Advertisement

இந்த கண்ணை நான் டெய்லியும் பாக்கணும்.. அதுக்கு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்.. அதான் நான் உன்னை கல்யாணம் பண்ணலாம்னு முடிவெடுத்துருக்கேன் மிருதுளா.. என்றவாறே தான் மிருதுளாவை சந்தித்ததில் இருந்து சொல்ல ஆரம்பித்தான்.. 
               சில மாதங்களுக்கு முன் கே.எம் கன்ஸ்ட்ரெக்ஸன் கம்பெனியை பொறுப்பெடுத்து நடத்தி வந்து கொண்டிருந்தான்.. வரமாட்டேன் என்று சொன்னவனை முகிலன் தான் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான்.. 
             ஆரம்பத்தில் கொஞ்சம் திணறியவன் அதன் பின் வேலையைக் கற்றுக் கொண்டு நல்லபடியாக ப்ராஜெக்ட் எல்லாம் செய்ய ஆரம்பித்து இருந்தான்.. 
             ஆனாலும் முகிலன் பிரிவை மட்டும் எண்ணி வாடியவன் பக்கத்தில் இருக்கும் பார்க்கில் வண்டியை விட்டு அதில் விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு மழலைகள் சத்தத்தில் தன் கவலை எல்லாம் போவது போல் உணர்ந்தவன் அங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்ணில் வந்து விழுந்தாள் மிருதுளா… 
           அங்கிருந்த செடிகளை ரசித்துக் கொண்டிருந்தவள் யாரோ தன்னைப் பார்ப்பதை போல் உணர்ந்தவள், தன் கண்களை மெதுவாக சுழற்றி பார்த்தவளின் ஓர விழி பார்வையில் மொத்தமாக வீழ்ந்தான்.. கார்த்தி என்கிற கார்த்திகேயன்.. 
          ஓர விழியில் அவள் தன்னைப் பார்த்ததை உணர்ந்தவனுக்கு, உடலெங்கும் ஜில்லென பட்டாம்பூச்சி பறப்பதை போல் உணர்ந்தவன்.. 
உன் ஓர விழி பார்வையில்
பூ பூக்காத 
என் காதல் செடியும் பூ பூத்தது..
அவளை பார்த்துக் கொண்டே மனதினுள் சொல்லிக் கொண்டான்.. 
          அவன் பார்ப்பதை உணர்ந்த மிருதுளா சட்டென யாழியோடு மறைந்து விட்டாள்.. ஆனால் அவனுக்கு கார்த்தியின் முகம் கூட மனதில் நினைவில்லை..
            அவளை பார்த்து ஆறு மாதங்கள் ஆனது.. அதன் பின் அவளை பார்க்கவே முடியவில்லை… ஆபீஸ் செல்வதற்காக பார்மல் பேண்ட் மற்றும் பார்மல் ஷர்ட்டில் சென்றான்… 
              லிப்ட்டில் ஏறியவன் லிப்ட் மூடுவதற்குள் ஓர் இளம் பெண்ணின் கரம் அதை தடுத்து, உள்ளே நுழைந்தது.. ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் முகிலனிடம் தீவிரமாக பேசிக் கொண்டே வந்தான்.. 
           அவன் லிப்ட்டில் நின்று போன் பேசுவதை பார்த்த மிருதுளாவுக்கு சுள்ளென கோபம் வர அவனை திட்டுவதற்காக வாய் திறப்பதற்குள் லிப்ட் நின்று விட யாரையும் கண்டுக்காமல் அவன் போக்கில் பேசிக்கொண்டே சென்று விட்டான்.. 
              மேனேஜரிடம் சென்று தன் அப்பாயின்மெண்ட் ஆர்டரைக் கொடுத்த மிருதுளாவை எம்.டியை போய் பாருங்க என்று சொல்லியவர் இண்டர்காமில் போன் பண்ணி கார்த்திக்கு தகவல் சொல்லிவிட்டார்..
    
            கார்த்தியும் பைலை பார்த்துக் கொண்டிருந்தான்.. வேலையில் என்றும் அவன் பின் தங்கியதில்லை.. சுறுசுறுப்பாக மட்டுமில்லாமல் சிரித்த முகத்துடனே அனைவரிடமும் வேலை வாங்கி விடுவான்.. 
              தன் கம்பெனியில் உள்ள பியூன் முதல் மேனேஜர் வரை அனைவரிடமும் ஒரே மாதிரியாக பழகும் தன்மை பெற்றவன்.. யாரையும் திட்டுவதோ மனம் புண்படும்படி பேசுவதோ அவன் அகராதியிலே இருக்காது.. 
           “மே கம் இன் சார்” என்ற குரலில் எந்தவித சலனமும் இல்லாமல், 
            “எஸ் கம் இன்”… என்றவனை ஏறிட்டுப் பார்த்த மிருதுளா அதிர்ந்தாள் என்றால்.. அவளை ஏறிட்டுப் பார்த்த கார்த்தி சந்தோஷத்தில் முகம் பளீச்சென மாறியதை அவளுக்குத் தெரியாமல் மறைத்தான்.. 
          “எஸ்.. நீங்க” என இழுத்தவனை.. 
           நான் மிருதுளா என அப்பாயின்மெண்ட் ஆர்டரை கையில் கொடுத்தாள்.. அதைப் பிரித்துப் பார்த்தவன்.. மிஸ்.மிருதுளா என எழுதியிருந்ததை தன் மனதில் பதிய வைத்தான்..
          வேலை விஷயமாக சில கேள்விகள் கேட்டவன்.. என்னுடைய செட்டியூல் எனக்கு ரீமைண்ட் பண்ணனும்.. சைட்டுக்கு அடிக்கடி போக வேண்டி இருக்கும்.. அவ்ளோதான் உங்க வேலை.. என்றவன் பக்கத்து ரூம் தான் உங்க ரூம் நீங்க போகலாம் என எந்த வித வழிசலோ இல்லாமல் தெளிவான குரலில் கூறினான்.. 
அவள் சென்ற பின் அவனின் மனதில், 
உன் ஓர விழி பார்வை 
என்னை உரசி சென்றது 
சொற்ப நொடியே என்றாலும்
சொர்க்கமாய் இருந்தது எனக்கு.. 
என அவளை நினைத்து மனதிற்குள்ளே கவிதை எழுத ஆரம்பித்தான்..
              மிருதுளா மாலையில் தன் வீட்டுக்கு செல்ல, புகழ் தான் அவளை வேகமாக அணைத்திருந்தான்.. இப்பொழுதல்லாம் அவனின் அணைப்பு அவளை எந்தவித அறுவெறுப்பை ஏற்படுத்தவில்லை.. சிறிது சிறிதாக புகழை ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.. 
           சில மாதங்களுக்கு முன்பு தான் மிருதுளா.. மிருதுளா புகழ்வேந்தனாக மாறினாள்.. அதுவும்  யாரும் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையில்.. காலேஜ் முடிந்து கம்யூட்டர் க்ளாஸ் படித்துக் கொண்டிருந்த மிருதுவை பின்தொடரந்து ஒருவன் அவளை டார்ச்சர் பண்ண.. 
        மிருதுளா எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காமல், மிருதுவை ஒரு முறையாவது ருசித்திட வேண்டும் என்ற வெறியில் அவளை அவளுக்கத் தெரியாமல் அசிங்கமாக வீடியோ எடுத்து வைப்பதற்காக மிரட்ட..
           பயத்தில் என்ன செய்யவென தெரியாமல் தற்கொலை முயற்சி பண்ணியவளை ரோஹித்  தான் மருத்துவமனையில் சேர்க்க… அதுவரை மிருதுளாவை ஒன் சைடாக காதலித்த புகழ் அடித்து பிடித்து ஓடி வந்தவன்.. 
         பின் தன் வீட்டின் அனைவரிடமும் தன் காதலை சொல்லி அனைவரின் முன்னிலையிலும் மிருதுவின் கழுத்தில் தாலி கட்டினான்.. 
          அன்றிலிருந்து இன்று வரை அவளின் பயத்தை சிறிது சிறிதாக போக்கிக் கொண்டு வருகிறான்.. அதன் விளைவு தான் இன்று வேலைக்கு செல்வது.. எந்தப் பொண்ணும் தன்மானமும் தைரியமும் பெற வேலைக்கு சென்றாள் மட்டுமே முடியும் என்பதை தீர்மானித்தவன் அவளை வேலைக்கு அனுப்பினான்.. 
          இதில் அனைவருக்கும் சம்மதம்  கூறினாலும் புகழ் மட்டும் ஒரு கண்டிஷனோடு தான் வேலைக்கு செல்ல அனுமதித்தான்.. அது தன் அடையாளத்தை மறைப்பதாகும்.. 
            ஆமாம் மிருதுளா எந்த இடத்திலும் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்பதை யாரிடமும் சொல்லவில்லை.. அவள் அன்றே தன் அடையாளங்களை சொல்லியிருந்தால் பின்னாளில் பல வித பிரச்சனைகள் வராமல் தடுத்திருக்கலாம்.. 
           மிருதுளா வேலைக்கு ஒரு மாதங்கள் முடிவடைந்த நிலையில் வேலையில் அனைத்தையும் சுறுசுறுப்பாகவும் சிறிது தன்னம்பிக்கையுடன் செயல்பட ஆரம்பித்தாள்.. 
             மனம் முழுவதிலும் மிருதுளாவின் மேல் காதல் இருந்தாலும் அவளிடம் எப்படி தன் காதலை சொல்வது என தெரியாமல் திணறிக் கொண்டிருந்தவன் ஒரு நாள் முகிலனிற்கு போன் போட்டான்.. 
             முகிலனிடம் பேசி வைத்தவனுக்கு கூடிய சிக்கீரம் தன் காதலை சொல்ல வேண்டுமென தோன்றியது… 
           நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒரு நாள். வீட்டுக்கு செல்ல சொல்வதற்காக வந்த மிருதுளாவிடம், 
   
              “மிருதுளா”… 
              “ஆங்.. சொல்லுங்க சார்”… 
            “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. பக்கத்திலிருக்கும் பார்க்கில் வெயிட் பண்ண சொல்லியவன் சில மணி நேரத்தில் அவளை சந்திப்பதற்காக வந்தான்”.. 
            வந்தவனின் கையில் ஆர்கிட் மலர்களால் ஆன பொக்கையை ஒரு கைகளில் ஏந்தியவாறு, அழகாக தலையை கோதி விட்டவாறு வந்தவனைக் கண்டு எந்த பெண்களும் மயங்கி விழவே செய்வார்கள்.. 
        ஆனாலும் மிருதுளா அவன் நடந்து வருவதை சற்று திகிலுடனும் பயத்துடனும் தான் பார்த்தாள்… 
             “ஹாய் மிருதுளா”.. என்ற கார்த்தியை சற்று பயத்துடன் பார்த்துக்கொண்டே 
         “என்னை எதுக்கு வரச் சொன்னீங்க சார்??”.. என்று திக்கி திணறி கேட்டவளை 
        அவளை பார்த்து புன்னகைத்தவாறே, “ம்ம்.. சுத்தி முத்தி பார்த்தவன் யாரும் தங்களை கவனிக்கவில்லை என்பதை அறிந்தவன்.. அவனின் கண்களை இறுக மூடிக் கொண்டே “ஐ லவ் யூ மிருதுளா” என பொக்கையே நீட்ட, 
           அவன் சொன்ன காதலில் பேரதிர்ச்சியானவள்,  “சார் நான் உங்களை அந்த மாதிரி எண்ணத்துல பார்க்கலை சார்”.. 
             “ஹேய் ஜஸ்ட் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் மிருதுளா.. நான் உன்னை கம்பெல் பண்ணலை.. என்னோட லவ்வ உன்கிட்ட சொன்னேன்.. உனக்கு எவ்ளோ டைம் வேணும்னாலும் எடுத்துக்கோ”.. என்றவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பேனாவை எடுத்துக் கொடுத்தான்.. 
            அந்தப் பேனாவையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள்.. “என்ன சார் இது” என்று குரலில் பயத்தை தேக்கியவாறு நடுங்கியவளைக் கண்டு, 
             “இது பேனா மிருது.. இந்தா எனக் கொடுக்க.. அந்தப் பேனாவின் மூடி பென்டிரைவால் மூடப்பட்டது”.. இது மிருதுளாவிற்கு தெரியாது..  சாதாரணமான பேனா தானே என்றெண்ணி அதை வாங்கியவள் தன் ஹான்ட்பேக்கில் போட்டுக் கொண்டாள்.. 
          அப்புறமாக அவளிடம் அதைப் போட்டு பார்க்க சொல்ல வேண்டுமென நினைத்தான்.. 
           அவளோ பயத்தில் என்ன சொல்வதென தெரியாமல் “நான் வேற ஒருத்தரை லவ் பண்றேன் சார்.. என் பின்னாடி இந்த மாதிரி இன்னொரு தடவை சுத்துனீங்கன்னா.. என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது சார்”.. என்று வேகமாக விலகி செல்பவளின் கையை வேகமாக பிடித்தான்.. 
           அவன் எந்த வித உள்நோக்கமும் இல்லாமல் சாதாரணமாக தான் பிடித்தான்.. ஆனால் மிருதுளா அவளை சப்பென அறைந்தது மட்டுமில்லாமல்,
             ச்சீ நீயெல்லாம் என்ன மனுஷன்… ஒரு பொண்ணை பார்த்தாலே பொக்கையை தூக்கிட்டு வர வேண்டியது.. ஒரு பொண்ணை நீங்க காதலிச்சா அந்தப் பொண்ணும் உங்களை காதலிக்கனும்னு நினைக்க வேண்டியது.. 
           அப்படி அந்தப் பொண்ணு காதலிக்கலன்னா அந்தப் பொண்ணு முகத்துல ஆசிட் அடிக்கிறது.. அந்தப் பொண்ணை கெடுத்துட்டா அவ நம்மளுக்கு கிடைச்சிருவான்னு அந்தப் பொண்ணை சித்திரவதை பண்ணி கெடுக்கிறது.. 
             உங்களை குறை சொல்லக்கூடாது.. உங்களையெல்லாம் இப்படி வளர்த்தவங்களை சொல்லணும்.. அவனை ஏதோ “பொம்பளை பொறுக்கி” என்றென்னி அவனின் ஒழுக்கத்தை பற்றி அவதூறாக  பேசியது மட்டுமில்லாமல்.. அவனை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டாள்… 
            யாரின் கண்கள் தன் தாயின் கண்களை ஒத்தது போல் இருந்ததோ.. அந்த கண்களை தன்னை வெறுப்பாக பார்த்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் மனதளவில் உடைந்தே விட்டான் ..
          அவளின் வார்த்தையில் உறைந்து போய் அப்படியே நின்று விட்டான்.. அவன் இதயத்தை யாரோ தன் கையால் பிடுங்கி எடுப்பது போல் வலியை உணர்ந்தான்.. அவன் காதலை மறுத்த வலியை விட, அவள் சொல்லிவிட்டு சென்ற வார்த்தை அவன் உயிர் வரை சென்று தாக்க.. காரை எடுத்து கன்னாபின்னாவென ஓட்ட ஆரம்பித்தவனின் எண்ணம் முழுவதும் “நான் தப்பானவனா அண்ணா”… அப்பொழுதும் தன் தாயுமானவனையே நினைத்தான்…
   
உன் ஓர விழி பார்வை பட்டு 
பாலைவனமும் 
சோலை வனமாகி
அது பட்டும் போய் விட்டது.. 
என மனதினுள் நினைத்தவாறே எதிரே வந்த லாரியின் மேல் மோதி விட்டான்..,, கார் அப்பளம் போல் நொருங்கி தலை குப்புற விழும் போதும் அவன் நினைவில் தோன்றியது.. “தன் அண்ணனின் உருவமும்.. தன் காதலித்த ஓர விழி பார்வையும் தான்”.. 
          அதிர்ஷ்டவசமாக கார்த்திக்கு தலையை தவிர வேறெங்கும் அடிபடவில்லை… அங்கிருந்தவர்கள் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவனுக்கு சிகிச்சை மேற்கொள்ள.. இரண்டு நாள் கழித்து கண்களை திறந்தவனுக்கு அங்கிருந்த யாரையும் நியாபகம் இல்லை… 
             தலை வேறு விண் விண்ணென்று வலிக்க தலையை தன் இருகரங்களால் தாங்கியவன் “ஆஆஆஆஆ” எனக் கத்தியவாறே கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிய ஆரம்பித்தான்.. 
           அவனின் செய்கையை பார்த்த டாக்டர்கள் அவனை பைத்திரக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்க சொல்லினர்.. அப்படி செல்லும் போது தான் வழியில் டிராபிக்கில் நிற்கும் போது.. சுற்றிப் பார்த்தவனின் கண்களில் வந்து விழுந்தான் முகிலன்.. 
           அவனிடம் செல் என உள் மனம் சொல்ல வேகமாக வண்டியை விட்டு இறங்கியவன் முகிலனை நோக்கி சென்றான்.. அவனைத் தொடர்ந்து அவனை பிடிப்பதற்காக வந்தவர்களை முகிலன் தன் தம்பியை கண்டுபிடித்து அவனை தன்னுடன் அழைத்து வந்தவன் அவனின் மேற்சிகிச்சை மேற்கொண்டு.. இதற்கு யார் காரணம் என கொல்லும்  ஆவேசத்துடன் சுற்றினான்.. 
          மிருதுளா கூறிய வார்த்தைகள் இதுவரை யாருக்கும் தெரியாது.. அந்த உண்மைகள் தெரிந்த ஒருவனும் மௌனமாகி போனான்.. 

Advertisement