Advertisement

“என்ன தெரியும் உனக்கு லவ்வ பத்தி” என்று நிதானத்தை இழக்க ஆரம்பித்தான் அத்விக்.

“அத்வி நான் எவ்வளவு முக்கியமா பேசுறேன்? நீ ஏன் ஆரம்பத்தில் இருந்தே டிஸ்ட்ராக்ட் பண்ற மடையன் மாதிரி” என்றவளுக்கும் கோபம் வந்திருந்தது.

“நான் மடையன் தான்… கல்யாணம் பண்ணி இதோ என் குழந்தைகளை சுமந்துகிட்டு இருக்கிற உன்னை இன்னும் அந்த ஆர்யாவிடம் இருந்து டிஸ்ட்ராக்ட் பண்ண தெரியாமல் திணறுகிறேனே நான் மடையன் தான்” வார்த்தைகளை விட்டான் அத்விக்.

“ஸ்டாப் இட் அண்ட் கெட் லாஸ்ட் ஃப்ரம் மீ” என்று கத்தியவளை பிடித்து ” நான் ஏன் வெளியே போகணும்? அந்த ஆர்யனையும் அவனை பற்றிய நினைப்பையும் உன்னை விட்டு போக வைக்கிறேன்” என்றபடி உலுக்கினான்.

“ச்சீ…” அருவருப்புடன் திரும்பியவளை தன் புறம் வலுக்கட்டாயமாக திருப்பியவன் “என்னடி ச்சீ?? என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரிகிறது? உன் மாமாவிற்காக என்னை கட்டிக்கொண்டாய். வேறு வழியின்றி என்னை ஏற்றும் கொண்டாய் போல. அன்று ஒருநாள் தவிர உன்னை என்றாவது டிஸ்டர்ப் பண்ணினேனா? பக்கத்திலேயே வைத்துக்கொண்டு உன்னை எவ்வளவு மிஸ் பண்ணுகிறேன் என்றாவது உனக்கு தெரியுமா?” கோபமாகவே முடித்தான் அவ்வரியை.

” நீ என்னை டிஸ்டர்ப் பண்ணாததற்கு ரீசன் நம்ம பேபிஸ். அவர்கள் பாதுகாப்பிற்காக ஒதுங்கி போய்விட்டு இப்போது என்னை சொல்கிறாய்”

இல்லை என்று தலையசைத்தவன் “எனக்கு பேபிஸ் சேஃப்டி முக்கியம் தான். ஆனால் இது அப்படியல்ல… எந்த அளவிற்கு உன்னை காதலிக்கிறேனோ அதில் ஒரு சதவீதமாவது திருப்பி கிடைக்க நான் நினைக்கமாட்டேனா???? எத்தனை முறை என் காதலை சொல்லியிருக்கிறேன் பதிலுக்கு என்றாவது ஒருநாள் திருப்பி சொல்ல மாட்டாயா என்று ஏங்கியது தான் மிச்சம். காதலித்தால் தானே சொல்வாய் நினைப்பெல்லாம் அந்த ஆர்யனின் மேல் இருந்தால்….” பேசிக்கொண்டு போனவனின் வாயில் பட்டென்று ஒரு அடி வைத்தாள் அவன் மனைவி.

“ரதிக்கும் சேர்த்துதான் நான் இன்று உன்னிடம் கேட்டது… ரதிக்கு பதில் வேறு எந்த பெண் இருந்தாலும் உன்னிடம் கண்டிப்பாக ஆர்யனிற்காக இதை நான் கேட்டிருப்பேன் தான்… ஆனால் அதற்கு காரணம் நீ நினைப்பது போல் ஸ்டுபிட் தனமானது இல்லை…. ஆர்யன் அத்துவின் அண்ணன். தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்நாள்வரை கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லாததற்கு நான் காரணமாகி விட்டேன். அத்து எவ்வளவு ஃபீல் பண்ணுறா தெரியுமா?? அவள் என்னிடம் ஆர்யன் பற்றி வெளிபடுத்தாவிட்டிருந்தாலுமே என்னுள் ஒரு குற்றவுணர்வு இருக்கத் தான் செய்கிறது. என்னை காதலித்ததனால் அவனுக்கு லைஃபே இல்லாமல் போய்விட கூடாது…. எனக்கு அவன் லைஃப் நல்லா இருக்கணும்” வேகமாக சொல்லிவிட்டு போய் படுத்தவள் அத்விக் அதே இடத்தில் அப்படியே உறைந்து நிற்பதைப் பார்த்துவிட்டு

“அன்று மாமாவிற்கு குண்டடி படாவிட்டாலும் நான் ஆர்யாவை திருமணம் செய்திருக்க மாட்டேன்” என்றாள்.

” அப்படியென்றால்???” கண்கள் மின்ன அவளருகில் வந்து கேட்டவனிடம் “அம்மாவுக்கு தூக்கம் வருது நிலா பேபிஸ். குட் நைட்” கண்களை மூடி கொண்டாள்.

” உங்க அம்மாவை இந்த ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்க நிலா பேபிஸ்… ப்ளீஸ்” என்றபடி அவள் வயிற்றில் கை வைக்க அவனுக்கு குழந்தைகளிடமிருந்து கூட பதில் வராமல் போனது.

” நீங்களும் டாடி கூட டூ வா நிலா பேபிஸ்??” குழந்தைகளிடம் உரையாடியவனை ஹர்ஷிதா தடுக்கவும் இல்லை கண்களை திறக்கவும் இல்லை.

“இங்க பாரு அரிசி மூட்டை கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டேன்ல…. சண்டையாவது போடு” மேலும் பத்து நிமிடங்கள் பேசியவனின் கொஞ்சல்ஸ் கெஞ்சல்ஸ் எதுவும் வேலை செய்யாது போக அவளுக்கு மறுபுறத்தில் சென்று படுத்துக் கொண்டான் அத்விக் .

அன்று காலையில் ராகுல் சென்னைக்கு மாற்றலாகி வரப்போவதாக தனக்கு போன் பண்ணி இருந்தது அத்விக்கின் நினைவிற்கு வந்தது.

” என்னடா திடீரென்று ? ” அத்விக் கேட்டதற்கு “மித்துதான்டா சொன்னாள்” என்றான் ராகுல்.

” இத்தனை நாட்களாக நானும் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்”

” டேய் மித்துவும் நீ சென்னைக்கு போனதிலிருந்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாள் என்று உனக்கே தெரியும். ஆனால் இப்போ..”

” இப்போ புதுசா என்னடா?”

” புதுசு தான் மச்சி …. புதுசா ஒரு ஆள மித்து கூட்டி வரப்போவதால் எல்லாமே புதுசு கண்ணா புதுசு மாதிரி தெரியுது… அதான் அவளுக்காக ஒரு குட்டி சர்ப்ரைஸ்”

” கங்கிராட்ஸ் மச்சி….மித்துவிடமும் சொல்லிவிடு” என்று மேலும் சில நிமிடங்கள் ராகுலிடம் பேசிவிட்டு வைத்தான் அத்விக்.

அவனவன் மாசமாய் இருக்கிற பொண்டாட்டிக்காக என்னென்னமோ செய்கிறான். அப்படியிருக்க நீ ஏன் அத்விக் ஆர்யனிடம் பேசக்கூடாது என்று தனக்கு தானே கேட்டு கொண்டவன் தன்னருகில் திரையிட்டிருந்த விழிகள் உறங்கவில்லை என்று உணர்ந்து அவள் வயிற்றில் கை வைத்து “நிலா பேபிஸ் நாளைக்கு ரதி அத்தை பற்றி ஆர்யனிடம் பேசுகிறேன் சரியா?” என்றான்.

உடனே மகவுகளிடமிருந்து அசைவை உணர்ந்தவன் சிரித்து கொண்டு “உங்க அம்மாவையும் சிரிக்க சொல்லுங்கடா” என்றான் .

அடுத்த நாள் ஹர்ஷிதாவின் CVS (chronic villus sampling) டெஸ்ட் ரிப்போர்ட்களை வாங்குவதற்காக ஆர்யனின் மருத்துவமனைக்கு வந்த பிரகதி அங்கு ஹர்ஷிதாவையும் அத்விக்கையும் காணவும் “ரிப்போர்ட் வாங்கி விட்டு நானே வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னேன் தானே…. பிறகு ஏன் அண்ணா உன் பொண்டாட்டியை வேறு இழுத்துக்கொண்டு வந்திருக்கிறாய்? அலைச்சல் தானே….” என்றாள்.

” ரிப்போர்ட் என்ன ஆச்சு? வேறு ஏதாவது ப்ராப்ளமா? நேற்றே பிளட் டெஸ்டில் கெஸ்டேஷனல் டயாபட்டீஸ் ……. சுகர் இருப்பதாக சொல்லியதால் தான் இந்த இரண்டாம் டெஸ்ட் எடுக்க சொன்னார்கள்…. இப்போதும் அவளுக்கு அலைச்சல் சேராது என்கிறாய்….” என்று படபடத்தான் அத்விக்.

” ரிலாக்ஸ் அண்ணா…. டயட் கொஞ்சம் மாத்தி பார்ப்போம் . அடுத்த மாதம் இதே லெவல் இருந்ததென்றால் இன்சுலின் போட நேரிடும். பட் டயட்டில் மோஸ்ட்லி சரி பண்ண பார்க்கலாம் “

“நிலா பேபிஸ் வந்ததிலிருந்தே அவள் எந்த ஸ்வீட்ஸையும் தொடுவதில்லை . அப்படி இருக்க இது எப்படி?” குழம்பியவன் மேலும் “சும்மாவே ஒழுங்காக சாப்பிடாமல் இருந்தாள் இதில் இப்படி வேறு பயமுறுத்துகிறாய்” என்று புலம்பினான்.

அவனை சமாதானப்படுத்துவதற்குள் பிரகதிக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

அவர்கள் இருவரின் மேலும் கோபம் என்பதால் சற்று தள்ளி இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்திருந்தாள் ஹர்ஷிதா. அப்போது அங்கு அவளை பார்த்தபடி வந்த ஆர்யன் “ஆர் யூ ஆல்ரைட் ஹர்ஷி …. நேற்று தானே செக் அப்….. இன்று ஏதாவது பிராப்ளமா?” என்றான் .

அவளது கவனம் வேறு திசையில் இருப்பதை கண்டு அத்விக்கையும் பிரகதியையும் பார்த்த ஆர்யன் “என்ன பாச மலர்களுக்குள் சண்டை போல?” என்று கேட்டான்.

” உலகமே தலைகீழாக சுத்தினாலும் இவங்க ரெண்டு பேரும் மட்டும் சண்டை போட்டுக்க மாட்டாங்க… சின்ன வயசுல இருந்தே அப்படி தான்… ஏதேனும் மேனுபேக்ச்சரிங் டிஃபக்ட் இருக்கும் போல… ஆனால்….” நிறுத்தியவளை என்னவென்பது போல் பார்த்த ஆர்யனிடம் “நான் தான் அவர்கள் இருவரிடமும் சண்டை போட்டிருக்கிறேன்” என்று முடித்தாள் ஹர்ஷிதா.

” ஏன்?”

” தங்கச்சி மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று சொன்னவுடன் அண்ணன் சரி வேண்டாம் என்கிறான். நடுவில் நான் எதுவும் கேட்கக்கூடாது என்கிறார்கள்”

” ஓ” என்ற ஆர்யன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

அப்போது ஆர்யனிடம் வந்த புதியவன் “ஹாய் மச்சி எப்படிடா இருக்கிறாய் ?” என்றான் .

பதிலுக்கு ஆர்யனும் “நல்லா இருக்கேன்டா …. மந்த்லி செக் அப்பா?” என்றான் அருகில் இருந்த நண்பனின் மனைவியை பார்த்தவாறு.

“ஆமாம்டா” என்று கூறும்போதே அப்புதியவன் பிரகதியை பார்த்துவிட்டு “சொல்லவே இல்லை….. பிரகி வந்திருக்கிறாளாடா?” என்றபடி அவளிடம் விரைந்தான்.

“டேய் நில்லு பிரஷன்!!!”
அத்விக் வேறு அருகில் இருக்கிறான். இப்போதுதான் அத்விக் தன்னிடம் சற்று நன்றாக பேசுகிறான்…. இந்த சமயத்தில் பிரஷன் எதையாவது உளறி வைத்தால் ஐ.பி.எஸ் ஆபிஸரின் கையில் தான் பந்தாட பட போவது உறுதி என்று நினைத்தபடி ஆர்யன் பிரஷனை தடுப்பதற்குள் அவன் பிரகதியை ஏட்டியிருந்தான்.

பிரஷனை கண்ட பிரகதி “ஹே பிரஷன் எப்படி இருக்கிற ?” என்று ஆச்சரிய குரலில் கேட்க “நாங்க எல்லாம் அப்படியே தான் இருக்கோம். நீதான் அட்ரஸ் கூட கொடுக்காமல் ஓடிப் போயிட்டே. பாவம் தெரியுமா ஆர்யா!” பேசிக் கொண்டு போன பிரஷனின் முதுகில் லேசாக ஒரு தட்டு தட்டினான் அங்கு விரைந்த ஆர்யன்.

“சிஸ்டர் வெயிட்டிங் நீ கிளம்புடா” என்று ஆர்யன் பிரஷனின் மனைவியை குறிப்பிட்டு வெளியேற்ற நினைக்க பிரஷனோ அவளை அருகில் அழைத்து

” பிரகி மீட் மை வைஃப் அனு “
” அனு திஸ் இஸ் பிரகி ” என்று இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

” உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்காரு . இன்ஃபேக்ட் எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களைப்பற்றி சொல்லிவிட்டு தான் உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா என்று என்னிடம் கேட்டார்” என்றாள் பிரஷனின் மனைவி.

அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே பாடலின் கரோக்கி ஆர்யனிற்கு மட்டும் கேட்க….. டேய் கிளம்புங்கடா அத்விக்கிற்கு தெரிந்தால் பிரச்சனையாகும்…..
ஹர்ஷிக்கு லெட்டர் கொடுத்தபோது கூட தனியாக இருந்தேன். இப்போது அதர்வனாவை அவர்கள் வீட்டில் கட்டி கொடுத்து இருக்கிறோம். என்ன நடக்க போகிறதோ என்று தன்னுள்ளே பயந்த ஆர்யன் “போலாம் பிரஷன்” என்றான் அவன் காதில் மெதுவாக.

“இருடா பேசிகிட்டு இருக்கேன்ல” சத்தமாக சொன்ன பிரஷன் “நீ எங்கே இருக்கிறாய் என்று தெரியாததால் தான் உன்னை எங்கள் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ண முடியாமல் போனது. பட் ஆர்யாவும் நீயும் அழைக்காவிட்டாலும் நானும் அனுவும் உங்க கல்யாணத்துக்கு கண்டிப்பாக வந்து விடுவோம். வீட்டுக்கு வாங்க ஒரு நாள் இரண்டு பேரும்..” பேசியவனின் வாயை பொத்தி இழுத்துக்கொண்டு போனான் ஆர்யன்.

பிரஷன் என்ன சொல்லுகிறான்….. அப்படியென்றால் அரிசி மூட்டை கதை உண்மையாகி விட்டதா ….. அதிர்ச்சியிலிருந்து மீளாத வண்ணம் பிரகதியை ஆத்விக் பார்த்து வைத்தால் “சரி அண்ணா கிளம்பலாம் எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகுது” அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் எதையும் கேட்காதவாறு சென்றிருந்தாள் பிரகதி.

ஒருவழியாக ஆர்யன் பிரச்சனையை சமாளித்து பிரஷனை அனுப்பி விட்டு திரும்பினால் அத்விக் நின்றிருந்தான் கூடவே ஹர்ஷிதாவும்.
” உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஆர்யா”

” சொல்லு அத்வி” சாதாரணமாக கேட்க முயன்றான் ஆர்யன்.

“ரதியை கல்யாணம் பண்ணிக்கொள்ள உனக்கு சம்மதமா?”

இப்படி எடுத்தவுடன் கேட்பான் என்று ஹர்ஷிதாவே எண்ணியிருக்காது விழிக்க ஆர்யனோ “என்ன சொன்ன?” என்று கேட்டுவிட்டு எங்காவது பிரகதி தென்படுகிறாளா என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

” ரதியிடம் இன்னும் பேசவில்லை. உன்னிடம் தான் முதலில் கேட்கிறேன். உனக்கு ரதியை பிடித்திருக்கிறதா?”

“நல்லவேளை அவளிடம் நீ பேசவில்லை”

“ஏன் பேசினால்?”

“சண்டையே போட்டுக் கொள்ளாத நீங்கள் இருவரும் பிரிய கூட நேரும்”

அப்போது
“என்ன சண்டை உங்கள் இருவருக்கும் இடையில்?” என பிரகதி பற்றி ஆர்யனிடம் ஹர்ஷிதா வினவினாள்.

“அது!!!!!” இழுத்த ஆர்யனிடம் “இப்போது உன் ஃப்ரண்டு கல்யாணம் அது இதுனு சொல்லிட்டு போறான் … ரதிகிட்ட இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை அதேசமயம் அவள் ஏற்று கொள்ளவும் இல்லை…. இதற்கு என்ன அர்த்தம்?? சொன்னால் தானே தெரியும்… என்னால் முடிந்ததை செய்கிறேன்” என்றான் அத்விக்.

“பிரகியே நினைத்தால் மட்டும் தான் என்னிடம் பேசுவாள். பெட்டர் லீவ் அத்வி…”

“ஐ டோன்ட் லீவ் ஜஸ்ட் லைக் தட்…. பேசாவிட்டாலும் கண்டிப்பாக ரதி உங்களை மிஸ் பண்ணுகிறாள். அப்படி என்ன தான் பிரச்சினை ??” என்று கேட்ட ஹர்ஷிதாவை ஆர்யனால் அவ்வளவு எளிதாக மறுக்க முடியவில்லை.

அதேசமயம் ஹர்ஷிதாவும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் அவனால் வாயை திறக்கவும் முடியவில்லை…

“எங்கம்மா இத்தனை தடவை கேக்குறாங்கல்ல வாய்ல என்ன கொலக்கட்டையா அங்கிள் வச்சுருக்கீங்க” என்பது போல் அத்விக்கின் நிலாபேபிஸ் எகிற “அம்மா……..” என்று வயிற்றை பிடித்து கத்தினாள் ஹர்ஷிதா.

“என்னாச்சு!” என்றபடி மனைவியை அருகிலிருந்த நாற்காலியில் அமர வைத்த அத்விக் அவளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்தான்.

“இப்ப ஓகே வா ஹர்ஷி…” என்றவனிடத்தில் பேச மனமில்லாத போதும் ஆர்யன் அருகில் இருப்பதால் அவன் முன்னால் தங்களது ஊடலை காட்ட விரும்பாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் ஹர்ஷிதா.

“ஹர்ஷி வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கோ.. சரியாகிவிடும் ” என்றான் ஆர்யன்.

“சரி வா போகலாம் ” என்று அவள் எழ உதவி செய்தவனின் கரத்தை மெதுவாக விலக்கியவள் “நீங்க சொல்லுங்க ஆர்யா!!” என்றாள்.

அம்மூன்று வார்த்தைகளில் “சொல்லாமல் எழ மாட்டேன்” என்னும் மற்ற மூன்று வார்த்தைகள் மறைந்திருந்ததை உணர்ந்த ஆர்யன் தன் கல்லூரி நாட்களை புரட்ட ஆரம்பித்தான்.

ஹர்ஷிதாவிடம் பதில் இல்லாது போகவும் “என் தங்கச்சிக்கும் மச்சானிற்கும் நடுவில் இருக்கும் பிரச்சினையை சரி செய்து விட்டு வந்து உன்னிடம் பேசிக் கொள்கிறேன் அரிசி மூட்டை. இட் இஸ் எ ப்ராமிஸ்” என்று கூறிவிட்டு போய் படுத்துக்கொண்டான் அத்விக்.

Advertisement