Advertisement

புகழ் வேந்தன் – மிருதுளா
திகழ் வேந்தன் – இன்னிசையாழி
ஹீரோ : புகழ் வேந்தன், திகழ் வேந்தன், ரோஹித்
ஹீரோயின் : மிருதுளா, இன்னிசையாழி, தீக்ஷனா
       “ஹேய்! என்னடி இன்னும் ரெடியாகாம இருக்க”…..
        “இப்ப ரெடியாகிட்டு என்ன பண்ண சொல்ற”…
       “ஹேய்! லூசாடி நீ இன்னும் அரைமணி நேரத்துல உனக்கு கல்யாணம்டி! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுற”…
       “ஏன் மிருது! கல்யாணத்துக்கு பத்து பொருத்தம் மட்டும் போதுமா? மனப் பொருத்தம் தேவை இல்லையா?…
        “ப்ம்ச்… ஹேய்! யாழிமா ஊர்ல நடக்கிற முக்கால்வாசி கல்யாணத்துல மனப் பொருத்தம்னு ஒன்னு இல்லவே இல்லைடி…. என்றாள் யாழியின் உயிர் தோழியும் மாப்பிள்ளையின் அண்ணியுமான மிருதுளா 
         “ஆனா எனக்கு நிறைய கனவு இருந்திச்சு” மிருது. மனசுக்குப் பிடிச்ச ஒருத்தன காதலிக்கனும்.கல்யாணம் பண்ணிக்கனும். நிம்மதியா, சந்தோஷமா வாழனும்னு நினைச்சேன். நான் நினைச்சதுல ஒன்னு கூட நிறைவேற போறதில்லை. ஒரு ரவுடி கூட கல்யாணம்னு நினைச்சாலே எரிச்சலா இருக்கு.. (என்னடா நம்ம ஹீரோ ரவுடின்னு நினைச்சிங்களா அதான் இல்ல நம்ம ஹீரோ அநியாயத்தக் கண்டு பொங்குறததான் மேடம் ரவுடின்னு சொல்றாங்க) 
           “ப்ச்… யாழிமா நீ மனச போட்டு குழப்பிக்காத நீ கண்டிப்பா நிம்மதியா, சந்தோஷமா வாழ்வடி. நாங்க எல்லாரும் உனக்கு கெட்டது நினைப்போமா ?….
         நான் தான் சொல்றேன்ல கேளுமா நீ. நீ என் தங்கம்ல… புஜ்ஜிமால….. என் செல்லக்குட்டியில…… இப்ப கடகடன்னு ரெடியாகுவிங்களாம்… சமத்துப்பொண்ணா மணமேடையில உக்காருவிங்களாம்… கல்யாணம் பண்ணிப்பிங்களாம்.. என கொஞ்சியவாறே இச்ச்…. இச்ச் என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். 
          
          அதை வாசலில் நின்ற இரு ஜோடி கண்கள் பொறாமையுடன் பார்த்ததை அவர்கள் அறியவில்லை….
          அந்த இரு ஜோடி கண்களும் திரும்பி அவர்கள் அறைக்கு சென்று,
          டேய்!!!! அண்ணா…..
          சொல்லுடா….
          “உன் பொண்டாட்டி குண்டு பூசணிக்காய்க்கு எவ்ளோ திமிரு இருந்தா” என் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுப்பா….
(இவங்க யாருன்னு யோசிக்கிறீங்களா?? எல்லாம் நம்ம ஹீரோஸ் தான் புகழ் வேந்தன், திகழ் வேந்தன். புகழும், திகழும் ட்வின் பிரதர்ஸ். புகழ் ஐ.பி.எஸ் பாஸாகி ஐ.பி.எஸ் ஆபிஸராக ஆக உள்ளான். திகழ் லா முடித்து லாயராக உள்ளான் இருவரும் தங்கள் தொழிலில் நேர்மையாக நடந்து வருகின்றனர்)…..
        நீ ஏன்டா என் வயித்தெரிச்சல வாங்கிக்​ கொட்டிக்கிற…. நான் ஒரு மாசமா அவ பின்னாடி நாயா பேயா அலையுறேன்… ஒரு முத்தத்துக்கு வழியில்லை… ஆனா அங்க பாருடா ஒரு குள்ள கத்தரிக்காய்க்கு முத்தத்த வாரி வழங்குறா (அந்த குண்டு பூசணிக்காய், குள்ள கத்தரிக்காய் வேற யாரும் இல்லைங்க நம்ம ஹீரோயின் மிருது, யாழி தான்)
          “டேய் என் ஆள குள்ள கத்தரிக்காய்னு சொன்ன பல்ல பேத்துறருவேன்டா”…
         “பேப்படா….. பேப்ப போடா டேய்!! குள்ள கத்தரிக்காயக்காய… குள்ள கத்தரிக்காய்னு தான் சொல்லணும்”…. போடா… போய் மணமேடையில உட்காருர வழிய பாரு இம்சை புடிச்சவனே…
          “மண்டபத்தில் ஐயர் உட்கார்ந்து மந்திரங்கள் சொல்லிக்கொண்டே மாப்பிள்ளைய கூப்பிடுங்கோ”… என்று சொல்ல…      
          அறையில் ரெடியாகி இருந்த திகழ், புகழிடம் “மாப்பிள்ளையை கூப்பிடுறாங்க வாடா” போகலாம்…..
          “அடச்சீ!…. அலையாத ஆளப்பாரு உன்னை எல்லாம் ஊருக்குள்ள பெரிய லாயர்னு சொல்லிட்டு திரியுரானுங்க”…..
           “ஏன்டா பெரிய லாயருக்கும், கல்யாணம் பண்றதுக்கும் என்னடா சம்பந்தம்”…..
                 
          “எனக்கு யாழியை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்றேன்”….. உனக்கு என்னடா “நீயும் தான லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்ட”… 
         “என் கல்யாணம் எப்படி நடந்திச்சின்னு உனக்கு தெரியாதாடா”….. மிருதுவோட மனசுல அவ பட்ட காயம் இன்னும் அப்படியே தான்டா இருக்கு….. அதான் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகியும் எங்க வாழ்க்கைய நாங்க தொடங்கவே இல்லை…. 
           புகழின் காதலை பற்றி நன்கு அறிந்தவனாய் “உன் கூட பொறந்ததுக்கு நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன்டா”…. ஐ லவ் யூ…. ஐ லவ் யூ சோ மச்….. என கன்னத்தில் முத்தமிட்டு திரும்பியவன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்…..
            “அங்கே மிருதுளா இடுப்பில் கை வைத்து இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள்”…
  
          “ஹி..ஹி என இருவரும் அசடு வழிய”…
           “அங்கே ஐயர் மாப்பிள்ளை எங்க!! மாப்பிள்ளை எங்கேனு….. காய்கறி வியாபாரி மாதிரி கத்திக்கிட்டு கிடக்குறாரு நீங்க ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு விளையாடிட்டு இருக்கிங்க”…..
           “அதற்குள் மிருதுவின் அண்ணன் ரோஹித் திகழை மணமேடைக்கு கூட்டி சென்றான்”….
           “அத்தை உங்க கிட்ட பொண்ணுக்கு போட வேண்டிய மெட்டி கொடுத்தாங்களாமே”… எங்க இருக்கு….
          புகழ் அவளை பார்த்தான். “கிளிப்பச்சை நிற பட்டில் பிங்க் நிற எம்ப்ராய்டரி ஒர்க் செய்த பிளவுஸில் கண்களுக்கு மை தீட்டி, மூக்கின்​ மேல் சின்னதாக வைர மூக்குத்தி மின்ன, உதட்டில் பிங்க் நிற லிப்ஸ்டிக் பூசி, நெற்றியில் குங்குமம், தலை நிறைய மல்லிகை பூ வைத்து, உதட்டில் புன்னகையுடன் நின்றிருந்தவளை” பார்க்க பார்க்க தாபமும் காதலும் ஒரு சேர தோன்றியது…..
         
          அவளைப் பார்த்து கொண்டே “தன் சட்டைப் பையில் இருந்த சிறு பாக்ஸை எடுத்து அவளிடம் நீட்டினான்”….
           பாக்ஸை வாங்கி கொண்டு திரும்பினவளின் கரத்தை பிடித்து சுண்டி இழுக்க மிருது அவனின் நெஞ்சில் பூமாலையாக வந்து விழுந்தாள்…. அவளை இறுக அணைத்தவாறே…..
            பட்டுக்குட்டி…..
            ம்ம்ம்……
            அழகா இருக்கடி…..
            ம்ம்ம்…..
           பட்டு….
           ம்ம்ம்……
           ஓப்பன் யுவர் ஐஸ்……
           “ம்ஹூம் என இடது வலதுமாக தலையாட்டினாள்”….
            அவளின் இமைகளின் மேல் மென்மையாக முத்தமிட்டான்….
            கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்….
             மூக்கின் நுனியில் முத்தமிட்டான்….
             அப்பொழுதும் கண்களை திறக்கவேயில்லை….
             அவளின் சிவந்த கீழ் அதரங்களை தன் அதரங்களால் அழுத்தமாக கவ்வி கொண்டான்… படாரென்று கண்களை திறந்து அவனை பார்த்தாள்… அவன் விழிகளில் தெரிந்த காதலில் அவள் கண் இமைகள் தானாக மூடிக் கொண்டது…. தன் காதல் மனைவியின் முதல் முத்தத்திலும்  அவள் இதழ் தந்த சுவையிலும் தன்னை மறந்து நின்றான்…

Advertisement