. பெத்தவங்களுக்கு தெரியாதா கல்யாணம் பண்ணி வைக்க!!! எதற்குதான் லவ்னு ஒன்ன பண்ணுவாங்களோ தெரியல??!!”

தன்”பொண்டாட்டியை தெளிவு படுத்துவதாக நினைத்து நன்றாக குழப்பி வைத்தவனிடம் இனி பேசி பயனில்லை என்று உணர்ந்தவள் ” சரி அத்வி . ஸ்கூலுக்கு டைம் ஆச்சு . நான் கிளம்புகிறேன் பை”  என விடைபெற நினைத்தாள்.

” ஹே நில்லு அரிசிமூட்டை… உன் சி.டி எங்கே? ஏன் தனியா போகிறாய்??”

” அவனுக்கு செமினார் இருக்குனு சீக்கிரமாக போய்ட்டான்…. நான் டிரைவர் கூட போய் விடுவேன்”

“வா நான் கூட்டி போகிறேன் … இனி அத்ரிஷ் பிஸி என்றால் என்னிடம் சொல்லு நான் டிராப் பண்ணி பிக்அப் பண்ணிக்கிறேன் .. சரியா?” என்றவன்

தன் மனதுள் இனி எவன் என் பொண்டாட்டிக்கு லவ் லெட்டர் நீட்டுறானு நானு பார்க்குறேன் என்றான்.

அப்படிபட்டவனின் விழிகள் ஆர்யன் நீட்டிய லவ் லெட்டரை பார்த்ததும்தான் சண்டை போட்டு அவளை விட்டு கொடுக்க முடியாமல் விட்டுவிட்டு வெகுதூரம் சென்றான்.

ஆபரேஷன் தியேட்டரை ரெடி பண்ண சொல்லிவிட்டு திரும்பிய பிரகதி ஹர்ஷிதாவை அங்கு காணாது தேடி ஓடினாள் .

அப்போது  அவள் முன் எதிர்ப்பட்ட ஆர்யன் ” நில்லு பிரகி … ஹர்ஷி பக்கத்து அறையில் தான் இருக்கிறாள் . அத்வியுடன் ஒரு 2 மினிட்ஸ் பேசிக் கொள்ளட்டும் ” என்று தடுத்து அருகில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான் .

” அல்ரெடி ஷி இஸ் பிளீடிங் ….. எவ்வளவு சீக்கிரமாக ஆப்பரேட் பண்ணுகிறோமோ அவ்வளவு நல்லது…… ” என்று அவசரமாக கூறிவிட்டு  சென்ற பிரகதியிடம் ” இந்த டூ மினிட்ஸ் அவளை எதுவும் செய்து விடாது . அப்படியே ஏதாவது என்றாலும் அவள் காதல் அவளை மீட்டெடுக்கும் ” என்று உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவித்த மருத்துவனை வித்தியாசமாய் பார்த்தாள் .

” இதோ இதே இடத்தில்தான் ஹர்ஷி அன்று என்னிடம் சொன்னாள் ” என்று நிறுத்திய ஆர்யனிடம் ” என்ன சொன்னாள் ? ” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு வினவினாள் பிரகதி .

ஜெகன் அங்கிளின் ஆபரேஷனுக்கு முதல்நாள் ஆர்யன் முன் வந்த ஹர்ஷிதா ” நான் விளையாட்டுத்தனமாக வீட்டில் சொன்ன பொய் இவ்வளவு பெரிய இக்கட்டை இழுத்துவிடும் என்று தெரியவில்லை . ஐ அம் ரியலி சாரி ஆர்யா ” என்றாள் எடுத்தவுடன் .

என்ன பேசுகிறாள்??? என்று புரியாமல் விழித்த ஆர்யனிடம் மேலும் ” மாமா அவசரப்பட்டு நம் நிச்சயத்தை ஏற்பாடு செய்துவிட்டார் . உனக்கும் உன் வீட்டினருக்கும் என்னால் பெரிய அவமானம் என்று தெரிகிறது . பட் ஐ வாஸ் கார்னர்ட் தட் டே .. அங்கிள் ஆன்ட்டியிடம் நீ தான் எனக்காக சொல்லி புரிய வைக்கணும் ப்ளீஸ் ஆர்யா ” தங்கள் திருமணத்திற்கான மறுப்பை தெரிவித்தாள் .

” என்னை உனக்கு பிடிக்கவில்லையா ஹர்ஷி ? ” மிகுந்த வலியை சுமந்து தெறித்தன ஆர்யனின் வார்த்தைகள் .

” நான் பிறந்ததிலிருந்தே அத்விக்கை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று வீட்டில் பலமுறை சொல்லி இருக்கிறார்கள் . நானும் அவனிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் தடிமாடு என்று கணக்கில்லாத முறை சொல்லியிருக்கிறேன் . ஆனால் அவை எல்லாம் நான் சண்டைக்காக மட்டுமே கூறினேன் என்பதையே நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் உணர்ந்து கொண்டேன் …. அவ்வாறு நான் உணராது போயிருந்தாலும் அவனை தவிர வேறு யாரையும் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது  ….. அத்வி இல்லாமல் என்னால் வாழ முடியாது . அவனை அவ்வளவு பிடிக்கும் …. ஆனால் இதுநாள் வரை என் மனதை அவனுக்கு நான் வெளிப்படுத்தியது இல்லை …..  ஐ அம் சாரி அகைன் பார் காஸிங் டிரபில் ஆர்யா… என்னை தப்பா எடுத்துக்க மாட்டாயே???? ” கண்கள் மின்ன ஒரு வேகத்தில் அவள் காதலை உடைத்தவள் மறு நொடியே சிறு குழந்தையாய் ஆர்யனிடம்   மன்னிப்பை வேண்டி நின்றாள்.

” ஆனால் அத்விக் வேறு பெண்ணை காதலிப்பதாக அங்கிள் சொன்னாரே??” ஹர்ஷிதாவின் காதல் தோற்றுவிடுமோ என்று தான் ஆர்யனின் இதழ்கள் இவ்வரியை உதிர்த்தது ….

” அத்வியால் என்னைத் தவிர வேறு யாரையும் காதலிக்க முடியாது . ஓவர் கான்ஃபிடன்ஸா தெரியலாம் . பட் ஐ நோ ஹிம் பெட்டர் தென் ஹிம் ” என்றவள் கூடுதலாக ” இன்று மாலை மாமா கண் முழித்தவுடன் எங்கள் திருமணம் நடைபெறும் . தாலி கட்ட கொஞ்சம் பிலிம் காட்டுவான் தான் . ஆனாலும் கட்டிக் கொள்வான் . இதில் எனக்கு முதன்மையாக உன் சம்மதமும் வாழ்த்துக்களும் கட்டாயம் வேண்டும் ஆர்யா ” என்றவளை பேச்சிலிருந்து பார்த்தான் .

பின் தன் பதில் வேண்டி நின்றவளிடத்தில் ” என் விஷஸ்  எப்போதும் உன்னிடம் இருக்கும் ஹர்ஷி …… ஹாவ் எ ஹேப்பி அண்ட் ஹெல்த்தி லைஃப் அஹெட் ” என்று சிரிக்க முயன்று அவ்விடத்தை விட்டு சென்றிருந்தான் ஆர்யன் .

இதனை கேட்டுவிட்டு பிரகதியின் இதழ்கள் ஹர்ஷியை எண்ணி புன்முறுவல் பூத்த போதும் அவளின் தற்போதைய நிலை குறித்து அங்கிருந்து வெளியேற நினைத்தாள் .

ஆனால் இரு கைகளையும் முகத்திற்கு தூணாக மாற்றி ஆர்யன் அமர்ந்திருந்த தோற்றம் அவளை அசைக்க அவன் அருகில் சென்று அமர்ந்தாள் பிரகதி .

தன் அருகில் அமர்ந்தவளை நிமிர்ந்து பார்த்த ஆர்யன்  ” ஹர்ஷிக்கு ஒன்றும் ஆகாது இல்ல …. அப்படி நடந்தால் நானும் … ” பேச முடியாமல் நிறுத்தினான்…

” முட்டாள் …. இவ்வளவு பெரிய முட்டாளையா நான் விரும்பினேன் !! இல்லையில்லை முழுக்க முழுக்க என் முட்டாள் தனம் தான் இது ” என்று கத்தினாள் பிரகதி .

தோழியின் கூற்றில் அதிர்ச்சியின் பிடியில் உறைந்தவனிடம் ” ஆனால் நீ கவலை படாதே …. நீ செத்தால் உன் பின்னாடியே நானும் செத்து விட மாட்டேன் …. என் டாடிக்காக நான் இருப்பேன் … நான் விரும்பி செய்யும் என் மருத்துவ பணிக்காக நான் இருப்பேன் … என் குடும்பம் என் ஃப்ரென்ட்ஸ் எல்லோருக்காகவும் மொத்தத்தில் எனக்காக நான் இருப்பேன் … ” என்று சொல்லிவிட்டு சென்றவளை வெறித்தான் ஆர்யன் .

பக்கத்து அறையில் ஹர்ஷிதாவின் சத்தத்தையும் அத்விக்கின் பதற்றத்தையும் கண்ட பிரகதி ” ரொமான்ஸ் பண்ணுவதற்கான நேரமாடா இது ! ” என்று நொந்து கொண்டபடி ஹர்ஷியை விரைவாக தள்ளி சென்றாள் .

மயக்க மருந்து கொடுப்பதற்கு உள்ளாகவே அடுத்தடுத்து ஏற்பட்ட பிரசவ வலியால் லேபர் வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டாள் ஹர்ஷிதா .

மூன்று முறை வந்த பெரும் வலியை தாங்க முடியாது கத்தியவள் ” முடியல ரதி … ரொம்ப வலிக்குது ” என்று அழவும் ” நிலா பேபிஸ் உனக்கு சிரமம் கொடுக்க கூடாது என்றுதான் தானாக வெளிவர பார்க்கிறார்கள் . அவர்களுக்கு நீ ஹெல்ப் பண்ணு ஹர்ஷி … கண்டிப்பா உன்னால் முடியும் .. உனக்கு எவ்வளவு வலி ஏற்படுகிறதோ அதேதான் குழந்தைகளும் அனுபவிக்கிறார்கள் … அதனால் முடிந்த மட்டும் நெக்ஸ்ட் பெயின் வரும் போது ஃபுல் ஃபோர்ஸா புஷ் பண்ணி பேபிஸ் வெளிவருவதற்கு உதவி செய் ” என்றாள் பிரகதி .

அடுத்து ஏற்பட்ட வலியில் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி புஷ் பண்ண வயிற்றுக்குள் இருந்த அத்விக்கின் ஃபுட்பால் சாம்பியனும் தன் அம்மாவை போல் ஒரு புஷ் பண்ணிவிட்டு “குவா குவா” என்ற சத்தத்துடன் வெளியே வந்திருந்தது .

அத்துடன் கருப்பைபை வாயும் மூடிகொள்ள ஹர்ஷிதாவும் மயக்க நிலையை எட்டி இருந்தாள் .

இன்னும் அரை மணி நேரத்தில் சுயநினைவு வரவில்லை என்றால் ஹர்ஷிதா கோமாவிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று சீஃப் டாக்டர் கூறிவிடவும் செய்வதறியாது திகைத்தனர் அத்விக் குடும்பத்தினர்  .

ப்ரீ டெர்ம் பேபி என்பதாலும் எடை ஒன்றரை கிலோ இருந்ததாலும் பிறந்த குழந்தையை வென்டிலேட்டரில் வைத்திருந்தனர் .

என்.ஐ .சி.யு வில் இருந்த நிலானி பேபியை குடும்பத்தினர் ஒவ்வொருவராக சென்று பார்த்துவிட்டு வந்த பின்பும் தான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை அத்விக் ….

முள்ளின் மேல் நின்று அந்த அரை மணி நேரத்தில் ஹர்ஷிதா கண்விழிக்காது போகவும் வயிற்றுக்குள் இருந்த மற்றொரு குழந்தையின் ஹார்ட் பீட்டை செக் பண்ண அது எக்குத்தப்பாக எகிறியது .

குழந்தையை வெளியே எடுத்து அதற்கு தக்க ட்ரீட்மெண்ட்
கொடுத்தால் தான் அதனை காப்பாற்ற முடியும் என்ற நிலையை எட்ட ஆபரேஷனுக்கு தயார் செய்தனர் .

ஹர்ஷிதாவின் நிலை புரிந்த போதும் குழந்தையை இப்போது காப்பாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆபரேஷனிற்கான ஃபார்மை அத்விக்கிடம் நீட்டிய பிரகதி ” ரூல்ஸ் படி சிகிச்சையின் போது தாயை காப்பாற்றுவதற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் . ஹர்ஷிக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் மயக்கத்தால் உள்ளிருந்த சிசுவை எந்த ஆபத்தும் இன்றி எடுப்பதில் ஒரு சிக்கலும் இல்லை . ஆனால் நம் சக்திக்கு புறம்பாக சிகிச்சையின் போது அவளுக்கு நினைவு திரும்பினால் அவளை காப்பாற்ற தான் முதலில் பார்ப்போம் . ஆகையால் இதில் மதர் என்னும் கட்டத்தில் ஒரு டிக் பண்ணி சைன் போடு அண்ணா ‘ என்றாள் .

” பட் டிரஸ்ட் மீ இரண்டு பேரும் நல்லபடியாக வருவார்கள்…… அவர்களுக்கு எதுவும் ஆக விட மாட்டேன் ” என்றவளிடம் பேபி என்னும் கட்டத்தில் டிக் செய்த அத்விக் ” நிலனை காப்பாற்றிக் கொடு ரதி….. அவனுக்கு தெரியும் அவன் அம்மாவை மீட்க ” என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டான் .

அவனுள் நடந்தேறும் பிரளயத்தை வெளியில் காட்டாதவாறு நிற்க முயற்சித்தாலும் அத்விக்கின் முகம் அத்தனை இறுக்கத்தையும் சுமந்து அனைவரையும் அச்சுறுத்தியது .

அந்த இறுக்கம் ஜெகனை கூட அவன் அருகில் நெருங்க விடவில்லை . ஹர்ஷியின் நிலை ஒரு புறம் பயமுறுத்த அத்விக்கின்  நிலை மறுபுறம் மனதை பிழிந்தது….

அறுவை சிகிச்சையின் போது ஹர்ஷிதாவிற்கு நினைவு திரும்பாதிருந்த போதும் யாவரும் எதிர்பாராத வண்ணம்  அவளது பல்ஸ் படிப்படியாக குறைய ஆரம்பித்தது .

” ஹர்ஷி பி நார்மல் … ஹர்ஷி ட்ரை டு பி நார்மல்….  இங்க பாரு நா பேசுறது கேட்குதா ??? ஹர்ஷி…….. ” என்று பல்ஸ் மீட்டரை பார்த்தவாறே பிரகதி ஹர்ஷிதாவின் கன்னத்தை தட்ட ஒரு பலனுமின்றி போனது .

ஹர்ஷிதாவின் நிலை மோசமாவதை காண சகிக்காது  “ஹர்ஷி ப்ளீஸ்டி கண்ணை திறந்துவிடு ” என்று அழ ஆரம்பிக்க பிரகதியை சுலோச்சனா டாக்டர் “வாட் இஸ் திஸ்?” என்றொரு சிறு அதட்டுடன் சற்று தள்ளி நிற்க வைத்தார் .

பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை அனைவருக்கும் ஆதரவளித்து உன் குழந்தைகளையும் பொண்டாட்டியையும் நான் காப்பற்றி தருவேன் என்று அத்விக்கு வாக்குறுதி கொடுத்த பிரகதி ஹர்ஷிதாவை இவ்வாறு பார்க்க திறன் இல்லாது திரும்பிக்கொண்டாள் . அவளுக்கு தெரியும் இப்படியே கண்ட்ரோல் இல்லாமல்  பிரசவ சமயத்தில் பல்ஸ் குறைய ஆரம்பித்தால் தாய் உயிர் பிழைப்பது கஷ்டம் என்பது………

அடுத்த இரண்டு நிமிடத்தில் ஹர்ஷிதாவின் பல்ஸ் மீட்டர் நிர்மலாக ஓரே கோடாக காட்சியளிக்கவும் அவள் நிலை குறித்து அங்கிருந்த மற்ற மருத்துவர்களும் செவிலியர்களும் வருத்தம் தெரிவிக்க அவளை பிடித்து உலுக்கிய பிரகதி ” எழுந்திரு ஹர்ஷி….. என்னை போலவே உன் குழந்தைகளும் தாயில்லாமல் வளர்வதை பார்க்க தான் நான் இந்த படிப்பு படித்தேனா?????? தாங்க முடியலடி …. முழிச்சுக்கோ…. வெளியில உசுர கைல புடிச்சுக்கிட்டு நிக்கிறானே ஒருத்தன் அவன் என் டாடி மாதிரி நிலா பேபிஸ வளர்த்துக்குவானு நினைச்சியா???? மாட்டவே மாட்டான்…. உன் கூடவே வந்துடுவான்னு உனக்கு தெரியாதா???? உன் நிலா பேபிஸ்காக முழிச்சுக்கோ……. ” ஆபரேஷன் தியேட்டர் என்றும் பாராமல் கதற ஆரம்பித்தாள்.

அருகில் நின்ற டாக்டர் சுலோச்சனா ஆதரவாய் அவள் தோள் தொட  அங்கு நிற்க முடியாது டாக்டரின் கையை தட்டிவிட்டு வெளியே ஓடிய பிரகதி முகத்தை மூடிக்கொண்டு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் .

Advertisement