Advertisement

அனைவரின் எதிர்பார்ப்புக்குட்பட்ட இரண்டு ஜோடியையும் தாங்கிக் கொண்டு வந்து நின்றது….. கோல்டன் கலர் ரோல்ஸ் ராய்ஸ்…… அந்த காரில் இருந்து முதலில் டிரைவர் ஷீட், கதவை திறந்து சான்டில் நிற ஷெர்வானியில் ரோஹித் இறங்கினான்….. அவனின் இடதுபுற கதவை திறந்து திகழும் அதே கலர் ஷெர்வானியில் இறங்க, 
            அப்பொழுது மண்டபத்தில் இருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, காரின் மீது மட்டும் ஒளிக்கீற்று வீச, 
யெஹ் பாக்கு வெத்தல 
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
என பாட்டு பாட,  மற்றொரு புறத்தில் இருந்து மெரூன் கலர் லெஹங்காவில் யாழியும், தீக்ஷியும் கதவை திறக்க, அவர்களின் முன் கை நீட்டியபடி இளம் புன்னகையுடன் திகழும் ரோஹித்தும் நிற்க….. அவர்களின் செய்கையில் வெட்கமும் காதலும் போட்டி போட அவர்களின் கையோடு தங்கள் கையை வைத்து கம்பீரமாக இறங்கினர்……  
யெஹ் பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
           இரு  ஜோடிகளும் தங்கள் இணையுடன் கைகோர்த்தபடி நடக்க, அவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்த அனைவரும்…… தேவலோக ரதியும் மன்மதனுமோ என நினைக்கும் அளவிற்கு இருந்தனர்……  
கண்டத பேசி 
டைம் வேஸ்ட் பண்ணாத
பையன் தங்கோம்
மிஸ்சு பண்ணாத 
சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய் 
அள்ளி அள்ளி குடுக்கும் 
தாராள பிரபு டோய் 
சார்ரூ சாரு யாருன்னா 
தாராள பிரபு டோய் 
அள்ளி அள்ளி குடுக்கும் 
தாராள பிரபு டோய்
யெஹ் பாக்கு வெத்தல 
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி 
யெஹ் பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி 
பீ பீ…… 
யெஹ் வந்தனா 
ஒன்ன இழுத்திடவா சொல்லு 
இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம்
யார் வெயிட்ட்டுன்னு 
டெஸ்ட் வச்சிடலாம் நில்லு
கை புடிச்சிதான் 
கண்டுபிடுச்சிடலாம் 
நீ ஒன்னு நான் ரெண்டு
நீ மூணு நான் நாலு
இந்த டீல்லு இருந்தாலே 
லைப் கூலோ கூலு
மனசெல்லாம் லவ்வோட 
கல்யாணம் செஞ்சாலே 
வாழ் நாலு முழுசாவே 
ஒன்லி ஹேப்பி பீல்லு 
ஆட்டம் போட 
நேரம் வந்தாச்சி 
அன்ப கொடுக்க 
ஆளு கெடச்சாச்சி
சார்ரூ சாரு யாருன்னா 
தாராள பிரபு டோய் 
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய் 
சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய் 
அள்ளி அள்ளி குடுக்கும் 
தாராள பிரபு டோய் 
யெஹ் பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி 
யெஹ் பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
             ஈவென்டை அரெஞ்ச்மெண்ட் செய்தவர்களே டான்ஸ் ஆடுவதற்கும் ஆட்களை வைத்து சிறப்பாக மணமேடை வரை  இரண்டு ஜோடியையும் கூட்டிச் சென்றனர்….. 
              இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஜானகி அம்மாள், சத்தியவேல், கௌரி என மூவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்தது…..   
     
           ரோஹித் ஒற்றை ஆளாய் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருந்ததால்,  மினிஸ்டர் முதல் பெரிய பெரிய அதிகாரிகள் வரை அனைவரும் வந்திருந்தனர்……   வந்திருந்த அனைவரையும் கவனிப்பதற்கு தனியாக செக்யூரிட்டி ரோஹித் நியமித்திருந்தான்…… 
        அனைவரும் ரோஹித் திருமணம்​ செய்ததை ஆச்சரியமாக பார்த்தனர்…. அவர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்….. அவன் நினைத்திருந்தால் அந்த ஃபேக் நியூஸை ஒன்றும் இல்லாமல் செய்திருக்க முடியும்….. ஆனால் அவன் திருமணம் செய்தது எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியது….
          வரவேற்பில் நின்று கொண்டிருந்த மொழிக்கு இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பிக்க, திரும்பி பார்த்தாள்….. அவன் வந்து கொண்டிருந்தான்….. அவனை பார்த்தவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…… 
              மூளையோ ஓடு ஓடு என கூச்சலிட, மனமோ “அவன் உன்னவன்” என முரசு கொட்டியது…… அவனிடமிருந்து தப்புவதற்காக மண்டபத்தின் உள்ளே ஓடியவள் புகழின் மேல் மோதி நின்றாள்.. .” ஹேய் என்னாச்சி?.. அந்த ஏசி மண்டபத்திலும் அவளுக்கு அதிகமாக வியர்த்து ஒழுகியது….. ஆர் யூ ஆல்ரைட், உனக்கு உடம்புக்கு ஏதும் சரியில்லையா?…..  இப்படி வியர்த்திருக்கு……. ம்ம் என மேலும் கீழும் தலையாட்டினாள்….. போய் அந்த ரூம்ல ரெஸ்ட் எடு என்றான்… தலையாட்டி விட்டு ரூமினுள் சென்று ஒளிந்து கொண்டாள்… 
             அப்பொழுது மண்டபத்தினுள் நுழைந்த கார்முகிலன், ஆல்பர்ட்டிடம் முடிச்சிட்டியா? என கேட்க….. 
            முடிச்சிட்டேன் மாப்ள இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசல்ட் தெரிஞ்சிரும்….. இருவரும் பேசிக்கொண்டே மேடையில் ஏற, அவர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு இறங்கவும், ரோஹித் போன் அடிக்கவும் சரியாக இருந்தது….. அதை எடுத்து பேசியவனின் முகம் கலவரமாக…….
          “வாட்”……
           …….
          “எப்போ”…… 
          “ஷிட், இதோ இப்போவே வர்றேன்”….. என கழுத்தில் போட்டிருந்த மாலையை கழற்ற போக……. அதற்குள் புகழ் “என்ன பிரச்சினை மச்சி??
           மால் (Mall) குடோன் தீப்பிடிச்சிடுச்சாம்… பொருள் எல்லாமே எரிஞ்சிடுச்சி….. நான் போய் என்னன்னு பார்த்துட்டு வர்றேன்…….. 
           டேய்!.. விளையாடுறியா? வந்திருக்கிறவங்க எல்லாரும் உன்னை தான் கவனிச்சிட்டு இருக்காங்க…… இப்ப நீ மேடையை விட்டு இறங்கின பிரஸ்காரன் ஒவ்வொருத்தனும் ஒவ்வொன்னு எழுத ஆரம்பிச்சிருவானுங்க….. என சொல்லி முடிப்பதற்குள் தீக்ஷி மயங்கி விழுந்தாள்….. 
           அவள் மயங்கியதும் அந்த இடமே பரபரப்பாக, எல்லாரும் என்னவென்று கேட்பதற்குள், கௌரி தான் மதியம் சரியா சாப்பிடலை…. அதான் மயக்கம் போட்டுட்டா என்றார்…. ரோஹித் அவளை தூக்கி மண்டபத்தின் மேலே இருந்த ரூமிற்கு தூக்கிச் சென்றான்….. புகழ் அங்கிருந்த அனைவரையும் சமாளிக்க, 
           ஹேய் ஷனா எந்திரிடி….. என அவள் இரு கன்னத்திலும் மாறி மாறி அடிக்க……
             ப்ச்….. என அவனின் கையை தட்டிவிட்டு எழுந்தவள்…… நீ அடிச்சு அடிச்சே என கன்னம் ரெண்டையும் பண்ணு மாதிரி வீங்க வைச்சிருவ போல…… உனக்கு போய் ஹெல்ப் பண்ண மயக்கம் போடுற மாதிரி நடிச்சேன் பாரு எனக்கு இந்த அடி தேவைதான்….. ஆளைப் பாரு….. 
          நடிச்சியா?…. அவன் அவன் என்ன ஷிட்டியூவேசன்ல இருக்கானு தெரியுமாடி உனக்கு? நடிச்சிருக்க லூசாடி நீ?….. 
        ஹேய், மக்கு புருஷா என ஹஸ்கி வாய்ஸில் கூப்பிட….. அந்த நேரத்திலும் அவளின் அழைப்பு அவனை மதிமயக்கியது….. உனக்காக தான் இந்த டிராமா…. நீ இப்படி பேக் கேட் (back gate) வழியா போயி, என்னாச்சின்னு பார்த்துட்டு வந்துரு,…… அவள் தனக்காக யோசித்து நாடகமாடியதை நினைத்தவனின் இதழ்களில்  சிறு புன்னகை  அரும்பியது …..
             ம்ம் என கிளம்பியவனின் கை பிடித்தவள்….. அவனை குனிய வைத்து அவன் நெற்றியில் ஆதூரமாக முத்தமிட்டாள்…… அவளின் முத்தம் அவனின் டென்ஷனை குறைத்தது……. அப்பொழுது ஜானகி அம்மாளும், கௌரியும் வர ரெண்டு பேரும் பத்திரமா பார்த்துக்கோங்க…… என சொல்லி விட்டு கிளம்பினான்….
               அதுவரை அங்கு நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கார்முகிலன்,….. மண்டபத்தை விட்டு வெளியே வர, அந்த வரவேற்பில் பக்கத்திலிருந்த அறையை தாண்டும் போது இதயத்தில் ஏதோ ஒரு வலி வர…… அந்த வலியின் தாக்கத்தால் வேகமான நடை தடைபெற்றது…. 
               யாரோ தன்னை உற்று பார்ப்பது  போல் தோன்ற, தலையை அங்கும் இங்கும் திருப்பி பார்க்க, யாருமே கண்ணில் படவில்லை….. விறுவிறுவென மண்டபத்தை விட்டு வெளியேறியதும் 
              தன்னுடைய பி.எம்.டபிள்யூ காரில் டிரைவர் ஷீட்டில அமர்ந்து காரை மண்டபத்தின் பின்பக்கமாக சென்று காரை நிறுத்தியவன்….. காரில் இருந்த லைட் அனைத்தையும் ஆஃப் பண்ணினான்….. ஆல்பர்ட் அவனை கேள்வியாக பார்க்க, வெயிட் அன்ட் வாட்ச் மாப்ள, என்றான்……  
           ஒரு ஐந்து நிமிடம் கழித்து, ரோஹித் வெளியே வர, அவன் முகத்தில் இருந்த புன்னகையை கண்ட கார்முகிலனுக்கு, தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஸ்டேரிங்கில் ஓங்கி குத்தினான்….. 
          அவனின் கோபத்தை கண்ட ஆல்பர்ட் அவன் தோளில் கை வைத்து, “கன்ட்ரோல் யுவர்செல்ஃப் மாப்ள”…… 
            ஹவ் இஸ் இட் பாசிபிள், எப்படி எப்படி அவன் சிரிக்கிறான்?.. நோ…. அழ வைக்கிறேன்டா….. அவன் கண்ணுல இருந்து கண்ணீர் வரவைக்கிறேன்….. என காரை ஸ்டார்ட் பண்ணியவனின் வேகத்தில் கார் பறந்தது…… 
            கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அதே வேகத்தில் சென்று கொண்டிருந்தவனை அமைதிப்படுத்தும் பொருட்டு….. “பசிக்குது மாப்ள” என ஆல்பர்ட் சொல்லிய ஐந்து நிமிடத்திற்குள் ஒரு ஸ்டார் ஹோட்டலில் வண்டியை நிப்பாட்டியிருந்தான்….. போய் சாப்பிட்டு வா என்றான்…. நீயும் சாப்பிட வாடா…..
          ப்ச் எனக்கு பசிக்கல நீ சாப்பிடு….. என சொல்லியவனின் செவியில் “யார் மேலேயோ உள்ள கோபத்தை உங்க வயிறுக்கிட்ட ஏன் காமிக்கிறீங்க முகில்”  ….  என அவனவள் சொல்லிய வார்த்தையே கேட்க….. கண்களை மூடி திறந்தவன்….. ம்ம் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்….  என இருவரும் சாப்பிட செல்ல…. 
           ஆல்பர்ட்டும், கார்முகிலனும் ஒன்றாக ஒரே யூனிவர்சிட்டியில் மாஸ்டர் டிகிரி வரை ஒன்றாக படித்தவர்கள்….. கார்முகிலன் மிரட்டும் தோணியில் இருப்பவன்….. ஆல்பர்ட் சாக்லேட் பாய் தோற்றத்தில் கண்ணில் கண்ணாடி போட்டிருப்பான்….. கார்முகிலன் பரம்பரை பணக்காரன்…. ஆல்பர்ட் மிடில் கிளாஸ் … ஆனால் படிப்பில் இருவரும் கெட்டிக்காரர்கள்….. ஆல்பர்ட் வீட்டிற்கு ஒற்றை பிள்ளை என்பதால் கார்முகிலனின் பெரிய குடும்பத்தை எப்போதுமே பிடிக்கும்…. பாரபட்சமின்றி பழகும் கார்முகிலனின் குணமும் பிடித்து போக 7 வருடங்களாய் அவர்களின் நட்பு சீராக சென்றது….. 
           சாப்பிட்டு முடித்து இருவரும் ஹோட்டலுக்குள் வர, அங்கே குளித்து முடித்து இடுப்பில் வெறும் துண்டுடன், பெட்டில் புரண்டு புரண்டு படுத்தவனின் நினைவு முழுவதும் அவனவள் தான்…. கொஞ்சமும் தூக்கம் வருவதாக தெரியவில்லை…..
            தன் பெட்டியிலிருந்த தாவணியை வெளியே எடுத்து, முகர்ந்து பார்த்தான்….. தாவணியில் அவளின் வாசம் வர, அதை அப்படியே கட்டிப்பிடித்து பெட்டில் படுக்க, சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டான்….. 
            மண்டபத்தில் இருந்து வெளியேறிய ரோஹித், தன் லம்போகினியை எடுத்துக் கொண்டு அதிவேகமாக சென்றான்….. அவனுடைய பி.ஏ விற்கு போன் செய்து, பரத் அங்கே நிலவரம் எப்படி இருக்கு?…..
             சார் தீ எல்லாம் அணைச்சிட்டோம் சார்…. ஏதோ கெமிக்கல்ஸ் கலந்ததுனால தான் தீ பிடிச்சதாம்… லேப்ல இருந்த ஆட்கள் டெஸ்ட்டு பண்ணிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்காங்க சார்……
              ஓகே பரத்…. சி.சி.டிவி புட்டேஜ்ல ஏதாவது கண்டுபிடிக்க முடியுமான்னு செக் பண்ணி பாருங்க…..
            அப்புறம் சார், அவங்களோட எண்ணம் குடோன அழிக்கிறது மட்டும் தான் சார்…..  
             அவனின் பேச்சில் குழம்பியவன், இப்போ நீ என்னதான் சொல்ல வர்ற….. சொல்றதை தெளிவா சொல்லு….. 
           சார் அவன் நினைச்சிருந்தா, நம்ம செக்யூரிட்டி ரெண்டு பேரையும் குடோன்லேயை குளோஸ் பண்ணிருக்கலாம் சார்….. கரெக்டா​ குடோன்ல இருக்கிற செக்யூரிட்டியோட கவனத்தை திருப்பி குடோன்ல தீப்பிடிக்க வைச்சிருக்காங்க சார்…. 
            சோ, அவங்க எண்ணம் என்னோட தொழிலை அழிக்கிறது மட்டும் தான் சொல்ல வர்ற…. ம்ம் என பேசிக்கொண்டே வண்டியை குடோனில் நிப்பாட்டியவன்.,… குடோனை சென்று பார்த்தான், கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் பொருட்கள் நாசமாகி இருந்தது…. பரத் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணிருங்க என வீட்டை நோக்கி சென்றான்…..   
             வீட்டின் கதவை திறந்ததும் மொத்த குடும்பமும் நின்று கொண்டிருந்தது….

Advertisement