Advertisement

 அடையாரில் உள்ள நான்கு மாடி கட்டிடம் கொண்ட  கே.எம் கன்ஸ்ட்ரக்சனில் எம்.டி சேரில் அமர்ந்தவாறே கார்முகிலன் மிக திவீரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்…. அவனின் எண்ணம் முழுவதும் தன்னவளுடன் இருந்த நினைவு மட்டுமே இருந்தது….. அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்க….. தன் நினைவுகளில் இருந்து கலைந்தவன்…..
              எஸ்… கமின்….
              ஆல்பர்ட் உள்ளே வர, “சார், இந்த பைலில் சைன் வேணும்” என்றான்
             ம்ம், என்றவன் ஏதோ ஒரு யோசனையில் சைன் போடுவதற்கு பதிலாக குயிலு என எழுதியிருந்தான்….. அதை கவனித்த ஆல்பர்ட், மாப்ள என தோளில் கை வைத்த பின்னரே தன்னிலையை அடைந்தான்…..
            ஹிம், சொல்லுடா….
            என்னாச்சிடா உனக்கு, சைன் பண்றதுக்கு பதிலா குயிலுன்னு எழுதி வச்சிருக்க….
           அப்பொழுது தான் அந்த பேப்பரை பார்த்தான் குயிலு என எழுதியிந்ததை அந்த பெயருக்கு வலிக்குமோ என்று மிக மெதுவாக தடவி கொடுத்தான்….. அதை “ஹாங்” என வாயை பிளந்து  பார்த்து கொண்டிருந்தான். ஆல்பர்ட்…..
            மாப்ள, யாருடா அந்த குயிலம்மா….. ரொம்ப பழைய பேரா இருக்கு….
          ச்சசே.., பழைய பேர்லாம் இல்லை…. அழகான தமிழ் பேர்…. குயிலினும் நன்மொழியாழ்….. மை ஸ்வீட் ஹார்ட், மை சோல், மை பெட்டர் ஹாப் இப்படி சொல்லிட்டே போகலாம்….. ரொம்ப நாளாச்சி அவளை பார்த்த நம்ம ஊர்தாண்டா.. ரொம்ப அமைதியான பொண்ணு..
              ஹாஹஹ…. என விழுந்து விழுந்து சிரித்தவன் உனக்கு குங்ஃபூ தெரிஞ்ச பொண்ணை தான் பார்க்கனும்னு நான் நினைச்சா நீ என்னடானா…. சாத்வீகமான பொண்ணை தேடியிருக்க….. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் என்றவனின் மொபைல் அடிக்க,  அதை  எடுத்து பேசியவனின் முகம் புன்னகையில் மலர்ந்தது… ம்ம் சரி… என சொல்லி வைத்து விட்டான்….
            யாருடா போன்ல…..
            நம்ம இன்பார்மர் தான் மாப்ள…. ஒரு நல்ல நியூஸ் சொல்லியிருக்கான்டா…. அவனுங்க எல்லாரும் குலுமணாலிக்கு ஹனிமூனுக்கு போறாங்களாம்….
          அதுவரை மென்மையாக இருந்த அவனின் முகம் பார்ப்பதற்கே விகாரமாக மாறியிருந்தது….. யாருக்கோ போன் செய்து தூக்கியிருங்க என சொல்லி வைத்து விட்டான்…..
             யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்த தீக்ஷி, கதவு தட்டும் சத்தத்தில் திரும்பி பார்க்க அங்கே மொழி நின்று கொண்டிருந்தாள்…
           அவளை பார்த்ததும் இங்கே வா என தலையசைக்க, புன்னகை முகமாக வந்தவளிடம், ரோஹி ரூம் கிளின் பண்ணணும் ஹெல்ப் பண்றியா??..
             ம்ம் என தலையாட்டினாள்…..
             அந்த அறையை கிளின் பண்ண கிட்டத்தட்ட ஒரு மணி நேரமானது…. கடைசியாக ஒரு பெட்டியை தூக்கும்போது அட்டை பிய்ந்து அதிலுள்ள புத்தகம் எல்லாம் கீழே விழுந்தது…. அதிலிருந்து விழுந்த ஒரு ஹார்ட்டின் மாடல் டைரி ஒன்று தீக்ஷியின் கவனத்தை ஈர்த்தது….. அதை எடுத்து பார்த்தவளுக்கு முதலில் அதிர்ச்சி, வெட்கம், ஆத்திரம் என பல உணர்வுகளின் வசம் இருந்தவளுக்கு இறுதியில் கோபமே மிஞ்சியிருந்தது…
         அவளின் முகமாற்றத்தை கவனித்து கொண்டிருந்த மொழி, என்னாச்சி என சைகையில் கேட்க….. ஒன்றுமில்லை நீ மீதி வேலையை முடிச்சிரு மொழி எனக்கு தலைவலிக்கிற மாதிரி இருக்கு…. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் என அந்த ரூமை விட்டு வெளியே சென்றாள்….
           இரவில் வீட்டிற்கு வந்த ரோஹித் சோபாவில் அமர்ந்திருந்த மொழியை யோசனையாக பார்த்தான்….
           மொழி….. ஏதோ யோசனையில் இருந்தவளுக்கு அவன் கூப்பிட்டது காதிலேயே விழவில்லை….
            அவளின் முன்பு சொடக்கிட….. அந்த சத்தத்தில் திரும்பி பார்த்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது….
            அப்பொழுது தான் தீக்ஷி ரோஹி ரூமிற்கு வராததால் அவனைத் தேடி ஹாலிற்கு வந்தவள் பார்த்தது அழுது கொண்டிருந்த மொழியை தான்…..
           ஏன் ரோஹி, மொழி அழுதுக்கிட்டு இருக்கா….
           எனக்கும் தெரியலை ஷனா….
          எங்க அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிருச்சாம் அண்ணா ஊர்ல இருந்து என் பிரண்டு போன் பண்ணா…. அவள் பேசியதை கேட்ட இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை…. அவள் பேசுவதை நினைத்து சந்தோஷப்படுவதா? இல்லை இத்தனை நாள் தங்களை ஏமாற்றியுள்ளாள் என கோபப்படுவதா என்று தெரியவில்லை..   இருவருக்கும் அவள் பேசியது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது….
             நான் பேசினது உங்க ரெண்டு பேருக்கும் அதிர்ச்சியாய் இருக்கும்னு எனக்குத்  தெரியும்….. என்னோட சூழ்நிலை என்னை ஊமையா நடிக்க வச்சிருச்சி……  என ஆறு மாசமாக  தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும்  சொல்ல….
             அவளின் கதையை கேட்டு,  அவளை அணைத்துக் கொண்ட தீக்ஷி, நீ பேசினதை கேட்டு எங்களுக்கு சந்தோஷம் தான் வந்திச்சே தவிர உன்னை தப்பானவளா நினைக்கத் தோணலை…. நீ உன் ஊருக்கு கிளம்பு உனக்கு அங்க ஏதாவது பிரச்சினைன்னா எங்களுக்கு போன் பண்ணு…. உனக்கு அண்ணாவா ரோஹியும் அண்ணியா நானும் இருக்கேன்கிறதை மறந்துராத…. என புன்னகைத்தவாறே சொல்ல….
          அவர்களின் கள்ளங் கபடமில்லாத அன்பில் ரொம்ப தாங்க்ஸ் அண்ணி…. என தீக்ஷியை அணைத்தவள் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்…
           ரோஹித்தின் கையில் பென்டிரைவை கொடுத்தவள்.. நான் உங்க ரூம் க்ளீன் பண்ணும்போது டேபிளுக்கு அடியில இருந்து எடுத்தேன்….. நான் போய்ட்டு வாரேன் அண்ணா என்றவள் கண்களில் நீருடன் விடைபெற்றாள்…..
                      ஒரு வழியாக அனைவரும் குலுமணாலிக்கு வந்து சேர்ந்தனர்…. எங்குப் பார்த்தாலும் பனிப்பொழிவும், இயற்கை அன்னை வாரி இறைத்த அழகும் பகலவன் ஓய்வெடுக்க எண்ணி, பரனியெங்கும் குளிர்ச்சி பெற செய்து, குளிர்வீசும் தென்றல் ஊசிமுனை சாரலாய்,   போட்டிருந்த ஜெர்க்கினை தாண்டி உடல் வரை குளிந்தாலும், தங்கள் துணையின் அணைப்பில் உடல் சூடு பெற, காதலை விட தாபமே அனைவரையும் ஆட்சி செய்தது….
            காரில் அனைவரும் அமைதியாக சென்று கொண்டிருக்க, அதை கலைக்க எண்ணிய திகழ், ஏன்டா இப்படி எல்லாரும் சேர்ந்து போறதுக்கு பேரு பிக்னிக்டா…. அதுக்கு ஏன்டா என்னை கூட்டிட்டு வந்திங்க….. ஹிம் வீட்டிலயாவது ஹனிமூன கொண்டாடிருப்பேன்…. என முணுமுணுத்துக் கொண்டே யாழியை பார்த்துக் பெருமூச்சு விட,  புகழும் ரோஹியும் அவனை முறைக்க….
               ஓகே….. பைன், இப்போ நாம எங்க போயிட்டு இருக்கோம்னு தெரிஞ்சிக்கலாமா?
               ஹிடிம்பா தேவி கோயிலுக்கு போறோம்..,.. என்ற மிருதுவை தீயாய் முறைக்க ஆரம்பித்தான்….
              ஹேய், குண்டு பூசணிக்கா கோயிலுக்கு போற அரைலூசு எல்லாம் எதுக்குடி ஹனிமூனுக்கு வர்றிங்க…
              டேய் அண்ணா, முதல்ல ஹோட்டலுக்கு வண்டியை விடு…. நாங்க இறங்கிக்கிறோம்…. நீங்க எவ்ளோ நேரம் ஆனாலும் இருந்து சாமிக்கு, பூஜை, பஜனை எல்லாம் பண்ணிட்டு வாங்கடா…..
            ப்ச், வேந்தா ஹிடிம்பா தேவி யாரு தெரியுமா?….
          யாரு செத்துப் போனா உங்க ஆயாவா?..
          இல்லடா…. பீமனோட ஒய்ஃப் டா….
          அது யாருடி பீமன்…. உங்க அண்ணன் பாடிகார்டு ஏதும் செட் பண்ணியிருக்கானா என்ன?….
             ப்ச் லூசு, பீமன் தெரியாது….. பஞ்ச பாண்டவர்கள்ள பாண்டுவோட இரண்டாவது பையன்டா…. அவங்க காட்டில வனவாசத்துல இருக்கும்போது ஹிடிம்பாதேவி அதாவது அவங்களோட ஒரிஜினல் பேர் இடும்பி….
. அவங்க பீமன் மேலே ஆசைப்பட்டு அழகான பொண்ணா மாறி கல்யாணம் பண்ணிப்பாங்க…. அவங்களுக்கு பிறந்த பையன் தான். கடோத்கஜன்….. மே மாதம் 3 நாள் இந்தக் கோயில்ல திருவிழா நடத்துவாங்களாம்…. என  அந்தக் கோயிலின் வரலாற்றை சொல்ல….
            ஏன்டி நான் என்ன பாண்டவர்களோட வரலாறை பத்தி தெரிஞ்சிக்கவா வந்திருக்கேன் என்பதை சத்தமாக சொல்லியவன்….. (ஆனால் இதே கோயிலில் மண்டியிட்டு தன்னவளை காப்பதற்கு வேண்டுவான் என அவன் அப்போது அறியவில்லை)……
 அவளின் காதோரம் குனிந்து என் வம்சத்தை விருத்தி பண்ணதான்டி வந்திருக்கேன் என அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக சொன்னான்…. அதை கேட்ட யாழியின் முகம் வெட்கத்தில் சிவந்து கன்னங்கள் ரோஸ் நிறமாக மாறியது…. அவளின் வெட்கத்தை பார்த்தவனுக்கு முத்தமிட தோன்றிய ஆவலை அடக்க இயலாது கன்னத்தில் முத்தமிட்டு திரும்பியவன்…. அங்கு தீக்ஷி தங்களை முறைப்பதை பார்த்து……
            என்ன முறைப்பு,  உனக்கு முத்தம்  வேணும்னா அந்தா இருக்கானே உன் புருஷன் அவன் கிட்ட கேளு…..
            ம்ஹூக்கும் கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பான் பாரு…. சரியான ரோபா….. கல்யாணமாகி ரெண்டு வாரம் ஆகப் போகுது ஒரு கிஸ்ஸுக்கு வழியைக் காணும் என புலம்பிக் கொண்டிருந்தாள்….
அவள் சாதாரணமாக பேசினாலும் அதைக் கேட்ட அனைவருக்கும் மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்வு….. ரோஹித் அவளிடம் ஏதோ சொல்வதற்குள் கோயில் வந்து விட
           கோயிலில் சாமி கும்பிட்ட அனைவரின் வேண்டுதலும்….. ரோஹித்தும் தீக்ஷியும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதே….. அவர்களின் வேண்டுதல் பழிக்க அவன் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர்கள் அறியவில்லை….
          ரோஹித் தீக்ஷியை தவிர, மற்ற நால்வரும்… பிரகாரத்தை சுற்றி பார்க்க முன்னே சென்று விட…. அப்பொழுது தான் கண்களை திறந்த தீக்ஷி ரோஹித்தின் முகத்தை பார்த்தாள்…..
 அவனின் முகத்தில் கவலையும் குழப்பமுமே வீற்றிருந்தது…. அதை பார்த்தவளின் மனதில் “ஏன்டா, உன் கஷ்டத்தை கூட என்கிட்ட சொல்ல மாட்டியா? ” என இரண்டு அடி எடுத்து வைத்தவளை ஒரு வலிய கரம் தடுத்து நிறுத்தியது….. தீக்ஷி திரும்பி பார்க்க…..
            ஏன் தீக்ஷி, அப்படி பேசின, என கேட்டவனின் குரலில் இருந்த வலி அவளை ஏதோ செய்தது….
            நான் சாதரணமா தான் பேசினேன் ரோஹி….. உன்னை ஹேர்ட் பண்ணணுங்கிறதுக்காக பேசலை….. என அவளின் குரலில் இருந்த தவிப்பை அறிந்தவன்….. அதை போக்கும் விதமாக அவளின் இடுப்பில் கை வைத்து இழுக்க…..
தீக்ஷி அவனின் கையை மெதுவாக விலக்கி…. எனக்கு பரிதாபத்துல வந்த காதல், முத்தம் எதுவும் வேணா ரோஹி…. என கூறியவள் விறுவிறுவென செல்வதற்காக சென்றவளின் முன்னே சென்று நின்றவன்….. அவளின் கண்களை பார்த்து அவள் முன்னே மண்டியிட்டு “ஐ லவ் யூ ஷனா”…. எனக்கு மத்த பசங்க மாதிரி ரொமான்டிக்கா ரோஸ் கொடுக்கிறது…..
       பிறந்த நாள், கல்யாண நாள் நியாபகம் வச்சிக்கிட்டு சர்ப்ரைஸ் பண்றது இதெல்லாம் தெரியாது ஷனா…. ஏன்னா நான் வளர்ந்த விதம் அப்படி…. எனக்கு அப்பாவோட அறிவுரையோ அம்மாவோட பாசமோ கிடைச்சது கிடையாது ஷனா…..
              உன்னை நான் எப்போ பார்த்தேனோ….. அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் உன்னை மட்டும்  தான்டி இந்த இதயம் நினைக்குது….. உனக்காக மட்டும்தான் இந்த இதயம்  துடிக்குது….. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னல்ல ஒரு முத்தம் கொடுக்க கூட தெரியாதுன்னு…..
          இடம் பொருள் பார்க்காம முத்தம் கொடுக்குறது தான் லவ்வா ஷனா….  என கேட்டவனின் கண்களில் கண்ணீர் வந்து கொண்டேயிருக்க….
          இதுவரை அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவள்… ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்பவன், கண்ணசைவில் அனைவரையும் கட்டியாள்பவன்….
         தன்னிடம் யாசகம் கேட்பது போல் மண்டியிட்டவனை கண்டு வேகமாக அவனின் முன் முன்டியிட்டு அவனை இறுக அணைத்துக் கொண்டாள்…. ஐ லவ் யூ ரோஹி….. ஐ லவ் யூ சோ மச்…. அவளின் கண்களில் இருந்தும் கண்ணீர் வந்து கொண்டேயிருந்தது…. கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை…..
அவனின் முகம் முழுவதும் முத்தமிட்டு கொண்டிருந்தவள்….. டக் என்ற சத்தத்தில் ரோஹித்தின் உடலும் அவனை அணைத்திருந்ததால் அவளின் உடலும் அதிர்ந்தது… ஏதோ வித்தியாசமாக பட கண்களை திறந்து பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்…..
ரோஹி கையை பின்புறமாக  வைத்தபடியே பின்புறமாக சரிந்து தொப்பென்று கீழே விழுந்தான்….. விழுந்தவனின் தலையில் இருந்து ரத்தம் வந்து கொண்டே இருக்க…. கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலையை இழந்தவன் அரை கண்களை திறந்தபடியே ஐ லவ்…. என சொல்வதற்குள் மயக்கமானான்…..
           ரோஹிஹிஹி….. என அந்தக் கோயிலே அதிரும்படி கத்தினாள்……
            அவளின் கதறலை கொஞ்சமும் காதில் வாங்காமல் அவளின் முகத்தில் மயக்க மருந்து கலந்த கர்ச்சீப்பை வைத்து அழுத்தியவன்….. அவள் மயங்கவும் அவளை தோளில் அனாசியமாக தூக்கிப் போட்டு  நடந்து சென்றான்….. மனித உருவில் இருக்கும் அசுரன் கார்முகிலன்…
               அவளின் சத்தத்தை கேட்டு திகழும் புகழும் ஓடிவர, புகழ், தன் நண்பனின் நிலையை கண்டு செய்வதறியாது நின்றான்.
எத்தனையோ கேஸ்களில் இதே விட கொடூரமான கொலையை எல்லாம் கண்டு அஞ்சாதவன்….. சிறு வயதில் தங்கள் கைகளோடு கை கோர்த்த நண்பனின் இரத்தத்தை கண்டதும் அவனை ஏந்திய கைகள் ரெண்டும் வெளிப்படையாக நடுங்கியது……
           தீக்ஷி அருகில் இல்லாததை கவனித்த திகழ், டேய்…. தீக்ஷியை காணும்டா…..
          என்னடா சொல்ற காணுமா? சரி நான் இவனை ஹாஸ்பிடல்ல பர்ஸ்ட் சேர்க்கிறேன்… நீ அவளை தேடு என சொல்லி விட்டு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்…..
அரை மணி நேரமாக தேடியும் தீக்ஷி கிடைக்காததால் சோர்ந்து போய் இருந்த திகழுக்கு அப்பொழுது தான் மிருதுவும், யாழியையும் பற்றிய நினைவே வந்தது,…. இவங்களும் காணாம போயிட்டாங்களா…. என வாய்விட்டே கேட்டவனின் இதயம் பல்மடங்கு வேகமாக துடிக்க….
எங்கே இத்தனை அதிர்ச்சியை தாங்காமல் தன் இதயம் துடிப்பை நிறுத்தி விடுமோ என பயந்து தன் வலது கரத்தால் இதயத்தை அழுத்தமாக பிடித்திருந்தவனின் கண்களில் இருந்துக் கண்ணீர் தானாக வழிந்தது….
              ஹாஸ்பிடலில் ரோஹியை சேர்த்தவன் அங்கிருந்த தரையில் தோய்ந்து போய் அமர்ந்தான்…. கண்களில் கண்ணீர் வழிய தன் நண்பனுக்கு எதுவும் ஆகக்கூடாது என வேண்டியபடி இருந்தான்….
              பெங்களூரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் பெண்கள் மூவரும் மயக்க நிலையில் இருக்க…,. அவர்களின் பக்கத்தில் புலியின் சீற்றத்துடன் அமர்ந்திருந்தான் கார்முகிலன்…..

Advertisement