Advertisement

 அவன் அருகில் சென்று, தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து… சிறிது கூட முகம் சுழிக்காமல்…. அவன் வாநீரை துடைத்து அவன் கையை இறுக்கமாக பற்றினான்…. 
.             அவனின் கைப்பிடித்தவாறே தான் கடத்தியதிலிருந்து அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.. . 
           .   நான் அந்தப் பொண்ணை அடிச்சிட்டேன் கார்த்தி… அந்தப் பொண்ணுக்கு ரொம்ப வலிச்சிருக்கும்ல… அவன் அப்போது அடித்ததற்காக இப்பொழுது வேதனைப்பட்டான்… 
              ரோஹித் கோமாவுக்கு போவான்னு நான் நினைச்சிக்கூட பாரத்ததில்ல கார்த்தி…. அண்ணா தப்பு பண்றேனாடா… என படுத்திருந்தவனிடமே கேட்க… பதில் சொல்லும் நிலையில் தான்  அவனில்லை… அண்ணா தப்பானவனா கார்த்தி… என அவன் கையில் தலையை கவிழ்த்தவாறே தன் மனபாரத்தையெல்லாம் இறக்கி வைத்தான்…. 
             “அப்பொழுதும் அவன் வெறித்தவாறு இருப்பதை பார்த்தவன்…. சிறிது நேரத்தில் தன் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தவன்…  உன்னை இந்த நிலைமைக்கு ஆளான அவள சும்மா விடமாட்டேன்டா”. என வேகமாக கிளம்பி சென்றவனை… 
               அவனிற்கு வந்த போன் கால் அவனின் கோபத்தை சிறிது சாந்தப்படுத்தியது..,. 
             சொல்லு சரண்…. 
             …… 
            எப்போடா ஊருக்கு வந்தா…. இவ்ளோ நாள் எங்க போயிருந்தாலாம்…. அவ நல்லா இருக்காளா????. அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லேயேடா….
                
             ம்ம் சரிடா…. நான் ஊருக்கு வந்ததும் முதல் வேலையே அவள கல்யாணம் பண்றதுதான்… அதுக்கப்புறம் அவ எங்கே ஓடிப்போறான்னு நானும் பாக்குறேன்…. அவன் வாக்கு பலிக்கும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டான்…
         .   ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்தவனின் ஹாலில் சோபாவில்  தரையில் அமர்ந்தவாறே அழுது கொண்டேயிருந்த தீஷியும், யாழியும் தான் கண்ணில் பட்டனர்… அவர்கள் இருப்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் படிகளில் வேகமாக ஏறியவனின் ஷூ சத்தத்தில் களைந்த தீஷி… 
          அவனின் பின்னாடியே ஓடினாள்…  அண்ணா! அண்ணா!! என்ற வார்த்தையில் வேகமாக படியேறிக் கொண்டிருந்தவனின் நடை கூட தடைப்பட்டது.. 
           அவளைப் பார்த்து கைகட்டி நின்றானே தவிர அவளிடம் ஒரு வார்த்தைக்கு கூட பேசவில்லை.. அவன் நின்றதையே அனுமதியாக எடுத்துக் கொண்ட தீஷி..
              அண்ணா, “ரோஹி எப்படி இருக்கான்னு மட்டும் சொல்லுங்க அண்ணா… நான் அவனைப் பார்க்கக்கூட வேண்டாம்ன்னா அவன் நல்லா இருக்கான்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்… என கண்களில் கண்ணீரும் காதலும், தன்னவனுக்கு என்னவானதோ என்ற பரிதவிப்பையும் அவளின் கண்களில் பார்த்த முகில் தான் மனதளவில் தான் தவித்துப் போனான்… 
              “ம்ம்… அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.. என இறுகிய குரலில் சொல்லியவன் வேகமாக சென்று கதவை அடைத்துக் கொண்டான்”… 
             அவன் உயிருக்கு ஆபத்தில்லை என்ற வார்த்தையே, அவளுக்குப் போதுமானதாக இருக்கும் மெதுவாக கீழிறங்கியவளின் கண்களில் பூஜை 
ரூம் பட வேகமாக உள்ளே சென்றவள் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்… 
            தன் காதலனுக்காக அழுதாள்.. தன் காதலுக்காக அழுதாள்… அழுது தீர்த்தவளின் கண்களில் குங்குமம் பட… ஏதோ உள்ளுணர்வு தோன்ற அதை எடுத்து தன் தாலியில் வைத்த அந்த நொடி, 
              ரோஹித் அட்மிட் ஆகிருந்த ஹாஸ்பிட்டலே கலவரமாக இருந்தது… அதற்குக் காரணம், ரோஹித்தின் ஆக்ஸிஜன் மாஸ்க்கை யாரோ உருவியதால் அவனின் உடல் தூக்கித் தூக்கிப் போட,… 
           ரோஹித்தை கண்காணிப்பதற்காக முகிலனால் ஏற்பாடு செய்தவர்கள் ஆக்ஸிஜன் மாஸ்க் உருவியதை கண்டுபிடித்து, முகிலனுக்குப் போன் பண்ண, 
           தீஷியின் அழுத முகம் மறுபடியும் கண்ணில் விழ, ஒரு மனமோ அவளை விட்டுவிடுவோமோ? என யோசிக்க, மறுமனமோ வேண்டாம்… என்க
           இரு மனத்திற்கும் இடையில் போராடியவனை செல்போன் மணி கலைக்க… எடுத்துப் பேசியவனின் முகம் செந்தணலை அள்ளிக் கொட்டியது போல சிவந்திருக்க, 
            “வாட்.. எல்லாரும் என்னப் பண்ணிட்டுருந்தீங்க?”… என கோபத்தில கத்தியவன்.. படிகளில் வேக வேகமாக இறங்கியவனின் கால்தட அதிர்விலேயே சோபாவில் அமர்நிருந்த யாழி எழுந்து நிற்க… 
            நாலே எட்டில் வீட்டை விட்டு வெளியேறியவன் சென்னை டிராபிக்கில் பிஎம்டபிள்யூ வை வேகமாக ஓட்டி ஆஸ்பத்திரியை அடைந்தவன் வேகமாக ரோஹித்தின் அறைக்குச் சென்று,  அங்கிருந்த தலைமை மருத்துவரை ஓங்கி அறைந்திருந்தான்… 
           “உன்னை நம்பி நான் பேஷண்ட் ஒப்படைச்சேன்னா? அவன பாதுகாக்கிறதை கூட ஒழுங்கா செய்ய முடியல்லையா??”… இதுக்காக தான் இந்த ஆஸ்பத்திரிக்கு கோடி கோடியா கொட்டி அழுதேன்னா??… என்றவனின் ஆத்திரம் சிறிதும் மட்டுப்படவதாய் இல்லை… 
            “யாரு?? ,ய்யாரு?? ரோஹித் என் பாதுகாப்புல இருக்கிறான்னு தெரிஞ்சதுக்கப்புறமும்…. அவன் மேலே கை வைக்கிற தைரியம் யாருக்கு வந்திச்சு” என பல வித சிந்தனைகளில் இருந்தவனின் செல்போன் அலைப்பில் கலைந்தவன் “ஹலோ கார்முகிலன் ஸ்பீக்கிங்” என்ற கம்பீரமான குரலில் எதிராளியின் உடலில் ஒரு அதிர்வுகள் உண்டாக,
      
                “முகிலா நீ ரோஹித்தை என்கிட்டே ஒப்படைச்சிரு… அதுதான் உனக்கு நல்லது என மிரட்டியவனை கண்டு சிறிதும் அஞ்சாமல், 
             “முடியாதுன்னா என்னடா பண்ணுவ”… என்றவனின் சீற்றம் கண்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும், 
              “முகிலா அவன் உனக்கு மட்டுமில்ல எனக்கும் எதிரிதான்… அதுனால அவனை என்கிட்ட ஒப்படைச்சிரு… உனக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் தர்றேன்”… 
            “ஹ்ஹாஹா… பணமா? என்கிட்டே இல்லாத பணமா? நீ யாருடா எனக்குப் பணம் கொடுக்குறதுக்கு.. உன்கிட்ட இருக்கிற பணத்தைக் கொண்டு போய் குப்பையில போடு …. இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ… என்னைய்யத் தாண்டி அவனைத் தொட்டுப் பாருடா.. தி இஸ் ஏ செலன்ஜ் ஃபார் யூ”… 
              “ஓஹ்ஹோ!! என்னடா ரொம்ப நல்லவன் மாதிரி பேசிட்டு இருக்கே?… ரோஹித்தை அடிச்சி ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணது.. அவன் தங்கச்சி பொண்டாட்டியை கடத்தி உன்னோட கஸ்ட்டடியில வச்சிக்கிறது எல்லாமே நீதான்னு எனக்கு நல்லாவே தெரியும்”… 
             “நான் ஒரு போன் போட்டா போதும்… புகழும், திகழும் ஓடி வந்துருவானுங்க”….. 
            ” இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சிற ஆளு நான் இல்லை… நீ எவனுக்கு வேணும்னாலும் போன் பண்ணிக்கோ… ஒழுங்கா என் வழியில குறுக்க வர்றாம போயிறு… அதுதான் உனக்கு நல்லது” என எச்சரிக்கை விடுத்தவனைக் கண்டு கோபத்திலும் ஆத்திரத்திலும் பற்களைக் கடித்தவாறே அமர்ந்திருந்தான்… ஹரிஹரன்… 
               ரோஹித்தின் முதன்மையான தொழில் எதிரி… நேர்மையாக இருக்கும் ரோஹித்துக்கு அப்படியே நேர்மாறாக… தரமில்லாத பொருட்கள் தயாரித்து அதை அதிக விலையில் விற்று மக்களின் உயிரோடு விளையாடுபவன்… ஆனாலும் ரோஹித்தின் இடத்திற்கு வரமுடியாமல் திண்டாடுபவன்… அவனை கொல்வதற்காக ஆட்களை அனுப்பி வைத்திருந்தான்… 
              முகிலன் ஐந்து நிமிடம் லேட்டாக ரோஹித்தின் குடும்பத்தை கடத்தி வந்திருக்காவிட்டால் ரோஹித்தை உயிரோடு பார்த்திருக்க முடியாது… ரோஹித்தை கொல்வதற்காக பெரிய ரவுடி கேங்கையை இறக்கி வைத்திருந்தான் ஹரிஹரன்… இருவருக்கிடையில் தான் வந்து நின்றான் கார்முகிலன்… 
              “ரோஹித்தின் நிலை என்ன?? கார்த்திக்கின் தாயுமானவனாய் பழி வாங்க வந்தவன்… கிருஷ்ணணாய் மாறி காப்பாற்றுவானா?? 
              “சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்க மருந்து தெளிந்து பார்த்த மிருதுளாவிற்கு மயக்கம் தான் முதலில் எங்கிருக்கிறோம் என்பதே புரியவில்லை”… 
               மயக்க மருந்தின் விளைவால் தலை இரண்டும் பாரமாக இருக்க, கைகளை இழுத்துப் பார்த்தவளுக்கு, கைகள் கட்டப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டாலும்… 
               “யாராவது இருக்கிங்களா?? யாரு என்னைக் கடத்திட்டு வந்தது??? ப்ளீஸ் யாராவது பதில் சொல்லுங்களேன் என கெஞ்சியவளின் குரலுக்கு கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் கழித்தே..  கதவுகள் திறக்க, திரும்பி பார்த்தவளுக்கு அங்கு நின்றிருந்த இருவரையும் யாரென்றே தெரியவில்லை… 
              நீண்ட நேரம் கத்தியதால் தொண்டை வறண்டு வார்த்தைகள் வருவதற்கு தடுமாற, த்தண்ணீ, த்தண்ணீ என ஈனஸ்வரத்தில் முனங்கியவளை கண்டு சிறிதும் மனம் இறங்காமல் கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல நின்று கொண்டிருந்தனர் முகிலனும் ஆல்பர்ட்டும்…. 
              “ந்நீ.. நீங்க யாரு ஏன் இப்படி பண்றீங்க? என்னை அவுத்து விடுங்க நான் போகணும்” என்று சொன்னவளை, 
             “அண்ணா, மாமா, திகழ் எங்கே இருக்கிங்க எல்லாரும் வாங்க.. என இல்லாதவர்களை கத்திக் கத்தி அழைத்துக் கொண்டிருந்தாள்”… 
               அவளின் கத்தலை ரசித்தவாறே அறையை விட்டு வெளியேறினான்… 
             அவனின் அறைக்கு சென்றவன் நேராக அலமாரியில் இருந்து… தன் மனம் கவர்ந்தவளின் தாவணியை வெளியே எடுத்து, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.. 
              “அதுவரை இருந்த அலைச்சல் சோர்வு அனைத்தும் நீங்கியது போல் இருக்க, தாவணியை தன் நாசியில் வைத்து நுகர்ந்து பார்த்தவனுக்கு… தன்னவளின் வாசனை மேலும் மேலும் வேண்டுமென தோன்றியது… தாவணியையே தன்னவளாக நினைத்தவன்.. அதை இறுக்கமாக கட்டிக் கொண்டான்”… 
                முகில் என ஆல்பர்ட் அழைப்பது கேட்டதும்,
                  “ம்ம்.. வாடா மாப்ள” என்றதும் உள்ளே நுழைந்தவனின் கண்ணில் சிக்கியது… முகிலன் தாவணியை அணைத்துக் கொண்ட காட்சியும் தான்.. 
             “ஏன் மாப்ள அந்தப் பொண்ணுங்களுக்கு சாப்பாடு” என கேள்வியாக கேட்டவனைக் கண்டே முறைத்தான், 
           “மிருதுளாவைத் தவிர மீதி ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொடுத்துருங்க”… 
            
           தான் பதில் பேசிய பிறகும் செல்லாமல் தயங்கி நிற்பவனைக் கண்டு, அவன் தோளில் கைப் போட்டு இழுத்தவன் “நான் தப்பே பண்ணாலும் அதை தைரியமா என்கிட்ட சொல்ற உரிமை உனக்கிருக்கு மாப்ள.. ம்ம்.. சொல்லு”
               “நாணயத்துக்கு எப்படி ரெண்டு பக்கம் இருக்கோ? அதே மாதிரி மனிதனோட சூழ்நிலைக்கு ரெண்டு பக்கம் இருக்கும்.. நாம கார்த்திக்குங்குற நாணயத்தோட ஒரு பக்கத்தை பார்த்துட்டோம்… மிருதுளாங்குற நாணயத்தோட ஒரு பக்கத்தை பார்க்காமலே விட்டுட்டோமோன்னு தோணுது”.,. 
              அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிந்தாலும் தன் தம்பியின் நிலைமைக்கு காரணமான அவளின் மேல் தனக்குள்ள பழி உணர்வு அவனை அவ்வாறு செய்ய விடாமல் தடுப்பதற்குள்… ஆல்பர்ட் தடுக்க நினைத்தான்… 
            கடுஞ்சினத்தில் இருந்தாலும் தன் தோழனின் அறிவுரைக்கு செவி சாய்த்தான்.. “சரி.. நான் அந்தப் பொண்ணோட நியாயத்தையும் கேட்குறேன்…. அதை கேட்டதுக்குப்புறம் நான் என்ன முடிவெடுத்தாலும் நீ சம்மதிக்கனும்” என்றவனின் குணமறிந்து தலையாட்டினான்….

Advertisement