Advertisement

தூரிகை 1 :

 

“கணபதி இருக்கும் வரை கவலையில்லை-என்றும்

கைகட்டி பதில் சொல்லும் நிலையுமில்லை…

எனக்கொரு இசை தெய்வம் அவன்தானய்யா…

அவன் புகழ் தினம் சொல்வோன் இவன் தானய்யா…

கணபதி என்றிட கலங்கும் வல்வினை…

கணபதி என்றிட காலன் கைதொழும்….

கணபதி என்றிட கருமம் ஆதலால்…

கணபதி என்றிட கவலை தீருமே….”

என்ற பாடல் வரிகள் மலைக் கோவிலின் உச்சியில் இருந்து…. காற்றினில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. 

விருப்பாச்சி கிராமம்…..

முருகன் குடி கொண்டிருக்கும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு அருகில் அமைந்துள்ள…கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் பசுமையை போர்வையாய் போர்த்திய ஒரு அழகிய கிராமம்.விவசாயமே அங்கு பிரதான தொழில்.

எங்கு நோக்கினும் வயல் வெளிகளும்,தென்னை மரங்களும்…..சல சலவென்று ஓடும் ஓடை நீருமாய்…இயற்கை எழில் சூழ்ந்து காணப்பட்டது அந்த கிராமம்.

மழைக் கோவிலின் படிகளில் மிக மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.மனதில் ஆயிரம் யோசனைகள் இருந்தாலும்…அவளின் முகம் பார்ப்பதற்கு மிக அமைதியாக காணப்பட்டது.

கட்டியிருந்த பட்டுப் புடவை சரசரக்க…கூந்தலில் சூடிய வெள்ளை ஜாதிப்பூ..,சுற்றியுள்ளவர்களின் நாசிகளில் நறுமணத்தை ஏற்படுத்த…கழுத்தில் முத்து மாலையும்,கைகளில் தங்க வளையல்களும்..,காதுகளில் தொங்கட்டானுமாய்….தங்க மஞ்சள் நிறத்தில்..,பார்ப்பதற்கு அழகிய பதுமையைப் போல் இருந்தாள்.  

செழியன்-கலையரசியின் ஒரே பெண்.கல்வி,செல்வம்,அன்பு என எதற்கும் குறைவில்லாமல், வாழ்க்கை அவளுக்கு அனைத்தையும் கொடுத்திருந்தது.

செழியன்… அவ்வூரின் மிகப் பெரிய மனிதர்.ஊர் தலைவராகவும் இருப்பதால் கீர்த்தனாவை அனைவரும் தங்கள் வீட்டு பெண் போல் பார்த்தனர்.

கோவிலை விட்டு இறங்கிய கீர்த்தனா….,”வீட்டிற்கு போகலாமா?, வேண்டாமா?” என்று வெகு நேரம் யோசித்து..,கடைசியாக போகலாம் என்ற முடிவுடன்….வீட்டை நோக்கி நடையைக் கட்டினாள்.         

எவ்வளவு மெதுவாக நடந்தாலும்…ஒரு கட்டத்தில் வீடு வந்து விடும் என்று அவள் அறிந்திருந்தாலும்….நடையின்  வேகத்தை அவள் அதிகப்படுத்தவே இல்லை.அதற்கு மாறாக மேலும் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்.

“அக்கா…சீக்கிரம் வாங்க…!அவங்க எல்லாம் வந்து ரொம்ப நேரம் ஆகுது.பெரியம்மா உங்களை கையோடு கூட்டிட்டு வரச் சொன்னாங்க…!” என்று அவளின் வீட்டில் வேலை செய்யும் ராணியின் குரல் கேட்டு படபடத்தாள் கீர்த்தனா.

“என்னது வந்துட்டாங்களா…?”என்று அவளின் இதயம் நினைத்த மறு நிமிடம் அவளின் கைகள் எல்லாம் தந்தியடிக்க ஆரம்பித்தது.

“ஐயோ…! இன்னைக்கு அம்மா என்னை வறுத்தெடுக்க போறாங்க…?” என்று நினைத்தவள் வேகத்தைக் கூட்டினாள்.

வீட்டின் முன்னால் நின்றிருந்த கார்களை கடுப்புடன் பார்த்தபடி வீட்டினுள் நுழைந்த கீர்த்தனாவிற்கு அங்கு நிலவிய நிசப்தம் ஆச்சர்யத்தை அளித்தது.

“என்னடா இது…?ஒரு சத்தத்தையும் காணோம்..?” என்று எண்ணியபடி மெதுவாக தலையை உயர்த்த….அனைவரும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சட்டென்று தன்  தலையை கீழே போட்டவள்….தன்  தாயின் முறைப்பையும் பொருட்படுத்தாது விருட்டென்று உள்ளே சென்று விட்டாள்.

“கோவிலுக்கு போயிட்டு வர இவ்வளவு நேரமா….?அவங்க வந்து எவ்வளவு நேரம் ஆகுது…?பொம்பளைப் பிள்ளைக்கு பொறுப்பு வேணாம்…?” என்று வெளியில் இருப்பவர்களுக்கு கேட்காமல்…கீர்த்தனாவை கடிந்து கொண்டார் கலையரசி.

“நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது.என் பொண்ணு கோவிலுக்கு போனா…சுத்தி இருக்குற எல்லாத்தையுமே மறந்திடுவா…! அப்படி ஒரு பக்தி…” என்று அவளின் தாமாதத்தை சமாளித்துக் கொண்டிருந்தார் செழியன்.

“இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு…?இந்த காலத்துல கோவிலுக்கு போற பொண்ணுங்களை விட…ஷாப்பிங் போற பொண்ணுங்க  தான் அதிகம்.உங்க பொண்ணு இப்படி இருக்குறதை நினைத்து நீங்க பெருமை படனும்….” என்று அங்கு அமர்ந்திருந்த ராஜா  சொல்ல….அவனின் மனைவியான கார்த்திகா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று கீர்த்தனாவை பெண் பார்க்க வந்திருந்தனர்.

மாறன்-பத்மா தம்பதியினர் அருகருகே அமர்ந்திருக்க…அவர்களுக்கு அடுத்தபடியாக ராஜா-கார்த்திகா ஜோடி அமர்ந்திருக்க,இவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தான் தேவேந்திரன்.

“தேவேந்திரன்….. பெயருக்கேற்ற கம்பீரமும்,கண்ணியமும் மிக்கவன். மாநிறத்திற்கு கொஞ்சம் கூடுதல் நிறமும்,மற்றவர்களை பார்வையாலேயே  எடை போடும் திறனுடையவன்”.

“கார்த்திகா….! அவனின் உடன் பிறந்த ஒரே அக்கா.ஒரு வருடத்திற்கு முன்பு தான் அவளின் திருமணமும் முடிந்திருந்தது.அக்காவின் கணவர் ராஜா…. சொந்த தாய்மாமனின்   பையன்.

ஆஸ்திரேலியாவில்  இருந்து தாயகம் திரும்பி ஒரு வாரமே ஆன நிலையில்….., அவனுக்கு எப்படியாவது திருமணத்தை முடித்து விட வேண்டும் என்பதில் பத்மா உறுதியாய்  இருந்தார்.தேவாவும் தாயின் முடிவிற்கு கட்டுப்பட்டு திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டான்.

“தேவா… பொண்ணு எப்படி…?” என்று காதருகில் குனிந்து கேட்டான் ராஜா.

அவனை செல்லமாய் முறைத்த தேவா…”நான்  எங்க மாம்ஸ் பொண்ணைப் பார்த்தேன்…? மின்னல் மாதிரி வந்தாங்க…மின்னல் மாதிரி உள்ள போய்ட்டாங்க…” என்றவனை ஏற இறங்கப் பார்த்தான் ராஜா.

“பொண்ணை வரச் சொல்லுங்க சம்பந்தி…!” என்றார் மாறன்.அவர் சொல்லி முடிப்பதற்கும்….கலையரசி மகளை அழைத்து வருவதற்கும் சரியாய் இருந்தது.

அழகுக் குவியலாய் வந்தவளை….எந்த வித சலமும் இன்றி பார்த்தான் தேவா.அவன் மனதினுள் தோன்றிய உணர்வை என்னவென்று  அவனால் உணரவும் முடியவில்லை. வெளியில் சொல்லவும் முடியவில்லை.ஆனால் அவனுக்கு கீர்த்தனாவைப் பிடித்திருந்தது.

ஆனால் அவளோ….! அவனை மருந்துக்கும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

“கையில் இருந்த காபியை, அனைவருக்கும் கொடுத்தாள் கீர்த்தனா..! தேவாவின் அருகில் சென்ற போது…..,அவளின் இதயம் தட தடவென்று அடிக்கத் துவங்கியது”. 

அவளின் கைகள் நர்த்தனம் ஆட…..அதை ரசித்துக் கொண்டிருந்தான் தேவா.”வெகு நேரமாக அவன் காபியை எடுக்காமல் இருக்க…அனைவரும் அதைக் கண்டும் காணாமல் இருக்க….மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தனா”.

“தேவா விழியசைக்காமல் அவளையே பார்க்க… “அந்த பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் சட்டென்று தலை கவிழ்ந்தாள்”.

“பொண்ணைப் பிடிச்சிருக்கா…தேவா…” என்று அவளின் பரிதவிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்தார் மாறன்.

“எனக்கு பிடிச்சுருக்குப்பா….”! என்று அவன் கீர்த்தனாவைப் பார்த்துக் கொண்டே சொல்ல….

அதே கேள்வியை இப்பொழுது அவளிடம் செழியன் கேட்க…. “உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே தான்ப்பா…!” என்றபடி உள்ளே சென்று விட்டாள்.

மகளின் பதிலில் உச்சி குளிர்ந்து விட்டார் செழியன்.”என்னோட பொண்ணு என் பேச்சை எப்பவுமே மீற மாட்டா சம்பந்தி…” என்றபடி தனது  மீசையை முறுக்கிக் கொண்டார்.

“அப்பறம் என்ன  சம்பந்தி….பொண்ணுக்கும்,பையனுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு போய்டுச்சு…அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்..” என்றார் மாறன்.

தேவாவிற்கோ….கீர்த்தனாவின் பதிலில் மனம் திருப்தி அடையவில்லை. அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு வெறுமை அவனை யோசிக்க வைத்தது.

ஆனால் அவன் யோசித்து முடிப்பதற்குள் இரண்டு குடும்பத்தாரும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாய் பேசி முடித்திருந்தனர்.

“உள்ளே சென்ற கீர்த்தனாவிற்கு இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை….! அவளுக்கு திருமணம் செய்து கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை.இப்படி சொல்லிச் சொல்லியே நான்கு ஆண்டுகளைக் கடத்தி விட்டாள்.இந்த முறை கண்டிப்பாய் அவளது திருமணத்தை நடத்தியே ஆக வேண்டுமென்று செழியன் பிடிவாதமாய் இருக்கிறார்”.

செழியன் எண்ணத்திற்கு ஏற்றார் போல் இந்த சம்பந்தமும் அமைந்து விட…..அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

 தன் மகள் எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல் இந்த வீட்டில் நிம்மதியாக வாழ்வாள் என்ற நம்பிக்கை…..தேவாவைப் பார்த்த உடனே அவருக்கு வந்து விட்டிருந்தது.

அவனின் கம்பீரத்தைப் பார்த்து மயங்கினாரா..? இல்லை அவனது குடும்பப் பின்னணியைப் பார்த்து மயங்கினாரா…? என்று அவருக்கேத் தெரியவில்லை.

“நீங்க  தப்பா எடுத்துக்கலைன்னா….நான் உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா…?” என்றான் தேவா.

“தாராளமா…பேசுங்க தம்பி…!” என்று செழியன் பதில் கூறும் முன்னரே முந்திக் கொண்டார் பத்மா.

“அதெல்லாம் வேண்டாம் தேவா…! இதென்ன புதுப் பழக்கம்…!” என்று கண்டிக்க…தன் அம்மாவைப் பார்த்து பல்லைக் கடித்தான் தேவா.

வெளியில் நடந்த உரையாடலை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.போச்சு….!அவன் வந்து பேசினா…எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு சொல்லலாம்ன்னு பார்த்தா….அதுவும் முடியாது போல இருக்கே….? என்ன செய்யலாம்..?” என்று அவளின் மூளை தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தது.   

ஜன்னலருகே நின்று யோசித்துக் கொண்டிருந்தவள்….,“”ம்ம்க்கும்ம்…”என்ற செருமல் ஒலியில், திடுக்கிட்டு திரும்பினாள்.

கைகளைக் குறுக்கே கட்டியபடி…, அவளையே உறுத்துப் பார்த்தான் தேவா.”

“எனக்கு இந்த திருமணத்தில் சம்மதம்….உனக்கு இதில் சம்மதமா…? அப்பாக்கு பிடித்தால் போதும்…ஆட்டுக்குட்டிக்கு பிடித்தால் போதும்ன்ற கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்…”” என்றான் முறைப்புடன்.

“அவனைப் பார்க்கவே அவளுக்கு பயமாய் இருந்தது.”சம்மதமில்லை” என்று சொல்ல அவள் வாயைத் திறக்க….தேவாவின் பின்னால் நிழலாடிய தன் தாயின் உருவத்தைப் பார்த்து….சம்மதம்”.. என்று அவளறியாமல் தலையை ஆட்டினாள்.

தேவா நம்பாமல் இடுங்கிய கண்களுடன் அவளைப் பார்க்க….அவனைப்  பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டாள் கீர்த்தனா.

“இப்ப எதுக்காக எதுக்கெடுத்தாலும்  முகத்தைத் திருப்பிக்கிற…? நான் அவ்வளவு கொடூரமாவா இருக்கேன்…?” என்றான் சிரிப்புடன்.

“இல்ல…அப்படியெல்லாம் இல்லை….”” என்று அவள் தந்தியடிக்க….அங்கு கிடந்த அவளது மொபைலை எடுத்தான் தேவா.

அவளது என்னை தனது மொபைலில் பதிவேற்றியவன்….மீண்டும் அதை அவளிடம் நீட்ட….அதை வாங்குவதற்காக நீட்டிய கீர்த்தனாவின் கைகள் நடுங்க….அதை சிரிப்புடன் பார்த்தவன்…மொபைலை அவளது கைகளில் வைத்து…..அவளது கையையும் சேர்த்து ஒரு அழுத்தம் அழுத்தினான்.

எதிர்பாராத அந்த அழுத்தத்தில் வெகுண்ட கீர்த்தனா….சட்டென்று தனது கைகளை உருவிக் கொண்டாள்.

அவளின் புறக்கணிப்பு அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்த…படாரென்று அந்த அறையை விட்டு சென்றான் தேவா.  

கீர்த்தனாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.”நடப்பது எதுவும் புரியாமால்….நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது அவளால்”.

“என்ன மாப்பிள்ளை….?பொண்ணு என்ன சொல்லுது…?” என்றான் ராஜா.

அவனை முறைத்த தேவா…””எங்க மாம்ஸ்…ஒண்ணுமே பேசலை…லைட்டா என் கை பட்டதுக்கே…அடுத்த கற்புக்கரசி மாதிரி கையை இழுத்துகிட்டா… கொஞ்சம் சிரமம் தான் போல…”” என்றான் மூச்சை வெளியே விட்டபடி.

ராஜா….””இப்பவே இப்படி சலிப்பு வந்தா எப்படி மாப்பு…இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு…இந்த கல்யாணம் என்கிற கடல்ல குதிச்சவன் எவனும் தப்பிச்சு வந்ததா சரித்திரமே இல்லை… உதாரணத்துக்கு என்னை எடுத்துக்கோ….உங்க அக்காவைக் கட்டி நான் படுற பாடு இருக்கே….சாமி…!” என்று பாவமாய் சொல்ல….”அவனுக்கு அருகில் இருந்த கார்த்திகா அவனை நறுக்கென்று கிள்ளினாள்.

ராஜாவைப் பார்த்து தேவா சிரிக்க….விதி தேவாவைப் பார்த்து கை கொட்டி சிரித்தது.

“அடுத்த மாதம் 10 ஆம் தேதி நாள் நல்லா இருக்கு…அன்னைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம்….” என்று ஐயர் சொல்ல…பெரியவர்கள் அனைவருக்கும் அதில் மிகுந்த திருப்தி.

இப்படியாக தேவா-கீர்த்தனா திருமணம் இரு வீட்டு பெரியோர்களாலும் நிச்சயிக்கப்பட்டது.

“சரிங்க சம்பந்தி அப்ப நாங்க கிளம்பறோம்…”.” என்று கிளம்ப எத்தனிக்கும் போது…தேவாவின் கண்கள் அவனையும் மீறி கீர்த்தனாவைத் தேடியது.

கீர்த்தனவோ… அவனுக்கு அபயம் அளிக்க தயாராக இல்லை என்பதைப் போல் வெளியே வரவே இல்லை.

மாறாக…தேவாவின் செல்லுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்ப….அதைப் படித்த தேவாவின் முகம் மாறியது.”

“எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை…!””என்று அனுப்பியிருந்தாள் கீர்த்தனா.

“அதனாலென்ன..? எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது…!”” என்று திமிராக பதில் அனுப்பியவன்…நேராக காருக்குள் சென்று அமர்ந்து கொண்டான்.

“இவளுக்கு என்ன மகாராணின்னு நினைப்பா….? சம்மதமான்ன்னு கேட்டப்ப ஆமான்னு சொன்னா…! இப்ப என்னடான்னா…பிடிக்கலையாம் பிடிக்கலை.கொஞ்சம் திமிர் பிடிச்சவ தான் போல….இருக்கட்டும் கவனிச்சுக்கறேன்…”” என்று மனதில் கருவிய படி காரை எடுத்தான் தேவா.

அங்கு தேவாவின் பதிலைப் படித்தவள்.., காளி அவதாரம் எடுத்துக் கொண்டிருந்தாள்…”இவனுக்கு பிடித்தால் போதுமா…? எவ்வளவு திமிர்…ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளத் தெரியாத இவனெல்லாம் என்ன மனிதன்…?” என்று திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.

தான்…. சரி என்று சொன்ன பிறகு தான் அத்தனை ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவள் மனம் ஏனோ மறந்துவிட்டிருந்தது””.””

செழியன்..”””” “கண்ணு கீர்த்தனா…பையன் தங்கமான பையன்ம்மா….நமக்கு ஏத்த இடம்…ரொம்ப வசதியானவங்க…ஆனா பாரு கொஞ்சம் கூட அலட்டல் இல்லாம எவ்வளவு இதமா,பதமா நடந்துகிட்டாங்க….நீயும் போற இடத்துல எங்க பேரை காப்பாத்திடு கண்ணு…””””!”“என்றார் வெகுளியாய்.

அவரும்தான் என்ன செய்வார் பாவம்…?இருப்பத்தைந்து வயதாகியும் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி பார்க்க முடியவில்லையே…? என்ற ஏக்கம் அவர் கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது.

கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாலே காத தூரம் ஓடிவிடுவாள் கீர்த்தனா.பெற்றவர்களின் வற்புறுத்தலால் ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போக….அதன் பலனாக வந்தவன் தான் தேவா.

“கண்டிப்பா…உங்க பேரைக் காப்பத்துவேன்ப்பா….” என்று அவருக்கு வாக்குக் கொடுக்க….”அது உன்னால் முடியுமா…?” என்று அவளின் மனசாட்சி அவளிடம் கேள்வி எழுப்பியது.

“வெற்றுப் புன்னைகை அவளின் முகத்தில் தோன்ற…அதை அவள் அப்பா அறியாதவாறு மறைத்தாள்.வேகமாக அறைக்குள் சென்றவள்….அந்த கிராமத்து உடையான பாவாடை தாவணிக்கு மாறினாள்”.

“அம்மா நான் அருவிக்கு போயிட்டு வரேன்…”!”””””””’’””””””’””’’’’’’’”””””” என்றபடி அவரின் பதிலை எதிர்பாராமல் வேகமாய் சென்றாள்.

அங்கு தலையூத்து அருவி மிகப் பிரபலம்.ஆண்டு முழுவதும் அங்கு நீர் வரத்து இருக்கும்.கீர்த்தனாவின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே தோழி அந்த அருவி தான்.எதுவாக இருந்தாலும் அதனிடம் தஞ்சம் அடைந்து விடுவாள்.

காட்டுப் பாதை வழியாக அருவியை அடைந்தவள்….,நேராக சென்று எப்பொழுதும் அமரும் பாறையில் அமர்ந்தாள்.

நீர் எப்போதும் போல் படு இரைச்சலுடன் கொட்டிக் கொண்டிருந்தது.மலை உச்சியில் இருந்து வெண்மை நுரையாய் பொங்கி….நீரென அருவியில் விழும் அந்த அழகை எத்தனை முறைப் பார்த்தாலும் தெவிட்டாது.குளிர் காற்று இதமாய் உடலை வருட அந்த சுகத்தில்…தன்னை மறந்து அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

நீர் அவள்மேல் பட்டுத் தெறித்து தெறித்து விழுந்தது….அதை ரசித்தவள் சிறிது நேரம் கழித்து….”இப்ப ஏன்  என்னை ஈரமாக்குற…?நான் ஏற்கனவே செம்ம கடுப்புல இருக்கேன்….உனக்கென்ன….மலை உச்சில ஆரம்பிச்சு…காடு மலை எல்லாம் கடந்து….உன் போக்கில் நீ  சுதந்திரமா போயிட்டே இருக்கே…! ஆனா நான் அப்படியா..? என்னைப் பாரு….?எப்படிக்  கவலையோட இருக்கேன்னு…? எனக்கு கல்யாணம்…உனக்கு தெரியுமா…? ஆனா எனக்குப் பிடிக்கவேயில்லை….! இதுல மாப்பிள்ளைன்னு ஒருத்தன் வந்திருக்கான்…. சரியான குரங்கு…!” என்று அருவியிடம் தன்  போக்கில் பேசிக் கொண்டிருந்தாள்.

செல்லும் வழியில் அருவியைப் பார்த்து…””” தேவா காரை நிறுத்தியதையோ…., பாதி தூரத்திற்கு மேல் நடந்து வந்து….அவள் புலம்பலைக் கேட்டதையோ… அவள் அறிந்திருக்கவில்லை.  

ஆனால் தேவாவோ….அவள் அறியாதவாறு அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்…!      

Advertisement