Advertisement

 தீக்ஷி மயங்கி விழவும் ரோஹித்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை….. அவளை தன் மடியில் வைத்து பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து தெளித்தான்…..
           ஏன் அடிக்கடி மயங்குறா?? என நினைக்கவும் தவறவில்லை… அவள் சிறிது நேரம் கழித்தே கண் விழித்தாள்…. 
           எப்படி இருக்க ஷனா…. ஆர் யூ ஆல்ரைட்….. கூட ரெண்டு அடி கூட அடி நான் தாங்கிப்பேன்….. ஆனா இப்படி பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லைடி….. 
             அவன் மடியில் இருந்து எழுந்தவள் “எனக்கு தூக்கம் வருது என பக்கத்தில் இருந்த தலையணையில் படுத்துக் கொண்டாள்”… அவளின் கோபம் சிறு பிள்ளையின் கோபம் என நினைத்தான்….. 
          அவளின் பக்கத்தில் படுத்தவன் தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்து பார்த்தவனுக்கு கண்களில் கண்ணீர் மட்டுமே மிஞ்சியது…… இவளின் காதலே தன்னை உயிர்ப்புடன் வாழ வைக்கும் என எண்ணினான்”….. 
          சிறிது நேரத்தில் நித்ராதேவி அணைத்துக் கொள்ள என்றும் ஒரு வித அலைப்புறுதலுடன் உறங்கும் ரோஹித் இன்று நிம்மதியாக உறங்கினான்….
               ஆனால் இவர்கள் அனைவரின் நிம்மதியை கெடுக்கவென லண்டனில் இருந்து சென்னையில் தரை இறங்கினான்… கார்முகிலன், 29 வயதுள்ள ஆறடி உயரத்தில், அலை அலையான கேசமும், தீர்க்கமான கண்கள், கூர்மையான நாசி, அழுத்தமான உதடுகள் என பார்ப்பவர்களை மிரட்டும் தோணியில் இருப்பான்…..
         அவன் பாசமாக இருப்பது அவன் குடும்பத்திடம் மட்டுமே….. தன் குடும்பத்தை மட்டுமே நேசிப்பவன்….. தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் எதிரிகளை உருத்தெரியாமல் அழிக்கவும் தயங்கமாட்டான்….. அவனுடைய பி.ஏ வும் நண்பனுமான ஆல்பர்ட் அவனின் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட ஓடினான் என்றே சொல்லலாம்….. 
        ஆல்பர்ட் நான் கேட்ட  டிடையல்ஸ்…. 
        இந்த பைஃல்ல இருக்கு…. (கடவுளே அந்த குடும்பத்தை இவன் கிட்ட இருந்து எப்படியாவது காப்பாத்திரு)
        அந்த பைலை பார்த்தான்…… இவங்க ஜானகி அம்மாள் வயசு 75 சார், புகழோட பாட்டி, சத்தியவேல் – கௌரி இவங்க புகழோட அப்பா அம்மா, இதுதான் புகழோட ஒய்ஃப் மிருதுளா, இது அவனோட தம்பி திகழ் அவனோட ஒய்ஃப் இன்னிசையாழி அப்புறம் அவனுக்கு ஒரு தங்கச்சி இருக்கு தீக்ஷனா சித்திப் பொண்ணு….. பாரி குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் எம்.டி ரோஹித்த கல்யாணம் பண்ணியிருக்காங்க….. 
            நாளைக்கு ஈவினிங் திகழுக்கும், ரோஹித்துக்கும் ரிஷப்ஸன் சார்…… நம்மளுக்கு இன்விடேசன் வந்திருக்கு சார்….. பாரி கான்ஸ்ட்ரக்சன்ல இருந்து….. 
             போறோமா சார்…… என ஒருவித எதிர்பார்ப்புடன் கேட்க…
           அவனை திரும்பி பார்த்து சிறு புன்னகையுடனே ம்ம் என்றான்….. அவனின் புன்னகையே சொல்லியது…… புலி தன் வேட்டையை நோக்கி கிளம்புகிறது என்று….. 
          காலையில் திகழும் புகழும் ஜாக்கிங் முடித்து வீட்டுக்கு வர, மிருதுவும் யாழியும் மேலே பார்ப்பதும் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசுவதுமாக நின்று கொண்டிருந்தனர்….. 
          “ஏன்டி, காலையில எந்திரிச்சு காஃபி போடுறத விட்டுட்டு, விட்டத்துல என்னத்தடி பார்த்துட்டு இருக்கிங்க”….. என சோபாவில் அமர்ந்தார் ஜானகி அம்மாள்….. 
         அது…. அது…. வந்து பாட்டி…..
          “வந்த வரைக்கும் போது விஷயத்துக்கு வாங்கடி”…..
            “அண்ணாக்கு பர்ஸ்ட் நைட் அதான் எல்லாம் நல்லபடியா நடந்திச்சின்னா பார்க்கிறதுக்கு நிக்கிறோம்னு சொல்லவா முடியும்” என மனதிற்குள் நினைத்தவாறே இருக்க…. 
          “என்னங்கடி கோழி தவுட்டை முழுங்கின மாதிரி இந்த மாதிரி முழிக்கிறிங்க”….. 
           அப்பொழுது ஜாக்கிங் முடித்து வந்த திகழும் புகழும் வீட்டிற்குள் நுழைய, “ஏன்டா இதுங்க ரெண்டும் இப்படி நிக்குதுங்க…. வா என்னன்னு போய் கேட்போம்….. 
            என்னாச்சி பாட்டி,
            ம்ம்… “மேலே வெள்ளை காக்கா பறக்குதாம்.…. அதான் உங்க பொண்டாட்டிங்க ரெண்டு பேரும் விட்டத்தை பார்த்துட்டு இருக்காளுங்க”…. 
            அதெல்லாம் நாங்க ஒன்னும் சும்மா நிக்கலை….. எங்க அண்ணாவுக்கு பர்ஸ்ட் நைட் நல்லபடியா முடிஞ்சிடுச்சான்னு பார்க்குறதுக்கு தான் நிக்கிறோம்….. என யாழி சொல்ல…..
          அதைக் கேட்ட திகழ், புகழ் பாட்டி மூவரும் கடகடவென சிரித்தனர்….. திகழோ வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தான்…..
          அவர்களின் சிரிப்பில் கடுப்பான மிருதுளா, “கொஞ்சம் நிறுத்துறீங்களா…. இப்ப எதுக்கு மூணு பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க”….. 
          “பின்னே இதுக்கு எதுக்குடி மேலே பார்த்துட்டு இருக்கிங்க”….  என்கிட்ட கேட்டா நானே சொல்லிருப்பேனே…. என ஜானகி அம்மாள் சொல்லவும்…. அனைவரும் அவரை எப்படி என்பது போல் பார்க்க….. 
             எனக்கு ரெண்டு பேரையும் பத்தி நல்லாவே தெரியும்….. என் பேத்தி பத்து மணிக்கே பாயை விரிச்சி படுத்திருப்பா…. உங்க நொண்ணன் விட்டத்தையும் அவளையும் மாறி மாறி பார்த்துட்டே தூங்கிருப்பான்….. இதுதான் நடந்திருக்கும் வேணும்னா பெட்டு கட்டிக்கலாம்….. 
        பெட்டு 2000 ரூபா…. என தன் பர்சில் இருந்த ரெண்டாயிரத்தை எடுத்து டீபாய் மேலே வைக்க…… 
           “ம்ம்ம் பெட்டு… என ரோஷமாக 2000 ரூபாய் தாளை எடுத்து நீட்டினாள் யாழி”….. 
              திகழ் அவளை தடுக்க எண்ணி “ஹேய்!… வேண்டாம்டி கிழவி ரொம்ப டேஞ்சரான கிழவி…… காலையில 2000 ரூபா மொய் எழுதிராதடி”….. என சொல்ல
                அவன் சொல்வதை காதிலேயே வாங்காமல்…… பெட்டு…  பெட்டுதான்  என்க….. அவளை நக்கலாக பார்த்துக்கொண்டே….. அக்கட சூடு….. என ஜானகி அம்மாள் கையை நீட்ட…. அவர் நீட்டிய திசையை அனைவரும் பார்க்க ரோஹித் கிரவுண்டில் பாஸ்கேட் பால் (basket ball) விளையாடிக் கொண்டிருந்தான்….  
              “டேய் அண்ணா கவுத்திட்டியேடா… என யாழி புலம்ப”…… 
             அப்பொழுது மாடியில் இருந்து நைட் பேண்ட் சர்ட்டுடன் கழுத்தில் தாலியை தவிர வேறு எந்த அலங்காரங்களும் இன்றி முடியை போனிடெயில் போட்டு கீழே இறங்கி வந்தாள் தீக்ஷி…… 
              அப்பொழுது விளையாடி முடித்து விட்டு வீட்டுக்குள் வந்த ரோஹித், ஷனாவையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்….. அவளின் எந்த வித ஒப்பனை இல்லாத அழகு அவனை மேலும் அவளின் பால் ஈர்த்தது….. 
           அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…. முட்டி வரையிலான ஷார்ட்ஸ், கையில்லாத டீசர்ட், இவ்வளவு நேரம் விளையாடியதால் அவனின் உடல் முழுவதும் வியர்வையால் குளித்திருக்க… கம்பீரமாக நடந்து வந்தவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்…… 
               அவனை பார்த்துக் கொண்டே கடைசி படிக்கட்டை கவனிக்காமல் இடறி விழ, திகழ் அவளை பிடிப்பதற்குள் ரோஹித் அவளை தாங்கியிருந்தான்…. 
               “ஹேய், பார்த்து வர மாட்டியா?…. கீழே விழுந்து புதையலா எடுக்க போற?”…. ப்ச் இப்படி வந்து உட்காரு… என சோபாவில் உட்கார வைத்தான்.    
             மொழி….. என அழைக்க…. 
            22 வயதுக்கேற்ற ஒரு இளம்பெண் வந்து நின்றாள்…… அவளை பார்ப்பவர்கள் அனைவரும் அவளை திரும்பி பார்க்காமல் செல்லவே மாட்டார்கள்…… அப்படியொரு சாத்வீகமான அழகு…… எல்லாரும் அவளையே திரும்பி பார்க்க…… 
             யார் இந்த பொண்ணு….. என தீக்ஷி கேட்க…. 
            இவ பெயர் குயிலினும் நன்மொழியாள்…… இவளுக்கு வாய் பேச வராது…… ஒரு நாலு நாளைக்கு முன்னாடி தான் சில ரவுடிக்கிட்ட இருந்த இவளை காப்பாத்துனேன்….. இப்ப வீட்டு வேலையெல்லாம் செய்ய ஹெல்ப் பண்ணிட்டு இருக்கா….. 
           “இவளுக்கு தான் வாய் பேச வராதே….. அப்புறம் எப்படி அவ பேரு உனக்கு தெரியும்” என தீக்ஷி கேட்க….. 
         அனைவரும் அவளை “அட அறிவே” என்பது போல் பார்க்க…… 
   
          அவளுக்கு பேச தான் முடியாதே தவிர நல்லா எழுத தெரியும்…. என ரோஹித் முறைத்துக் கொண்டே சொல்ல….. இவ தீக்ஷனா, என்னோட ஒய்ஃப்….. உனக்கு அண்ணி அவளை பார்த்து கொண்டே சொன்னான்…… 
             “அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க என சைகை மொழியில் சொன்னாள்”……  அதை புரிந்த தீக்ஷிக்கு வெட்கத்தில் கன்னங்கள் ரெண்டும் சிவக்க….. ரோஹித்தின் தோளில் சாய்ந்தாள்….. 
           மொழி டெய்லி ஒரு மாதுளம்பழம் ஜுஸ் இவளுக்கு கொடுத்துரு….. அவ குடிக்கலன்னா என்னை கூப்பிடு என்றான்….
           “ம்ம் என தலையாட்டியபடி சென்றாள்”…
            அப்பொழுது மிருதுவுக்கு போன் வர, பேசியவளின் முகம் மின்னியது….. 
           “டேய் அண்ணா வா ஓடி போயிரலாம்” என திகழ் சொல்ல….. 
          எதுக்குடா?…. 
          ஒரு பொண்ணோட முகம் பளபளன்னு இருக்குனா…. ஒன்னு மாசமா இருக்கனும்….. அதுக்கு இப்போதைக்கு வாய்ப்பே  இல்லை என புகழை மேலும் கீழும் பார்த்தவாறே சொல்ல……  அவன் முறைக்கவும்…..    நெக்ஸ்ட் நம்ம பர்ஸ்க்கு வேட்டு வைக்க  போறாங்கன்னு அர்த்தம்டா…… என சொல்லி முடிப்பதற்குள் ஓடியே விட்டான்…. 
       டேய் படுபாவி நில்லுடா…. நானும் வந்துரேன் என புகழும்  பின்னாடியே ஓடி விட…. போன் பேசி முடித்த மிருது ரிசப்ஷன் டிரெஸ் எடுத்துட்டு சாயிஷா வர்றாங்களாம்…. நம்ம எல்லாரையும் வீட்ல இருக்க சொன்னாங்க அண்ணா…..
        ஹிம்…. சரிம்மா நான் போய் ஃபிரெஸாகிட்டு வந்துடறேன், என எழுந்து சென்று விட்டான்……. 
         என்னடி நம்ம புருஷனுங்கள காணும்….
         ஹிம்…. அதுங்க ரெண்டும் அப்பவே ஓடிப் போயிருச்சிங்க….
          என்னடி சொல்றே…..
         பின்னே நாம அதுங்க பர்ஸுக்கு வேட்டு வைக்க போறோம்னு தெரிஞ்சதுக்கப்புறம் நிக்கிறதுக்கு அதுங்க என்ன லூசா…… 
         
            சிறிது நேரத்தில் சாயிஷா வர…… பெண்களுக்கு லெஹாங்காவும் மற்றும் ஆண்களுக்கு ஷெர்வானியும், சில பட்டுப்புடவையும் கொண்டு வந்திருந்தார்…. லெஹாங்காவை போட்டு பார்க்க என மூவரும் சென்று விட, வந்தவர்களுக்கு ஜுஸ் எடுத்து கொண்டு வந்த மொழி அங்கிருந்த பட்டுபுடவையை பார்த்து கொண்டே வந்தாள்….. 
         அதிலிருந்த வெள்ளை கலரில் அரக்கு பார்டர் வைத்த மிகவும் அழகாக இருக்க அதை பார்த்து கொண்டே இருந்தாள்……. 
            மாடியில் இருந்து கீழே வந்து கொண்டிருந்தத ரோஹித், அதை பார்த்து கொண்டே வந்தான்…… 
           மொழி…. அவள் திரும்பி பார்க்க….. 
           நம்ம ஈவினிங் 5 மணிக்கு கிளம்பனும் ரெடியாகிரு என்றான்…… ம்ம் என உள்ளே சென்று விட்டாள்……. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அனைவரும் டிரஸ் செலெக்ட் செய்து சாயிஷா கிளம்பி விட்டார்…… ரோஹித் 
             மொழி….. என கூப்பிட
             ம்ம் என மௌனமாக நின்றாள்….. 
             அவளின் முன் இரு பார்சலை நீட்டினான்….. 
           அவள் யோசனையாய் பார்க்க….. 
           பிரிச்சி பாரு உனக்கே புரியும்….. அதில் அவள் ஆசையாக பார்த்த புடவையும், அதற்கேற்ற நகையும், இருந்தது,  அதை கண்டவளின் கண்களும் கலங்கியே இருந்தது…… இதுவரை அவள் தந்தையே தவிர யாரும் அவளுக்கு செய்ததில்லை….
          இந்த டிரெஸ் தான் ரிஷப்சனுக்கு போட்டுக்கனும் சரியா?????….    ம்ம் என தலையாட்டினாள்….      
             திருவள்ளூரில் இருந்த ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்தில், மண்டபம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மணமக்கள் அமரும் இடத்தில் நான்கு தூண்களும், பூக்களால் சுற்றப்பட்டு, பூக்களில் இருந்து வரும் இதமான நறுமணம் மண்டபம் முழுவதும் பரவி, பார்ப்பவர்கள் அனைவரும் இது பூலோகமா? இல்லை தேவலோகமா என எண்ணும் வகையில் பணத்தை வாரி இறைத்து மண்டபம் ரெடியாகப்பட்டது…..
            முதலிலேயே மண்டபத்திற்கு வந்த மிருது மற்றும் புகழ் பச்சை நிற காக்ரா ஜோலியும் அதற்கேற்ற வைர அணிகலன்கள் பூட்டி தேவதையாக மிளிர, புகழும் பச்சை நிற ஷெர்வானியில் ஆண்மையின் இலக்கணமாக திகழ பார்ப்பவர்கள் அனைவரும் இவர்களின் ஜோடி பொருத்தத்தை ஆச்சர்யமாக பார்த்தது……    
      
            முதலிலேயே மண்டபத்திற்கு வந்த மொழி, வெண்பட்டில் சாதாரணமாக எந்தவித மேக்கப்பின்றி மேனகையாக வரவேற்பில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தாள்…..
             ஆனால் இவளின் விஸ்வாமித்திரன் அங்கே ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சூட் ரூமில், வெள்ளை நிற கோட் சூட்டில் கம்பீரமாக, இருந்தவனின் மனம் முழுக்க வன்மையும், கண்களில் வெறுப்பும், ஆத்திரத்தையும் அடக்கி, “உன்னை விடமாட்டேன்டா, உன் குடும்பத்தை சிதறடிப்பேன்” என்றான்…… 
              அவன் நினைத்திருந்தால் அவர்களின் குடும்பத்தையே உருத்தெரியாமல் அழித்திருப்பான்…… ஆனால் அவனுக்கு வேண்டியது அந்த குடும்பத்தின் ஒரே ஒருத்தரின் இழப்பு மட்டுமே…..

Advertisement