Advertisement

“அனைத்து சடங்குகளும்  நிறைவேறியதும் மாப்பிள்ளை வீட்டிற்கு பொண்ணை அழைத்து சென்றனர்”….
            மிருது இருவருக்கும் ஆராய்த்தி எடுத்து நெற்றியில் குங்குமம் இட்டு “வலது காலை எடுத்து வைச்சு உள்ள வாங்க”…. 
          அவர்கள் இருவரும் வலது கால் எடுத்து வைக்கும் போது,
           “நில்லுடி….. இன்னொரு அடி எடுத்து வைச்ச அடுத்த அடி எடுத்து வைக்க கால் இருக்காது பார்த்துக்கோ”… என  கண்களில் கோபத்துடன் நின்றிருந்தார். சத்தியவேலின் அம்மா ஜானகி… 
           (சத்தியவேலின் தந்தை…. திருநல்லரசன் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி என்ற கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார். ஊரில் மிகப் பெரிய மதிப்பும், மரியாதையுமாக வாழ்ந்த மனிதர்… மனைவியின் மேல் அதிகமான காதலை வைத்திருந்தார்….. அவருக்கு, சத்தியவேல் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்…. 
           “காயத்ரியை பக்கத்து ஊரில் நெல் அரிசி மண்டி வைத்திருக்கும் நிரஞ்சன் என்பவரை மணமுடித்து வைத்தார்… அவருக்கு ப்ரணிதா என்ற மகளும், ப்ரணவ் என்ற மகனும் உள்ளனர்”…. 
             சத்தியவேலுக்கு இருபத்தி ஏழு வயது இருக்கும் போது கௌரிய காதலிப்பதாக தன் தந்தையிடம் கூறினார்……. 
            “தன் மகனின் காதலை எதிர்க்காமல் ஊரே மெச்சும்படி சத்தியவேல் – கௌரி திருமணத்தை நடத்தினார்….. ஜானகியும் கௌரியை தன் மகளாக  நினைத்து நடத்தினார்”…. 
             யாழி, தாய், தந்தை இறந்த நிலையில் சத்தியவேல் தன் நண்பணின் குழந்தையை தன் வீட்டில் வளர்ப்பதற்காக கூட்டி வந்தார்…  ஆனால் யாழி வீட்டில் அடி எடுத்து வைத்த இரண்டாவது நாள் திருநல்லரசன் இயற்கை எய்தினார்….
            அதிலிருந்தே யாழியை அவருக்கு பிடிக்காது….. யாரும் இல்லாத நேரத்தில் ஏசுவதும், துன்புறுத்துவதுமாக இருந்தார்… ஒரு நாள் இதை பார்த்த திகழ் தன் அப்பாவிடம் யாழியை ஹாஸ்டலில் சேர்த்து விடுமாறு கூறினான்….
            அதை கதவுக்கு பின்னால் நின்று கேட்ட யாழி திகழை மனதிற்குள் திட்டி தீர்த்தாள்……    
           அவளுக்கு இந்த வீட்டை விட்டு செல்லும் ஐடியா துளியளவும் இல்லை…. அதற்கு காரணம் கௌரி, சத்தியவேல் என்றால் மிகையாகாது…. காலையில் எழுந்தவுடன் “குட்டிமா குட்மார்னிங்” என சொல்வதில் இருந்து, ஸ்கூல் வேனில் ஏறும் போது கௌரி நெற்றியில் கொடுக்கும் முத்தம் வரை அனைத்தும் அவளுக்கு பிடித்தமானவை….  
           “இதை அறியாத திகழ் அவளுக்கு நல்லது செய்வதாக நினைத்து செய்த செயல் அவன் மேல் கோபத்தை தூண்டுவதற்கு அஸ்திவாரம் போட்டது…..) 
            “அம்மா!…. ப்ளீஸ் கல்யாணம் முடிஞ்சு முதல்முதலா வீட்டுக்குள்ள​ வர்றாங்க அவங்கள ஆசீர்வாதம் பண்ணி உள்ள விடுங்கம்மா” என கெஞ்சினார்…..
          “ஹ்ம்ம்….. நல்லா இருக்குடா உன் நியாயம் என் தாலியை அறுத்தவ இவன்னு தெரிஞ்சும், உன் பையனுக்கு கட்டி வச்சிருக்க”… 
          “பார்த்துடா….. உன் பையனுக்கு ஆயுள் எத்தனை நாளோ?….. என கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கேட்டார்”……
          இதைக் கேட்ட யாழ், “அய்யோ!! பாட்டி ப்ளீஸ் இப்படி பேசாதிங்க. நான் இப்பவே வேந்தன விட்டு போயிறேன் அவன் நல்லா இருந்தா எனக்கு அது போதும்”…. “உங்க ஆசைபடியே ப்ரணிதாவ அவனுக்கு கட்டி வச்சிருங்க”….. என அங்கிருந்து செல்ல முற்பட்டவளை….
           மிருது, ஹேய்! யாழி நில்லுடி… என யாழியை பிடிக்க வருவதற்குள்,
         அவளை தன் இரு கைகளில் ஏந்தி வலது காலை எடுத்து உள்ளே வைத்து “நீங்க சொன்ன​ மாதிரி என் பொண்டாட்டி காலை எடுத்து உள்ளே வைக்கவே இல்லை” என பாட்டியை பார்த்து கண்ணடித்து விட்டு தன் ரூமுக்கு தூக்கி சென்றான்……
         
               “தன் அறைக்குள் வந்தும் தன்னை இறக்கி விடாமல் கையில் வைத்திருப்பவனை கண்டு முறைத்து “டேய்  இறக்கி விடுறா எரும”… 
            “யாருடி எருமை….. உன்னை தூக்கிட்டு வந்ததுல இடுப்பு பிடிச்சிக்கிச்சுடி. பார்க்கிறதுக்கு ஆழாக்கு சைஸ்ல இருக்க ஆனா என்னா வெயிட்டா இருக்க… அய்யோ!  யம்மா! என அவளை தூக்கி பெட்டில் போட்டான்”.. 
        ஆ!!! அம்மா “டேய் ஏன்டா இப்படி தூக்கி போட்ட.. தடி தாண்டவராயா ஜிம்முக்கு தான் மாசம் மாசம் தெண்டம் கட்டுறல… ஒரு பொண்ண தூக்க துப்பில்ல” தூ… 
          ஹேய்! “யார பார்த்து துப்பில்லன்னு சொன்ன உன்ன இருடி…. என துரத்துவதற்குள்…..
            “பெட்டில் இருந்த யாழி எழுந்து ஓட ஆரம்பித்தாள். அவன் கட்டிலின் மறுபக்கம் சென்று பிடிப்பதற்குள் அவள் இந்த பக்கம் ஒட ஆரம்பித்தாள்.   இருவரும் கட்டிலை சுற்றி சுற்றி ஓட சட்டென யாழி கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டாள். திகழால் கட்டிலுக்கு அடியில் செல்ல முடியவில்லை”…..
            ஏய்!! அரைக்காப்பிடி வெளியே வாடி….
          வரமுடியாது போடா…..
         இவளை எப்படி வெளியே கொண்டு வர என யோசித்த திகழ் “ஹேய் பல்லிடி”… என கத்த
         “அய்யயோ பல்லியா? எங்கடா எங்க… அவன் பின்னே ஒழிந்து கொள்ள”…. 
     
          வாடி, வசமா மாட்டிக்கிட்டியா… என அவள் இடது கையை மடக்கி பிடித்து முறுக்க, ஸ்ஸ்ஆஆ வலிக்குது விடுடா!!!…. அவள் கண்கள் கலங்கவும் விட்டு விட்டான். 
           “பக்கத்தில் இருந்த தலையணை எடுத்து அவனின் மேல் எறிந்தாள். அவனும் இன்னொரு தலையணையை எடுத்து அவளை அடித்தான்…. இருவரும் தலையணையை அடித்து பஞ்சை பறக்கவிட்டு அறை முழுவதும் பஞ்சாக பறந்தது”….. 
          அடச்சீ! குரங்குகளா…. நிப்பாட்டுங்க.. என பெண் குரல் கேட்க….
          எவ அவ….
         ம்ம்ம்….. உன்ன பெத்தவ….
         ஏன்டா, பனைமரத்துக்கு பாதி வளர்ந்துருக்கியே….. கொஞ்சமாவது அறிவு இருக்கா?….. சின்ன பிள்ளை மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருக்க……
         ஹலோ…. மை டியர் மம்மி இந்த திகழோட பெருமையை நீ கோர்ட்ல போய் கேளு… அங்கே சொல்லுவாங்க எனக்கு அறிவு இருக்கா? இல்லையான்னு… 
          நான் ஏன்டா அங்கே போய் கேட்கணும்… உனக்கு இருபத்தொன்பது வருஷமா சோறு போட்டு வளர்க்கிறேன்… எனக்கு தெரியாதா உனக்கு கொஞ்சமும் கூறு கிடையாதுன்னு……
          யாழி மெதுவாக சிரிக்க அதை  ஓரக்கண்ணால் பார்த்தவன்…. டோட்டல் டேமேஜ்…. ஆமா இத சொல்லத்தான் மாடி ஏறி வந்தியாக்கும்….
           இல்லடா… ரூம் டெக்கரேசன் பண்றதுக்கு புகழை மிருதுவ கூட்டிட்டு வர சொன்னேன்… 
           நேராக யாழியிடம் சென்று, குட்டிமா அத்தை ரொம்ப திட்டிட்டாங்களா…
           “பாட்டி திட்டுனது ரொம்ப கஷ்டமா தான் இருந்திச்சு அத்தைமா….. ஆனால் திகழ் என் கூட இருக்கும் போது வந்த கஷ்டம் கூட பஞ்சா பறந்திடுச்சி நீங்களே பாருங்க என தங்கள் ரூமை சுற்றி காட்டினாள்”….
            ஆமா வீட்டில் இவ்வளோ கலவரம் நடந்துக்கிட்டு இருக்கும் போது நீயும் புகழும் எங்க போனீங்க…..
              “நானும் அம்மாவும் ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தோம்டா.. அம்மாவுக்கு மூட்டு ரெண்டும் வீங்கி வலிக்க ஆரம்பிச்சிடுச்சு அதான் அப்படியே ஹாஸ்பிடல் போயிட்டு வந்தோம்டா”….
           “இப்போ எப்படி இருக்கு அத்தை”…. 
            இப்போ பரவாயில்லைமா ,சரி வாம்மா போகலாம்…. என அனைவரும் இரவு உணவை சாப்பிட்டு முடித்தனர்…..
             “இரவு எட்டரை மணியளவில் திகழ் பாத்ரூம் கதவை போட்டு உடைத்து கொண்டிருந்தான்”….. 
            டேய் வெளியே வாடா சீக்கீரம்…..
            “ஒன்பது மணியளவில் பாத்ரூம் கதவு திறக்க புகழின் மேல் மைசூர் சான்டல் சோப்பின் வாசனை ஆளை தூக்கியது”…
            ஏன்டா எருமை மாடு இவ்வளோ நேரம் இந்த சோப்பு போட்டு தான் ஊறிட்டு வந்தியாக்கும்…. பர்ஸ்ட் நைட்டு எனக்குடா… அதற்கு புகழ் இடுப்பில் கட்டியிருந்த துண்டுடன் வெட்கப்பட்டு கொண்டே எனக்கும் இன்னைக்கு தான்டா​ பர்ஸ்ட் நைட்டு அதான் என் ரூம சாயிந்திரமே ரெடி பண்ணி வைச்சிட்டு வந்திருக்கேன்…. 
      
          ஏது!.. சாயிந்திரமே ரெடி பண்ணிட்டியா….
          ஆமாடா….
          ச்சீ நீ என்ன வேணும்னாலும் பண்ணு ஆனா வெட்கம் மட்டும் படாதே…. அதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லடா…
. ச்ச்சீ போடா என திகழின் கன்னத்தில் இடித்து விட்டு சென்று விட்டான்……
           அனைவரும் எதிர்பார்த்த நேரம் வர திகழ் தன்னோட அறையின் பால்கனியில் நின்று கொண்டிருந்தான்…. கதவு திறக்கும் சத்தம் கேட்க திரும்பி பார்த்த திகழ் சிலையென இருந்தவளை நோக்கி சென்றான்….. ஸ்கை ப்ளூ கலர் ஷிபான் சாரியில் கண்களுக்கு மை தீட்டி உதட்டில் சாயம் ஏதும் போடாமலே சிவந்திருந்த உதடுகள் தன்னை வா வா என அழைக்க அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் யாழிக்கு படபடப்பாகவும், ஏசி அறையிலும் வியர்த்து வழிந்தது….. அவள் கையை பிடித்து கட்டிலில் அமர வைத்தான்…..  அவள் இரு கன்னங்களையும் தாங்கி முகத்தில் பூத்திருக்கும் வியர்வை துளிகளை தன் உதடுகளால் ஒற்றி எடுத்தான்….   யாழிமா உன்னோட சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காதுடா…. வா நாம தூங்கலாம்…. அவனின் கையை பிடித்தவள் எனக்கு சம்மதம் என்க…. ம்ம்ம் என அடுத்து அவள் பேசிய வார்த்தைகள் யாவும் திகழின் வாய்க்குள் சென்றது…. அவளின் இதழ்களை மென்று தின்று கொண்டிருந்தான்…. மூச்சு முட்ட முகம் முழுவதும் முத்தமிட்டான்…. முதலில் திகைத்தாலும் அவனின் ஆண்மையில் மெல்ல தன் வசம் இழக்க துவங்கினாள்…. ஆடை நெகிழ அவன் கரங்களில் துவண்டவளை தன்னவள் ஆக்கிய பின்னே விடுவித்தான்… சோர்வாக படுத்திருந்தவளின் கன்னங்கள் வருடி   “பிடிச்சிருக்கா யாழிமா” ம்ம்.. என்றவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளை தன் மார்பில் போட்டு உறங்கினான்…..

Advertisement