Advertisement

 “புகழ் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்… என்னடா மணி பத்து ஆகுது இன்னும் நம்ம ஆள காணும் ஒருவேளை பர்ஸ்ட் நைட்டுனு தெரிஞ்சு பயத்துல எங்கேயாவது பதுங்கிட்டாளா…. சரி நாமளே போய் பார்ப்போம்…. என வாசல் வரை சென்றவன் கதவு திறந்து மிருது உள்ளே வரவும் சரியாக இருந்தது…..
           இவ்ளோ நேரம் எங்க போன…..
           யாழியை அவ ரூம்ல விட்டுட்டு அத்தைக்கு தைலம் தேச்சு விட்டுட்டு வாரேன்…… தன் அணிந்திருந்த நகைகளை கழட்டி டிரெஸ்ஸிங் டேபிள் மீது வைத்து விட்டு திரும்ப புகழ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்….
          என்னாச்சு இப்படி பார்த்துட்டு இருக்கிங்க … .
         நீ ரொம்ப அழகா இருக்கடி…..
         ப்ச்…. அதான் காலையில சொன்னீங்களே…..
          அது ஒருவிதமான அழகு… இது அபரீதமான அழகு…. பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு…. நீ பாட்டியானதுக்கு அப்புறமும் பார்க்க தூண்டுற அழகு…
          ஏதாவது டி.ஆர் படம் பார்த்திங்களா….
          நான் எவ்ளோ அழகா ரொமன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் நீ என்னடான்னா டி.ஆர் படம் பார்த்திங்களா எம்.ஜி.ஆர் படம் பார்த்திங்களான்னா கேக்குற…..
          ஏது… இதுதான் உங்க ஊர்ல ரொமன்ஸா…. உவ்வே….. என உதடு சுளித்தாள்…..
         அவனுடன் பேசிக்கொண்டு திரும்பியவள் கட்டிலை பார்த்து அதிர்ந்து நின்றாள்….
         பல வண்ண மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூக்களின் நறுமணம் நாசிக்குள் சென்று மனதுக்கு புது உற்சாகத்தை கொடுத்தது…. அதிர்ந்து நின்றவளை பின்னிருந்து கட்டிக் கொண்டான்….. அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து “பிடிச்சிருக்கா”….. அவளிடம் அசைவு இல்லை என தெரிந்ததும் அவளை தன் முகம் பார்க்க செய்தான்… அவளின் தயக்கத்தை பார்த்து,  “என் மேல நம்பிக்கையே வரலையா பட்டுக்குட்டி”….. அவன் குரலில் தெரிந்த ஏக்கம் அவளை குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தியது….. அவனுக்காக தன் தயக்கத்தை உடைத்தெறிந்தாள்……. அவனின் முகத்தை தாங்கி இரு கன்னத்திலும் முத்தம் இட்டாள்….. உதட்டில் பட்டும் படாமலும் தன் உதட்டை ஒற்றி எடுத்தாள்….. அதற்கு மேல் என்ன செய்ய என்று தெரியாமல் திருதிருவென முழித்தாள்….. அவள் செய்கைகளை பார்த்து புன்னகைத்தவன்….. அவளின் செய்கையை தனதாக்கி அவளின் உதட்டை வன்மையாக சிறை செய்து அவளை பேச விடாமல் செய்தான்…  அவளை கைகளில் ஏந்தி படுக்கையில் படுக்க வைத்து அவள் மீது படர்ந்தான்….. உயிர்கள் இடமாற இரு மனங்கள் தங்களின் ஆழமான அன்பை ஒருவருக்கு ஒருவர் விதைக்க. அவர்களின் இல்லறம் நல்லறமாக மாறியது…..
           காலையில் எப்போதும் போல எழுந்த புகழ் தன் மார்பில் படுத்திருந்தவளை அலுங்காமல் தலையணையில் படுக்க வைத்தான்….. பின் மாடியில் எக்சர்சைஸ் செய்வதற்காக ரெடி பண்ணிய ஜிம்மில் எக்சர்சைஸ் செய்து கொண்டிருந்தான்….. அரைமணி நேரம் ட்ரெட்மில்லில் ஓடியவன், புஸ்அப் (push up) பண்ணிக் கொண்டிருந்தான்… தீடிரென்று முதுகு வெயிட்டாக இருக்க தலையை மட்டும் திருப்பி பார்த்தான்….. மிருது அவன் முதுகில் அமர்ந்திருந்தாள்…. அவளின் செய்கையில் புன்னகைத்துக் கொண்டே அவன் மறுபடியும் புஸ்அப் பண்ண… மாமா என மிருதுவின் குரல் அவன் செவிவழி தீண்ட தீடிரென்று திரும்பினான்…. அவன் தீடிரென திரும்புவான் என எதிர்பார்க்காததால் பொத்தென்று கீழே விழுந்தாள்…. கீழே விழுந்தவளை மடியில் அமர்த்தி அவள் கழுத்தில் முகம் புதைத்தான்….. எக்சர்சைஸ் செய்ததால் அவனின் வியர்வை வாசம் அவள் மூச்சில் கலந்தது….
             பட்டுக்குட்டி….. மாமா சொல்லுடி…
             மாமா…..
             ம்ம்ம்…..
            மாமா….
             ம்ம்ம்…..
             மெல்ல அவனின் காதருகில் சென்று மாமோ….ய்ய்ய்………..  என கத்தினாள்…. 
            ஆஆஆ… அம்ம்மா என அலறியவனை கண்டு கலகலவென சிரித்தாள்….. 
            அவனின் அலறல் சத்தம் கேட்டு ரூமில் இருந்த யாழி மெதுவாக கண்விழித்து “யாருடா இது மிட்நைட்ல சங்கு ஊதுறது”…. என மணியை பார்த்தாள்…. ஏழு முப்பது என காட்ட அச்சோ!!… “இவ்ளோ நேரம் தூங்கிட்டோமா… என எழுந்து குளிக்க செல்ல திகழ் அவளின் கையை பிடித்து சுண்டி இழுக்க அவனின் மேல் விழுந்தாள்….. காலையில புருஷன கவனிக்காம எங்கடி ஓடுற…. ஒழுங்கா கவனிச்சுட்டு போ”….. 
           கவனிக்கனுமா அப்படினா….
           காலையில எழுந்தரிச்ச உடனே புருஷனை நல்லா சைட்டு அடிக்கணும்….. அப்புறம் இங்க முத்தம் கொடுக்கணும் என உதட்டை காட்டினான்..   
           முடியாது போடா என அவனிடமிருந்து தப்பித்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
        
          “அனைவரும் காலை சாப்பிட வர மிருதுவும், கௌரியும் பரிமாறிக் கொண்டிருந்தனர்…. மாடியில் இருந்து திகழும் யாழியும் இறங்கி வர ஜானகி சோபாவில் யாருக்கோ போன் போடுவதும் பேசுவதுமாக பரபரப்பாக இருந்தார்”….. 
            காலையில இந்த கிழவி யாருக்கு போன் பேசுது…. சரி போய் ஒரு அட்டடென்ஸ்  போட்டு வருவோம்…. 
          ஹாய் பாட்டி “குட்மார்னிங்”….
         ம்க்கும்… உன் மூஞ்சியில முழிச்சா அன்னைக்கு புல்லா எனக்கு பேட் மார்னிங் தான்…. 
         “என்ன பாட்டி காலையில ரொம்ப பரபரப்பா இருக்கிங்க”……. என கேட்கவும்…….
          இல்லடா ப்ரரணிதாவுக்கு போன் போட்டேன்….. லைன் கிடைக்க மாட்டிங்குது அதான் மறுபடியும் டிரை பண்ணினேன்…..
           வாசலில் ஒரு பெண் குரல் கேட்கவும் திகழ் மனசுக்குள் “அய்யோ இவளா” என அலற…. சாப்பிட்டு கொண்டிருந்த புகழுக்கு புரையேற தொடங்கியது…. எல்லாரும் வாசலை திரும்பி பார்க்க அங்கே ப்ளூ கலர் ஜீன்ஸ் ரெட் கலர் டீஷர்ட் அணிந்து மாடலாக நின்று கொண்டிருந்தாள் தீக்ஷனா… கௌரியின் தங்கச்சி பொண்ணு 
           அவள் நேராக திகழிடம் சென்று அவனின் மண்டையை பிடித்து மாவாட்டி “ஏன்டா தீவெட்டி தலையா எல்லாம் உன்னால தான்டா……  எத்தனை தடவை சொன்னேன் படிக்க போகமாட்டேன்னு எல்லாரும் என் மைன்ட் டைவர்ட் பண்ணி அனுப்பி வைச்சிங்க…. இப்போ பாருங்க என்னால உன் கல்யாணத்துக்கு வர முடியாம போச்சு”…..
           “கல்யாணத்துக்கு வர முடியலன்னா என்ன இன்னும் ரிசப்ஷன் இருக்குல” அதுல ஜமாய்ச்சிரலாம் தீக்ஷிமா…. என புகழ் சொல்ல….
         அட ஆமால்ல…. அப்போ ஒரு கலக்கு கலக்கிற வேண்டிதான்…. (ஆனால் அவள் அறியாத ஒன்று தனக்கும் அன்றே ரிசப்ஷன் நடக்குமென்பதை)
           
         நேராக புகழின் அருகில் சென்று ஒரு சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தாள்…. அதை பார்த்ததும் புகழுக்கு புரிந்தது….. இது அவளின் சிறு வயதிலிருந்தே வந்த பழக்கம்…. தன் தட்டில் இருந்த பூரியை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்….. அதை பார்த்த மிருதுவிற்கு ரோஹித்தின் நியாபகம் வந்தது…. அவனும் இப்படி தான காலேஜ் அவசர அவசரமாக செல்லும் போது மிருதுவுக்கும், யாழிக்கும் ஊட்டி விடுவான்…. அதை நினைத்துக் கொண்டே நிமிர்ந்தவளின் எதிரே அவளின் எண்ணத்தின் நாயகனே நின்று கொண்டிருந்தான்…. 
             அண்ணா…. என மிருதுவும், படிக்கட்டில் நின்று கொண்டிருந்த யாழியும் ஓடி சென்று கட்டிக் கொண்டனர். 
          அவர்களின் குரல் கேட்டு திரும்பிய தீக்ஷி, “யாருடா அது பெரிய வரவேற்பா இருக்கு”….. என திரும்பி பார்த்தவள் “வாவ்” என வாய் விட்டு சொல்ல அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர்…. அவள் யாரையும் கண்டுக்காமல்…. அவனை கிரிவலம் மாதிரி சுற்றி வந்து, அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள்… அவள் செய்வதை பார்த்த ரோஹித் தன் தங்கைகளிடம் “யாருமா இது” என கேட்டான்….. 
           அத்தையோட தங்கச்சி பொண்ணு தீக்ஷனா….  என்க
           அவனை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்…. அவன் அவள் முன் சொடக்கிடவும் தான் நிகழ்காலத்திற்கே வந்தாள்….. எங்கடா இருந்த இவ்ளோ நாளா ஸப்ப்பா…. என்னமா இருக்க… என மனதிற்குள் நினைத்தவள்….. 
           உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?….. பாஸ்
           இல்ல….
           யாரையாவது லவ் பண்றீங்களா இல்ல யாரையாவது கல்யாணம் பண்றேன்னு வாக்கு கொடுத்திருக்கிங்களா?….. 
           இல்லை… ஏன்????….
           தன் வீட்டிலிருந்த அனைவரிடமும் “எனக்கு இவரை பிடிச்சிருக்கு…. நான் இவரை லவ் பண்றேன்…. இதுக்கு முன்னாடியே நான் இவரை பார்த்து இருக்கேன்… எங்கே…. எப்போனு…. என் மேல இவருக்கு லவ் வரும் போது சொல்றேன்….. நான் பி.ஹெச்டி முடிச்சதும் இவரை கல்யாணம் பண்ணி வைக்கறீங்களா?”….. என நேரடியாக கேட்டு விட்டாள்….
           அதைக்கேட்ட அனைவரும்​ அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்….
          அனைவரும் அதிர்ச்சியில் நிற்பதை பார்த்து அவள் ரோஹித்தின் கையை நறுக்கென்று கிள்ளி விட்டாள்… 
          ஆஆ…. அம்மா என அலறியவன் அவளை பார்த்து முறைக்க…. எனக்கு கிள்ளினா வலிக்கும் அதான் ஹிஹி என அசடு வழிந்தாள்….
           அதன் பின்னர் தான் அனைவரும் சுயம் பெற்று சத்தியமூர்த்தியும் கௌரியும் ஒருவரை ஒருவர் சந்தோஷமாக பார்த்துக் கொண்டனர்….
           திகழும் புகழும் சந்தோசத்தில் ரோஹித்துக்கு சம்மதம்னா எங்களுக்கு சம்மதம் என்றனர்….. 
   
           மிருது, யாழி அதிர்ந்து நின்றனர்….. அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை…. இப்படி தடாலடியாக ஒரு பெண் தன் காதலை தன் குடும்பத்தினர் எல்லார் முன்னிலையிலும் சொல்வதை முதல் முறையாக பார்க்கின்றனர்…… 
          எனக்கு பிடிக்கல….. என இரு குரல்கள் ஒரு சேர ஒலித்தது….. 

Advertisement