Advertisement

கதவை திறந்ததும், வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே இருந்தனர்….. ஆனால் சூழ்நிலை வேறு விதமாக அமைந்தது….. 
           ரிஷப்ஸன் நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்கு வர புகழ், குடோனில் தீப்பிடித்ததை அனைவரிடமும் கூறினான்….. அவன் சொல்லி முடிக்கவுமே, ஜானகி அம்மாள் ஆரம்பித்து விட்டார்….. 
            நான் அப்பவே சொன்னேன் இந்த தரித்திரியத்தை வீட்டுக்குள்ளே கொண்டு வர வேண்டாம்னு….. யாராவது கேட்டிங்களா?….. சனியனே ஆழாக்கு சைஸ்ல இருந்துக்கிட்டு இப்படி வந்த உடனே உன் வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டள்ள….. 
பாவம் உன்னை தங்கச்சியா ஏத்துக்கிட்ட பாவத்துக்கு மிருதுவ பிரச்சனையில மாட்டி விட்ட…… இப்போ குடோனை கொளுத்தி விட்டுட்ட…. நீ எல்லாம் இந்த பூமியில பொறக்…. என சொல்ல வந்த வார்த்தை தீக்ஷியின் “பாட்டி” என்ற சத்தத்தில் நின்றது….
           அவர் பேசியதை கேட்ட யாழி சுத்தமாக உடைந்து விட்டாள்…. அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டேயிருந்தது…. அழுது கொண்டே அறையை நோக்கி ஓட.. திகழும் அவள் பின்னாடியே சென்றான்… ‘கிழவி நாளைக்கு நீ திங்கிற சோத்துல விஷத்தை வைக்கிறேனா இல்லையான்னு பாரு” என கோவத்துடன் சொல்லி சென்று விட்டான்…..
            தீக்ஷி, “உன்னை இங்க நாட்டாமை பண்ண யாராவது கூப்பிட்டோமா?….. வந்தோமா? பேரன் பேத்தி கூட சந்தோஷமா இருந்தோமா?…. காசி, ராமேஸ்வரம்னு போனாமான்னு இல்லாம ஒரு சின்ன பொண்ணு மனசு நோகடிக்கிறியே நீயெல்லாம் என்ன பெரிய மனுஷி….. அவளால மட்டும் தான் தரித்திரமா என்னால இல்லையா?…. நான் வந்ததுனால கூட குடோன் தீப்பிடிச்சிருக்கலாமே பாட்டி…… இதுவரை கோபமாக பேசியவள், கலங்கிய குரலுடன் அப்போ நானும் யாழி மாதிரி சாகவா பாட்டி….. என சொல்லி முடிப்பதற்குள் அவளை அறைந்திருந்தான் ரோஹித்…..
           என்னடி பேசுற!…. ஹாங்.. திமிராடி… சாகப்போறியா…. போய் செத்து தொலை… என்னையும் கொன்னுட்டு…. நீயும் செத்து தொலைஞ்சிரு….. என சொல்லியவன் வேகமாக வெளியே செல்ல…. அவனின் பின்னாடியே தீக்ஷி ஓடினாள்…..
           இதுவரை தீக்ஷி பேசியதிலேயே அதிர்ச்சியாக நின்ற ஜானகி அம்மாளிடம் சென்ற கௌரி, அத்தை தீக்ஷி அப்படி பேசினது தப்புதான் அத்தை ப்ளீஸ் எனக்காக அவளை மன்னிச்சிருங்க…… என இரு கரம் கூப்பி கும்பிட, அவளின் கையை கீழே இறக்கியவர் எதுவுமே கூறாமல் தன்னுடைய அறையை நோக்கி சென்றார்……
            என்னங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு…. அத்தை இந்த மாதிரி அமைதியா இருக்கிற ஆள் கிடையாது.,.. ஏதோ தப்பா நடக்கப் போகுதுன்னு மனசு சொல்லுதுங்க….. என அவரின் தோளில் சாய்ந்தார்…. அவரின் தலையை வருடியவாறே, எனக்கும் ஏதோ தப்பா நடக்கப் போகுதுன்னு தோணுதுமா…. எது நடந்தாலும் நம்ம குழந்தைகளுக்கு நம்ம ஆறுதலா இருக்கனும்னு மட்டும் புரியுது….
            வேகமாக சென்றவன் தோட்டத்திலிருந்த பெஞ்சில் அமர்ந்தான்… பின்னாடியே சென்ற தீக்ஷி, அவனின் தோளில கை வைக்க… பட்டென்று அவளது கையை தட்டி விட…. அவனின் அலட்சியம் அவளுக்கு வலித்தது…. ரோஹி ப்ளீஸ்…. நான் அந்த மாதிரி பேசினது தப்புதான்.. சாரி ரோஹி…. இனிமேல் இப்படி பேசமாட்டேன்…. 
        அவள் பேசுவதை கேட்டவன், இதுக்கு மேலே நீ பேசுறதுக்கு என்ன இருக்கு…. அதான் எல்லாம் பேசிட்டியே…. அவனுக்கு கோபம் சிறிதும் குறைவதாக இல்லை….. இனி ஒரு நிமிடம் தான் இங்கே இருந்தால் அவளை அறைந்திடுவோமோ? என்ற பயத்திலேயே விறுவிறுவென வீட்டிற்குள் சென்று விட்டான்….. 
           அவன் எதுவும் பேசாமல் முகத்தில் அடித்தாற் போல் சென்றது கண்ணீரை வரவழைக்க…. மேலும் விம்மி விம்மி அழுதுக் கொண்டிருந்தாள்…..
            திகழ் வேகமாக ரூமுக்கு செல்ல, யாழி அழுதுகொண்டே இருந்தாள்…. யாழி ப்ளீஸ் அழாதே!…. பாட்டியை பத்தி உனக்கு தெரியாதா?…. அவள் மேலும் விம்மிக்கொண்டே, என்னால முடியல வேந்தா.,.. அவங்க என்னை திட்டினது கூட பெருசா தெரியலை…. ஆனால் மிருதுவோட நிலைமைக்கு நான் தான் காரணம்னு சொன்னதை தான் என்னால தாங்கிக்க முடியலை….
             ஏழு வயசுல சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு நான் போனது  தப்புன்னு எனக்கு அப்போ தெரியாது வேந்தா….. அந்த ராஸ்கல் அப்படி பண்ணுவான்னு எனக்கு தெரியாது… 
            தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் மிருதுவ விட்டு போயிருக்கவே மாட்டேன்…. என சொல்லி மேலும் மேலும் அழுதவளை என்ன சொல்லி சமாதானப் படுத்துவதென தெரியாமல்…. அவளின் இதழ்களை சிறைப்பிடித்திருந்தான்….. அவனிடமிருந்து தன்னை வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்தவள்…. வேக வேகமாக மூச்சு வாங்கினாள்….. 
            அழுது அழுது சிவந்திருந்த கண்களில் அழுத்தமாக முத்தமிட….. தனக்கான ஆறுதல் தன் கணவன் தான், என்பதை கண்டு கொண்டவள்…. அவனின் இதழ்களை தன் மென்மையான இதழ்களால் சிறைப்பிடித்திருந்தாள்….  எனக்கு நீ வேணும் வேந்தா…. என சொல்லியவளை அதற்கு மேல் பேசவிடவில்லை…. 
               தன் மனைவியின் சிறு ஏக்கத்தையும் நிராகரிக்க தோன்றாமல்…. அவளின் வருத்தத்திற்கு தன்னையே மருந்தாக்கினான்….. சில நேரம் காமம் இரு உடல்கள் சேர்வது மட்டுமில்லாமல்… தன் இணைக்குத் தேவையான ஆறுதலையும் தர வல்லது…..
             அனைவருக்கும் சோகத்தையும் கண்ணீரையும் கொடுத்த அந்த இரவு சூரியனின் வருகையால் மெல்ல புலர்ந்தது…. அனைவரும் ஹாலில் அமர்நதிருக்கும் போது…. கையில் ஒரு பேக்குடன் நின்றார் ஜானகி அம்மாள்…. 
             ஜானகி அம்மாளை பேக்குடன் பார்த்தவர்கள் அதிர்ந்து விட்டனர்…. 
            அத்தை…..
            அம்மா…. என்னம்மா இதெல்லாம், பேக் (bag) எடுத்துட்டு எங்கம்மா கிளம்புறிங்க?…..
          இல்லை சத்யா, ரொம்ப நாளா எங்கேயாவது போகலாம்னு நினைச்சேன்….. நேத்து நைட் என் பிரண்ட் மேனகா தெரியும்ல… அவ ரிஷிகேஷ், காசி எல்லாம் போறாலாம்….. அதான் என்னையும் கூப்பிட்டா…. நானும் போயிட்டு வரலாம்னு இருக்கேன்பா…. என உணரச்சியே இல்லாத குரலில் கூறினார்…..
          ஏற்கனவே ரோஹி பேசாததால் மிகவும் வருத்தத்தில் இருந்த தீக்ஷி, இதை கேட்டு மேலும் உடைந்தாள்…. நேராக ஜானகியிடம் சென்று, நான் பேசினது தப்புதான் பாட்டி…. என்னை மன்னிச்சிருங்க பாட்டி… ப்ளீஸ் எங்கேயும் போகாதிங்க…. 
             இல்லம்மா உன் மேலே எந்த தப்பும் இல்லை…. நீ பேசினது சரிதான்… நான் யாழியைய பேத்தியா நினைச்சிருக்கனும்.. ஆனால் நான் அவளை ரொம்ப மனசு நோகுற மாதிரி மட்டும் தான் பேசியிருக்கேன்….. 
          ம்ஹூம் விதி யாரை விட்டிச்சி யாழிக்கு நான் எப்பவும் கெட்ட பாட்டியாவே இருந்துட்டேன்…. இனிமேல் நான் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன்….. 
           ஜானகி அம்மாள் நேராக யாழியிடம் சென்று, “நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கிற மாதிரி…. ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் நல்லவன், கெட்டவன்னு ரெண்டு பேர் இருப்பாங்க….. அது சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மாறும்….  எல்லாரும் கிட்டயும் நல்லவளா இருக்க முடிஞ்ச என்னால உன்கிட்ட கெட்டவளா மட்டும் தான் இருக்க முடிஞ்சது….. 
            என்னோட சின்ன வயசுல எனக்கு  அப்பா, அம்மா கிடையாது….. தாத்தா மட்டும் தான் , அவரும்  காலையில் வயலுக்கு போனா, மதியம் தான் வீட்டுக்கு வருவாரு…. வந்தவுடனே சாப்பிட்டுட்டு உடனே அடுத்த வேலையை பார்த்துட்டு போயிருவாரு…. பேசுறதுக்கு கூட யாரும் இருக்க மாட்டாங்க…. ரொம்ப தனிமையா இருக்கும்…. 
               அதை அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்…. அதே மாதிரி ஒரு நரகம் இந்த உலகத்திலேயே கிடையாதுன்னு சொல்லுவேன்….. என விரக்தியாய் புன்னகைத்தவரின் வார்த்தையே சொல்லியது….. அவர் அந்த நரகத்தை அனுபவித்தவர் என்று….
            அப்படி இருந்த வாழ்க்கையில் வசந்தகாலமா வந்தவர் தான் என்னோட திரு….. உங்க தாத்தா….. எங்கே போனாலும் என்னை கூட்டிட்டு தான் போவாரு….. வயலுக்கெல்லாம் கூட்டுப் போனாரு…… நான் கூட கேட்டுருக்கேன். ஏன்? எல்லா இடத்துக்கும் என்னையும்  கூட்டிட்டு போறிங்கன்னு…. தனிமை  ஒரு நரகம் ஜானு….. இனிமேலும் உன்னை அந்த  நரகத்துல விடுறதுக்கு எனக்கு மனசு இல்லை ஜானு…. என்றார்.
            அப்படி எல்லா இடத்துக்கு கூட்டிட்டு போறவரு, சாகும் போதும் என்னை கூட்டிட்டுதான போயிருக்கனும்…. ஏன்டா என்னை விட்டுட்டு போனாரு….. என இதுவரை கலங்காதவர் உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்….. 
           எல்லாரும் அவரை தேற்ற, சிறிது நேரம் கழித்து கண்களை துடைத்தவர்…… அப்போ தான் நீ வீட்டுக்குள்ள வந்த ரெண்டாவது நாள் என்னை விட்டுப் போயிட்டாரு…..  அவரோட இழப்பை என்னால ஏத்துக்கவே முடியலை…. அப்போ சாவுக்கு வந்த யாரோ ஒருத்தர்….. நீ வீட்டுக்குள்ள அடி எடுத்து வைச்ச நேரம் தான் இப்படி ஆகிருச்சி அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாங்க….. 
                என்னமோ அந்த வார்த்தை என் ஆழ்மனசில பதிஞ்சதினால தான்….. உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் வார்த்தையால வதைக்க ஆரம்பிச்சேன்…. நான் பண்ணது தப்புன்னு தெரிஞ்சும் செஞ்சேன்….. என்னை மன்னிச்சிரு யாழி…. 
            நான் போய்ட்டு வாரேன்….. என வாசல் வரை சென்றவரை யாழி ஓடிப் போய் தடுத்தாள்….. திகழுக்கு மட்டும் கோபம் குறைவதாக தெரியவில்லை….. ப்ச் இவ எப்போ தான் திருந்த போறாளோ… என சலிப்புடன் மாடியேறி சென்று விட்டான்….. 
        பாட்டி ப்ளீஸ் நில்லுங்க…. எல்லாரும் இனிமேலாவது சந்தோஷமா இருக்கலாம் பாட்டி…. ப்ளீஸ்
           இல்லம்மா, நான் போய்ட்டு திரும்பி இங்கதான் வருவேன்…. நீ அதுக்குள்ள நல்ல செய்தி சொல்ற வழியை பாரு… என சிரித்தவாறே வெளியே சென்றார்…. அவரின் பிரிவு அனைவருக்கும் வலியை கொடுத்தாலும் அதையும் ஏற்று பழக ஆரம்பித்தனர்….. 
             கிட்டத்தட்ட ஒரு வாரம் எப்படி ஓடியதேன கேட்டால் யாருக்குமே பதில் சொல்ல தெரியாது….. 
             ரோஹித் குடோன் சம்பந்தப்பட்ட வேலையில் பிசியாக, புகழ் பெண்கள் வன்முறை சம்பந்தமான கேஸ்களில் மிகவும் பிசியாக இருந்தான்….. திகழோ கேஸ்களில் மிகவும் பிசியாக இருந்தான்…. 
            அன்று ஞாயிற்றுக்கிழமை அதனால் அனைவரும் ரோஹித்தின் வீட்டிலிருந்தனர்…. தோட்டத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தனர்…. சத்தியவேல் – கௌரி…
            என்னங்க, எனக்கு நம்ம பசங்கள நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு…. எல்லாரும் ஆளுக்கொரு திசைக்கு ஓடிக்கிட்டு இருந்தா, நம்ம எப்போங்க பேரப்பசங்கள பார்க்கிறது…… 
             எனக்கும் அதே கவலை தான் கௌரி என்றவர் வளையல் குலுங்கும் ஓசையில் இருவரும் திரும்பி பார்க்க, அங்கே மொழி நின்றிருந்தாள்….. 
             என்னம்மா ….. என கேட்டவரின் பதிலுக்கு ஒரு பேப்பரை நீட்டினாள். இருவரும் அவளின் செய்கையை புரியாமல் பார்க்க, சத்தியவேல் அதை பிரித்து படித்தார்….. அதை படித்தவரின் முகம் புன்னகையில் மலர்ந்தது….
            “செம ஐடியா மொழி” என்றார்….. 
            என்ன ஐடியாங்க…. என்றவரிடம் அந்த பேப்பரை நீட்டினார்…. 
           எல்லாரையும் ஹனிமூன் அனுப்பி வைங்க என எழுதியிருந்தாள் மொழி….. 
           நல்ல ஐடியாம்மா,  நீ போயி எல்லாரையும் நான் வர சொன்னேன்னு சொல்லு போம்மா….. 
           ம்ம் சரி என தலையாட்டி விட்டு சென்றாள்…. பத்து நிமிடத்தில் அனைவரும் தோட்டத்தில் ஆஜராகியிருந்தனர்….. தோட்டத்தின் புல்தரையில் பெண்கள் மூவரும் ஒரு அணியாகவும், ஆண்கள் மூவரும் ஒரு அணியாகவும் அமர்ந்தனர்…. 
           திகழ், “எதுக்குடா இந்த மாநாடு”…. 
           எனக்குத் தெரியாதுடா….  
          உனக்கு தெரிஞ்சிட்டாலும் இரு நான் நைனா கிட்ட கேட்கிறேன்….. 
           நைனா… நைனா… என்ற திகழின் மண்டையில் ஓங்கி கொட்டினார்…. கௌரி.. 
          என்ன பாஷைடா இது…. 
          மை டியர் மம்மி, உனக்கு தெலுங்கு தெரியலன்னா கம்முன்னு இரு…. நைனா ன்னா தெலுங்குல அப்பான்னு அர்த்தம்…. அது புரியாம பச்சை பிள்ளை மண்டையில கொட்டுற ஸ்டுப்பிட் மம்மி…. 
            யாருடா ஸ்டுப்பிட், மூளை இல்லாதவனே….. 
           ஏன் உனக்கு தான் நிறைய இருக்குல்ல….. எனக்கு கொஞ்சம் கடன் கொடேன்….. 
           தீக்ஷி, டேய் அண்ணா உனக்கு மூளை தானே வேணும்…… நான் வேணும்னா கறிக்கடைக்கு போய் வாங்கிட்டு வரவா?….. 
          வாங்குறதும் வாங்குற எக்ஸ்ட்ரா இன்னொன்னு சேர்த்து வாங்கிட்டு வா…. உனக்கும் யூஸ் ஆகும்…. 
          யாருக்குடா மூளை இல்லை… டேய் கரண்ட் கம்பம் உன்னைய… என அடிப்பதற்கு துரத்திக்கொண்டு ஓடினாள்…. அவளின் கையில் அகப்படாமல் அவனும் ஓட இருவரின் குறும்பையும் கண்ட அனைவரும் சிரிக்க…. தீடிரென்று புல்லாங்குழலில் வரும் மெல்லிசையே போல் அனைவரின் செவிகளையும் நிரப்பியது மொழியின் சிறு புன்னகை…. அனைவரும் அவளையே பார்க்க….. 
            அனைவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்தவள்…. கீழே குனிந்து கொண்டாள்…… 
             ரோஹி, மொழி என கூப்பிட…. 
             ம்ம் என.தலையை நிமிர்த்தினாள்…
              இங்கே வா…. வந்து உட்காரு என்றான்…..  
            ம்ம் என தலையாட்டியபடியே தீக்ஷியின் அருகில் அமர்ந்தாள்….
           ப்ச், கௌரி நாம எதுக்கு கூப்பிட்டோம்….. அதை விட்டுட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்க….. சாரிங்க…. 
           உங்க எல்லாரையும்  ஹனிமூனுக்கு அனுப்பி வைக்கலாம்னு முடிவு எடுத்துருக்கோம்….. என சொல்லி முடிப்பதற்குள்…… 
         திகழ், “ஹைய்யோ ஜாலி ஜாலி செல்லக்குட்டி வா போகலாம்”… என சந்தோஷத்தில் குதித்துக் கொண்டே யாழியின் கையை பிடித்து இழுக்க… தீக்ஷி யாழியின் மறு கையை பிடித்து இழுத்து வைத்துக் கொண்டாள்…..
           ஹேய் எருமை, என் பொண்டாட்டி கையை விடுறி….. 
           விடமாட்டேன் போடா…. என வம்பிழுக்க…. 
           
             உனக்கு கையை பிடிச்சி இழுக்கனும்னா, உன் புருஷன் அந்தா குத்துக்கல்லு மாதிரி இருக்கான் போய் புடிச்சிக்கோ….. ப்ச் விடுறி….
             டேய் என அவனின் முதுகில் ரோஹித் அடிக்க…. ஆ… அம்மா என அலறியபடி உட்கார்ந்தான்….
           டேய் சின்ன பசங்க மாதிரி சேட்டை பண்ணாமல் எல்லாருக்கும் குலுமணாலிக்கு டிக்கெட் போட சொல்லிருக்கேன்….. எல்லாரும் ஒரு வாரத்திற்கு அங்கே தான் நோ மோர் ஆர்கியூமென்ட்ஸ் என சொல்லி சென்று விட்டார்…. 
           ரோஹித் அமைதியாக இருப்பதை கவனித்த, தீக்ஷி புகழுக்கு கண்ணை காட்ட….. அவன் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லியவன்… 
            என்ன ரோஹித்.அமைதியா இருக்க…. 
            இல்லை மச்சி, ” இப்போ இந்த ஹனிமூன் தேவையா?…. 
            எல்லாருக்கும் வேலை இருக்கத்தான் செய்யும் மச்சி, அந்தந்த வயசுல பண்ண வேண்டிய என்ஜாய்மென்ட்டும் அவசியம் மச்சி…. நீ போய் ஹனிமூனுக்கு தேவையானதை ரெடி பண்ணி வை…. 
              ம்ம் சரிடா….. 
             அனைவரின் முகத்தில் இருந்த புன்னகை மொழிக்கு சந்தோஷமாக இருந்தது…… ஆனால் அவள் அறியாத ஒன்று தன்னவன் பழிவாங்கும் படலத்தில் தானே பாதை அமைத்துக் கொடுத்ததை……

Advertisement