Wednesday, May 8, 2024

Oru Kaava(tha)lanin Kathai 16

4080

Advertisement

” காதலா!!!!” அடித்த முழு சரக்கும் இறங்கிவிட்டது அத்விக்கிற்கு .

“என்னடா சொல்கிறாய்… நானா… காதலா…” குழம்பியபடி நின்ற அத்விக்கிடம் “ஓ சாருக்கு நீங்க லவ் பண்ணுவதே தெரியவில்லையா? அவள் என்ன சொன்னாலும் கேட்கிறாய்… அவளை அடுத்தவன் பார்த்தால் எரிகிறாய் …. அவளிடத்தில் ஒருவன் லவ் லெட்டர் கொடுக்க வந்தான் என்று அவன் மண்டையை உடைத்து இருக்கிறாய்… இதற்கு பேர் என்னடா” வினவினான் ராகுல்.

அமைதியாய் நின்ற அத்விக்கின் தோளை குலுக்கியபடி “என்னடா” என்ற ராகுலிடம் “அவள் பிறந்த உடன் அப்பத்தா என்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்று ‘பேராண்டி நல்லா பார்த்துக் கொள் உன்னை பார்த்துக்கொள்ள உன் பொண்டாட்டி பிறந்து விட்டாள்’ என்றுதான் அறிமுகப்படுத்தி வைத்தது. அன்றிலிருந்து எத்தனையோ முறை அவளை பொண்டாட்டி என்று அழைத்து இருக்கிறேன் . ஆனால் காதலிக்கிறேன் என்று உணரவில்லைடா” தொப்பென்று தரையில் அமர்ந்தான் அத்விக் தலையில் கைவைத்தபடி.

“என்ன அநியாயம்டா இது? உனக்கு ஆசை காட்டி வளர்த்ததும் இல்லாமல் எப்படி உன்னை கேட்காமல் இன்னொருவனுக்கு கட்டி கொடுப்பார்கள்?”

மௌனம் சாதித்தவனிடம் “ஒருவேளை ஹர்ஷியின் விருப்பப்படி…” ஆரம்பித்த ராகுலை “நோ ” என்று இடைமறித்தான் அத்விக் .

போன வாரம் வீட்டிற்கு சென்ற தினத்திலேயே ஹர்ஷியை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதையும் அவன் மறுத்தத்தையும் தெரிவிக்க “லூசாடா நீ” என்று திட்டியிருந்தான் ராகுல்.

” நான் வேண்டாம் என்று சொல்லி இருக்காவிட்டால் நிச்சயம் அவள் மறுத்திருப்பாள்டா” விரக்தியாக சிரித்தவனிடம் “உனக்கு எப்படி அதில் அவ்வளவு உறுதி?” என்று பாய்ந்தான் ராகுல்.

“ஏற்கனவே என்னை நிராகரித்தவள் இம்முறை மட்டும் எப்படி ஒப்புக் கொள்வாள் என்ற பயத்தில்தான் அன்று நானே முந்திக் கொண்டேன்”

” என்னடா உளறுகிறாய். அவள் யாரையும் விரும்பவில்லை என்கிறாய் அதேசமயம் உன்னை ஏன் அவள் நிராகரிக்க போகிறாள்?”

” எப்போதுமே ஹர்ஷிக்கு என்னிடத்தில் பிடித்தம் என்பது இருந்ததில்லை. அவளது பள்ளியின் கடைசி நாளன்று ஆர்யன் அவளிடத்தில் லவ் லெட்டரை நீட்டியது அவளை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற என் கண்களில் பட்டு நெருப்பினை விதைத்தது.

ஆர்யனின் செய்கையில் அவள் முகம் அப்பட்ட அதிர்ச்சியை தெறிக்க என் கை அவனின் சட்டையை பிடித்திருந்தது.
ஆர்யனின் செய்கையில் அவள் முகம் அப்பட்ட அதிர்ச்சியை தெறிக்க என் கை அவனின் சட்டையை பிடித்திருந்தது.

” நீ இப்படி செய்வாய் என்று எதிர் பார்க்கவே இல்லைடா” என்று அத்விக் ஆர்யனை கடிந்ததற்கு ஹர்ஷிதா பள்ளி படிப்பை முடிப்பதற்காக இத்தனை நாள் காத்திருந்ததாகவும் அடுத்த வருடம் தன் கல்லூரி படிப்பினை முடித்த பிறகு அமெரிக்காவிற்கு சென்று எம்.டி படிக்க போவதாகவும் அதற்கு இதுதான் சரியான தருணம் என்றும் கருதி லெட்டர் கொடுத்ததாகவும் ஆர்யன் தெரிவித்தான்.

அத்விக்கிடம் தன் காதலை புரிய வைத்துவிடலாம் என்ற நோக்கத்தில் பேசினான் ஆர்யன்.

ஆனால் அதில் அத்விக் கோபம் மேலும் பெருகி அவனை விட்ட ஒரே அடியில் கீழே சுருண்டு போய் விழுந்தான் ஆர்யன்.

தன் அதிர்ச்சியில் இருந்து மீண்ட ஹர்ஷிதாவோ அத்விக்கின் செய்கையின் தாக்கத்தில் அவனிடத்தில் பாய்ந்தாள்.

ஓடிச்சென்று ஆர்யனை எழுந்து கொள்ள உதவிய ஹர்ஷிதா “வெரி சாரி ஆர்யா” என்றதோடு “என்ன நடந்தாலும் கை நீட்டியது தப்பு அத்வி” அவளது தோழியின் அண்ணன் என்ற முறையில் ஆர்யனிற்கு வக்காலத்து வாங்கியது அத்விக்கை மென்மேலும் பேச வைத்தது.

“எவனோ ஒருத்தன் என் பொண்டாட்டிக்கு லவ் லெட்டர் கொடுப்பானாம்… அதை மரியாதையுடன் வாங்கி வைத்துக் கொண்டு அவனுக்கு விருந்து உபச்சாரம் செய்வதற்கு என்ன டாஷ்….. என்று நினைத்தாயா?”

” வாயை மூடு … முதலில் இங்கிருந்து போய்விடு”

” ஆமாம் நான் தானே உனக்கு இடைஞ்சலாக இருக்கிறேன்”

“திஸ் இஸ் யுவர் லிமிட்ஸ் அத்வி”

“ஹே நிறுத்துடி லிமிட்ஸ் பற்றி உனக்கு என்ன தெரியும்…. அந்த லெட்டரை அவன் மூஞ்சியில் விட்டெரிந்துவிட்டு என்னோடு வந்திருந்தாய் என்றால் நீ உன் லிமிட்ஸை தாண்டவில்லை என்று அர்த்தம். ஆனால் இப்போது…”

” இப்போது… என்ன இப்போது? சொல்ல வந்ததை அப்படியே சொல்லு…”

” எப்போது என்னைவிட்டு அடுத்தவனுக்கு சப்போர்ட் செய்தாயோ அப்போதே நமக்குள் எதுவும் ஒத்துவராது என்று தோன்றுகிறது. அதனால்”

” போதும்….. நீ என்ன என்னை ஒத்து வராது என்று சொல்வது… நான் சொல்கிறேன் எனக்கு நீ வேண்டாம். நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். யார் சொன்னாலும் சரி… நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் சரி… ” தீர்க்கமான பார்வையுடன் கூறியவள் ஆர்யன் கையில் இருந்த கடிதத்தை பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டாள்.

” அதை மட்டும் நீ பிரித்தாய் என்றால்….” அத்விக் அப்போதும் விடாது சண்டையிட

” உன்னால் முடிந்ததைச் செய்துகொள்” என்று ஹர்ஷிதா கூறவும் நேரே ஜெகனிடம் சென்றான் அத்விக்.

” இப்போதே எனக்கும் ஹர்ஷிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்யுங்கள் அப்பா” என்று அரக்கப் பறக்க ஓடி வந்து கூறிய மகனை கேள்வியோடு பார்த்தாரே தவிர ஏதும் பேசினார் இல்லை ஜெகன்.

“உங்களிடம் தான் கூறுகிறேன் சிறுவயதிலேயே நிச்சயித்து தானே அதுதான் இப்போது பெரிய மனுஷங்க ஆகிவிட்டோம். இனியும் என்ன?” நச்சரித்தவனிடம் “பெரிய மனிதன் ஆகி விட்டாயா? எவ்வளவு பெரிதாக… எள்ளலுடன் வினவினார்.

கோபத்தில் மேல் மூச்சு வாங்கியபடி பேசாது நின்றவனிடம் மேலும் “பெரிய மனிதன் என்றால் என்னன்னு தெரியுமாடா… நான்கு பேர் மதிக்கணும் … நான்கு பேர் கூட வேண்டாம்… முதலில் உன்னை நீயே மதிக்கவேண்டும்… மூன்று வருடம் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நம் அலுவலகத்திற்கும் வராது மேற்கொண்டும் படிக்காது அப்பா காசில் உட்கார்ந்து கொண்டு காலத்தை கழிக்கும் உங்களைப்போன்ற மதிப்புமிகு பெரிய மனிதனுக்கு எந்த நம்பிக்கையில் என் தங்கை அவள் பெண்ணை கட்டிக் கொடுப்பாள்? அவளை விடு நானே இதற்கு சம்மதிக்க மாட்டேன் . உனக்கு ஒரு சவால்டா… ஒரு வருடம் ஒரே ஒரு வருடம் மட்டும் என் உதவி இன்றி இந்த உலகில் வாழ்ந்து காட்டி விடு .. அதை நிறைவேற்றி விட்டால் நீ வந்தவுடன் நம் நிர்வாக பொறுப்பினை கூடுதலாக ஒப்படைத்து ஹர்ஷியையும் மணமுடித்து வைக்கிறேன். ஒருவேளை இதில் நீ தவறினால் ஹர்ஷிதாவை கனவிலும் நினைத்துப் பார்க்க கூடாது” என்ற சொற்களால் அறைந்து விட்டு சென்றார் ஜெகன்.

வீட்டை விட்டு வெளியேறிய முதல் மூன்று மாதங்கள் மிகவும் சிரமமாக இருந்தது. டிகிரி சர்டிபிகேட்டை வைத்துக்கொண்டு பார்ட் டைம் ஜாப் பார்த்துக்கொண்டே வேலை தேடி அலைந்த சமயத்தில் ஒரு நாள் பேங்கில் இருந்து வெளியே வந்த பெண்மணியின் பேக்கை பறித்துக்கொண்டு ஒருவன் ஓடினான். அவனை துரத்தி பிடித்து அப்பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கவும் “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் தம்பி . மகள் திருமணத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்த இரண்டு லட்ச ரூபாய். போலீசிடம் சென்றிருந்தால் கூட முழு பணம் கிடைத்து இருக்குமா என்று தெரியாது” கண்ணீர் மல்க நா தழுதழுக்க கூறிவிட்டுச் சென்றார் அப்பெண்மணி .

அன்று என்னுள் ஏற்பட்ட ஒரு புதுவித உணர்வு… மகிழ்ச்சியையும் தாண்டி நிறைவே அதிகரித்திருந்தது. அதுதான் ஸ்பார்க். ஒரு ஐ.டி கம்பெனியில் நைட் ஷிப்ட் பணியில் வேலை பார்த்தபடி ஐ.பி.எஸ் படிப்பை மேற்கொண்டேன். அப்பா கொடுத்த ஒரு வருட கால அவகாசம் முடிந்தும் வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை. நான் செய்த தவறுக்கு அம்மா என்ன செய்தார்கள் என்று அவரிடம் மட்டும் தொடர்பில் இருந்தேன்.

தம்பியிடம் கூட பேச தோன்றவில்லை. அவனிடம் பேசினால் எப்படியும் ஹர்ஷியிடம் சொல்லாமல் இருக்க மாட்டான். அவளால் தான் தன் குடும்பத்தை பிரிந்து வந்தது என்பது போன்ற வன்மம் என்னுள் அழியாது நின்றது. மேலும் என்னை வேண்டாம் என்று கூறியவள் அதற்காக ஒரு சதவீதமாவது வருத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் விஸ்வரூபம் எடுக்க மிருதுளாவை அவள் முன் நிறுத்தினேன். அவள் அதை நம்பியது மட்டுமின்றி வீட்டினருக்கும் தெரிவித்து…

அட! அட! அவர்களுக்கும் தான் என் மீது எவ்வளவு நம்பிக்கை?? ஒரு வார்த்தை என்னிடம் காதலிக்கிறாயா? என்று கேட்க தோன்றயதா! நான் லவ் பண்ணுகிறேனாம்!! நான் என் பொண்டாட்டிய லவ் பண்ணுவதே இன்று தான் எனக்கு தெரிகிறது. அதுவும் என் ஃப்ரெண்ட் நீ கிடைத்த புண்ணியத்தால்!!! அப்பா ஞானபண்டிதா நீ வாழ்க” இடைவெளியின்றி பேசிய அத்விக் நண்பனை ஒரு கும்பிடு போட்டுவிட்டு மயங்கி விழுந்தான்.

அடுத்த நாள் அத்விக்கை வலுக்கட்டாயமாக கோவிலுக்கு அழைத்து வந்திருந்தார் ரூபா. அவசரமாக நடந்தேறிய நிச்சயம். நல்லபடியாக திருமணத்தை நடத்திக் கொடு இறைவா என்ற குடும்பத்தாரின் வேண்டுதலுக்காக. ” நான் உள்ளே வரவில்லை” என்று திண்ணையில் அமர்ந்து கொண்ட அத்விக்கை யாரும் தடுக்கவில்லை.

தன் மொபைலை எடுத்தவனுக்கு அதில் டாக்டர் அகஸ்டின் என்பவரின் விளக்க உரையை காண நேர்ந்தது. அதில் அவர் தன் குழந்தை வளர்ப்பு முறையைப் பற்றி அனைவரிடத்திலும் பகிர்ந்து கொண்டிருந்தார். அவருக்கு ஆறு பெண் குழந்தைகள் . பருவ வயதில் இருக்கும் தன் மூன்றாவது மகளின் நடவடிக்கையில் இரு தினங்களாக மாற்றம் தென்பட அதுகுறித்து மகளிடம் விசாரணை மேற்கொண்டார். அவளது வருத்தத்திற்கான காரணம் தந்தைதான் என்றும் பள்ளி நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த மது பார்ட்டியில் கலந்து கொள்ள விடாமல் போனதால் தான் இழந்த சில மணி நேரத்தையும் பற்றிக் கூறினாள் மகள். மனம் வருந்திய அகஸ்டின் “அந்த மது பார்ட்டிக்கு உன்னை அனுப்பியிருந்தால் உன் குட்டி சொர்க்கத்தை நீ தவற விட்டிருக்க மாட்டாய் அப்படி தானே” என்றதற்கு ஆமாம் என்று தலையசைத்தாள் மகள். “என் வளர்ப்பு முறை உனக்கு பிடிக்கவில்லை அப்படித்தானே ” மனந்தாங்களுடன் வினவியவரிடம் ஒரு முழு நிமிடத்தையும் யோசனைக்கு எடுத்துக் கொண்டவள் “எனக்கு பிடிக்கவில்லை தான் அப்பா ஆனாலும் உங்களிடம் நான் வளர்வதில் பெருமையாக உணர்கிறேன். நான் ஒரு நல்ல மனதுடனும் எண்ணங்களுடனும் வளர்வதற்கு நீங்கள் உதவி புரிகிறார்கள். ஐ டோன்ட் லைக் இட் யெட் ஐ லவ் யூ டாடி” என்று தன் மகள் கூறியதை முகம் கொள்ளா பூரிப்புடன் சொல்லிவிட்டு குழந்தை வளர்ப்பிற்கு சில டிப்ஸ்களை வழங்கியிருந்தார் ஆகஸ்டின்.

இதே மது விஷயத்தில் தன் தந்தை ஜெகனின் அணுகுமுறையை அத்விக்கால் ஒப்புவித்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. மது விஷயத்தில் மட்டுமின்றி தன் வாழ்வில் எல்லா சமயத்திலும் அவர் நடந்து கொண்ட முறையை எண்ணுகையில் அவர் மேல் அளவுகடந்த கோபம் பெருகியது….. தன் மேல் பிழையே இருந்தாலும் வீட்டை விட்டு அனுப்பி இருக்காமல் இருந்தால் தன் காதலை இழந்து இருப்பேனா…. ஹர்ஷிதாவை திருமணம் செய்து கொள்ள கேட்டார் தான். தான் மறுத்தால் அப்படியே விட்டுவிட்டு அடுத்தவனை அவளுக்கு தேர்ந்தெடுப்பதா… அதுவும் இவ்வளவு விரைவில்….

எல்லா பெற்றோரும் பிள்ளைகளுக்கு நல்லதுதானே போதிப்பார்கள்…’ ஹர்ஷியை நீ திருமணம் செய்து கொண்டால் தான் சரியாக வரும்’ என்று நல்லதை எடுத்துச் சொல்லக் கூடாதா… நேற்று இரவு நான் உணர்ந்த காதல் நிறைவேறாது போவதற்கு முழு காரணமும் தன் தந்தை தான் என்று அசைக்க முடியாது நம்பினான் அத்விக்.

அவர்கள் சாமி கும்பிட்டு வருவதை கண்டு போனை பாக்கெட்டில் போட்ட அத்விக் ஹர்ஷியை காணாது தேடினான். அவளோ சற்று தூரத்தில் ஆர்யனை தனியே வருமாறு சைகையில் அழைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அத்விக் அருகில் வந்த ஜெகன் மரகதத்தை சொந்தக்கார வீட்டு விசேஷம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். கூடவே குடும்பத்தினர் அனைவரும் காஞ்சிபுரத்திற்கு முகூர்த்த பட்டு எடுக்க போவதால் இந்த உதவியை செய்து தருமாறு கேட்கவும் சுர்ரென்று ஏறிய கோபத்தில் ‘முடியாது’ என்று கத்தினான் அத்விக்.
அத்விக்கின் சத்தத்தில் அங்கிருந்த அனைவருமே திரும்பி பார்த்தனர்.

” என்னடா முடியாது நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி ….. ” ஜெகனின் வாக்கியத்தை முடிக்க விடாமல் மீண்டும் கத்தினான் அத்விக்.

” நான் என்ன பெரிய ஆள் ஆகி விட்டேன்… ஊரில் தெரிந்தவன் தெரியாதவன் அத்தனைபேரும் வாழ்த்தினர். ஒரு வார்த்தை பாராட்ட தோன்றியதா!! உயிரோடு இருக்கிறேனா என்று கூட தெரியாமல் தானே இருந்தீர்கள்” பேசிக் கொண்டு சென்றவனை அடக்க வழி தெரியாமல் திணறினார் ரூபா .

தடுத்த ஹரிஹரனிடம் “ப்ளீஸ் மாமா என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். அதை திருப்பி பெற முடியாது. ஆனால் சொல்லக்கூட கூடாது என்றால் எப்படி?? ” அவரை அமர்த்திவிட்டு மேற்கொண்டு பேசலானான் அத்விக்.

Advertisement

error: Content is protected !!