Advertisement

கல்யாணம் முடிந்து அனைவரும் முருகன் சன்னதிக்கு சென்றனர்…… அங்கு முருகன் சன்னதியில் கண் மூடி இருந்த தீக்ஷி “என் மனசுல இருக்குற கோபம், அவரை காயப்படுத்திர கூடாது முருகா” என வேண்ட….. 
             ரோஹித் மனதில் “நான் இதுவரைக்கும் எனக்காகனு எதுவுமே கேட்டதில்லை…. என்னோட கடந்த காலத்துல நடந்த சில கசப்பான சம்பவங்கள் இன்னும் என் மனசுல ரணமா இருக்குது….. அதுனால என் ஷனா பாதிக்கப்படாம நீதான் பார்த்துக்கணும் முருகா”…..
             அவர்களின் வேண்டுதலை கேட்ட முருகர். இளம் புன்னகையுடன் “ஒருவர் காயத்துக்கு மற்றொருவர் மருந்தாக” என அருள்பாலித்தார்….. 
             கௌரி, “போகலாமா?….. என்றார்”…..
            “ம்ம் போகலாம் அம்மா”….. 
           அனைவரும் கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும்  ஹோட்டலிலே சாப்பிட்டனர்….. ரோஹித்தின் வீட்டை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது….. புகழும் திகழும் முன்சீட்டில் அமர்ந்திருக்க….. மிருதுவும் யாழியும் ஒருவரின் மேல் இன்னொருவர் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்….. 
          ஏன்டா!…. “எப்படிடா இந்த கலவரத்துலையும் ரெண்டு பேரும் நல்லா தூங்கிட்டு வர்றாங்க”….. 
          ம்ம்…. ” நம்மள மாதிரி ரெண்டு இழிச்சவாயன்களை பெத்து அருமை பெருமையா வளர்த்து கௌரி இதுங்க கையில தூக்கி கொடுத்துருச்சி….. குண்டு பூசணிக்கா (மிருது) கூட பரவாயில்லைடா உனக்காக நைட்டு எல்லாம் முழிக்குது…… 
            நேத்து நைட்டு ஒரு கிளையண்ட் கிட்ட பேசிட்டு போறேன்….. கும்பகர்ணன் பேத்தி மாதிரி அப்படி தூங்குறா…. எழுப்பி எழுப்பி டையர்டாகி நான் போய் தூங்கிட்டேன்….. என சொல்லி முடிப்பதற்குள் போன் அடிக்க…. 
           “நம்ம பெத்த தெய்வம் தான் கூப்பிடுது”….  என போன் அட்டென்ட் பண்ணி ஸ்பீக்கரில் போட்டான்….. 
          ஏன்டா பரதேசிங்களா!… “பொண்ணும் மாப்பிள்ளையுமே சீக்கிரமா வந்துட்டாங்க…. நீங்க என்னடா கடலை வறுத்துட்டு இருக்கிங்களா….
          ஆமா நாங்க கடலை வறுத்துட்டு இருக்கோம்…. நீயும் வர்றியா பீச்சோரம் போய் வித்துட்டு வருவோம்….. ஏய் கிழவி இப்ப என்ன வேணும் உனக்கு???…. 
.        டேய்  நாத்தனார் தான் ஆராத்தி எடுக்கணும்டா சீக்கிரம் வந்து தொலைங்க…. 
       ம்ம் சரி வந்துட்டோம்…. கேட்ட திற….. 
      நான் என்ன வாட்ச்மேனா…. கேட்ட திறக்க அங்கே வாட்ச்மேன் சும்மா தான் உட்கார்ந்து இருப்பான்…. ஹாரன் அடி அவனே திறப்பான்….. இல்ல நீயே இறங்கி தள்ளு….. 
         ம்க்கும்…. உனக்கு பேரனா பொறந்ததுக்கு அந்த வேலை மட்டும் தான் பாக்கி….. அதையும் பார்க்கிறேன்….. 
             மிருதுவும் யாழியும் காரிலிருந்து இறங்க….. 
           கௌரி வந்து, மிருது நீ போய் ஆராத்திக்கு ரெடி பண்ணு…..  யாழி நீ போய் பாலும் பழமும் ரெடி பண்ணு…. டேய் நீங்க ரெண்டு பேரும் இந்த லிஸ்டில் இருக்கிறத வாங்கிட்டு வாங்க….. ஒன்னு லிஸ்டில குறைஞ்சாலும் தொலைச்சிருவேன் ஜாக்கிரதை…… 
           ஏன் அப்பா சும்மா தான இருக்காரு அவர்கிட்ட கொடு அவர் போய் வாங்கிட்டு வருவாரு…… 
          டேய் நீங்கதான வயசுப் பசங்க….. 
          ஏது! வயசுப் பசங்களா மை டியர் மம்மி நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் முடிஞ்ச பசங்க என்க. என சண்டையிட்ட திகழைக் கண்டு… 
          புகழ் தன் தலையில் அடித்துக் கொண்டான்….. 
          கௌரி அவன் தலையில் நங்கென்று கொட்டினார்…. மரியாதை ஓடிருங்க….. என்க
            என்னடா இது மம்மி ஆக்சன்ல இறங்கிடுச்சி….. தலையை தேய்த்தவாறே திகழ் சொல்ல…… 
          உனக்கு இது தேவை தான் உனக்கு…. உனக்கு ஏன்டா இவ்ளோ வாய்…. 
         இந்த வாய் இல்லனா அப்புறம் நான் எப்படிடா வக்கீலா இருக்க முடியும்??….. 
        சரி லிஸ்டில் என்ன இருக்குன்னு படி….. 
       1/2 கிலோ ஆப்பிள், 1/2 கிலோ திராட்சை, 1 டஜன் வாழைப்பழம், 1/2 கிலோ பால்கோவா, 1 கிலோ அல்வா, லாவண்டர் ரூம் ஸ்ப்ரே, குண்டு மல்லி, பன்னீர் ரோஸ்…. டேய் பர்ஸ்ட் நைட்டுக்கு ஜாமான் வாங்கி வர சொல்லிருக்குடா மம்மி….. என்னை பார்த்தா எப்படி இருக்குது…. 
        அவனை மேலிருந்து கீழ் வரைக்கும் பார்த்தவன்….. ம்ம் பர்ஸ்ட் நைட்டு ஜாமான் வாங்கிறவன் மாதிரி இருக்கு…. நம்ம மச்சிக்கு தானடா……
          ம்ம் அவனுக்காக மட்டும் தான் இதெல்லாம் பொறுத்துக்கிறேன்…. ஏதாவது சூப்பர் மார்க்கெட்டுக்கு வண்டியை விடு என்றான் திகழ்….. 
           மிருது ஆராத்தி எடுத்து இருவருக்கும் குங்குமம் வைத்து, ரெண்டு பேரும் வலது காலை எடுத்து வைச்சி உள்ளே வாங்க என்றாள்…… இருவரும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தனர்….. அதன்பிறகு இருவரும் பாலும் பழமும் சாப்பிட்டனர்…… 
           கௌரி, “ரோஹித் நீ தீக்ஷியை ஏதாவது ரூம்ல ரெஸ்ட் எடுக்க சொல்லுப்பா”….. 
          ம்ம் சரி அம்மா….. 
          தீக்ஷியும் பின்னாடியே செல்ல மாடியில் இருந்த ரூமிற்கு சென்று “இங்க ரெஸ்ட் எடுத்துக்கோ ஷனா” என சென்று விட்டான்….. செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…. 
           கட்டிலில் படுத்தது மட்டும் தான் தீக்ஷிக்கு நியாபகம் இருந்தது….. எப்பொழுது தூங்கினால் என அவளுக்கே தெரியவில்லை…… 
        ரோஹித்தின் அறையில், திகழும் யாழியும் அறையை ரெடி பண்ணிக் கொண்டிருக்க…. திகழ் கட்டிலில் பாதி பூவும் மீதியை ரூமிலும் வீசி கொண்டிருந்தான்…. 
         டேய்! ஒழுங்கா போடுடா லூசு….. பாதி பூ கீழே விழுது பாரு எருமை….
        அங்கிருந்த டேபிளில் பழத்தை எல்லாம் ஒரு தட்டில் வைத்து டேபிளின் மேல் வைத்தாள்…. அவளை பின்னாடியிருந்து அணைத்தவன் இதெல்லாம் பார்த்தா…. நம்ம பர்ஸ்ட் நைட்டு தான் நியாபகம் வருது…. செல்லக்குட்டி என கழுத்தில் முகம் புதைத்தான்….. 
                 அவளின் பின்னலிடப்பட்ட கூந்தலை முன்னால் எடுத்துவிட்டு….. அவளின் முதுகில் தன் இதழ்களால் சின்ன சின்ன அச்சாரங்களை பதித்து…… அவளை தன் புறமாக திருப்பினான்….. 
               அவன் கண்களில் தெரிந்த தாபத்தில் தொண்டை வறண்டு போக, தன் எச்சில் கொண்டு சரி செய்ய முயன்று எச்சிலை விழுங்க….. ஏறி இறங்கிக் கொண்டிருந்த கழுத்தில் தன் இதழ்களால் பதித்து….. தன் இதழ்களை பிரிக்காமலே அவள் கழுத்திலிருந்து மேல்நோக்கி சென்று அவள் இதழ்களை தன் அழுத்தமான உதடுகளால் சிறை பிடித்தான்…… அவள் இதழில் உறவாடியபடி இருக்க….. 
          “ஓ! ஷிட் என்னும் சத்தத்தில் இருவரும் பிரிந்தனர்….. இவர்கள் இருவரும் திரும்பி பார்க்க அங்கே ரோஹித் சென்று கொண்டிருந்தான்”..,..
          அச்சோ!.. போச்சு அண்ணன் பார்த்திருச்சு….. எல்லாம் உன்னால் தான்டா அவன் தோள்களில் அடிக்க…
             ப்ச் என் மச்சான பத்தி எனக்கு நல்லா தெரியும்டி….. நம்மள டிஸ்டர்ப் பண்ணிட்டோமேன்னு தான் வெளியில போய் நினைப்பானே தவிர இங்க நடந்ததை பத்தி தப்பா நினைக்கமாட்டான்….  நீ போய் தீக்ஷியை ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க….. அதுக்குள்ள நாங்க இவன ரெடி பண்ணி விடுறோம்…… 
            அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் இள மஞ்சள் நிற சேலையில் மிதமான அலங்காரத்தில் ரோஹித்திற்காக காத்திருந்தாள் ரோஹித்தின் ஷனா….. 
       
              அறையில் உட்கார்ந்திருந்த தீக்ஷி ஒரு மணி நேரத்திற்கு முன்னால் நடந்ததை நினைத்து பார்த்தாள்…….   
            தூங்கிக் கொண்டிருந்த தீக்ஷியை மிருது எழுப்ப….. தீக்ஷிக்கு நேற்றிலிருந்து இன்றுவரை உள்ள மன அழுத்தத்தில் காலையில் நடந்த கல்யாணம் எதுவுமே நியாபகத்தில் இல்லை….
              “குட் ஈவினிங் மித்து ஒரு காஃபி கிடைக்குமா?… ரொம்ப தலைவலிக்குது”…… அப்பொழுது வந்த யாழியை மிருது திரும்பி பார்க்க…. இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதை பார்த்த தீக்ஷி “என்னங்கடா இது ரெண்டும் கோழி திருடனாட்டம் இந்த முழி முழிக்குதுங்க”….. என முணுமுணுத்து விட்டு ஒரு காஃபி கேட்டது குத்தமா? சரி நாமளே போய் போட்டுப்போம்….. 
                ச்சீ தள்ளுங்க ரெண்டு பேரும்….. என அவர்களை தள்ளிவிட்டு, வெளியே வர…..
            ஹேய் நில்லுடி,  “இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு பர்ஸ்ட் நைட்டுடி இந்தா இதை சாப்பிட்டு போய் குளிச்சிட்டு வா” என்றாள் யாழி…..
             ஏது… எ..ன..க்கு பர்ஸ்ட் நைட்டா…. என எச்சில் முழுங்கியவள்….  கீழே குனிந்து கழுத்தில் கிடந்த தன் தாலியை பார்த்தாள்….. அப்பொழுது தான் தனக்கு திருமணமானதே நியாபகத்திற்கு வந்தது…
          . தன் கையில் உள்ள நகத்தை கடித்து துப்பியவாறே….. அய்யயோ வாய்க்கும் வயித்துக்கும் நடுவுல ஒரு உருளை வந்து போகுதே…. யாழி எனக்கு ரொம்ப பயமா இருக்குபா….. என்றாள் கண்களில் பயத்துடன்…..
            “முதல்ல அப்படித்தான் இருக்கும் அப்புறம் சரியாகிரும்”…… நீ கிளம்பு…. 
           அவள் முகத்தில் தெளிவில்லாததை கண்ட மிருது “தீக்ஷி!…. நீ பயப்படுற மாதிரி எதுவுமே நடக்காது” 
           “எனக்கு சேலை கட்ட தெரியாதே”…. 
            “நாங்க கட்டி விடுறோம்….. இருவரும் அழகாக சேலை கட்டி தளர்வாக பின்னலிட்டு, தலையில் குண்டு மல்லி வைத்து மிதமான அலங்காரத்தில் பார்க்க தேவதையாக இருந்தாள்”….. 
              அவளை ரோஹித்தின் அறையில் விட்டு விட்டு சென்றனர்….. கதவு தாழிடும் சத்தம் கேட்டு தன் நினைவுகளில் இருந்து கலைந்த தீக்ஷி திரும்பி பார்த்தாள்….. ரோஹித் வந்து கொண்டிருந்தான்….. 
            ரோஹித் வந்து மெதுவாக அமர, அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த தைரியம் எங்கே போனதென்று தெரியவில்லை…. அவனை பார்க்காமல் தலை குனிந்து அமர்ந்திருந்தவளை “என்னை பாரு ஷனா…. நான் உன்கிட்ட சில விஷயங்கள் பேசனும்….. எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல துளியும் ஈஷ்டம் இல்ல…. எப்படியோ நம்ம கல்யாணம் நடந்திருச்சி…. நீ படிப்பை முடிக்கிற வரைக்கும் நீ இங்க தாராளமாக இருந்துக்கலாம்….. உனக்கு டிவோர்ஸ் வேணும்னா கூட நான் கொடுத்துறேன்….. என சொல்லி முடிப்பதற்குள்”….. 
             அதுவரை அவன் பேசுவதை கேட்டு கொண்டிருந்தவள்…..  தன் மனதில் இருந்த அழுத்தத்தை கோபமாக கொட்ட ஆரம்பித்திருந்தாள்….
              “என்ன ரோஹி…. ஊர் உலகத்துக்காக தான் இந்த கல்யாணம்னு சொல்ல போறியா….. இந்த திருடியை, ஊர் மேயுறவளா ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு வருத்தப்பட போறியா? எப்படி எல்லாம்ம் நம்ம கல்யாணம் நடக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்.தெரியுமா?…. கடைசியில நான் நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கலை….. 
                நான் படிச்சி முடிக்கிற ஒரு வருடத்துக்குள்ள உன்னை எப்படியாவது காதலிக்க வைக்கணும்…… நம்ம ரெண்டு பேரும் காதலிச்சதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கனும்னு பெரிய​ கனவு எல்லாம் கண்டு வச்சிருந்தேன் தெரியுமா?……  உன்னை நான் ஆறு வருஷமா காதலிக்கிறேன் தெரியுமா உனக்கு……. 
             ஆறு வருஷமாவா….. என ரோஹித் அதிர்ச்சியில் எழுந்தே விட்டான்….. அவனால் அதை நம்பவே முடியவில்லை…..
             அவனை நெருங்கியவள் அவனின் சட்டையை கொத்தாக பிடித்து….. ஆமா… ஆமா… நான் உன்னை ஆறு வருஷமா காதலிக்கிறேன்……
              நான் உன்னை பார்க்கும் போது என்னோட வயசு என்னன்னு தெரியுமா? 14…. ஆறு வருஷத்துக்கு முன்னாடி நான் திகழ் புகழ் அம்மா அப்பா பாட்டி எல்லாரும் கடற்கரைக்கு போயிருந்தொம்… நாங்க ஓடிப்பிச்சி விளையாடிட்டு இருக்கும் போது நான் கொஞ்சம் தூரமா ஓடி வந்துட்டேன்…. 
                அப்போ தான் படகுக்கு பக்கத்தில உன்னை பார்த்தேன்….. தலையெல்லாம் கலைஞ்சு சட்டை பட்டன் எல்லாம் திறந்து கிட்டத்தட்ட பைத்தியக்காரன் மாதிரி கண்ணீர் விட்டு அழுதுட்டு இருந்த….. நீ விட்ட ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் உனக்கு வலிச்சிதோ இல்லையோ எனக்கு வலிச்சது….. 
             அது ஏன்னு அப்போ எனக்கு சத்தியமா புரியலை….. நாளாக நாளாக எங்க பார்த்தாலும் நீதான் தெரிஞ்ச….. நான் கோயிலுக்கு போனா கூட உனக்காக மட்டும் தான் சாமி கும்பிடுவேன்….. நீ நல்லா இருக்கனும்….. நீ அழவே கூடாதுன்னு நினைச்சி தான் கும்பிடுவேன்….. என்கிட்ட யாராவது ப்ரோபஸ் பண்ணா கூட நீயா தான்டா தெரிஞ்சா….. 
     ..       அந்த அளவுக்கு நீ என் மனசுக்குள்ள  இருக்க…. ஆனா நீ என்னடான்னா ஈஸியா டிவோர்ஸ் பண்ணலாம்னு கேட்குற…… என அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்….. அறைந்தவளுக்கு இதுவரை தன் மனதில்  இருந்த அழுத்தத்தை கொட்டியதாலோ என்னவோ தீடிரென்று கண்கள் சொருக அவன் மீதே மயக்கம் போட்டு விழுந்தாள்…… 

Advertisement