Advertisement

மண்டியிட்டு அமர்ந்தவனின் எண்ணம் முழுவதும் சற்று முன் நடந்ததையே நினைத்து பார்க்க கோயிலுக்கு வந்து இறங்கியதும் கோயிலை சுற்றி பார்த்த திகழ், 
          ஏன்டா இந்த கோயில்ல ஈ  காக்காவ கூட காணலை…. 
         ப்ச் எனக்கும் தெரியலடா இரு நம்ம ஆளுங்க கிட்ட கேட்போம்…  
          டேய் வேண்டாம்டா நாம ஏதாவது கேட்க போய்,… என் பெண்டாட்டி இருக்கிற ஹிஸ்டரி, ஜாக்ரஃபி எல்லாம் புரட்ட ஆரம்பிச்சிருவாடா…. பேசாம வாயை மூடிட்டு இருப்போம் அதுதான் நம்ம காதுக்கு நல்லது…..
           அதுவும் சரிதாண்டா….  குள்ள கத்தரிக்கா வாயை திறந்தா மூடமாட்ட….  என அவர்கள் பேசிக்கோண்டே முன்னே வந்து விட, என்னடா யாரையும் காணும்….  என  பின்னாடி திரும்பி பார்த்தவர்கள்…  
             அங்கே மிருதுவும் யாழியும் ஒருவரின் கையை ஒருவர் கோர்த்து, மிருதுவின்  தோளில் யாழி சாய்ந்தபடி அந்த இடத்தை ரசித்துக் கொண்டிருக்க….  அதை பார்த்தவர்கள், 
              டேய் அண்ணா!! என்னங்கடா இதுங்க ரெண்டும் லவ்வர்ஸ் மாதிரி பண்ணாதீங்க….  நம்ம ரெண்டு பேரை விட அதுங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி தாருமாறா ஓர்க்அவுட் ஆகுது டோய்ய்ய்…  டேய் வாடா முதல்ல அதுங்கள பிரிச்சி தொலைவோம்….  டேய் நெட்டை கொக்கு வாடா போகலாம் என  புகழையும் இழுத்துக் கொண்டே அவர்கள் இருவரின் கைகைளை பிரித்து விட்டு,  இரண்டு பேருக்கும் நடுவில் போய் நின்றனர்…  
           ப்ச் ஏன்டா, இப்படி நடுவுல வந்து நிக்கிற லூசு என யாழி திட்ட….  
          ஏன்டி ஹனிமூனுக்கு ஆசையா கூப்பிட்டு வந்தா நீ என்னடான்னா…. இந்த குண்டு பூசணிக்கா கூட கையை கோர்த்துட்டு நிக்கிற…..  
           டேய் யாரை பார்த்துடா குண்டு பூசணிக்கான்னு சொன்ன நீதாண்டா தவளை வாயி….. வாயை திறந்தா என்னைக்காவது மூடிருக்கியா எப்ப பார்த்தாலும் றிபிக்….. றிபிக்னு…. தவளை மாதிரியே கத்திக்கிட்டுருக்க….  இங்க ஒன்னும் உன்னோட ஹனிமூனுக்கு பிளான் பண்ணல…..  அண்ணாக்கும் தீக்ஷிக்கும் தான் பிளான் பண்ணிதான் கூப்பிட்டு வந்தோம்…. இங்க உனக்கு ஹனிமூன் மட்டும் இல்ல ஹனிபகல் கூட நடக்க விடமாட்டேன்…..  இது யாழிமேல சத்தியம் என தலையில் பட்டென்று கை வைக்க…..  
           ஆஆஆ….. அம்மாஆஆஆஆ ஏன்டி சத்தியம் பண்றதுக்கு நான்தான் உனக்கு கிடைச்சேனா….. ஆளப்பாரு 
            ப்ப்ச் நாம இந்த மாதிரி எத்தனை சத்தியம் பண்ணிருப்போம் என சொல்லியவளை கோவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழி……  
            தீடிரென தீக்ஷி அழும் சத்தம் கேட்டு அனைவரும் பதறியபடி அவ்விடத்திற்கு விரைய….. திகழும் புகழும் வேகமாக செல்ல…. தங்கள் இணைகளை மறந்து விட்டார்கள்…..  அவர்கள் பின்னாடி ஓடியவர்களை இரண்டு பேர் மயக்க மருந்து கொடுத்து அவர்களை கோயிலின் பின்னாடி வழியே கடத்தி சென்று விட்டனர்…..  அதை அறியாமல் அவர்கள் முன்சென்றுவிட….. 
             இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவனை செல்போனின் அழைப்பு கவனத்தை திருப்பியது….  புகழ் தான் அழைத்திருந்தான்….  
              டேய் திகழ் கொஞ்சம் சிக்கீரம் வாடடா…… ரொம்ப பயமா இருக்குடா….  
             அழுது கொண்டிருந்தவன் கண்களை துடைத்தபடியே “ம்ம்ம் சரி வர்றேன்”…… 
          அரைமணி நேரத்தில் ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தவன் நேராக புகழிடம் செல்ல அப்பொழுது வெளியே வந்த டாக்டர் “சாரி மிஸ்டர் புகழ் அவர் கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டாரு”…… என சொல்லி முடிப்பதற்குள்….. 
           நோஓஓஓஓஓ…. என்ன டாக்டர் சொல்றிங்க அவனுக்கு கோமாவா….. 
           மிஸ்டர் இது ஹாஸ்பிடல்  இங்க இந்த மாதிரி சத்தம் போடக்கூடாது….. நீங்க என் ரூமுக்கு வாங்க உங்ககிட்ட  பேசணும்…..  
            புகழை கட்டியணைத்தவன் அவன் யாருக்குமே எந்த பாவமும் பண்ணதில்லையேடா…..  அவனுக்கு மட்டும் ஏன்டா வாழ்க்கையில் எந்த நல்லதுமே நடக்க மாட்டிங்குது….. 
அவனோட சந்தோஷத்த விட அவன் தங்கச்சி, தங்கச்சிங்க வாழ்க்கைன்னு இருந்தவன் இப்போது தான் அவனுக்காக வாழ ஆரம்பிக்கும்போது இப்படியா நடக்கணும் கடவுளே…. என்னால முடியலடா….  என அழுதவனை ஆறுதல் சொல்லும் நிலையில்  புகழ் இல்லை….. 
 டாக்டர் கோமா எனசொல்லியதிலேயே அவன் சிலையென நின்றுவிட்டான்……  திகழ் தான் சிறிது நேரம் அழுதவன் தன்னையும் தேற்றிக் கொண்டு புகழை டாக்டர் ரூமிற்கு அழைத்துச் சென்றான்…..  
            டாக்டரின் அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றவர்களை…… வாங்க மிஸ்டர் திகழ் அன்ட் புகழ் 
            எப்போ டாக்டர் கோமா குணமாகும்…..  
           சிறிது நேர யோசனைக்குப் பிறகு, பத்து நிமிஷத்துல குணமாகலாம்….. இல்லை பத்து வருஷத்துல குணமாகலாம்… எல்லாமே கடவுள் கையில தான் இருக்கு…. 
             அவனுக்கு மட்டும் ஏன் டாக்டர் இப்படி…  எல்லாருக்கும் நல்லது மட்டுமே செய்வான்….. ப்ப்ச் அவன் வாழ்க்கையில சந்தோஷமா இருந்து நாங்க பார்த்ததே இல்லை….. சந்தோசமோ துக்கமோ தனக்குள்ள ஒழிச்சி வச்சிப்பானே தவிர அதை வெளிப்படுத்தக்கூட மாட்டான்…. அவனை மாத்தனும்னு தான் எங்க ஒய்ஃப் ரெண்டு பேரோட ஆசை சார்….  
           அவரோட கேரக்டர் எப்படி.?…. என்ற டாக்டரை இருவரும் புரியாமல் பார்த்தார்கள்…..  
            டாக்டர் இப்போ நீங்க கேட்டது புரியல டாக்டர்…..  கேரக்டர் எப்படின்னா….. அவன் ரொம்ப நல்லவன் டாக்டர்…  அவனுக்கு கெட்ட பழக்கம் எதுவுமே கிடையாது டாக்டர்…. என வேகமாக பேசியவர்களை பாரத்து சிரித்தவர்….. 
            
             அவருக்கு கெட்ட பழக்கம் இருக்குனு நான் சொன்னா….. என்றவரை 
        
            டாக்டர் என அழுத்தமாக சொல்லியவன் நாங்க அவனுக்கு பதினைஞ்சு வருஷமா ப்ரண்ட்ஸ் அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது…..  
          இருக்குனு நான் சொல்றேன்…… 
          இல்லைன்னு நாங்க சொல்றோம் என இருவரும் ஒன்று போல சொல்ல….. 
           இருக்கு என அழுத்தமாக சொல்ல… 
          தாங்கள் பேசுவதை காதிலேயே வாங்காமல் பேசுபவரை கண்டு கோபமாக….. இல்லைலை என அவரை விட அழுத்தமாக கூறினார்கள்….. 
           இருக்கு…. 
     
          இல்லை….  இல்லை….  இல்லை…..  அவன் ரொம்ப  ரொம்ப ரொம்ப நல்லவன்….. அவனுக்கு கெட்ட பழக்கம் எதுவுமில்லை என இருவரும் கத்திவிட…..  
          அந்த நல்லவன் தான் அவரோட கெட்ட பழக்கம்னு நான் சொன்னா…… 
          அவரின் பதிலில் இருவரும் குழப்பமாக பார்க்க….. 
          எஸ்….  அவர் ஓவர் நல்லவனா இருக்கிறதுதான் பிரச்சினை….. கடவுள் அன்பு, காதல், கோபம், வெறுப்பு, காமம் இதெல்லாம் ஏன் கொடுத்துருக்காரு தெரியுமா?…..  நம்மளோட உணர்வுகள வெளிப்படுத்துறதுக்காக…. அந்த உணர்வுகள்ல தனக்குள்ளேயே மறைக்கும் போது அது தன்னோட மனசை மட்டுமில்லாமல் உடம்பையும் சேர்த்தே பாதிக்கும்….. 
பொண்ணுங்களுக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கு தெரியுமா?…..  அவங்களால அவங்க உணர்வுகளை கட்டுப்படுத்தவே மாட்டாங்க…..  அன்பு இருந்தா அதை உடனே வெளிப்படுத்துவாங்க… கோபம் இருந்தா அதை யாரையாவது திட்டியாவது தீர்த்துப்பாங்க…..  சந்தோசமா இருந்தா அதை ஒருவிதமா வெளிப்படுத்துவாங்க….  துக்கமா இருந்தா அதை அழுதே தீர்த்துருவாங்க…..
  நாம தான் உடனே அவங்கள அழுமூஞ்சினு சொல்லி கிண்டல் பண்றது….. ஆனா உங்க ப்ரண்ட் மிஸ்டர். ரோஹித் தன்னோட உணர்வுகள்ல ரொம்ப வருஷமாவே வெளிப்படுத்தாம இருந்திருக்காரு…..  அதுதான் அவரை கோமா ஸ்டேஜ் வரைக்கும் கொண்டு போயிருக்கு…..அப்புறம் ஷனா யாரு?? 
          எங்க தங்கச்சி டாக்டர் அவனோட ஒய்ஃப்….. ஏன் டாக்டர்?…..  
           அவரு கோமா ஸ்டேஜ்க்கு போறதுக்கு முன்னாடி சொன்ன வார்த்தை “ஐ லவ் யூ ஷனா” சோ அவங்க கூட இருந்தா கண்டிப்பா இவரு குணமுடைய சான்ஸ் இருக்கு….. 
             அது முடியாது டாக்டர் அவர்கள் கல்யாணம் நடந்தது முதல் ஹனிமூனில் கடத்தப்பட்டது வரை அனைத்தையும் கூறி முடித்தவர்கள்……  நாங்க சென்னை கிளம்பலாம்னு இருக்கோம் ரோஹித்தை சென்னைக்கு கூட்டிப் போகலாமா??? 
             தாரளமா கூட்டிட்டு போங்க….. எங்க ஹாஸிபிடல் ஆம்புலன்ஸ்லேயே போங்க….. என அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்….. 
            டாக்டரிடம் பேசியவர்களுக்கு ஒருவித தெம்பு வர….  கடத்தப்பட்டவர்களை தேட ஆரம்பித்து விட்டனர்…..  அவர்களின் எண்ணம் முழுவதும் ரோஹித்தை இந்த நிலைக்குத் தள்ளியவனை தங்கள் கைகளாலேயே கொல்ல வேண்டுமென்பதே…..  
             சென்னை ஈ. சி. ஆரில் உள்ள ஒரு வீட்டில் வெறும் தரையில் யாழியும் தீஷியும் மயக்க நிலையிலேயே கிடந்தனர்….. 
             பக்கத்து அறையில் மிருது மருத்துவ உபகரணங்கள் அவளை சுற்றியிருக்க…. கட்டிலில் பச்சை நிற கவுன் அணிந்து படுத்திருந்தவளின் கையையும் காலையும் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு மயக்க நிலையிலேயே கிடந்தாள்….. 
    
              கிட்டத்தட்ட பத்து மணி நேரம் கழித்தே மயக்கம் தெளிய…… முதலில் கண் விழித்த தீஷி கண்களை திறக்க முயல…. அவளால் கண்களை திறக்கவே முடியவில்லை….. அரை மயக்கத்திலேயே ரோஹித் தலையைப் பிடித்தபடி விழுந்தது தன் மனக்கண்களில் நியாபகம் வர….
 ரோஹிஹிஹி…. என கத்தியவளின் சத்தத்தில் வெளியே காவலுக்கு இருந்த ஆட்கள் உள்ளே வர…. அவளின் அலறிய சத்தத்தில் முழித்த யாழிக்கு… தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை பிடிபடவில்லை…. ரோஹிஹி…. ரோஹிஹி நான் ரோஹியைப் பார்க்கணும் என அழுதபடி வெளியே சென்றவளை…. 
காவலுக்கு நின்றவர்கள் தடுத்து நிறுத்தவேயில்லை…. ரோஹிஹி என கதவின் மேல் கை வைத்ததும் தான் தாமதம் கிட்டத்தட்ட இரண்டு அடி தூரம் பின்னாடி சென்று விழுந்தாள்…. விழும்போது கூட அவள் கூப்பிட்ட ஒரே பெயர்…. ரோஹிஹி என்பதாகும்.. தீஷி என அலறியபடி வந்த யாழி, அவளை அணைத்தவாறே எழுப்ப… ஆனால் அதற்கு சிறிதும் அசைந்து கொடுத்தாளில்லை….
            “ரோஹி மேல ரொம்ப காதலா தீக்ஷனா”…. என கேட்டவனை அப்பெழுதுதான் இரு பெண்களும் நிமிர்ந்தே பார்த்தனர்…. அங்கிருந்த சோபாவில் சாய்வாக அமர்ந்து….. கால் மேல் கால்  போட்டு, கண்களில் கூலிங் கிளாஸுடன் அமர்ந்திருந்தவனை பார்த்தவர்களுக்கு அவன் யாரென அடையாளமே தெரியவில்லை…. 
              யார் நீ??…. ஏன் எங்களை கடத்தி வச்சிருக்க…. ரோஹி உனக்கு என்ன பாவம் பண்ணாரு…. ஏன் அவரை அப்படி அடிச்ச…. 
தொழில்ல எதிரின்னா அவர் கூட நேரடியா மோதனும்… அதை விட்டுப்புட்டு இப்படியா வீட்டுல இருக்கிற பொண்ணுங்கள கடத்திட்டு வருவ கோழை மாதிரி…. என சொல்லி முடிப்பதற்குள் சப்பென்று அறை விழ… கன்னங்களை தன் கைகளால் தாங்கிக் கொண்டிருந்தவளை…. 
              என்னடி சொன்ன…. நான் கோழையா…. நூறு ஆம்பிளைங்க வந்தாலும் எதிர்த்து நிப்பேன்…. என்னை எதிரியா நினைக்க வச்சது யார் தெரியுமா???… என்னோட எதிரி யார் தெரியுமாஆஆஆ…. என கர்ஜித்தவனின் கண்களில் தெரிந்த வெறியில் ஒருநிமிடம் அங்கிருந்த ஆண்களே நடுங்கி விட்டனர்…. 
பெண்களின் கண்களில் வழிந்த கண்ணீர் கூட நின்றுவிட்டது…. உங்க அக்கா மிருதுளாஆஆஆ… என வார்த்தைகள் வெறுப்புடன் வந்து விழுந்தது…. 
ரொம்ப நல்லவ மாதிரி நடிச்சிக்கிட்டு திரிவாளே….. அவதான்…. அவளை விடமாட்டேன்டி…… அவ சாவ அவ கையாலேயே நடக்க வைக்கிறேன்….. அப்படி நடக்கல நான் கார்த்தியோட அண்ணன் இல்லடி….. யூப்ளடி.. பீச்… அவள. *********** என அதன் பிறகு வந்த வார்த்தைகளை கேட்க முடியாமல் பெண்கள் இருவரும் காதை பொத்திக் கொண்டனர்….. 
               குணா…. 
               சொல்லுங்க சார்….. 
               இவங்க இந்த வீட்டை தாண்டி போகாம பாத்துக்கோங்க….. அதையும் தாண்டி போகனும்னு நினைச்சாலே  போதும்…. இந்த வீட்ல மாட்டிருக்கிற ஹை வால்டேஜ் பவர் செட் இப்போ தூக்கி வீசின மாதிரி தூக்கி வீசாது…. ஒரேடியா போய் சேர்ந்துருவிங்க பீ கேர்புல்….  என அவர்களை எச்சரித்து விட்டு அவன் சென்றுவிட…. 
              அவன் சென்று ஒரு மணி நேரமாகியும் அவர்கள் அந்த இடத்தை விட்டு சிறிதும் அசையவில்லை…. 
             ரோஹித்தை சென்னையில் உள்ள பிரபல தமயந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்…. 
             டாக்டர், எங்களோட சிட்டியூவேசன நாங்க சொல்லிட்டோம்….. எங்க வீட்டு பொண்ணுங்கள கடத்திட்டு போனவன பத்தி எங்களுக்கு தெரியனும்…. இப்போ நாங்க அவன தான் தேடிட்டு இருக்கோம்…. என் ப்ரண்ட நீஙக தான் நல்லா பாத்துக்கனும் சார்…. ப்ளீஸ் டாக்டர்….
            கண்டிப்பா சார்…. 
            திகழும் புகழும் கிளம்பி சென்றுவிட… அவர்கள் இருவரும் கிளம்பி சென்றதை உறுதிபடுத்தியவர்… தன்னை இந்தவாறு இக்கட்டில் மாட்டி விட்டவனுக்கு போன் போட…. 
              எஸ் முகிலன் ஸ்பீக்கிங்…. 
              என்ன சார் என்னை இப்படி சிக்கல்ல மாட்டி விட்டிட்டிங்களே…. நான் சொன்ன இடத்துல அடிச்சிருந்தா இரத்தமே வந்துருக்காது…. ஆனா இப்போ அவர் கோமா ஸ்டேஜுக்கு போயிட்டார்…. 
              இங்க பாருங்க டாக்டர் நீங்க சொன்ன மாதிரி தான் அடிச்சேன்…. ராட் கூட சினிமா ஸுட்டிங்கல பயன்படுத்துறதுதான். ஆனா நான் அடிக்கும் போது அது உண்மையான ராடா மாறி இருந்துச்சி…. அவன் தலையில ரத்தம் வந்தத பாத்த பிறகு தான் எனக்கே தெரியும்…. நீங்க எவ்ளோ பெரிய ஸ்பெசலிஸ்ட் வேணும்னாலும் கூப்பிட்டுக்கோங்க…. எனக்கு ரோஹித் நல்லபடியா குணமாகனும்…. இப்போ எனக்கு அதை பத்தியெல்லாம் பேசுறதுக்கு டைம் இல்ல…. அவன சீக்கிரம் குணப்படுத்துற வழியை பாருங்க…. என போனை கட் பண்ணி விட…. 
               அட யாருடா இவன்… அடிச்சிம் போடுறான்… ஆஸ்பத்திரியில பெஸ்ட்ட ட்ரிட்மெண்ட் கொடுக்குறான்… இவன் கெட்டவனா?….. இல்லை நல்லவனா??…
 தன்னை நம்பி வருபவர்களுக்கு காக்கும் சிவனாவான்… தன் குடும்பத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு அவன் அழிக்கும் சிவனாவான்…. அழிக்காமல் செல்ல மாட்டான்….      
              டாக்டரிடம் பேசி முடித்தவன் நேராக சென்றது…. சுமதி மனநிலை மருத்துவமனை…. என்ற போர்டை பார்த்ததுமே அவன் உடம்பு இறுக ஆரம்பித்து விட்டது…. 
            அங்கிருந்த டாக்டர்களுக்கு அவன் பரீட்சயமானவன் என்பதால் நேரடியாக டாக்டரின் அறைக்குச் சென்றான்…. 
            இப்போ அவனுக்கு எப்படி இருக்கு டாக்டர்… எனி இம்ப்ரூவ்மென்ட்…. 
          நோ சார்… அப்படியே தான் சார் இருக்காரு வாங்க போய் பார்க்கலாம்… 
           அவரின் பின்னாடியே சென்றவன் அங்கிருந்து அறையை அடைந்ததுமே மனம் சொல்லாணா வேதனையில் தவித்தது… பச்சை நிற பேன்ட் பச்சை நிற ஜிப்பா அணிந்து, தலை முடி எல்லாம் மழிக்கப்பட்டு, கண்களை சுற்றி கருவளையம் விழுந்து…. அவன் சிரித்தாலே அழகாக குழி விழும் கன்னம்…. இப்போது டொக்கு விழுந்து போய் இருந்தது…. வாயில் வாநீர் வடிய எங்கேயோ வெறித்தவாறு படுத்திருந்தான்…. கார்த்தி என்ற கார்த்திகேயன்…. 

Advertisement