Advertisement

              “அழகிய இளங்காலை பொழுதில் காலை கதிரவன் தன் வேலையை செவ்வென செய்ய…..  ஜானகி அம்மாளும்  சத்தியவேலும் சோபாவில் அமர்ந்திருக்க”….. 
               பக்கத்தில் யாருக்கோ போன் போடுவதும் வைப்பதுமாக இருந்தார் கௌரி….. திகழையும் புகழையும் காணவில்லை…. மிருதுவும் யாழியும் கையை பிசைந்தபடி இருந்தனர்….  
             “அத்தை எனக்கு ரொம்ப பயமா இருக்கு…… ப்ச் எனக்கும் அப்படித்தான் இருக்கு….. அவ இங்க வந்தா தீக்ஷியை என்ன பாடுபடுத்துவாளோ தெரியலையே”….. 
   
              “நீ ஏன்மா அவன் கூட அனுப்பி வைச்ச?”…. என ஜானகி அம்மாள் கேட்க
           “இல்லை அத்தை தீக்ஷி அதிரடியா கல்யாணத்துக்கு கேட்டதுனால…. அவ கிட்ட பேசி எப்படியாவது அவ மனச மாத்தனும்னு சொன்னான்….. அதான் கூட அனுப்பி வைச்சேன்….. அதுகூட கூட்டமா இருக்கிற பீச்சுக்கு தான் கூப்பிட்டு போயிருக்கான்…. இப்படியாகும்னு யாருமே எதிர்பார்க்கலையே அத்தை”…. 
           “ம்ம் நடந்தது நடந்திடுச்சி இனிமேல் நடக்க வேண்டியத மட்டும் பார்ப்போம்”….. என சத்தியவேல் சொல்ல…. 
           “என் பேரன்கள என்னன்னு நினைச்ச இந்நேரத்துக்கு அந்தப் பத்திரிக்கைகாரான நார்நாரா கிழிச்சு தொங்க விட்டுருப்பானுங்க”…… என பெருமையுடேனே சொன்னார் ஜானகி அம்மாள்
            அதே சமயம் விடிவெள்ளி பத்திரிகையில் திகழ் ஒருவனின் வாயை உடைக்க…. புகழ் அவனின் கையை பிடித்து முறுக்கிக் கொண்டிருந்தான்….. “சொல்லுடா யாரு இந்த மாதிரி செய்ய சொன்னாங்க”…. ரோஹித் சார் தான் செய்ய சொன்னாங்க…. என சொல்லி முடிப்பதற்குள் மறுபடியும் அவன் வாயை உடைத்திருந்தான் திகழ்….. 
                 “ஏன்டா ஊரான் வீட்டு பொண்ணு மேல கையை வைச்சாலே நாங்க பொளந்து கட்டிருவோம்…. உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா எங்க தங்கச்சியை பத்தி தப்பு தப்பாக எழுதினது மட்டுமில்லாமல்…. எங்க பிரண்டு மேலேயே பழியை தூக்கி போடுவே….. என அவனின் வலது கையை முறுக்கிய முறுக்கில் கார்முகிலன்…… என கத்தவும் அவனின் வலது கை உடையவும் சரியாக இருந்தது”….
            புகழ் அந்த பரதேசி வரட்டும் அவனையும் ஒரு கை பார்ப்போம்… என சொல்லி முடிப்பதற்குள் திகழுக்கு போன் வர ரோஹித் தான்டா பேசுறான் என போனை ஸ்பீக்கரில் போட்டான்….. 
            காலை எழுந்ததும் ஜாக்கிங் முடித்து விட்டு வீட்டிற்கு வந்த ரோஹித் நியூஸ்பேப்பரை எடுத்து படிக்க உட்கார்ந்தான்….
             முதல் பக்கத்தில் ” இளம் தொழிலதிபர் பரிதி குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் எம்.டி. திரு.ரோஹித் அவர்கள் இளம் பெண்ணுடன் கடற்கரையில் காதல் களியாட்டம்” என்ற தலைப்பில் கீழே ரோஹித் தீக்ஷியை முத்தமிடுவது போல போட்டாவுடன் வெளிவந்தது…. 
               அதை பார்த்தவனின் நரம்புகள் முறுக்கேற…. உடனே திகழுக்கு போன் பண்ண….. ம்ம் சொல்லுடா என்றான்….. நியூஸ் பார்த்தியா திகழ் நான் அந்த மாதிரி என சொல்லி முடிப்பதற்குள்…. ச்சீ வாயை மூடு என கத்தியிருந்தான் புகழ்…
             நம்ம நட்பை கேவலப்படுத்துற மாதிரி ஏதாவது சொன்ன…. மச்சான்னு கூட பார்க்க மாட்டேன்….. செருப்பு பிஞ்சிரும்டா… வீட்டுக்கு வா. அங்க வச்சு பேசிக்கலாம் என்க…..
           அரைமணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவை பத்தே நிமிஷத்தில் சென்று தீக்ஷியின் வீட்டில் நிறுத்தினான்….. அவன் இதயம் பல மடங்கு துடித்தது…. அவன் இதயத்துடிப்பு ஒவ்வொன்றும் ஷனா ஷனா என சத்தமிட அப்பொழுதே காரை எடுத்து கிளம்பிவிட்டான்….
             “சோம்பல் முறித்து கீழே வந்த தீக்ஷி அங்கிருந்த அனைவரையும் கண்டு ஒரு நிமிடம் திகைத்து விட்டாள்”……
           பாட்டி….. என கூப்பிடுவதற்குள்…. புயலென நுழைந்தனர் தீபக் – ஷியாமளா… (தீக்ஷியின் அப்பா – அம்மா) தீக்ஷியின் தங்கை ரக்ஷிதா…. வந்தவரை பார்த்து அம்மா என ஓடி வருவதற்குள்…. கன்னம் கன்னமாக அறைந்து தள்ளினார்…. 
             சுற்றும் முற்றும் பார்த்தவர்…. ஒரு மூலையில் இருந்த விளக்குமாறை எடுத்து அவளை விலாச ஆரம்பித்து விட்டார்…… கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது….. 
           யாழியும் மிருதுவும் அவர்களை தடுக்க….. அப்பொழுது தான் வீட்டில் நுழைந்த திகழ் ஷியாமளாவை தடுப்பதற்குள்….. ரோஹித் ஷனாவுக்கு முன்னால் வந்து நின்றான்….. ஷியாமளா ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டார்….. 
              ஆறடிக்கு மேல் கண்கள் ரெண்டும், சிவந்து முறுக்கேறிய புஜங்களும்  அவன் கோபத்தை அடக்கி கொண்டிருக்கிறான் என்பதை…… ப்ப்ப்பா என்ன கண்ணுடா இது….. எல்லாரையும் இரண்டு அடி தள்ளி நிக்க வைச்சிரும் போல…. 
               “யாருடா நீ?”…..
                “நான் யாரா இருந்தா என்ன ஒரு வயசு பொண்ண இப்படி தான் அடிப்பாங்களா?”….
              “ஓ! வயசுப் பொண்ணா அடக்கமா இருந்திருந்தா நான் ஏன் அவள அடிக்க போறேன்… இந்த வயசுல ஊர் மேயுற இவளை மாதிரி பொண்ணுக்கு இதெல்லாம் பத்தாது”…. என சொல்லி முடிப்பதற்குள்….. அவரின் கழுத்தை நெரித்து சுவரோடு சாய்த்து அரை அடிக்கு மேல் தூக்கியிருந்தான்…. 
             “என் ஷனாவை பத்தி தப்பா பேசுவியா?”…..
             “அனைவரும் அவனை பிடித்து இழுக்க அவனை சிறிதளவு கூட அசைக்க முடியவில்லை….. தீக்ஷி அங்க பாரு என யாழி அவளை தொடவும் தான் இதுவரை தன் அன்னை அடித்த அதிர்ச்சியில் இருந்தவளுக்கு உணர்வே வந்தது”….. 
             “விட்டுரு ரோஹி”….. 
            “பக்கத்தில் இருந்த மிருதுவுக்கு கேட்டதோ இல்லையோ…. பத்தடி தூரத்தில் இருந்த ரோஹித்துக்கு கேட்க உடனே விட்டுவிட்டான்”….. 
             “அவ சொல்றதுனால மட்டும் உன்னை விடுறேன் இல்லை….. இன்னொரு தடவை என் கண்ணு முன்னாடி வந்துராதே”….. என எச்சரிக்க…. 
              அதுவரை அமைதியாக இருந்த ரக்ஷி  இவளுக்கு இவ்ளோ அழகான, பணக்காரனா கிடைக்கனும் என்னும் வெறுப்பில் “பரவாயில்லை தீக்ஷி புடிச்சாலும் புளியங்கொம்பாதான் புடிச்சிருக்க போல” என்க…..
            “பக்கத்தில் இருந்த கௌரி அவளை அறைந்து விட்டார்”…… 
            “ச்சீ… நீயெல்லாம் ஒரு பொண்ணாடி.. அசிங்கம்புடிச்சவளே….. கூட பொறந்தவளே பத்தியே தப்பா பேசுற வெளியே போ” என்க
           தொண்டையை இறுமிக் கொண்டே…. இனி… ஒரு நொடி கூட உன் வீட்ல இருக்க மாட்டேன் என தீபக்கை கண்ணை காட்ட அவர் ரக்ஷியை கூட்டிச் சென்றார்….. ஷியாமளா தீக்ஷியின் கையை பிடித்து இழுக்க……
            அதற்குள் ரோஹித், “உங்க பொண்ணை தான் கூட்டிட்டு போக சொன்னாங்க…. என்னோட பொண்டாட்டியை இல்லை”….. என்க
            “ம்ஹூம் அத அவ சொல்லட்டும் என்று அலட்சியமாக சொன்னார்”…… அவருக்கு நன்றாகவே தெரியும் தீக்ஷி தன் குரலுக்கே நடுங்குபவள் என்று…… ஆனால் அவர் அறியாத ஒன்று ரோஹித்தின் மேல் தீக்ஷி வைத்திருக்கும் காதல்…. 
            அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த தீக்ஷியிடம் சென்றவன்…. ஷனா என்னை பாரு…. அவனை நிமிர்ந்து பார்த்தாள்….. 
           அவளின் கண்களை பார்த்து கொண்டே “என்னை கல்யாணம் பண்ணி எனக்கு தாயாகவும் தாரமாகவும் நீ வரனும்னு ஆசைப்படுறேன்வருவியா ஷனா ” என கண்களில் ஏக்கத்துடன் கேட்டான்…..
          கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் எதுவுமே பேசவில்லை…. பொறுமை இழந்த ஷியாமளா அவள் கையை பிடித்து இழுக்க அவளோ ரோஹித்தின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்… 
நான் உன்னை​ என்று​ம் பிரியேன் என்பதாய்..
             அனைவரும் காரில் வடபழனி கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்…. சத்தியவேல் ஜானகி கௌரி  ஒரு காரில் செல்ல….. புகழ் மிருது திகழ் யாழி ஒரு காரில் செல்ல…. ரோஹித்தும் தீக்ஷியும் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்….. 
             அவர்கள் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை….. காலையில் அவள் அம்மா நடந்து கொண்ட முறையினால் இப்படி அமைதியாக இருக்கிறாள் என ரோஹித் நினைத்துக் கொண்டிருக்க….. இருவரும்  அமைதியாக இருப்பதால் ரேடியோவை ஆன் பண்ணினான்…. 
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே
ஒரு குழந்தை போலே ஒரு வைரம்.    போலே 
தூய்மையான என் சத்தியம் 
புனிதமானது 
இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்
செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன் 
கை பொருள் யாவும் கரைந்தாலும்     கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே
அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்
மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால் 
தாய் மடியாவேன்
சுவாசம் போல அருகில் இருந்து 
சுகப்பட வைப்பேன் 
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்
உன் கனவுகள் நிஜமாக 
என்னையே தருவேன் 
உன் வாழ்வு மண்ணில் நீள 
என் உயிர் தருவேன் 
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே 
மாலை சூடிய காலை கதிரின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே 
          இந்த பாடலை கேட்ட இருவருக்கிடையில் கனத்த மௌனம் மட்டுமே இருந்தது….. அவளின் கரத்தை எடுத்து தன் கரத்தோடு சேர்த்து கொண்டான்…. அவளின் மௌனத்திற்கான காரணம் அவள் மட்டுமே அறிந்த ஒன்று….
             காரில் சென்று கொண்டிருந்த யாழி, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்க…. அனைவரும் அவளை தீயாய் முறைக்க…. 
             “ப்ச் பெரியவங்க ஒரு பழமொழி சொல்வாங்க…. எந்த கெட்டதுலையும் ஒரு நல்லது இருக்குமாம்”… என்க
           ஹேய்! நீ இப்ப என்ன தான் சொல்ல வர்ற….. இப்ப என்ன நல்லது நடந்திட்டுருக்கு”…. என்றான் திகழ்.
           “அண்ணாவோட கல்யாணம்”….. என்றாள் யாழி
           அப்பொழுது தான் அனைவருக்குமே இவர்கள் கல்யாண விசயமே உறைத்தது….
    .       
            “ஆமா அண்ணா பொண்ணுங்கள கண்டாலே நெருப்பா இருக்குறவர்… ஆனா தீக்ஷியை பத்தி தப்பா சொன்னதும் எப்படி பிகேவ் பண்ணாருன்னு பார்த்தீங்களா??…. தீக்ஷிக்கு ஒன்னுன்னா  அண்ணன் துடிக்கிறான் கவனிச்சிங்களா மாமா என்றாள் மிருது….. 
             “ம்ம் நானும் கவனிச்சேன் பட்டுக்குட்டி”….. அவங்க ரெண்டு பேருமே வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. இனிமேலாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்…. அதை அனைவரும் ஆமோதிக்க அதற்குள் கோயிலும் வந்திருந்தது…..       
             அவர்கள் அனைவரும் கோயிலுக்குள் செல்ல…… திகழ் மாலை வாங்கி கொண்டு வந்தான். புகழ் ஐயரிடம் சென்று கல்யாணத்திற்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு சென்று கொண்டிருந்தான்….. 
            ஜானகி அம்மாளின் கையில் ஒரு பையை கொடுத்தான் ரோஹித்…. அவர் கேள்வியாய் அவனை பார்க்க…. இதுல ஷனாவுக்கு தேவையான எல்லாமே இருக்கு பாட்டி…… இதை அவ போட்டுக்கிட்டா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்  என்றான்..
          ஐயர், “பொண்ணையும் மாப்பிள்ளையும் கூட்டிட்டு வாங்க என்று சொல்ல…. திகழும் புகழும் ரோஹித்தை கூட்டி வர, பட்டுவேட்டி பட்டு சட்டையில் நெற்றியில் திருநீறு பூசி வலது கையில் பிரெஸ்லைட் அணிந்து ஆறடியில் ஆண்மையின் இலக்கணமாக வந்து அமர்ந்தான்….. 
              மிருதுவும் யாழியும் தீக்ஷியை அழைத்து வர அடர் சிவப்பு நிற பட்டில் கண்களில் மையிட்டு, காதில் பெரிய ஜிமிக்கி அணிந்து அவள் நடக்கும் போதெல்லாம் ஜிமிக்கி அவள் கன்னத்தில் உரசியபடி, உதட்டில் அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பூசி, கழுத்தில் முத்தும் பவளமும் சேர்ந்த நெக்லஸுடன் ஆரமும் அணிந்து கைகளில் அதற்கேற்றவாறு வளையல் அணிந்து, இடுப்பில் ஒட்டியாணம் அவளின் கொடியிடையை தழுவியிருக்க, காலில் வெள்ளி கொலுசின் சிறு சிணுங்கலுடன் வந்து அமர்ந்தாள்…. 
               தன் பக்கத்தில் அமர்ந்தவளை ஓர கண்ணால்  தன்ன்…. அவளின் அமைதி அவனுக்கு நெருடலாக இருந்தது…. கெட்டிமேளம்… கெட்டிமேளம் என்க…. அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்….. 

Advertisement