Advertisement

  “மணமேடையில் ஐயர் சொல்லும் மந்திரங்களை தப்பு தப்பாக உச்சரித்துக் கொண்டே அவரை முறைத்துக் கொண்டிருந்தான்” திகழ்…..
           பக்கத்தில் இருந்த ரோஹித்திடம் “ஏன்டா டேய் உண்மையில இவர் ஐயர் தானா”…. பொண்ண கூட்டிட்டு வாங்கனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்குறாரு “ரொம்ப நேரமா மந்திரத்த மட்டும் சொல்றாரு” என கேட்க.
        அவனை முறைத்துக் கொண்டே ஐயர் “ஏன்டா! அம்பி…. நோக்கு கல்யாணம் நடக்கணும்னா… செத்த நாழி வாய மூடு”… இல்ல என்ன பண்ணுவேன்னு நேக்கே தெரியாது… என மிரட்டினார்​.
           “இவர் மிரட்டினா நாம பயந்துடுவோமா”…..
           “அப்படி என்ன தான் பண்ணுவிங்கன்னு” சொல்லுங்க பார்க்கலாம்…..
            “இன்னைக்கு நைட்டு நேரம் நல்லாயில்லை” அதனால “சாந்தி முகூர்த்தத்த ஒரு மாசம் கழிச்சு வைக்க சொல்லிருவேன்டா” அம்பி என்றார்….
            ஹாங்….. “என்னடா இந்த ஐயர் இப்படி பேசுறாரு”….
          “பின்ன நீ பேசுன பேச்சுக்கு உன்ன மடியில போட்டு கொஞ்சவா செய்வாரு”… கொஞ்சம் நேரம் அமைதியா இறேன்டா…..
          “இதுக்கு மேல திகழ் பேசுவான்னு நினைக்கிறீங்க”….. (நீ உன் காரியத்துல கரெக்டா தான்டா இருக்க ஆனால் பர்ஸ்ட் நைட் நடக்குமா???? டவுட்டு தான்)
            “வெளியே சத்தியவேல் (புகழ், திகழின் அப்பா) புகழ் என கூப்பிடுவது”, மிருதுவின் காதில் தெளிவாக விழுந்தது….
          அப்போது தாங்கள் இருக்கும் நிலையை மாமா பார்த்துவிட்டாள்.. அச்சோ!!! என ம்ம்ம் என்க… புகழ் அசைந்தானில்லை….. 
          வேறு வழியின்றி அவன் கையில் நறுக்கென்று கிள்ளி விட்டாள்….
           ஸ்ஸ்ஆஆ!!!! என அலறியபடி ஏண்டி கிள்ளின….
          மாமா உங்கள கூப்பிடுறாங்க…..
          சரி! சரி நீ போ!…
         
          “அவள் நேராக கௌரியிடம் (புகழ், திகழின் அம்மா) சென்று பாக்ஸை அவரிடம் நீட்டினாள்”….
           அதை வாங்கியவர் “பொண்ணு ரெடி ஆகிடுச்சின்னா கூட்டிட்டு வாமா”…..
          “ம்ம். சரி அத்தை”…..
           நேராக மணப்பெண் அறைக்கு சென்றாள்…. அங்கே ரெடியாகி இருந்த யாழியிடம்,  யாழி வா போகலாம் பொண்ண கூப்பிடுறாங்க…..
          அவள் முகம் தெளிவில்லாததை கண்டு, ப்ச் யாழிமா கல்யாணங்கிறது வாழ்க்கையில் ஒரு முறை தான் நடக்கும்… நீ ஏன் கண்டதை நினைச்சி குழப்பிக்கிற…. நானும் நீயும் ஒரே வீட்டில் வாழ போறோம் அதை நினைச்சு சந்தோஷப்பட மாட்டியா….
         கண்டிப்பா மிருது நீ மட்டும் இல்லனா நான் எஎன்னைக்கோ செத்திருப்பேன். அஞ்சு வயசா இருக்கும் போது உன் கை பிடிச்சேன்… இன்னமும் விடல இனிமேலும் விடமாட்டேன்…. அவளின் கை பிடித்து புன்னகையுடனே மணமேடைய நோக்கி நடந்தாள்……
          புகழ் நேராக சத்தியவேலுவிடம்  சென்று “அப்பா ரொம்ப நேரமா கூப்பிட்டு​ட்டு இருந்திங்களே என்னப்பா” என கேட்டான்….
        அது ஒன்னுமில்ல புகழ் இன்னும் கொஞ்ச நேரத்துல பந்தி ஆரம்பிச்சிரும் வந்தவங்கள கவனிச்சுக்க சொல்ல தான் கூப்பிட்டேன்…..
          ம்ம். சரி அப்பா…..
         மணமேடை அருகில் சென்றவன் திகழ் பண்ணும் அட்டகாசம் தாங்காமல் “டேய் கொஞ்ச நேரம் அமைதியா இரேன்டா” என்க…. 
         அவனை திரும்பி பார்த்த திகழ் தீயாய் முறைக்க ஆரம்பித்தான்…..
         இவன் ஏன் நம்மள இவ்வளோ பாசமா பார்க்கிறான்….
         பக்கத்தில் இருந்த ரோஹித்திடம் இவன் ஏன்டா இப்படி முறைக்கிறான்……
         தன் சட்டைப் பையில் இருந்த கர்சீப்பை எடுத்து அவனிடம் நீட்டி….. “மச்சி ரொமன்ஸ் பண்ண மட்டும் இல்ல அதை மறைக்கவும் கத்துக்கணும்”…..
          “என்னடா சொல்ற ஒன்னுமே புரியல”!!!!….
         தன் போனை எடுத்து செல்ஃபி மோடிற்கு மாற்றி அவனிடம் நீட்டினான்…. அதை பார்த்தவனின் உதடுகள் மேலும் விரிந்தன…. உதட்டில் இருந்த லிப்ஸ்டிக்கை கர்சீப்பால் துடைத்து விட்டு…. ரோஹித்திடம் அது.. வந்து… மச்சி என இழுத்தவனை தடுத்து…. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மச்சி…. என் ரெண்டு தங்கச்சியோட வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும்னு நம்பிக்கை வந்துருச்சிடா…. 
       “பொண்ண கூட்டிட்டு வாங்கோ” என்ற ஐயரின் குரலில் திரும்பியவர்கள், ஒருவன் தன்னவளை காதலுடனும்…. மற்றொருவன் இருவரையும் பாசத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்…..
           “அரக்கு நிற பட்டில் தேவதை போல இருப்பவளை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்” திகழ்….. தன் பக்கத்தில் அமர்ந்து இருந்தவளின் காதோரம் குனிந்து “ஏய்! குட்டச்சி தாறுமாறா இருக்கடி…. உன்ன அப்படியே முழுங்கனும் போல இருக்கடி”….. என்றான் காதலுடன்…..
          ஏய்! நெட்ட கொக்கு… உனக்கு இனிமேல் தான் நான் யாருன்னு காட்டுறேன் பாரு…. என்னை கல்யாணம் பண்றதுக்கு நீ ஒரு நாள் இல்ல ஒரு நாள் கண்ணீர் விடுவ பாரு…. அப்போ தெரியும் இந்த யாழி யாருன்னு என்றவளை அனைவரிடமும் ஆசி வாங்கிய தாலியை அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு I am waiting என அவள் கன்னத்தில் நச்சென்று முத்தமிட்டான்…. அவள் மட்டுமல்ல மண்டபத்தில் உள்ள அனைவரும் அதிர்ந்தனர்…. ஐயர் உள்பட…. 

Advertisement