Advertisement

அண்ணா அவுங்களை வெறுப்பா ஒரு பார்வை பார்த்துட்டு, என்னைத் தூக்கிட்டு ருமுக்குள்ளே வந்து ரொம்ப அழுதான்… நான் தான் அவன் கண்ணீரெல்லாம் துடைச்சி விட்டேன்.. என்னை மடியில் படுக்க வைச்சி தூங்க வைச்சான்…  
             அடுத்த நாள் காலையில் நான் எந்திரிக்கும் போது வீட்டுல நிறைய பேர் இருந்தாங்க.. நான் ஒன்னுமே புரியாம அண்ணா பக்கத்துல போனப்போ… அங்க வீட்டுக்குள்ள அப்பாவ டேபிள்ள படுக்க வைச்சிருந்திச்சி… எனக்கு ஒன்னும் புரியாம அண்ணா கிட்ட கேட்டேன்… 
           “அப்பா நம்மள தனியா விட்டுட்டுப் போயிட்டாங்க” அப்படின்னு சொல்லி அண்ணா அழுதான்… அதுதான் அண்ணா கடைசியா அழுதது… அதுக்கப்புறம் நான் அண்ணா அழுது பார்த்ததே கிடையாது”… 
             “எதையுமே யார்கிட்டேயும் சொல்லாம தனக்குன்னு ஒரு வட்டத்தை அமைச்சிக்கிட்டு வாழ ஆரம்பிச்சாங்க”.. முக்கியமா எந்தப் பொண்ணுங்களாவது அண்ணணை பார்த்தா போதும்… அவ்ளோ தான் அவுங்களை ரொம்ப திட்ட ஆரம்பிச்சிடுவாங்க”… 
           “எங்கப்பா வாடகை வீட்டுல இருந்ததுனால நாப்பதாவது நாளே என்னையும் அண்ணாவையும் வீட்டை விட்டு வெளியேற சொல்லிட்டாங்க… அண்ணா அவுங்ககிட்ட கெஞ்சிப் பார்த்தும் கொஞ்சமும் மனசே இறங்கலை”… 
             அப்போ தான் சத்தியவேல் அங்கிள் எங்கப்பா இறந்த விசயம் கேள்விப்பட்டு வந்தாங்க… அவுங்களும் எங்கப்பாவும் யாழியோட அப்பாவும் சின்ன வயசுல திக் ஃப்ரண்ட்ஸாம்… அவரு தான் எங்களை திருவள்ளூர்க்கு கூட்டிட்டு வந்தாங்க”… 
          “அவுங்க வீட்ல எங்களைத் தங்க சொன்னாங்க… ஆனா அண்ணா தான் வாடகை வீட்டுல தான் தங்குவோம்னு சொல்லி பிடிவாதமா பக்கத்துல ஒரு வீட்டை பிடிச்சாங்க”…. அன்னையில இருந்து அண்ணா ஒரு ஜவுளிக் கடையில வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க”… 
           “காலையில் போற அண்ணா வீட்டுக்கு வரும்போது நைட்டாகிடும்… நான் அப்போ புகழ் மாமா வீட்டில தான் இருப்பேன்… அங்க தான் சாப்பிடுவேன்… சாப்பாட்டுக்கு அண்ணா காசு கொடுத்துருவாரு.. கௌரி அத்தை திட்டுவாங்க… ஆனால் அண்ணா கேட்கவே இல்லை… 
              கௌரிமா எனக்கு இன்னொரு அம்மாவா மாறுனாங்க…. இப்டி நல்லா போயிட்டுருந்தப்போ… யாழியும் வந்து சேர்ந்தா… அவுங்க அப்பா போன கார் ஆக்சிடென்ட் ஆகி பாவம் அவ மட்டுந்தான் பொழைச்சிருக்கா”…. 
             “எனக்கு நல்ல ஃப்ரண்டாகவும், ஒரு தங்கச்சியாவும் இருந்தா..
என்னோட நிழலா என்கூடையே இருந்தா… ஐ லவ் யூ யாழி” என்றவளின் ஆழ்மனங்களில் இருந்த அன்பை கண்டு யாழியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டேயிருந்தது”…
             அண்ணாவுக்கு வாரத்துல சனிக்கிழமை மட்டும் தான் லீவு  வரும்… அண்ணா அமைதியாவே இருந்ததுனால புகழ் மாமாவும், திகழும் தான் அண்ணாவோட முதல்ல ஃப்ரண்ட்ஸிப் வச்சிக்கிட்டாங்க…. 
             “அண்ணா ரொம்ப நல்லா கிரிக்கெட் விளையாடுவாரு… என்றதும் தன்னவனின் தெரியாத பக்கங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள் தீக்ஷி”…
             “ஆனால் கொஞ்ச நாளுல யாழியைக் கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டாங்க… எனக்குத்தான் அவளை பிரிஞ்சி இருக்கவே முடியல்ல.. ஒரே அழுகையா வரும்.. அப்படியே வருஷமும் கடந்துப் போச்சி”… 
            எனக்கு ஏழு வயசா இருக்கும் போது… பக்கத்து வீட்டுல பிரதாப்ன்னு ஒரு அண்ணா குடியிருந்தாங்க… என சொல்லி முடிப்பதற்குள், 
         “அந்த **** பயலே இனிமேல் அண்ணான்னு சொன்ன செருப்பால அடிப்பேண்டி… என ஆக்ரோஷமாகவும், கண்களில் வலியுடனும், அந்த வலியின் தாக்கத்தில் கண்களிலிருந்து வழியும் கண்ணீரைப் பார்த்த முகிலனுக்கு யாழி புதியவளாக தெரிந்தாள்… 
            ” யாழி பீ காம் டவுண்” என்றவனின் குரலில் அமைதியாக உட்கார்ந்தாள்…. 
           “டீனா இந்த பிரதாப் சாப்டர விட்டுட்டு கார்த்தி விசயத்தை மட்டும் கேட்க முடியாதா??”…
             ” நோ வே முகில்… அவளோட ஆழ்மனசுல உள்ள எண்ணங்களை எந்தளவுக்கு நாம வெளியில கொண்டு வர்றோமோ?? அது அவுங்களுக்கு நல்லது தான்”…   
            அப்போ எக்ஸாம் லீவுக்கா யாழி வீட்டுக்கு வந்திருந்தா.. நான் யாழி என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் கண்ணாமூச்சி விளையாடிட்டு இருந்தோம்… நானும் யாழியும் ஒரே இடத்துலே ஒளியும் போது..
          அப்போ அங்க வந்த பிரதாப் அண்ணா யாழி கையில ஒரு சாக்லேட்… வேற ஒரு இடத்துல ஒளிஞ்சிக்க சொன்னாங்க… 
           யாழியும் சாக்லெட் மேலே ஆசைப்பட்டு என்னை விட்டுட்டுப் போயிட்டா… எனக்கு நடக்கப் போற விபரீதம் தெரிஞ்சதுன்னா என்னை விட்டுப் போயிருக்க மாட்டா”… 
              ஆனால் விதி யாரை விட்டிச்சி??.. 
             “யாழிக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பிட்டு அந்த பிரதாப் என்னைத் தேடி தான் வந்தான்… நான் விளையாட்டா மாடிப்படிக்கு அடியில ஒழிஞ்சிட்டு இருந்தேன்… 
           பிரதாப் என்கிட்ட வேற இடத்துல ஒழிய வைக்குறேன்னு சொல்லி என்னை ஒரு ரூம்க்குள்ள கூட்டிட்டுப் போய் என்பதற்குள் அவளுக்கு மூச்சு வாங்கி பேச்சு திக்க ஆரம்பித்தது… 
              என்னோட ப்பா..வா.. டை சட்டை…யெல்லாம் க்கிழி..ச்சி நான் கத்த ஆரம்பிக்குறதுக்குள்ள என்னோட ப்பாவடை என்பதற்குள் மயங்கி விழுந்தாள்… 
             மிருதுளா…. மிருதுளா என அனைவரும் பதறியபடி அவளின் அருகே வர, 
              யாழிதான் தொடர்ந்தாள்,, “நான் விளையாடி முடிச்சிட்டு மிருதுளாவ தேடி வரும் போது.. மிருதுளா மாடிப்படி அடியில ஒட்டுத்துணிக் கூட இல்லாம… வாய்ல அவளோட பாவடையை வச்சி அடைச்சி… அவ உடம்பு புல்லா ரத்தமும், பல் காயமும், நகக்கீறலும் தான் இருந்திச்சி… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை… நான் தான் கோணியை அவ மேலே போட்டுட்டு  புகழ் மாமாவ கூப்பிட்டு வந்தேன்.. மாமா தான் அவளுக்கு டிரஸ் மாத்திவிட்டு ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க”… 
              அங்கிருந்த பட் என்ற சத்தத்தில் அனைவரும் திரும்பி  பார்க்க முகிலன் டேபிளில் இருந்த ஜாடியை தூக்கி ஆத்திரத்தில சுவற்றில் எறிய, அது சில்லு சில்லாக உடைந்து ரூமெங்கும் பறந்து போய்  விழுந்தது… கண்கள் ரெண்டும் சிவந்து அகன்ற மார்புகள் ஏறி இறங்கி,, கையை மடக்கி அவனின் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்…யாழி் முகிலனின் கோபத்தில் முதல் முறையாக மிரண்டு போய் நின்றிருக்க… 
          முகிலனோ நேராக அந்த ரூமை விட்டு வெளியேறி விட்டான்… அங்கிருந்து நேராக குணாவிடம், “பெர்னாண்டஸ் இங்கே வர சொல்லு” என்றவனை குழப்பமாக பார்த்தவன், எதுக்கு என கேட்பதற்குள்… 
           “உன்னை போன் பண்ண சொன்னேன்” என்ற கர்ஜனையில் குணா போன் பண்ணிய சில மணி நேரத்தில் முகிலன் முன் நின்றான் பெர்னாண்டஸ் 
           யாழியும், தீக்ஷியும் மாடியில் நின்று அங்கு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்… 
            “அண்ணாச்சி” என பணிவாக கேட்டவனை அதிசியமாக பார்த்தாள் யாழி…  அவளுக்கு பெர்னாண்டஸை நன்றாக தெரியும் அவன் எவ்வளவு பெரிய  ரவுடி என்று..
            எனக்கு ஒருத்தன் வேணும்.. பேரு பிரதாப் பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி இங்கே திருவள்ளூர்ல இருந்துருக்கான்..  
             “அண்ணாச்சி போட்டோ ஏதாவது?”..
              சில நிமிடங்கள் யோசித்தவன்.. யாழி என்ற குரலில் பத்து நிமிடங்கள் கழித்து மெதுவாகவே கீழே இறங்கி வந்தாள்.. 
           அந்த ***** நாய் எப்படி இருக்கும்??.. 
          ம்ஹீம்.. இவனால் என்ன செய்ய முடியும் என அலட்சியமாக பார்த்தவாறே, சுருட்டை சுருட்டையான முடி, முண்டக்கண்ணு, மூக்கு, வாய், இரண்டு கை, ரெண்டு காலு… என யோசித்தபடி வந்தவள்.. ஹான் அவனோட வலது கையில் ஆறு விரல் இருக்கும்..  அவ்ளோ தான்.. ஒரு மாதிரி பாம்பு மோதிரம் போட்ருப்பான்.. எங்க அண்ணாவாலேயே கண்டு பிடிக்க முடியல்ல.. என அவனை இகழ்ந்து கூறி விட்டு சென்றாள்…  
            பெர்னாண்டஸ் “இது போதும் அண்ணாச்சி” என்றவன் வெளியேறிய… சில மணி நேரத்தில் ஒடிசாவில் இருந்தவன் கடத்தப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டான்… 
            மயக்கம் போட்டு விழுந்த மிருதுளா அடுத்த நாள் காலையில் கண் விழிக்கும் போது.. சூரிய வெளிச்சம் அவள் முகத்தில் மோத, மெதுவாக எழுந்து திரையை விலக்கிய போது… 
           அவள் பட்ட துன்பத்திற்கு இன்றே முடிவு வர வேண்டுமென சூரியதேவன் ஆசீர்வதிக்க..  கதவை தட்டும் சத்தத்தில் திரும்பிய மிருதுளா “கதவு திறந்து தான் இருக்கு” என்ற குரலில் உள்ளே நுழைந்தான் கார்முகிலன்… 
           ” என் கூட வா” அவனின் பேச்சே காதில் விழாதது போல் வெளியே பார்த்து நின்றவளின் செயலில் கோபம் வந்தாலும்… 
          “இப்போ ந்நீயா வர்றீயா??” இல்லை என இழுத்தவனைக் கண்டு… அவன் முகத்தில் இருந்த திவீரம் “இவன் சொல்வதை கேட்பதே நமக்கு நல்லது” என்று எண்ணியவள்…. இல்லை… இல்லை நானே வர்றேன்… 
              அவர்கள் நேராக சென்று காரில் ஏற, அதற்கு முன்னே தீக்ஷியும், யாழியும் உட்கார்ந்திருந்தனர்.. முகிலன் முன்னாடி ஏறியமர, ஆல்பர்ட் காரை எடுக்க அதிவேகத்தில் சென்ற கார் நின்றது தமயந்தி டெக்ஸ்டைல்ஸ் என்ற இடத்தில்.. 
          அங்கிருந்த லிப்டில் ஏறியவர்கள்.. லிப்ட் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே இறங்கியது… இரண்டு மாடி கீழே இறங்கவும் நின்று கொண்டிருந்த மூன்று பெண்களுமே பயத்தில் ஒருவரின் கையை ஒருவர் பற்றிக் கொள்ள.. 
            லிப்ட் நின்றதும் மிருதுளாவின் கையைப் பற்றியவன்… அவள் திமிறிக் கொண்டு கையை விடுவிக்கப் போராட, அவனின் உரமேறிய கையில் இருந்த வலுவின் முன்னால் பூவை போன்ற மெல்லிய குணமுடைய இவளின் பலம் எதுவும் செல்லுபடியாகாமல் சென்றது.. 
            அவன் அழைத்துச் செல்ல அங்கே குணா, பெர்னாண்டஸ் இன்னும் சில ரவுடிகள் நின்றிருக்க… அங்கு ஒரு சேரில் முகத்தை மூடியபடி ஒருவனைக் கட்டி வைத்தனர்… 
           குணா அந்த முகமூடியை எடுக்க, மிருதுளாவின் உடல் நடுங்க ஆரம்பித்து அங்கிருந்து ஓட ஆரம்பிக்க.. அய்யோ பாவம் அவளின் கை தான் முகிலனின் கைக்குள் சிக்கியிருந்தது… 
              அவனின் முகத்தை பார்த்த யாழியோ கோபத்தை அடக்க முடியாமல் காலில் கிடந்த செருப்பை கழட்டி அவனை அடித்து துவம்சம் பண்ணி விட்டாள்… அவளை எதிர்க்க கூட திராணியில்லாமல் அவள் தரும் அடியை வாங்கிக் கொண்டிருந்தான்.. பிரதாப் 
           பதினைந்து வருடங்களுக்கு முன் ஏழு வயது சிறுமியை தன் உடல் இச்சைக்காக பயன்படுத்தியவன்… 
           “வ்விடு… வ்விடு நான் போகணும்”.. என்று முகிலனிடம் போராடியவளை முகிலனின் கேள்வி ஆணியடித்தாற் போல அங்கேயே நிற்க வைத்தது… 
            “நாளைக்கு ஒம் பொண்ணுக்கு இப்டி ஒரு நிலைமை வந்தா. இப்டிதான் அதுக்கு காரணமானவன விட்டுட்டுப் போவியா மிருதுளா?? என்ற கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் தலை “இல்லை” என தலை தானாக ஆடியது.. 
           “உன்னை சின்ன வயசில கஷ்டப்படுத்துன இவனை விடப்போறீய்யா” என்ற மனசாட்சியின் கேள்விக்கு மிருதுளாவின் தான் சிறு வயதில் அனுபவித்த வலிகள், அனைவரின் பரிதாபப் பார்வைகள் ஒட்டு மொத்த கோபமாக உருமாற, “நான் இவனை சித்ரவதைப் படுத்தணும்” என்றவளின் குரலில் இருந்த உறுதி வதம் செய்யும் காளியாக உருமாறி இருந்தாள்… 
            அங்கிருந்த டேபிளில்  கத்தி, துப்பாக்கி, சுத்தியல், விஷம், கயிறு, ஆசிட் பலவித பொருட்கள் இருந்தது… அஙகிருந்த கத்தியை எடுத்து அவனை நோக்கி வந்தவள்.. அவனின் கையை பிடிக்க முதல் முறையாக பயத்தில் அலற முடியாமல் திணறினான்.. 
            அவன் வாயில் ஒட்டியிருந்த டேப்பை எடுத்தவள், “ப்ளீஸ் மிருதுளா நான் பண்ணதெல்லாம் தப்புதான்… என்னை விட்டுடு மிருதுளா… ஐயம் சாரி மிருதுளா”.. என கெஞ்சுபவனை பார்த்து கேலியாக உதட்டை சுழித்தவள், 
            “இப்போ நான் ஏன் உன்னோட வாயில இருந்து டேப்பை எடுத்தேன் தெரியுமா??.. ந்நீ கத்தணும்… நான் அதை கேட்கணும்.. என்றவள் அவனின் புறங்கையில் ஓங்கி ஒரு குத்து குத்த குபுக்கென ரெத்தம் வெளி வந்தது… 
           “ஆஆஆ… அம்மா” என்ற அலறியவனின் அலறலை பொருட்படுத்தாமல், 
               “அவனின் இரு கைகளிலும் மாற்றி குத்தி “இந்தக் கை தானே என்னைத் தொட்டிச்சி.. இந்தக் கை தானே” என மாறி  மாறி குத்தியவள்… பின்பு என்ன செய்வதென அறியாமல் முகிலனை தான் பார்த்தாள்”… 
             “இதுக்கு மேலே என்ன பண்றதுன்னு தெரியல்ல??”… என்றவளை தன்னை நோக்கி அழைக்க, அவளின் கையில் இருந்த கத்தியை வாங்கியவன், 
              எங்க ஊர்ல ஒரு பழக்கம் இருக்கு..  “தோலை உரிச்சி உப்புக்கண்டம் போட்ருவோம்” அவன் சொல்ல வருவது அங்கிருந்த யாருக்குமே புரியாமல் முழிக்க, 
               “நான் சொல்றது யாருக்குமே புரியலையா?? எவனாவது தப்பு பண்ணிட்டான்னா?? உயிரோடு இருக்கும் போது அவன் தோலை உரிச்சி அவன் மேலே கல் உப்பு தடவி விட்ருவோம்”… ஏற்கனவே எரிஞ்ச தோலு மேலே கல் உப்பு பட்டிச்சின்னா அதனோட எரிச்சல் பல மடங்கு இருக்கும்.. அதனோட வலியெல்லாம் வார்த்தையெல்லாம் சொல்ல முடியாது”… 
           நேராக பிரதாப்பின் பின்னால் சென்றவன் அவன் தலைமுடியை கொத்தாக இழுத்து, தன்னை நோக்கி பார்த்து உனக்கும் இப்போ இங்கே அந்த தண்டனை தான் கிடைக்கப் போகுது… 
            “தோலு மேலே உள்ள ஆசையில தான் பச்சைப் புள்ளன்னு கூட பார்க்காம சீரழிக்கிறீங்க… அந்த தோலையே நான் உரிச்சிக் காட்டுறேண்டா”… என்றவனின் தண்டனையே தினமும் ரத்தத்தைப் பார்க்கும் ரவுடிகளுக்கே நடுநடுங்க வைத்தது.. திடீரென விசிலடிக்கும் சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க யாழிதான் விசில் அடித்துக் கொண்டிருந்தாள் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன்… 
              “பெண்கள் மூவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தவன்… அவனின் கதறலையும், அலறலையும், வேதனையையும் பொருட்படுத்தாமல் … தோலை உரித்து கல் உப்பை அவனின் மேலே தடவிக் கொண்டிருக்க, அதை சேரில் கம்பீரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் மனிதன் உருவத்தில் இருக்கும் அசுரன் முகிலன் 

Advertisement