Advertisement

அதர்வனா தன் தந்தை கதிரவனை மருத்துவர் என்ற முறையில் பிரகதியிடம் அறிமுகம் செய்துவைக்க “ஹலோ அங்கிள் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன்” என்று தமிழகத்தின் டாப் ஃபைவ் மருத்துவமனைகளில் ஒன்றான ஆர்யன் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்டின் நிர்வாக இயக்குநரிடம் பேச தொடங்கினாள் பிரகதி.

அப்போது அவர்கள் அருகில் ஆர்யன் வரவும் “சரி அங்கிள் பார்க்கலாம்” என்று விடை பெற்றவளை “நில்லும்மா அத்து செய்த பொங்கலை டேஸ்ட் பண்ணு” என்றார் கதிரவன்.

” ஓ ஷுயர் அங்கிள்” என்று அவரிடம் இருந்த பாத்திரத்தை வாங்கியவளிடம்

” என் கஷ்டத்தில் பங்கேற்க உனக்கு இவ்வளவு விருப்பமா … சந்தோஷம்” என்று கதிரவன் சிரிக்கவும் ” அங்கிள் இது டூ மச் உங்க பொண்ணையே ஒட்றீங்க” என்றாள் அதர்வனாவிற்கு ஆதரவாய்.

“பொண்ண இல்லை மூன்று நாட்களாக பொங்கலுக்கு கிளாஸ் எடுத்து முடித்த டீச்சரை பார்த்து தான் இந்த பயம் “என்று அருகில் நின்ற மனைவியை வம்புக்கு இழுத்தார் கதிரவன்.

“போங்க அங்கிள் ஆன்ட்டி சமையல் எவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும்”

“உனக்கு எப்படிமா தெரியும் ” கணவன் மனைவி இருவரும் ஒருசேர கேட்டனர்.

ஆர்யனிடம் தானாக சென்ற விழிகள் அவன் ஏதும் பேசாது வேறு இடத்தை பார்க்கவும் கதிரவனிடம் திரும்பி “அது அங்கிள் உங்களைப் பார்த்தாலே தெரிகிறதே… உங்கள் ஃபிட்டிற்கான ரகசியம் ஆன்டி சமையல் என்று” என்றாள் பிரகதி.

“அப்படி சொல்லுமா” என்று ஆர்யனின் அம்மா பிரகதியிடம் ஹைஃபை அடிக்க
“போச்சுடா என் எக்சர்சைஸ் புகழை எல்லாம் நீ தட்டி கொண்டாயா ” என்று கதிரவனும் சிரித்தார்.

சற்று தொலைவில் “ரதி” என்று அத்விக் அழைக்கும் சத்தம் கேட்கவும் “இதோ வருகிறேன் அண்ணா” பதில் கொடுத்த பிரகதி கதிரவனிடமும் அவர் மனைவியிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றாள் .
அதுவரை அவள் அருகில் நின்று அவளைப் புறக்கணித்த இருவிழிகள் இப்போது அதற்கு உரியவனின் அனுமதியின்றி இல்லாமலேயே அவளை பின்தொடர்ந்தது.

அத்விக்கும் ஹர்ஷிதாவும் தன் தந்தை ரகுநாதனுடன் அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் பிரகதிக்கு புரிந்து விட்டது அப்பா அத்விக்கிடம் என்ன கூறியிருப்பார் என்று!!

அவள் எண்ண அலைகளை உறுதி செய்யும் விதமாய் ஹர்ஷிதாவிடம் இருந்து கேள்வி எழுந்தது.

“ஏன் ரதி மாமாகிட்ட மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று சொல்கிறாய்?” என்ற ஹர்ஷிதாவின் கேள்விக்கு “டாடி” என்று கண்டத்துடன் ரகுநாதனை பார்த்தாள் பிரகதி.

“சித்தப்பாவை ஏன் முறைக்கிறாய் பதில் சொல்லு ரதி” என்றான் அத்விக்

“இன்ட்ரஸ்ட் இல்லை அண்ணா… விடு”

“ஏன் வேறு யார் மீதாவது இன்ட்ரஸ்ட் இருக்கா” ….. ஹர்ஷிதா

“போடி பெரிய மனுஷி”

“இப்போதும் உன் அண்ணா ‘பதில் சொல்லு ரதி’ என்று சொன்னால்தான் சொல்வாயா”

” எனக்கு இப்போது எல்லோர் மீதும் கோபம் தான் வருகிறது ஒருத்தர் மீதும் இன்ட்ரஸ்ட் இல்லை போதுமா” என்று சிடுசிடுத்தாள் பிரகதி.

“எதற்கு இவ்வளவு கோபம்… விடு அப்புறம் பேசலாம்” அமர்த்திய அத்விக்கை “அதெல்லாம் விட முடியாது இப்பவே சொல்லு ரதி உன் பிரச்சனை என்ன ??” என்றாள் ஹர்ஷிதா.

பிரகதி மௌனம் சாதிக்கவும் “இங்கு கோயிலில் வேண்டாம் எல்லோரும் இருக்கிறார்கள். தனியாக ரதியிடம் பேசிக் கொள்ளலாம்” என்றான் அத்விக்.

“நீயாச்சு உன் தங்கச்சி ஆச்சு… அவளுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைத்தாய் என்றால் என்னையும் மறக்காமல் கூப்பிடு” கோபித்து கொண்டு சென்றவளின் பின்னோடு “ஹோய் அரிசி மூட்டை நில்லு” என்றபடி சென்றான் அத்விக்.

ஹர்ஷிதாவையும் அதர்வனாவையும் மரகதம் வீட்டினருக்கு பரிமாறிவிட்டு சாப்பிடும்படி கூற

பந்தியில் வேண்டுமென்றே பிரகதியின் இலையில் அப்பளத்தை வைக்காது சென்றவளிடம் “ஹர்ஷி …. ரதிக்கு வைக்க மறந்துவிட்டாய் பாரு” என்றாள் அதர்வனா.

” அடடா அப்பளம் தீர்ந்துவிட்டதே” என்று கையில் ஒரு கூடை அப்பளத்தை வைத்திருந்தபடி கூறினாள் ஹர்ஷிதா.

“இரண்டு பேருக்கும் சண்டையா?” என்ற அதர்வனா “ஆர்யா உன் இலையிலிருந்து ஒரு அப்பளத்தை ரதிக்கு ஷேர் பண்ணு” எதார்த்தமாய் பிரகதியின் அருகில் அமர்ந்திருந்த ஆர்யனிடம் வினவினாள்.

மாப்பிள்ளை பேச்சை ஆரம்பித்ததிலிருந்து கடுப்பில் இருந்த பிரகதி அப்போதுதான் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆர்யனை நிமிர்ந்து பார்த்தாள். பின் அவசரமாக எழுந்தால் எல்லோருடைய கவனமும் தன் பக்கம் திரும்பும் என்று உணர்ந்த பிரகதி “இல்லை வேண்டாம் அத்து எனக்கு அப்பளம் பிடிக்காது” என்றுவிட்டு சாப்பிட தொடங்கினாள்.

‘தயிர்சாதம் என்றாலும் சரி சாப்பாத்தி என்றாலும் சரி ஆன்டியை டெய்லி அப்பளம் சுட சொல்லு ஆர்யா’ என்ற பிரகதியின் சொற்கள் ஆர்யனின் நினைவில் முட்டியது.

“உனக்கா அப்பளம் பிடிக்காது??? இந்தா நீயே கொட்டிக்கோ” தன் கையில் வைத்திருந்த இருபதிற்கும் மேற்பட்ட அப்பளங்களை பிரகதி இலையில் கொட்டி இருந்தாள் ஹர்ஷிதா.

“டார்லிங் என்ன பண்ற ?” ஹர்ஷிதாவை கடிந்த அத்ரிஷ் பிரகதிக்கு உதவலானான் .

“எதற்கு இவ்வளவு கோபம்? ” என கேட்டவர்களிடம் ஹர்ஷிதா வாயை திறந்தாளில்லை.
பிரகதியும் ஹர்ஷியிடம் பேச முன்வரவில்லை.

ஹர்ஷிதாவையும் பிரகதியையும் சேர்த்து வைக்க அத்ரிஷ் எடுத்த முயற்சி எல்லாம் வீணாகப் போனது.
உங்களை திருத்த முடியாது நீங்களே திருந்தி கொள்ளுங்கள் என்று விட்டான் அத்ரிஷ்.

அவர்களிருவரும் திருப்பிக் கொண்டாலும் ஹர்ஷிதாவின் மாதாமாதம் செக்கப்பை பிரகதி தவறவிட மாட்டாள் .

அன்றும் அதே போல ஆறுமாதகால ரொட்டீன் பரிசோதனைக்கு வந்திருந்த ஹர்ஷிதாவை எதிர்கொண்ட பிரகதி “நிலா பேபிஸ் எப்படி இருக்கிறீங்க… மார்னிங் சாப்பிடாமல் அம்மா கூட்டிட்டு வந்துட்டாளா…. கொஞ்ச நேரம்தான் அத்தை பிளட் டெஸ்ட் எடுத்திடுவேனாம். சீக்கிரம் சாப்பிடுவீர்களாம்” இரட்டையர்கள் என்பதால் நன்றாகவே மேடிட்டிருந்த வயிற்றை தொட்டு கொஞ்சியவள் ஹர்ஷிதாவிடம் எதுவும் பேசவில்லை.

பின் காரை பார்க் செய்துவிட்டு வந்த அத்விக்கிடம் பேசும் சமயம் ஆர்யன் வந்து சேர்ந்தான். இது வழக்கம்தான்… ஒவ்வொரு மாத பரிசோதனை முடிவுகளை பார்வையிட ஆர்யன் வருவது . சம்பிரதாயத்திற்கு சிரித்தாலும் இந்த அதிகாலை வேளையில் இவன் இங்கு வந்தாக வேண்டுமா என்று அத்விக்கிற்கு சிறு எரிச்சல் மூண்டது.

ஆரம்பத்தில் ஆர்யன் வருவது ஆறுதலாக தோன்றிய போதும் போகப்போக அவனது அக்கறை அத்விக்கிற்கு பொறாமை உணர்வை தூண்டி விட்டிருந்தது. பிரகதி இருக்கிறாள்… சுலோச்சனா டாக்டர் இருக்கிறார்கள்… இவர்கள் இல்லாமலேயே என் பொண்டாட்டியும் குழந்தைகளையும் எனக்கு பார்த்துக்கொள்ள தெரியும்… அப்படியிருக்க ஆர்யன் எதற்கு என்ற எண்ணம் மேலோங்கிய போதும் அதை இந்நாள் வரை அத்விக் வெளிப்படுத்தியதில்லை ….

ஹர்ஷிதாவிடம் “டெஸ்ட் எடுத்தாச்சா?” என்று வினவிய ஆர்யன் “நிலா பேபிஸ் மூவ்மன்ட்ஸ் தெரிகிறதா? ஒரு நாளைக்கு எத்தனை தடவை கிக் பண்றாங்க?” என்று விசாரித்துக் கொண்டிருந்தான்.

குழந்தைகளின் பெயரை கூட அவனிடம் சொல்லியாக வேண்டுமா என்று மனைவியின் மீதும் அத்விக்கிற்கு கோபம் மூண்டது.

“நம்ம பேபிஸ்க்கு பெயர் வைக்கலாமா அத்வி” என்று போன மாதம் ஹர்ஷிதா கேட்டபோது “பசங்க பெயரா? பொண்ணுங்க பெயரா?” என்று சற்று குழம்பினான் அத்விக்.

” இரண்டு பேரும் வைப்போம். மை இன்ஸ்டிங்ட் ஸேஸ் இட்ஸ் டெஃபநெட்லி எ ஃபிரட்டர்னல் டிவின்ஸ் . சோ யோசிச்சு சொல்லு” என்ற அடுத்த நொடி “நிலன் நிலானி ” என்றிருந்தான் அத்விக்.

” வாவ்!! எப்படி இவ்வளவு சீக்கிரமா சொன்னாய்?”

” பேபிஸ் உருவானதிலிருந்தே ஒரு ஆயிரம் பெயர்களாவது உருப்போட்டு வைத்திருப்பேன். நீ கேட்டதும் தானாக வந்தன இவை இரண்டும்”

அவனை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு “பேபிஸ் டாடி உங்களுக்கு பெயர் வச்சிருக்காரு.. நீங்கள் பிறந்ததும் ஒரு ஃபங்ஷன் வைத்து இதை சொல்லணும்.. அதற்கு ஒரு டெமோ பார்க்கலாமா?” என்ற ஹர்ஷிதா குடும்பத்தினர் அனைவரையும் கூப்பிட்டு அவள் வயிற்றில் அத்விக் சூட்டிய பெயர்களை மூன்று முறை சொல்ல சொன்னாள்.

அனைவரும் சந்தோஷத்துடன் அக்குட்டி பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்டனர். எவ்வளவிற்கு எவ்வளவு குறி பார்த்த நாளிலிருந்து அவர்களது பயம் அதிகரித்திருந்ததோ அதற்கும் கூடுதலான அளவில் வயிற்றிலிருந்த குழந்தைகளிடம் அவர்களது பாசமே மேலோங்கி  அப்பயத்தை மறைத்து இருந்தது.

அத்ரிஷ் அவன் அண்ணியின் வயிற்றில் கை வைத்து “டார்லிங் குட்டி1 நிலன் டார்லிங் குட்டி2 நிலானி” என்று மூன்று முறை கூறினான்.
இப்படி ஒவ்வொருவரும் அடைமொழியுடன் பேபிஸ் இருவருக்கும் பெயர்களை வைத்து மகிழ்ந்தனர்.

கடைசியாக அத்விக் மனைவியின் வயிற்றில் கை வைத்து “நிலன்” என்றதும் உள்ளிருந்த ஒரு குட்டியும் அவனுக்கு ஹைஃபை கொடுத்தது. குழந்தையின் முதல் ஸ்பரிசம். “பேபி கிக் பண்ணுச்சு தானே அத்வி” என்று ஹர்ஷிதா ஆர்ப்பரித்தாள்.

பிறகு இரு முறை “நிலன் நிலன்” என்று அவன் சொல்லும்போதும் வயிற்றில் எந்த உணர்வும் தெரியவில்லை .

நிலானி பெயரை சொல்லும் முன்பே “டாடி உங்க பேரை சொல்ல போகிறேன் பேபி… நிலன் போல நீங்களும் கிக் பண்ணனும் ஓகே?” என்று சொல்லி கொடுத்துவிட்டு “நிலானி” என்றான் அத்விக்.

அடுத்த குட்டியும் அதன் அப்பா பேச்சைக் கேட்டு உடனே அதை நிறைவேற்ற ஒரு நொடி வலியில் “அம்மா ….” என்று கத்தியிருந்தாள் ஹர்ஷிதா.

“என் பொண்ணு ஃபுட்பால் பிளேயரோ???” என்றவன் “வெளியே வந்து பிராக்டிஸ் பண்ணிக்கலாம் நிலானி பேபி அதுவரை மெதுவாக கிக் பண்ணுங்க” என்று மகளுக்கு அறிவுரை வழங்கினான் அத்விக்.

அன்றிலிருந்து அவர்களிடம் உரையாடும்போது நிலா பேபிஸ் தான்.
இரவு எப்போதும் உறங்கும்முன் குழந்தைகளிடம் அன்றைய தினத்தைப் பற்றி பேசுவது அத்விக்கின் வழக்கம்.

அதுவும் இருவரிடத்திலும் தனித்தனியாக பேசுவான். “நிலானி பேபி” என்று தன் கால்பந்து வீராங்கனையை தான் எப்போதும் முதலில் அழைப்பான். அது கிக் செய்தவுடன் “உங்க டே எப்படி இருந்தது பிரேவ் கேர்ள்?” என்பான்.

அன்றொருநாள் “இன்று டாடி ஒரு திருடனைப் பிடிக்கப் போனேனா…. அவன் டாடி வருவது தெரிந்து ஓடப் பார்த்தான். அந்த சூழ்நிலையில் டாடிக்கு பதில் நீங்கள் இருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க?” என்று கேட்க அதற்கு வயிற்றில் ஒரு அசைவு.

“ஸ்மார்ட் கேர்ள் ” டாடியும் உங்களை மாதிரியே ஒரு பஞ்சு கொடுத்தேனா “ஹி காட் அரெஸ்ட்டட். யாரு ஃபர்ஸ்ட் ஆக்டிவேட் ஆகுறோமோ அவங்களுக்குதான் சக்சஸ் . சோ மை கேர்ள் ஷுட் ஆல்வேஸ் பி பர்ஸ்ட் அண்ட் போரிமோஸ்ட் இன் எவரிதிங்” என்று கற்றுக் கொடுத்திருந்தான்.

அடுத்ததாக “மை லிட்டில் சாம்ப்” என்றழைக்க அங்கு ஒரு அசைவையும் அத்விக் உணரவில்லை. “டேய் மம்மி பாய்… டாடி வந்துவிட்டேன் நான் இல்லாத டைமில் உங்க அம்மாவை பார்த்துக் கொண்டால் போதும் இப்ப வாங்க டாடிகிட்ட” என்று அழைத்தான் மகனை.

“ஓகே டாடி” என்பதுபோல் சிசு தலையாட்ட “வெரி குட் மை பிரசியஸ்… நீ இருக்கும் தைரியத்தில் தான் நான் நிம்மதியாக டியூட்டிக்கு சென்று வருவதே.. இன்று போல் எப்போதும் உன் மம்மியை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் …. அது எந்த மாதிரியான சூழ்நிலையிலும் “என்று கூறிவிட்டு மேற்கொண்டு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தான் அத்விக்.

இன்று ஆரியன் பற்றிய சிந்தனையில் இருந்ததால் அவர்கள் அறைக்கு வந்து ஒரு மணி நேரம் ஆகியும் குழந்தைகளிடம் பேசினான் இல்லை அத்விக்.

ஒரு நிமிடம் தாமதமானாலும் “நிலா பேபிஸ் டாடி வொர்க் பிஸியில் உங்களை மறந்து விட்டார் போலும்” என்று போட்டுக் கொடுப்பவளும் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கியிருக்க “என்னாச்சு ஹர்ஷி?” என்றான் அத்விக்.

” அது ….. ரதிக்கும் ஆர்யாவிற்கும் ஏதோ ஒரு சம்திங் சம்திங் அண்ட் ஒரு டிஷ்யும் டிஷ்யும்…. அதை எப்படியாவது சரி செய்து விடு அத்தான்” என்றாள் ஹர்ஷிதா.

” அது ….. ரதிக்கும் ஆர்யாவிற்கும் ஏதோ ஒரு சம்திங் சம்திங் அண்ட் ஒரு டிஷ்யும் டிஷ்யும்…. அதை எப்படியாவது சரி செய்து விடு அத்தான்” என்றாள் ஹர்ஷிதா.

அத்விக்கிற்கும் அவர்களை பற்றிய சிறு நெருடல் இருக்கத்தான் செய்தது .

அதர்வனாவிடமும் அவளது பெற்றோரிடமும் சகஜமாக உரையாடும் பிரகதி ஆர்யனை கண்டால் ஒதுங்கி போவது அத்விக்கிற்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஆனால் எப்போதும் ஹர்ஷிதாவின் மாதாந்திர ஸ்கேன் ரிப்போர்ட்களை ஆர்யனிடம் சேர்ப்பது பிரகதி தான்.

“ஆர்யனும் ரதியும் ஒரே காலேஜ் தான்” என்று அதர்வனா ஒருமுறை சொன்ன பிறகு அத்விக் பிரகதியிடம் ஆரியன் பற்றி விசாரித்தான். அக்கேள்வியை புறக்கணித்ததோடு “இனி வேறு யாரோ பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதே அண்ணா” என்ற ஆர்யன் பற்றிய பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள் பிரகதி.

இப்போது மனைவி தன்முன் வைத்திருக்கும் கோரிக்கை…. அது கட்டளை என்று புரிந்திராதவன்…. ” என்ன சொன்னாய்?” அதிர்ச்சியாகவே கேட்டான் அத்விக்.

“அதான் சொன்னேன்ல ரதி ஆர்யா சண்டையை எப்படியாவது சரிசெய்துவிடு ….”

“யாரோ சண்டை போட்டால் நாம் எதற்காக சேர்த்து வைக்க வேண்டும்… அதுவும் என் தங்கச்சி பிடிக்காமல் தானே ஒதுங்கி போகிறாள்…. அவளை எந்த கட்டாயத்திலும் எப்போதும் திணிக்க நான் தயாராக இல்லை… நீயும் இனி இதைப் பற்றி யோசிக்காதே… யாரோவிற்காக உன் நேரத்தை வீணாக்கிக் கொள்ளாதே” சூடாகவே வெளிவந்தன அவன் வார்த்தைகள்.

“யாரோ பற்றி மட்டும் நான் இங்கு பேசவில்லை. உன் தங்கையை பற்றியும் தான் பேசுகிறேன். அவள் மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று சொன்னாலும் சரி என்று தலையாட்டுகிறாய்…. ஆர்யாவிடம் பேசமாட்டேன் என்னை எதுவும் கேட்காதே என்று சொன்னாலும் சரி என்று தலை ஆடுகிறாய்… பூம் பூம் தடிமாடு” என்று கணவனை திட்டியவள்

“இவை இரண்டிற்குமே ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது அத்வி. காரணமில்லாமல் ரதி ஆர்யாவை புறக்கணிக்க மாட்டாள். காலேஜ்ல ரதி ஆர்யாவை ப்ரொபோஸ் பண்ணி இருக்கலாம். ஆர்யா அந்த சமயத்தில் என்னை…” சற்று இடைவெளிவிட்டு அந்த வாக்கியத்தை தொடராமல் “ஆர்யா அப்போது நிராகரித்து இருக்கலாம். ஆனால் இப்போது மாறவும் வாய்ப்பு இருக்கிறது தானே” என்றாள் ஹர்ஷிதா.

முழுக்க முழுக்க ஆர்யனிற்காக பேசியவளிடம் “கதை பிரமாதம். நானே ப்ரொடுயூஸ் பண்றேன்….. சூப்பரா ஓடிடும்… தியேட்டரைவிட்டு ” என்றான் நக்கலும் கோபமுமாய்.

அதை கண்டு கொள்ளாதவள் “விளையாடாதே அத்வி. நான் காதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் ….. ஒரு ட்ரூ லவ்வை ஒன்று சேர்க்கலாம் என்று பார்த்தால் …..”

“என்ன தெரியும் உனக்கு லவ்வ பத்தி” என்று நிதானத்தை இழக்க ஆரம்பித்தான் அத்விக்.

Advertisement