Advertisement

“அதுவரை அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜானகி அம்மாள் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல”…..
            “அய்யோ பாட்டி கல்யாணம் உங்களுக்கு இல்ல எனக்கு” என்றாள்….
            அவளை தீயாய் முறைத்தவர்….. அவளை திட்டுவதற்குள்…..
           “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. என்னோட வாழ்க்கையில் கல்யாணம்கிற பேச்சுக்கே இடமில்லை என ரோஹித் கூறி சென்று விட்டான்”……
            “ஓகே எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு” நான் ரெஸ்ட் எடுக்க போறேன்….. என தீக்ஷி மாடி ஏறி சென்றாள்…. பாதி படி ஏறியதும், “திகழ் மெல்லினா உன்கிட்ட நைட்டு பத்து மணிக்கு போன் பண்ண சொன்னா”….. நேத்து நீ அவளுக்கு போன் பண்ணலங்கிறதுனால ரொம்ப பீல் பண்றா தெரியுமா?….. என போகிற போக்கில் போட்டு கொடுத்தாள்…..
           “அடிப்பாவி….. போகிற போக்கில் கொளுத்தி போட்டுட்டியேடி”……. 
           இங்கே யாழி பத்திரகாளியாக மாறி கொண்டிருந்தாள்….. சோபாவில் இருந்த நியூஸ்பேப்பரை எடுத்து அவனை துரத்த….. யாழி அவ பொய் சொல்றாடி…. என்ன நம்புடி…. 
       நான் நம்பமாட்டேன்…. நீ ஒரு பிராடு​… 
          ஹேய் சொன்னா நம்புடி அவதான் பிராடு…. அவர்களை பார்த்தவர்கள் எப்போதும் நடப்பது தானே என சிரித்தபடியே சென்று விட்டனர்…. ஜானகி அம்மாள் போனை தீவிரமாக பார்த்து கொண்டிருந்ததால்​ அவர்கள் அனைவரும் ரூமுக்கு சென்றதை அவர் கவனிக்கவில்லை…..
            “அவரை தவிர அனைவரும்  ஹாலில் இல்லை என்பதை கவனித்த திகழ், அவ்வளவு நேரம் ஓடி கொண்டிருந்தவன் தீடிரென நின்றான்”….. அவன் தீடிரென நிற்பான் என எதிர் பார்க்காததால், யாழி அவன் முதுகில் மோதியவளின் இடுப்பில் கை வைத்து தன்னை நோக்கி இழுத்து அவள் இதழோடு இதழ் பொருந்தியிருந்தான்…. நொடிகள் நிமிடங்களாக மாறியும் அவளை விடுவித்தானில்லை….. மூச்சுக்காற்றுக்கு ஏங்கியவளை தன் மூச்சு காற்றை அவளுக்குள் செலுத்தினான்….. 
            அப்பொழுது தான் ஜானகி அம்மாள் “என்னடா ஹால் ரொம்ப அமைதியா இருக்கு என திரும்பியவரின் கண்களில் இந்த காட்சி பட, ச்சீ.. கருமம்… நடு ஹால்ல வைச்சி ரெண்டும் என்ன வேலை பாக்குதுங்க….. அப்பொழுது தான் ஹாலில் தன்னை தவிர வேறு யாரும் இல்லை என புரிய, “அப்ப நாம தான் எக்ஸ்ட்ரா லக்கேஜா”…. என தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்…. 
            ரூமில் இருந்த புகழ் வேலைக்கு கிளம்பவும், “ஏன் மாமா இரண்டு நாள் கழிச்சு வேலைக்கு போக கூடாது”…. ம்ஹூம் இல்லமா அர்ஜென்ட் ஒர்க் போயிதான் ஆகணும்….. என காக்கி யூனிபார்மில் ஆறடி உயரத்தில் முறுக்கேறிய புஜங்களுடன் நிமிர்ந்த நடையுமாக சென்றவனை அன்றிலிருந்து இன்றுவரை ரசித்து கொண்டு தான் இருக்கிறாள்….. 
              அவன் சென்ற பின் கௌரியிடம் சென்று “அத்தை ரிசப்ஷனுக்கு இன்னும் பர்சேஸ் பண்றதுக்கு அண்ணன் மாலுக்கு வர சொன்னாங்க அத்தை”
             சரிம்மா நீ யாழியையும் திகழையும் கூட்டிட்டு போயிட்டு வந்துருமா….. தீக்ஷி வேற ரொம்ப டயர்டா இருக்குனு சொன்னா இல்லனா அவளையும் கூட்டிட்டு போகலாம்…..
           ‘”நான் ரெடி அம்மா….. என தீக்ஷி ரெடியாகி வந்தாள்”…
           “என்னடி டயர்டா இருக்குனு சொல்லிட்டு இப்படி ரெடியாகி வந்துருக்க”….
         “அம்மா அங்கேயே  நின்னுக்கிட்டு இருந்தா கல்யாணத்தை பத்தி பேசி அந்த கிழவி பிளேடு போடும்…. அதான் பொய் சொன்னேன்”….. 
           “தீக்ஷிமா பெரியவங்கள அப்படி சொல்ல கூடாதுமா”…..
            “ஓகே….. டன்…. இனி கிழவின்னு கூப்பிடலை….  ஜானகி ன்னு கூப்பிடுறேன்…. என கௌரியின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு கிளம்பினாள்”…. 
            அனைவரும் ஷாப்பிங் மால் சென்றவுடன், நானும் யாழியும் எங்களுக்கு டிரஸ் செலெக்ட் பண்றோம்… என திகழ் யாழியை கூப்பிட்டு சென்றான்….. நீங்க உங்களுக்கு செலெக்ட் பண்ணிட்டு போன் பண்ணுங்க என பெண்களின் செக்சனுக்கு சென்று விட்டான்…… 
           “மிருதுவிடம் தீக்ஷி நீ போய் எனக்கும் செலெக்ட் பண்ணிரு மித்து…. உன்னோட செலக்சன் என்னைக்கும் சூப்பரா இருக்கும்….. நான் போய் சில காஸ்மெட்டிக் அன்ட் பர்ஸ் வாங்கிட்டு வந்துறேன்…. என கிளம்பினாள்”…..
               “காஸ்மெட்டிக் வாங்கும் போது பக்கத்தில் இருந்த பெண் தவறுதலாக இவளுடைய பர்ஸில் ஐ லைனரை வைத்து விட்டார்…. இது அறியாத தீக்ஷி ஓகே இனி டிரஸ் செக்சன் போகலாம் என வாங்கிய பொருட்களை பில்லிங் செக்சனில் கொடுத்து கிரவுண்ட் ஃப்ளோர் அனுப்பிருங்க என சொல்லி விட்டு வெளியே வரும் போது கடைக்கு வெளியே அவளுடைய ப்ரண்ட் நர்மதா நிற்பதை பார்த்தவள் வேகமாக அவளை பார்க்க, கடையை விட்டு வெளியேறினாள்….  அப்பொழுது அலாரம் தீடிரென சவுண்ட் கொடுக்க….. 
             அங்கிருந்த செக்யூரிட்டி ஓடி வந்து அவளின் கையை பிடித்து ஹேய்!…. திருடிட்டு எங்கமா ஓட பாக்கிற?…..
            அவர் சொல்வதை புரிந்து கொள்வதற்கே முழுதாக ஒரு நிமிடம் பிடித்தது தீக்ஷிக்கு……
            “ஏய் கையை விடு நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல”…… 
            “யார்கிட்ட பொய் சொல்ற”…..
           “இத பாரு பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை”….
            “நான் என் ப்ரண்ட பார்க்க தான் வந்தேன்…. அதோ அங்க நிக்கிறா பாருங்க….. செக்யூரிட்டி திரும்பி பார்க்க அங்கே யாருமே இல்ல”…. 
           “அங்கே தான் யாருமே இல்லையே இதுல இருந்தே தெரியுது நீ பொய் சொல்றேன்னு”…… என்று சத்தமாக சொல்ல 
             “அந்த சத்தத்தில் அந்த தளத்திலிருந்த அனைவரும் அவளையே பார்க்க மிகவும் அவமானமாக உணர்ந்தாள்”…..
  
             “செக்யூரிட்டி அங்கிருந்த பெண் ஊழியரிடம் இந்த பொண்ணை அந்த ரூம்ல கூட்டிட்டு போய் செக் பண்ணுங்க என சொல்ல….. அந்த பெண் இவளின் கையை பிடித்து இழுக்க”….. 
              “ப்ளீஸ்…. என்னை விடுங்க நீங்க நினைக்கிற மாதிரி நான் திருடுற பொண்ணு எல்லாம் இல்ல. என்னோட அண்ணா எல்லாருமே இங்கதான்  ஷாப்பிங் வந்தோம்… என திகழுக்கு போன் பண்ண….. அது அட்டென்ட் ஆவதற்குள்  கட்டாகி விட….. அப்பொழுதுதான் என்ட்ரன்சை தாண்டி வந்து கொண்டிருந்த ரோஹித்தை பார்த்தாள்”…. 
  
            “அந்த பெண்ணிடம் இருந்து கையை உதறிவிட்டு “ரோஹி” என ஓடிச்சென்று அவனை அணைத்து கொண்டாள்…. செக்யூரிட்டி மட்டுமில்லாமல் அந்த தளத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அதிர்ந்து நின்றுவிட்டனர்…. பின்னே தங்கள் முதலாளியை அந்த பெண் கட்டிப்பிடிப்பாள் என யாரும் எதிர்பார்க்கவில்லை….
              “ரோஹி…. எல்லாரும் என்னை திருடி…. என சொல்வதற்குள்…. அவன் கைகளில் மயங்கி விழுந்தாள்”….
              “ஷனா….. ஷனா…… இங்க பாரு”….
             அவளை தூக்கி ஆட்கள் உட்கார்வதற்காக போட்டிருந்த சோபாவில் படுக்க வைத்து….. ஷனா கண்ணை திறடி….. நான் உன்னோட ரோஹி கூப்பிடுறேன்…. ப்ச் எந்திரிடி…. உன்ன இப்படி பார்க்க முடியலடி……
            அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அவனை அதிசியமாக பார்த்தனர்…. அவனுக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது என அங்கிருந்த ஊழியர்கள் அனைவருக்குமே தெரியும்….. பெண்கள் என்றாலே நெருப்பாக காய்பவன்….. அவர்கள் சின்னதாக தவறு சென்றாலும் உடனே வேலையை விட்டு நிறுத்தி விடுவான்….. அப்படிப்பட்டவன் இன்று சாதாரண பெண்ணிற்காக துடிப்பதை ஆச்சரியமாக பார்த்தனர்…. அவர்களுக்கு எல்லாம் தெரியவில்லை அவனின் உயிர் துடிப்பே அவளாக மாறுவாள் என்று……
              
          “வாட்டர்” என கர்ஜித்தான்…..
         “அவனின் குரல் கேட்டு பக்கத்தில் இருந்த செக்யூரிட்டியே நடுங்கி விட்டார்…. 
            ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க….. அவளின் முகத்தில் தெளித்தான்….. சிறிது நேரம் கழித்து கொஞ்ச கொஞ்சமாக கண்ணை திறந்து பார்த்தாள்”…. 
           “கண்ணை திறந்தவள் பக்கத்தில் இருந்த ரோஹித்தின் கழுத்தை இறுக்கமாக கட்டி  கொண்டாள்”……
            “என்னாச்சுமா” என கேட்டான்…..
             “அவள் மறுபடியும் அழ, அவளின் அழுகை ஓய்ந்தபாடில்லை….. அவளை பார்க்கும் போதே மிகவும் பயந்திருக்கிறாள் என புரிந்தது”…..
            செக்யூரிட்டியிடம், “என்னாச்சி” என்க…. அப்பொழுது தான் தீக்ஷியை தேடி திகழும் வர
             சார், “இந்த பொண்ணு எதையோ திருடிருச்சி சார்” அதுதான் விசாரிச்சுக்கிட்டு இருந்தோம் என்றான்…..
            இல்ல ரோஹி நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல…… நான் திருடல…. என் கையில பர்ஸ், போன் தவிர வேறு  எதுவும் இல்லை என கேவலுடன் கூறினாள்…… 
            உன் பர்ஸ் எங்கே?…..
           பர்ஸ்… என சுற்றும் முற்றும் தேடியவள்…. 
          தெரியலை ரோஹி….. அங்கிருந்த ஒருவர் அவளின் பர்ஸை எடுத்து வந்து கொடுத்தார்……
          பர்ஸை வாங்கியவள், “இங்க பாரு ரோஹி….. என பர்ஸை தலைகீழாக கவிழ்த்தாள்….. பர்ஸில் இருந்த கிரெடிட் கார்டு, பணம், முருகர் போட்டோ, ஐ லைனர் என அனைத்தும் கீழே கீழே விழுந்தது”….. 
          
          அதை பார்த்த, “செக்யூரிட்டி சார் இது நம்ம கடை ஐ லைனர்” என எடுத்து கொடுத்தான்…… இத தான் திருடியிருக்கா சார்….. என சொல்லி முடிப்பதற்குள் அவனை அறைந்திருந்தான்…… திகழ்… 
   
            “யாரை பார்த்து திருடின்னு சொல்ற….. என் தங்கச்சி திருடியா உனக்கு”…..  அவ திருடினத யாராவது பார்த்தாங்களா?….. அவ திருடினதுக்கு உன்கிட்ட ஆதாரம் இருக்கா?…. சி.சி.டிவி புட்டேஜ் செக் பண்ணிங்களா என ஒரே நேரத்தில் பல கேள்விகளை கேட்டான்….
            சார்….அது…. என இழுக்க….
          அவரை ரோஹித் தீயாய் முறைக்க…..
           சி.சி.டிவியை செக் பண்ணியதில் அனைத்தும் தெளிவாக புரிய…..
          சாரி சார்….
          “சாரி எனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை”….. சே டூ சாரி ஹெர்…
          சாரி மா…..
          கால் மீ மேடம்…… என்றான் ரோஹித் அழுத்தமாக….
          சாரி மேடம்…….
          “திகழ் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறியா??. ரொம்ப அன்கம்பர்ட்டபிளா ஃபீல் பண்றேன்”…..
           ம்ம்…. சரி…. வா… போகலாம்….
          “அவள் எந்திரிச்சு நடக்க ஆரம்பிக்கும் போது அவளின் கரம் ரோஹித்தின் கைகளுக்குள் இருந்தது”….. 
            “அவன் கைகளில் இருந்த கையை விடுவித்து விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள்”…. அதுவே அவனுக்கு வலித்தது…. பெரிதாக எதையோ இழந்தது போல உணர்ந்தான்…… 
           “கௌரியும் ஜானகியும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.”……  அப்பொழுது கார் நிக்கும் சத்தம் கேட்டு, 
           
            “என்ன அத்தை எல்லாரும் அதுக்குள்ள வந்துட்டாங்களா?”… 
           “அதானே போயி ஒரு மணி நேரம் கூட ஆகலையே!”….
         
            “அழுதழுது கண்கள் கலங்கி வந்திருக்கும் தீக்ஷியை பார்த்து அதிர்ந்து விட்டனர்”…. 
           “என்னடா ஆச்சு இவ இப்படி இருக்கா”….. திகழ் அங்கு நடந்த அனைத்தையும் சொல்ல….
          அதற்கு ஜானகி, “ஏன்டி கொஞ்சம் உன் டேம நிப்பாட்டுறியா???… புழு.. புழுன்னு அழுதுக்கிட்டு திரியுற….. அவன் திருடின்னு சொன்னா நீ திருடி ஆகிருவியா…… இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எல்லாம் ஒரு கெட்ட பழக்கம் யாராவது ஏதாவது சொன்னா போதும் உடனே கண்ணுல டேம திறந்து விடுறது”….. 
             “அவன் எல்லாரும் முன்னாடி சொல்லவும் எனக்கு எவ்ளோ அவமானமா இருந்திச்சு தெரியுமா?”….. 
            “என்னடி அவமானமாயிடுச்சு… இப்ப நீ அழுகிறத நிப்பாட்டிட்டு போய் முகத்தை கழுவிட்டு வா”…. 
            “என்னடி இங்க ஷோவா நடக்குது வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க….. போங்க போய் வேலையை பாருங்க என்றார்”……. யாழியும் மிருதுவும் சமையல் செய்ய சென்று விட்டனர்…..
           “தீக்ஷியும் முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள்……  அவரின் மடியில் தலை வைத்து படுக்க….. தீக்ஷிமா நடந்ததை மறக்க பாரும்மா…. நீ தப்பு பண்ணலைன்னு நிரூபிச்சதுக்கு அப்புறமும் நீ இப்படி இருந்தா என்ன அர்த்தம் என  அவளின் தலையை கோதிவிட, சிறிது நேரத்தில் அவர் மடியிலே தூங்கி இருந்தாள்”…… 

Advertisement