Advertisement

முகிலன் வீட்டிற்கு வந்த சில மணி நேரத்திலேயே   மூன்று பெண்களையும் அவர்களின் வீட்டில் சென்று விட உத்தரவிட்டான்..  
               திகழும் புகழும் அவர்களை தேடியலைந்து கொண்டிருந்தனர்.. சத்தியவேல் கௌரியிடம் விசயத்தை சொல்லாததால் திகழுடைய ஆபீஸில் தான் இருவரும் தங்கினர்.. 
              இருவருக்கும் கடத்தியவர்களை பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் திணறினர்.. பணத்துக்காக கடத்தினால் இந்நேரம் தங்களுக்கு போன் வந்திருக்கும் என எண்ணியவர்கள்.. தங்களுக்கு தெரிந்த வழியில் எல்லாம் முயற்சி செய்து கொண்டிருக்க, 
            ரோஹித்தை கொலை முயற்சி செய்தது எதுவுமே புகழுக்கும் திகழுக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான் முகிலன்… 
          இன்றும் தன் உயிருக்கும் மேலானவர்களை காணாமல் சோர்ந்து சோபாவில் விழுந்த புகழிடம் திகழ் விசாரிக்க.. எங்கேயும் கண்டு பிடிக்க முடியல்லடா…” ரொம்ப பயமா இருக்கு.. மிருது ரொம்ப பயந்த சுபாவம் வேற.. ரொம்ப பயமா இருக்குடா” என கண்களில் கண்ணீருடன் கேட்டவனின் காதில் “மாமா” என்ற குரலில் சட்டென திரும்பி பார்த்த புகழ் அங்கு நின்று  கொண்டிருந்த மிருதுவைப் பார்த்ததும் சந்தோஷமும் ஏக்கமும் கலந்து அவளை அணைத்தவன்… அவன் முகம் முழுவதும் முத்தமிட்டு அணைத்துக் கொள்ள… 
              திகழோ யாழியை அணைத்துக் கண்ணீர் வடித்தான்.. “உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன்டி.. ஐ லவ் யூடி” என்று கத்த அணைத்துக் கொள்ள, 
           தீக்ஷி கண்களை நாலாப்பக்கமும் சுழற்றி தன் உயிருக்கும் மேலானவனை தேடி “அண்ணா ரோஹி எங்கே??”..  என்ற தீக்ஷியைக் கண்டு பாவமாகவும், அதே சமயம் “ரோஹியின் நிலைமையை சொன்னால் இவள் தாங்குவாளா?? என யோசனையாக பார்த்த திகழும் புகழும் அனைவரையும் கூட்டிக் கொண்டு ஹாஸ்பிட்டல் கிளம்ப… 
            அதே நேரம் ரோஹித்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தான் முகிலன்.. நேராக அவனிடம் வந்து அவனின் கையைப் பிடித்து, 
           “ரோஹித்” என மென்மையாக அழைக்க.. அவனோ எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் கண்களை மூடி படுத்திருந்தான்.. 
          முகிலன் மேலும் “நான் தான் உன்னை அடிச்சிப்போட்டு உன் ஒய்ஃபையும் தங்கச்சிங்களையும் கடத்திட்டுப் போனேன்.. என்றதும் இதுவரை செயல்படாமல் இருந்த மூளையில் இருந்த ரத்த நாளங்கள் எல்லாம் செயல்பட கண்கள் மட்டும் திறக்க முடியாமல் படுத்திருந்தான்.. 
             “நான் பண்ணது தப்புன்னு எனக்குத் தெரியும்.. ஆனால் என்னால முடியல.. என் தம்பியை பைத்தியக்காரனா பாக்குற ஒவ்வொரு நிமிஷமும் உன் தங்கச்சியை என் கையால கொன்னு புதைக்கனும்னு வெறியே வருது.. ஆனா ஒரு பொண்ணை கொல்ற அளவுக்கு நான் ஒன்னும் மிருகம் கிடையாது”.. 
         அவர்களை கடத்தி கண்டெய்னரில் லாரி ஏற்றி பெங்களூர் கொண்டு சென்றது.. அங்கிருந்து சென்னை வரும் ஆம்புலன்ஸில் கொண்டு வந்து ஈசிஆரிலிருந்து அடைத்தது வரை அவர்களை தற்பொழுது வீட்டில்  விட்டது வரை  எல்லாவற்றையும் சொல்லினான்.. ஆனால் பிரதாப்பை பற்றி மூச்சு கூட விடவில்லை.. 
           காரில் வந்து கொண்டிருந்த யாழியும் மிருதுவும் முகிலன் கடத்தியதிலிருந்து யாழியை அடித்தது வரை ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டே வந்தனர்.. கடைசியா மிருது சொன்னதை கேட்டு சடன் பிரேக் போட்டதால் காரின் டயர்கள் சில அடி உரசிக் கொண்டு போய் நின்றது.. 
             “வாட் என்ன சொல்ற மித்து அந்த பிரதாப்ப அவன் கடத்திட்டு வந்தானா??” என ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்ட புகழை பார்த்து ம்ம் என தலையசைத்தவாறே, 
            “ஆமா மாமா.. நான் என் கையாலேயே அவன கத்தியை எடுத்து குத்தினேன் மாமா.. அப்போ எனக்கு எப்படி இருந்திச்சி தெரியுமா?? இப்பொழுதும் சந்தோஷமும் ஒரு வித நிம்மதியும் கலந்து கண்களில் கண்ணீருடன் சொல்லியவளை காதலுடனும் தன்னவளின் பிரச்சனையை தீர்த்து வைத்தவன் மேலே மரியாதையும் சேர்ந்து வந்தது” .
       அப்புறம் அவனை என்னமோ பண்ணணும்னு சொன்னாரு மாமா.. “தோலை உரிச்சி உப்புக்கண்டம் போடணும்னு சொன்னாரு மாமா” என்றதும் திகழும் புகழும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.. அவர்கள் இருவருக்கும் தெரியுமே அந்த தண்டனை எப்படி இருக்குமென… 
              அதற்குள் ஹாஸ்பிட்டல் வந்துவிட, அனைவரும் பதட்டத்துடன் செல்ல ஒரு அறையின் முன்னால் திகழ் நிற்க, அறையை திறந்த பார்த்த பெண்கள் மூவருக்கும் விழிகளில் கண்ணீர் வழிந்தோட, “அண்ணா” என அலறியபடி ஓடிய மிருதுவும், யாழியும் ரோஹியை அணைத்துக் கொண்டே அழ, தீக்ஷி அழவே இல்லை.. அவனை  வெறித்துப் பார்த்தவாறே, 
           “நான் ரோஹி கூட தனியா பேசணும்” என்றதும் அனைவரும் வெளியே செல்ல, தன்னவன் அருகில் சென்று அவனின் கைகளைப் பிடித்தவாறே,
           “நான் உன் ஷனா வந்துருக்கேன் ரோஹி.. எழுந்துரு ரோஹி.. என அவன் நெற்றியில் முத்தமிட்டவள்..  ஐ லவ் யூ ரோஹி” என அவனின் இதழ்களை சிறைபிடித்தாள்.. இரு இதழ்களின் சங்கமத்தில் ஏற்கனவே முகிலன் பேசியதில் சுயநினைவுக்கு மெல்ல திரும்பிய  ரோஹிக்கு தன்னவளின் இதழணைப்பினால் மூச்சு முட்ட, சட்டென்று எழுந்தமர்ந்தான் ரோஹி… 
            அவன் தீடீரென எழுவான் என எதிர்பார்க்காததால்.. பயத்தில் நெஞ்சில் கை வைத்தவாறே நின்று கொண்டிருந்த தீக்ஷி, ரோஹி என தோளில் கை வைத்தது தான் தாமதம், அவளை இழுத்து தன் மடியில் போட்டவன் அவளின் கீழ் அதரங்களை தன் இதழ்களால் சிறையெடுக்க.. அவளின் இதழின் மென்மையில் தன்னை மறந்து அவளை முத்தெடுக்க ஆரம்பித்தான்..
             தீக்ஷியோ அதிரடியாக அவன் இழுப்பான் என அறியாததால் அச்சத்தில் உறைந்தவளுக்கு, அவனின் வன்மையான ஆக்கிரமிப்பால் உடல் நடுங்கினாலும் சிறிது நேரத்தில் தன்னவனுக்கு இசைந்து கொடுக்க அவனின் சிகையை கையால் பிடிக்க முயல, அதுவோ முழுவதும் மழிக்கப்பட்டு இருந்தது.. ஆதூரமாக அவனின் தோள்பட்டையை அழுத்தமாக பற்றினாள்.. 
            அப்பொழுது ரவுண்ட்ஸ் வந்த டாக்டர், நர்ஸ் இருவரும் அவர்கள் இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.. நர்ஸ் கையில் இருந்த மருத்துவ உபகரணங்களை கீழே போட டங்கென்று கீழே விழுந்த சத்தத்தில் பிரிந்த இருவரும்.. 
        அங்கு நின்று கொண்டிருந்த  அனைவரையும் பார்த்து வெட்கத்தில் முகம் சிவந்து தீக்ஷி ரோஹி முதுகின் பின்னாடி ஒழிய, ரோஹி அழகாக வெட்கப்பட்டு தன் தலையை கோதி விட, அங்கு நின்று கொண்டிருந்த புகழும் திகழும் வேகமாக வந்து அணைத்துக் கொண்டனர்.. 
            “உன்ன இப்டி பார்க்க தான் மச்சி ஆசைப்பட்டோம்” என மூவரும் அணைத்துக் கொள்ள,.  அதன் பின் அனைத்தும் துரிதமாக நடக்க, இரண்டே நாளில் ரோஹித் வீடு திரும்பினான், இரண்டு நாட்கள் கழித்து ரோஹித் தன்னுடைய வீட்டினுள் அடியெடுத்து வைத்தான்.  அனைவரும் ரோஹித்தின் வீட்டில் தான் தங்கினர்.. ஆனால் அவனின் மனதில் இருந்த முகிலின் மேல் உள்ள கோபம் மட்டும் அப்படியே இருந்தது..
            வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் செல்ல ஆரம்பிக்க, குலுமணாலிக்கு கொண்டு சென்ற லக்கேஜை எல்லாம் திருப்பி எடுத்து வைத்துக் கொண்டிருந்தவனின் கண்களில் சிக்கியது பென்டிரைவ்… 
           “என்ன பென்டிரைவ் இது”என யோசித்தவனுக்கு மொழி அன்று கொடுத்தது நியாபகத்திற்கு வர, சரி என்னதான் இந்த பென்டிரைவில் இருக்கிறது என போட்டுப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.. 
             தன் தங்கை செய்த ஒரு தப்பால் அனைவரின் வாழ்க்கையும் எவ்வளவு கஷ்டம் அனுபவித்திருக்கிறார்கள் என்றவன் உடனே கோயிலுக்குச் சென்ற திகழுக்கும் புகழுக்கும் போன் பண்ணி வீட்டிற்கு வர சொல்ல.. 
             அனைவரும் வீட்டிற்கு வந்ததும் “தப்பு பண்ணிட்ட மிருதுளா” என்ற அண்ணனை புரியாமல் பார்த்த மிருதுளா
           “என்ன அண்ணா சொல்ற எனக்கு ஒன்னும் புரியல்ல” என்றவளின் கையில் பென்டிரைவைக் கொடுத்து “இதுல இருக்கிற வீடியோவ பாரு” என்ற அண்ணனின் வார்த்தையில் குழப்பமாக பார்த்தவள் அந்த பென்டிரைவில் கன்னக்குழி தெரியும் அளவிற்கு சிரித்தவாறு நின்றான் கார்த்தி என்கிற கார்த்திகேயன்.. அந்த பென்டிரைவில் இருந்த விசயத்தால் தான் அதிர்ச்சியடைந்தவள் புகழின் சட்டையைப் பிடித்து கதறி அழுதவள் “நான் கார்த்தி சார்ற பாக்கணும் மாமா.. நான் கார்த்தி சார்ர பாக்கணும்” என நெஞ்சில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்…
             அன்று தான் கார்த்தியை பார்த்து விட்டு அசதியில் அங்கிருந்த சோபாவில் தலை சாய்த்து படுத்திருந்த முகிலனைப் பார்த்த பாவமான ஆல்பர்ட் அவனுக்கு டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தான்.. 
            அதை வாங்குவதற்காக கையை நீட்டுவதற்குள் அவனின் கையைப் பிடித்து கதறிக் கொண்டிருந்தாள் மிருதுளா… 
             அவளின் வருகையே அதிர்ச்சி என்றால் அவள் தன் கையைப் பிடித்து கதறுவது ஒரு வித எரிச்சல் மூட்ட, 
             “ஹேய் முதல்ல கையை விடு.. நான் தான் உன்னை விட்டுட்டேன்ல அப்புறமும் வந்து ஏன் உயிரை வாங்குற?? என எரிச்சலுடன் கூறியவனை, 
             “என் மேலே தான் தப்பு நான் மட்டும் அன்னைக்கு  கார்த்தி சார் சொல்றதை சரியா கேட்டுருந்தேனா இன்னைக்கு அவர் தற்கொலை முயற்சி பண்ணிட்டு இருக்க மாட்டார்.. நான் அவரை பார்க்கணும் சார்” என்று கதறுபவளை கண்டு சிறிதும் இறங்காமல், 
  
             “முடியாது” என அழுத்தமாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் சொன்னவனை கண்டு இன்னும் கோபம் கொண்ட ரோஹித் “ஏன் பார்க்க முடியாது நான் நினைச்சா உன் தம்பியை இங்க இந்த நிமிஷம் கொண்டு வர முடியும்.. பாக்குறீய்யா??” என சவால் விட்டவனை கண்டு இதழ்களை சுழித்து அலட்டசியமாக புன்னகைத்தவன், 
          சோபாவில் அமர்ந்து தன் ஒற்றை கரங்களை சோபாவில் மேல் வைத்தவன் கால் மேல் கால் போட்டவாறே “உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ”.. என திமிரும் ஆணவமும் கலந்த சொல்லியவனின் தோரணையில் எரிச்சல் மேலிட அவனிடம் மீண்டும் சண்டையிட போன ரோஹித்தை பிடித்த புகழ், 
          “ரோஹித் நீ தேவையில்லாம கோபப்படுற.. நாம பதினைஞ்சி வருஷமா தேடுன பிரதாப்ப ஒரே நாள்ல மிருது கையாலேயே தண்டனை  கொடுத்தவர்கிட்ட இப்படித்தான் பேசுவியா??” 
          
            அவன் சொன்னதைக் கேட்டு உறைந்து நின்றான்.. தன் கையாலேயே கொல்ல வேண்டுமன்று நினைத்தவன் தன் தங்கையின் கையாலேயே தண்டனை அளித்தவன் பிரமிப்புடன் பார்த்தவன் “அவன் தன் குடும்பத்தை எதற்காக கடத்தினானோ ஆனால் நடந்தது எல்லாம் நன்மை மட்டுமே.. பகவத் கீதையில் ஒரு வாக்கியம் உண்டு.. “நடப்பதெல்லாம் நன்மைக்கே”  என்றதும் தப்பை உணர்ந்து அவனிடம் மன்னிப்பு கேட்பதற்காக ஓரடி எடுத்து வைத்தவனை… 
          “நில்லு” என ஒற்றைக் கையால் அவனை நிப்பாட்டியவன்  வெளியே போங்க எல்லாரும்.. “டேய் எல்லாரும் அங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க??” என்றவனை 
             புகழ் தான் அவனை சமாதானப் படுத்துவதென “நாங்க கண்டிப்பா போயிருவோம்.. ஆனா இந்த பென்டிரைவ் உங்க கிட்ட கொடுத்துட்டு கார்த்திக் கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்துருக்கோம்”.. என்றவனை புரியாமல் பார்த்த முகிலன், 
           அதுவரை காத்திருந்த பொறுமையெல்லாம் பறக்கவிட்டவன் பென்டிரைவை தூக்கி எறிந்து “வெளியே போங்க எல்லாரும் வந்துட்டாங்க பெருசா எல்லாரும்.. நல்லவங்க மாதிரி பென்டிரைவை தூக்கிட்டு..” என வெறுப்பாக உமிழ்ந்தவனை பெண்கள் அனைவரும் புரியாத பார்வை பார்த்தனர்.. 
          “நாங்க உடனே போயிர்றோம் சார்.. அந்தப் பென்டிரைவ்ல இருக்கிறதை போட்டு மட்டும் பாருங்க சார்”… என திகழ் சொல்ல 
            அந்தப் பென்டிரைவை எடுத்து ஆல்பர்ட் போட்டு பார்க்க.. அதில் கன்னக்குழியில் சிரித்த முகத்துடன் வந்து நின்றான் கார்த்தி என்கிற கார்த்திகேயன்.. அதுவரை வெறுப்பாக ஆத்திரத்தில் இருந்த கண்களில் பாசமும் கவலையும் சேர்ந்து கொள்ள கண் சிமிட்டாமல் தன் வேதனையை தனக்குள்ளே வைத்து பூட்டினான்..
            
            ஹாய் மிருதுளா. நான் கார்த்தி பேசுறேன்.. கண்களில் காதலும் இதழ்களில் புன்னகையுடன் கன்னத்தில் விழுந்த குழி அவனுக்கு மேலும் கவர்ச்சியை ஊட்டியது.. அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் முகிலன்.. 
           நான்  உன்னை முதன் முதலா பார்க்குல வச்சித்தான் ஆறு மாசத்துக்கு முன்னாடி பார்த்தேன்.. அப்போ நீ ஓர விழி பார்வையில என்னைப் பார்த்துட்டு போயிட்ட.. அந்தப் பார்வை தான் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சி.. அதுவரை வீடியோவில் பேசிக் கொண்டிருந்தவன் மறைந்து 
          அடுத்ததாக இரு பெண்களின் கண்கள் மட்டும் தோன்றியது..  அந்த கண்களை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.. ஆனால் முகிலன் இதழ்களோ “அம்மா” என முணுமுணுத்தவாறே மிருதுளாவை திரும்பி பார்த்தான்.. இதுவரை அவனின் கண்களுக்குப் புலப்படாதது இன்று புலப்பட்டது.. மிருதுளாவை தன் தம்பி ஏன் காதலித்தான் என்று.. 
          மீண்டும் கார்த்தி தோன்றினான்… “என்னடா யாரு கண்ணுன்னு பாக்குறீயா.. எங்க அம்மாவோடது.. இன்னொன்னது உன்னோடது மிருதுளா.. எங்க அம்மா என்கூட இல்லை.. ஆனா எங்கம்மாவோட கண்ணு உன் கண்ணு மாதிரியே இருந்திச்சி… என்னால நம்பவே முடியல.. அதான் எங்கம்மா கண்ணையும் உன் கண்ணையும் சேர்த்து வச்சிப் பார்த்ததுமே நான் டிசைட் பண்ணிட்டேன்… 
         

Advertisement