அவினாஷ், அம்முவிற்கு அழைத்துக் கொண்டே மேலே சென்றான்..
அம்முவும் போனை எடுத்துவிட்டாள்.
அவினாஷ்க்கு, கண்மண் தெரியாத கோவம்.. ‘நான் எதுக்கு கூப்பிடுவேன்னு கூட கேட்க மாட்டாளா.. என்னமோதான் ரொம்ப பண்றா… ஆபிஸ் வந்து கூட ஒரு கால் பண்ணலை அப்படி என்ன வேலை.. இவ மட்டும்தான் வேலை செய்யறாளா’ என மனதில் அர்சித்துக் கொண்டேதான் அழைத்தான் அவளை.. சரியாக அவள் எடுக்கவும், கோவத்தை அடக்கியக் குரலில் “என்ன பண்ற நீ.. ஆப்டர்நூன்னிலிருந்து கால் பண்ணிக்கிட்டே இருக்கேன்.. ஒரு ரெஸ்பான்ஸ் பண்ண தெரியாதா” என்றான்.
அம்முவும், அவனுக்கு சரியாக கோவத்தில்தானே இருக்கிறாள்.. அவளும் “ஏன், பண்ணும்.. அதான் நான் எடுக்கலைன்னா… அடுத்து யார்கிட்ட கேட்கணும்ன்னு தெரியுதே.. அங்கேயே எல்லாம் கேட்டுக்கோங்க.. நான் எதுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணும்..” என்றாள் அதே குறையாத கோவக் குரலில்.
அவினாஷ், அடிவயிற்றிலிருந்து ஒரு பெருமூச்சு விட்டு, தன் பின்னந்தலையை கோதிக் கொண்டான் ‘ஓ… அதான் கோவமா’ என எண்ணிக் கொண்டே “ஆமாம் போன் எடுக்கலைன்னா பின்ன என்ன செய்ய முடியும், எங்க இருக்கேன்னு தெரிய வேண்டாமா” என்றான், கொஞ்சம் இறங்கியக் குரலில்.
அம்மு “அது.. ஆபீஸ், அங்க பெர்சனலா என்னை கூப்பிட்டு என்ன ஏதுன்னு கேட்ப்பீங்களா.. உங்களுக்கு ஏதாவது…” என்றவள் நிறுத்திக் கொண்டாள் தன் பேச்சை, அது அவினாஷ்க்கு என்னமோ போல் இருக்க தன் அழைப்பை துண்டித்துவிட்டான் பட்டென.
போனை டேபளில் வைத்து விட்டு.. குளிக்க சென்று விட்டான்..
சித்ரா இப்போது அழைத்தார் மகனின் எண்ணிற்கு, அவரால் மாடி ஏற முடியவில்லை.. இவனோ போனை எடுக்காமல் போக.. சிரம்மப்பட்டு மாடி ஏறினார்.
மகனின் அறைக்கு செல்ல.. அங்கே போன் ஒலித்துக் கொண்டிருந்தது.. ‘சீனி’ என செல்ல பெயரோடு.. அவளின் புடவை கட்டிய போட்டோ வேறு ஒளிர்ந்துக் கொண்டிருந்தது திரையில்..
அம்முவிற்கு, அவன் பேசாத வரை தெரியவில்லை.. தன் வேலை என அவனை வேண்டுமென்றே தள்ளி வைத்தவள்.. இப்போது இரவில் தன்னவன் குரல் கேட்கவும்.. ஒரு உரிமை கோவம் வரவே செய்தது. அதை சட்டென அவளும் வெளிப்படுத்தி சத்தம் போட்டாளே தவிர.. இப்படி அவன் போனை வைக்கவும்.. பெண் மனம் வாடியே போனது ‘ச்சு.. ஏன் அம்மு அவரை படுத்தற’ என தனக்கு தானே கேட்டுக் கொண்டு, அவினாஷை அழைத்தாள்.
ம்கூம்… எடுக்கவில்லை அவன்.
சற்று அமைதியாக இருந்தாள். அவினாஷ், இவள் எப்போது அழைத்தாலும் கண்டிப்பாக பதில் செய்தியேனும் செய்துவிடுவான். இவள் போல, காயவிடமாட்டான். அது இப்போது நினைவு வந்தது பெண்ணுக்கு.. ‘ச்சு போடி..’ என தன்னையே சலித்துக் கொண்டு இன்னொரு தரம் போன் பண்ணலாமா! வேண்டாமா! என யோசித்துக் கொண்டிருந்தாள், அம்மு.
சித்ரா இப்போதுதான் வந்தார் மேலே, அவனின் அறைக்கு. வந்தவர் மூச்சு வாங்க சற்று நேரம் அமர்ந்தார்.. அவனின் கட்டிலில். அன்னை அங்கிருந்தே மகனிடம் பேசினார் “தம்பி…” என்றார்.
அவினாஷ், சின்னதாக ஒரு குளியல் போட்டுக் கொண்டிருந்தான்.. அன்னை வந்து அழைத்து தெரியவில்லை, காதில் விழவில்லை..
சித்ராவும் அவனிற்கு காது கேட்காது என எண்ணி.. அமைதியாக இருந்தார்.
அவினாஷின் கோவம் அவளின் சொல்லில் சற்று பொங்கியது எனலாம்.. ‘எதுவும் பேசக் கூடாது.. எப்படியும் பார்க்க கூடாது.. சரி, ஒரு மனுஷன் கூப்பிட்டா பதில் சொல்லக் கூடாதா.. கோவிலில் இருந்தா.. பதில் சொன்னா சாமி குத்தமமா…. ஆபீசுக்கு போன் செய்தா அவ்ளோ பெரிய குத்தமா… என்னமோ கத்தறா..’ என எண்ணிக் கொண்டே ஷவரில் நின்றான். கொதிக்கும் அவள் நினைவு இன்னமும் குளிரவில்லை.
மெல்ல தன்னை மீட்டுக் கொண்டு வெளியே வந்தான்.. இடுப்பில் துண்டுடன்.. வந்தான்.
அன்னை “டேய் தம்பி.. எத்தனை நாள் ஆச்சு உன்னை பார்த்து” என்றார் ஆசையாக.
அவினாஷ் தன் அன்னையை வந்து கட்டிக் கொண்டான் ஏதும் பேசாமல்.. அந்த இரண்டு நிமிடத்தில் தன்னை அவளிடமிருந்து எடுத்துக் கொண்டவன், அன்னையிடம் “எப்படி இருக்க வருங்கால மாமியாரே.. என்னை பத்தி நினைக்கிறியா.. பெரிய பையனுக்கு பொண்ணு பார்த்தா.. என்னை மறந்துடுவியா.. போனே பண்றதில்லை.. விட்டது தொல்லைன்னு நீயும் விட்டுட்டியா” என்றான் விளையாட்டுக் குரல்தான்.. ஆனால், என்னமோ சின்ன அழுத்தம் இருந்தது அதில்.
என்னமோ மனம் அழுந்தியது அவனுக்கு.. யாரும் தேடுவதில்லை, தன்னை நினைப்பதில்லை என ஒரு பிம்பத்தை மதியத்திலிருந்து அவனிடம் விதைத்துவிட்டாள் அவனின் சீனி. அவனின் வேலை.. அதனால் தான் யாருக்கும் அழைக்காது எல்லாம் மறந்தது வசதியாக.
அன்னை “டேய் டேய், எப்படி டா உன்னால் இப்படி பேச முடியுது.. நீதான் எங்கையோ இருந்த.. எந்த நேரத்தில் கூப்பிடவும் பயமா இருக்கு.. அதான் பேசலை.. எப்போ வந்த.. “ என்றார் எழுந்து கபோர்ட் நோக்கி சென்றுக் கொண்டே.
சித்ராவும், டவல் ஒன்று எடுத்து வந்து மகனின் முதுகை துடைத்தார்.. பின் தலையை துடைத்தார்.. “ஏன் டா, சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்ட… படம் ரெலீசுக்குதான் வந்து சொல்லுவேன்னு, நானும் உன் அண்ணனும் பேசி.. சொல்லிக்கிட்டு இருந்தோம்.. பாரேன் நீ முன்னாடியே வந்துட்ட..” என்றார் அவனை சீண்டி.
அவினாஷ் “ம்.. ஏன் சொல்லமாட்ட அதன் பெரிய மகன் இருக்கானில்ல.. என்னை தேடமாட்ட நீ” என்றான் தன் அன்னையை சீண்டும் விதமாக.
அன்னை அவ்வளவுதான் விழுந்துவிட்டார் “அடேய் அப்படி சொல்லாத டா.. இரண்டு பேரும் எனக்கு ஒண்ணுதான்.. சாப்பிட்டியா.. பால் தரவா..” என்றார்.
அவினாஷ் “சாப்பிட்டாச்சு.. அதெல்லாம் எதுவும் வேண்டாம்.. நீ சாப்பிட்டியா.. என்ன சொல்றார் உன் புருஷன்.. தூங்கிருப்பாருன்னு நினைச்சேன்.. என்ன இன்னும் போன் பேசிக்கிட்டிருக்கார்..” என்றான் எழுந்து நின்று, கண்ணாடியில் தன்னை அழகு பார்த்துக் கொண்டே.
இப்போது மீண்டும் அவனின் போன் ஒலித்தது.. அவனின் சீனிதான்.. ஒரே முடிவாக அழைத்துவிட்டாள் தன்னவனை.
அருகில் நின்றிருந்த சித்ரா இப்போது போனை பார்க்க.. முதலில் ஒரு பெண்ணின் முகம்தான் தெரிந்து.. இரண்டு நொடி உற்று பார்க்க அது யாரென புரிந்தது அன்னைக்கு.. சட்டென அனிச்சையாய் தன் மகனின் முகம் பார்த்தார் அன்னை.
சித்ரா எப்போதும் எதார்த்தமானவர்.. மகன்களுக்கு தேவையான நேரத்தில் தேவையானதை செய்வாரே தவிர.. அவர்களை கட்டுப்படுத்தியதில்லை. அவர்களும் கட்டுப்பட்டதில்லை. அதிலும் அவினாஷ்.. அன்னை தந்தை இருவருக்கும் அகப்படாதவன் இதுவரை.
எனவே அன்னைக்கு, ‘இந்த நேரத்தில்.. ஒரு பெண்ணின் அழைப்பு.. அத்தோடு, அந்த பெண்ணின் முகம்.. அதுவும் தெரிந்த முகம்..’ என எல்லாம் சித்ராவை யோசிக்க வைத்து.
இதுவரை இருந்த அவளின் தாக்கம்.. இந்த அழைப்பில் கரைந்துக் கொண்டிருந்தது மெல்ல… அவினாஷும், அவளின் அழைப்பை எதிர்பார்த்தானே.. எனவே, அவனின் முகத்தில் கொஞ்சம் ஆசையின் கலை வந்து போனது.. ‘கூப்பிட்டா.. ப்பா.. அதிசையம்தான்..’ என எண்ணிக் கொண்டவன் அந்த அழைப்பை ஏற்று “டூ மினிட்ஸ்.. இரு, கால் பண்றேன்” என்றவன் வைத்தான் போனை.
அன்னைக்கு மகனின் சந்தோஷம் பிடிபட்டதா.. இல்லை, அவரின் யோசனைக்காக விடை பிடிபட்டாதா என தெரியவில்லை, எதோ ஒன்று அவரை நிதானிக்க வைக்க.. மகனை நிமிர்ந்து பார்த்து “டேய்.. யார் அது…” என்றார் விசாரனையானக் குரலில்.
மகனோ, ஒரு பெண் தன்னை இரவில் அழைப்பதால் கேட்க்கிறார் என எண்ணி.. “ம்மா, இதென்ன இப்படி கேட்க்கிற.. வேலை விஷையமா பேச கூப்பிடுறாங்க.. உன் பையன் நல்லவன் ம்மா” என்றான், முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு.. ஒரு சின்ன சிரிப்புடன் சொன்னான் மகன்.
ம்.. நல்லவனாகவே தெரிந்தான் அன்னையின் கண்களுக்கு.. முன்போல தாடி இல்லை.. இப்போது கிளீன் ஷேவ்.. அழகான ஹேர் ஸ்டைல்.. வேலையினால் வந்த மிளிர்வு என மகன் தோரணையான இந்த மொழியை சொல்லவும்.. அன்னை இன்னும் சந்தேகமாக தன் மகனை பார்த்தார்.
அந்த அன்னையின் மனதில் என்னமோ நெருடியது.. சித்ரா “டேய், அந்த பெண் போட்டோ காட்டு…” என்றார், இப்போதே எல்லாம் தெரிய வேண்டும் தனக்கு என்ற எண்ணத்தோடு.
அவினாஷ் “யாரு போட்டோம்மா” என்றான்.
அன்னை “டேய் இப்போ போன் பண்ணியே.. அந்த பொண்ணு போட்டோ காட்டு, எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு” என்றார்.
அவன் “அதெல்லாம் உனக்கு எதுக்கு.. சும்மா.. ஒரு பொண்ணு போன் பண்ணினா உடனே ஆரம்ச்சிடுவியா…” என்றான்.
அன்னை “இன்னிக்கு, ஒரு ரிஷப்ஷனில் அந்த பெண்ணை பார்த்தா மாதிரி இருக்குடா.. காட்டுடா அந்த போட்டோவை..” என்றார் அதட்டலாக.
அவினாஷ் “ச்சு…. ம்மா…… “ என்றான்.
அன்னை “அந்த பொண்ணு பேரு என்ன டா… நான் பார்த்த பொண்ணு பேரு அம்ருதா டா… அவளை மாதிரியே இருக்கா டா, இவ… காட்டு போட்டோவை” என்றார்.
அவினாஷ்க்கு கண்கள் சுருங்கியது.. ‘இதென்ன புதுசா’ எனதான் தோன்றியது. இருந்தும் உள்ளுக்குள்.. ‘ஸ்டடி டா’ என சொல்லிக் கொண்டான்.. மறுக்காமல் தன்னவளின் புடவை அணிந்த போட்டவை அன்னையிடம் காட்டினான்.
அன்னை “யாரு டா.. உன் ப்ரெண்ட்டா… அமைதியான பொண்ணு டா” என்றார்.
அவினாஷ் “ம்.. என் ப்ரெண்ட்தான்.. இவங்க ப்ரோடக்ஷனில்தான் குரு படம் பண்றார்..” என்றான் ஒரு ரசனையானக் குரலில்..
அன்னை அவன் முகத்தை பார்க்க.. அவன் முகமோ தன்னவளின் டிஜிட்டல் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது..
அன்னை அவனை ஒருமாதிரியாக பார்த்தார்.. இவனிடம் ஏதேனும் கேட்க்கலாமா! வேண்டா! என யோசனை வந்தது அன்னைக்கு. மகனின் அகலா பார்வையும்.. அமைதியான பேச்சும்.. எதையும் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டிய சூழலை அன்னைக்கு ஏற்படுத்தவில்லை..
அன்னை “தம்பி சீக்கிரம் தூங்கு… காலையில் எங்கையாவது போய்டாத, கொஞ்சம் பேசணும்” என்றார்.