Advertisement

அத்தியாயம் 16
“ஓகே மதி, நீ போய் தூங்கு….ஹா….வ்”, என்று கொட்டாவி விட்ட ஏட்டிக்கும் தூக்கம் கண்களை சொக்கியது.
“இன்னும் எங்க தூங்கறது? இட்ஸ் ஆல்ரெடி ஃபைவ்”, என்று மஹதி சிரித்தாள்.
கடிகாரம் பார்த்தவன் சோபையாக சிரித்து, “ஒஹ்? யா பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரில”, என்ற இருவரும் இன்னும் தோட்டத்தில் தான் இருந்தனர். என்ன ஒன்று, முன்பு உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தவிர்த்து, பசிய புல்வெளியில் அமர்ந்திருந்தார்கள்.
இடைப்பட்ட நேரத்தில் என்ன பேசினார்கள் என்று கேட்டால், இருவருக்கும் பேச விஷயங்கள் அதிகமிருந்தது. ஆஷு மஹதியைப் பற்றி அதிகம் கேட்டான். என்ன படித்தாள், எதில் அதிக விருப்பம், எந்த வகை உணவுகள், பதிலுக்கு மஹதியும் அஷுதோஷைப் பற்றி.. அவனது குடும்பம், பள்ளி கல்லூரி முதலியன, நண்பர்கள் இத்யாதி இத்யாதி.. இடையிடையே சிற்சில சீண்டல்கள். மேலே ஆகாயம் கீழே பூமி என்று பேச விஷயமா இல்லை? அதிலும் இவர்கள் புதிதாக காதலர்கள் பதவியைப் பெற்றவர்கள்.. எனும்போது சொல்லவும் வேண்டுமோ?
“ஆபீஸ்..?”, என்று  கேட்டு நிறுத்தினான். 
“ம்ம். வருவேன்.. பட் கொஞ்சம் லேட்டாகும்”
“?”, ஏன் என்பது போல ஆஷு புருவம் உயர்த்த.. 
“அண்ணி.. “, என்று புன்னகைத்தாள்.
“அவங்கதான் நாம பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல இங்க வந்து பாத்துட்டு போனாங்களே? அப்பறம் என்ன?”
“அப்பறம் என்னவா? அதுக்கப்பறம்தான் அவங்க கிட்ட இருந்து மிஸ்ட் கால்ஸ், மெஸேஜ் ன்னு வந்துட்டே இருந்தது. “தூங்குங்க அண்ணி, நா ஏட்டிகிட்ட பேசிட்டு வந்துடுவேன்”,ன்னு வாட்சப் பண்ணிட்டு மொபைல் ஆஃப் பண்ணிட்டேன். சோ கண்டிப்பா விசாரணை இருக்கும்.”
“அட, அண்ணின்னா அவ்ளோ பயமா?”
“சேச்சே. பயம்லாம் இல்ல ஏட்டி.  இது மரியாதை. எங்க அண்ணி ரொம்ப கேரிங். ஆனா என்ன..? சில சமயம் அவங்க கேர் ப்ளஸ் அவங்க எதிர்பார்ப்பு நமக்கு இரிடேட்டிங்-கா இருக்கும்.”
நெற்றி உயர்த்தி, “முரளி.. ?”, என்று கேட்டான்.
ஆமென தலையசைத்து, “யா, பட்  நேத்து நைட் அவங்க அம்மாகிட்ட பேசினதுலேர்ந்தே எனக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சிட்டு இருப்பாங்க. மறுபடி கேட்டா நோ  சொல்லிடப் போறேன்.”
‘உன் இஷ்டம்’  என்பது போல ஆஷுதோஷ் தோளைக் குலுக்கினான்.
“ஹ்ம்ம் அதையும் மீறி காரணம் கேட்டா.., நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்லிடப் போறேன்.”
சிறு முறுவலோடு, “கோபப்படப் போறாங்க”, ஆஷுதோஷ் சொல்ல..
“ஐ டோன்ட் மைண்ட்”,என்றாள் மஹதி.
“ஹ்ம்ம். சரீ.. முரளிக்கு அப்படியொரு தாட் இருந்ததா?”, யோசனையாக கேட்டான்.
“தெரில, மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்பா அண்ணி வீட்ல முரளியோட  ஜாதகம் கேட்டிருக்காரு. சோ.. அது இவருக்குத் தெரிஞ்சிருந்தா மே பி இருக்கலாம். பட், எங்கிட்ட ஜஸ்ட் ஒரு பிரென்டாதான் பேசறார். பர்டிகுலரா, நம்ம கம்பெனிக்கு வந்தப்பறம். மத்த ஒர்க்கர்ஸ் எப்படி பேசறாங்களோ அப்படிதான் பேசறார்.”
“ஹ்ம்ம்..”, என்று அமைதியானான். சில நிமிடங்கள் இருவரும் அவரவர் யோசனையில்.
திடீரென, “ஏட்டி, நாம உடனே மேரேஜ் பண்ணிக்க கூடாது?”,என்று மஹதி கேட்க..
புருவமுயர்த்தி திகைப்பாகப் பார்த்த ஆஷுதோஷ், “ஓவ் ஓவ்.வாட் எ ஸ்பீட் பேபி? இன்னிக்குத்தான் ப்ரபோஸ் பண்ணி லவ் ஆரம்பிச்சிருக்கோம்”, என்று சொல்லி மென்னகை புரிய.. 
ஆஷுதோஷை,  ‘அப்படியா?’, என்பதுபோல பார்த்த மஹதி, “லவ்? யூ திங்க் சோ?”,என்றவள், “ம்ப்ச். மப்ச்.”, என்று இல்லை என்பதுபோல தலையசைத்து, “இது எங்கப்பா அரேன்ஞ் பண்ணின மேரேஜ். இன்னும் சொல்லப்போனா, இன்னிக்கு நடந்தது பொண்ணு பாக்க போற மாதிரின்னு வச்சுக்கோங்களேன். சோ.. நாம பண்ணிக்க போறது 100% அரேன்ஞ்ட் மேரேஜ்”, எனறு தீர்மானமாக சொன்னாள். 
ஆமென்பது போல கண்களை மூடி திறந்த ஆஷுதோஷ், ஆழ மூச்சிழுத்து, “எஸ். இது  ராஜ்-க்காக நடக்கற கல்யாணம்தான்”, என்றான். 
“ஹஹ, நம்ம மேரேஜ் அரேன்ஞ்ட் இன் ஹெவன், பை எ பெர்சன் இன் ஹெவன் டூ”, என்றவள், “அப்ப இன்னிக்கே விஷயத்தை வீட்ல சொல்லிடறேன், ம்ம். ரங்கண்ணா எதுவும் சொல்ல மாட்டான்ன்னு நினைக்கறேன். சுந்தரண்ணா..? அண்ணி ? என்ன சொல்லுவாங்கன்னு தெரியல. ஹூம்”, பெருமூச்சு விட்ட மஹதி ஆஷுவிடம் திரும்பி, “சரி உங்க வீட்ல என்ன சொல்வாங்க?”,என்று கேட்டாள்.
உதடு பிதுக்கி, “தெரில,அவங்களே லவ் மேரேஜ்தான் பண்ணிகிட்டாங்க. இப்போ சமீபத்தில்கூட ‘என்னடா யாரையாவது பாத்துட்டு இருக்கியா?’-ன்னு  அம்மா கேட்டாங்க”, என்றான் விட்டேத்தியாக.
“என்ன சொன்னீங்க?”
‘அப்போ ரேவா எக்ஸிபிஷன் நேரம், நா ஷேவ் பண்ணக்கூட நேரமில்லாம சுத்திட்டு இருந்தேன். இதுல அவங்க வேற ரெண்டு மூணு தடவ இதே கேள்விய கேட்டு போரடிச்சாங்க. கடுப்புல, ‘இப்போதைக்கு ரேவா-வை தவிர மனசுல ஒண்ணுமில்லன்னு சொல்லி கட் பண்ணினேன்”, என்று சிரித்தான்.
“ஹஹா”, என ஆஷுதோஷோடு சேர்ந்து சிரித்தாலும் மனதுக்குள் ‘எங்கப்பா செலெக்ஷன், வேற எப்படி இருக்கும்?’, என்று மஹதிக்கு தோன்றியது.
பேசினால் இன்னும் நேரம் பிடிக்கும் என்பதை உணர்ந்த ஆஷுதோஷ், புல்தரையில் இருந்து எழுந்து கொண்டான். அடுத்து மஹதி எழுவதற்குக் கை கொடுத்து, “ஓகே ஆபீஸ் வர்றதா இருந்தா ராஜதூத் எடுக்காத, கார்ல வா”, என்றான். 
“கவலையே படாதீங்க நானே நினைச்சாலும் என்னால ஓட்ட முடியாது.ஐயம் டாம் டயர்ட்”, என்று சிரித்த மஹதி, “உங்ககிட்ட கார் இல்லியா ஏட்டி?”,கேட்டாள். 
“ஏன் இல்லாம? அங்க காரேஜ்-ல டேல் ப்ளூ ஸ்விப்ட் என்னோடதுதான். எப்போவாவது எங்க அம்மா அப்பா பேமிலியோட வந்தா, எடுப்பேன். இல்லையா, ஏதாவது முக்கியமான மீட்டிங் போகணும்னா ஆர் கான்ஃபரன்ஸ்  இருந்தா எடுப்பேன். டிபென்ட்ஸ் ஆன் மூட்.”, என்று தூசு தட்டிக்கொண்டவன், ”ஓகே மதி. ஆபீஸ்ல பாக்கலாம்”,என்று மதியை மெல்ல அணைத்து விடுவித்தான். 
“யா ஓகே பை”, என்று கூறி மஹதி வீட்டை நோக்கி நடக்க, ஆஷுதோஷ் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து மஹதி உள்ளே செல்லும்வரை பார்த்து நின்ற பின்னரே புறப்பட்டான். 
))))
மஹதி எதிர்பார்த்தாற்போல் வீட்டில் யாரும் இவளுக்காக காத்திருக்கவில்லை. குறிப்பாக அண்ணி பார்கவி, சாப்பிடும் நேரம் மட்டுமே தனது அறையில் இருந்து வெளியே வந்தாள். வந்தவளும் மஹதியிடம் ஓரிரு வார்த்தை பேசினாள் இல்லை. முகம் சுண்டி சிற்சில நேரம் கண்கள் கலங்கியதாகக் கூட தெரிந்தது.
இந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முடிவு கட்ட எண்ணிய மஹதி, காலை உணவு முடித்து பிள்ளைகள் பள்ளி செல்லும் வரை காத்திருந்து பின் நேரே அண்ணியின் அறைக்குச் சென்றாள். 
கதவை இருமுறை தட்டியவள், “அண்ணீ, வரலாமா?”, கேட்டாள். 
“வா மஹி”, முகத்தில் மலர்ச்சியோ வரவேற்கும் பாவனையோ இல்லாமல் ஒரு சம்பிரதாயமான வரவேற்பு.
“அண்ணி, இப்ப என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லியே. நல்லாத்தான் இருக்கேன்”
“ஹ்ம்ம். சரி உங்களுக்கு என்ன கோபம்? அத சொல்லுங்க?”
“நா யாரு உன்மேல கோபப்பட? அதான் சொல்லிட்டாரே, உங்க நொண்ணன்.. அவ வாழ்க்கை அவ இஷ்டம்ன்னு, நா ஏன் அதுக்குமேல பேசப்போறேன்?”,என்று நொடித்து இவளை விட்டு தள்ளி நடந்தாள்.
பார்கவியின் பேச்சில் இருந்து இது அண்ணாவுக்கும் அண்ணிக்குமான லடாய், என்பதை புரிந்து கொண்டு, எட்டி பார்கவியின் கையைப் பிடித்த மஹதி,  “அண்ணா சொன்னா..? நீங்க யாரோ ஆயிடுவீங்களா? அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நீங்க இப்போ என்மேல கோபப்பட்டே ஆகணும்”, என்று சிறுபிள்ளையாய் அடம் பிடித்தாள். 
இப்போது பார்கவியின் முகத்தின் புன்னகையின் கீற்று. மஹதியை பார்த்தவள், “உனக்கு ஆஷுவைப் பிடிச்சிருக்கா மஹி?”, என்று அமைதியாகக் கேட்க..
மஹதியின் மனதில் பட்டாம்பூச்சி சிறகடித்தது. “ஏன் கேக்கறீங்க அண்ணி?”
“இல்ல.. நேத்து அவ்ளோ நேரமா பே..சிட்டு இருந்தீங்களேன்னு கேட்டேன்”, இப்போது  பார்கவியின் கேள்வியில் கிண்டல் ஒளிந்திருந்தது.  
 “அது.. அண்ணி..”, வெட்கத்தின் சாயல் மஹதியின் முகத்தில் படிய, “நீங்க வெயிட் பண்ணினீங்களா அண்ணி? நான்தான் வர்றேன் ன்னு சொன்னேனே? ”, ‘ஐயையோ நாங்க பேசினத மட்டும்தான் பார்த்தீங்களா-ன்னு எப்படி கேக்கறது?’, திணறினாள். 
“ஆமா, பின்ன நீ போய் படுனு சொன்னா போயிடுவேனா என்ன? ரொம்ப நேரம் ஹால்-லதான் இருந்தேன். ஒரு மெசேஜ் போட்டுட்டு மொபைல ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிட்ட. சரி நீ திட்டினாலும் பரவாயில்லைன்னுதான் மறுபடியும் லான்-க்கு வந்தேன். அப்போ ஆஷுவோட  கை பிடிச்சுக்கிட்டு  என்னவோ மும்மரமா பேசிட்டு இருந்தியா? அப்டியே பக்-ன்னு ஆயிடுச்சு தெரியுமா?”, என்று பார்கவி சொல்லவும்..
‘அப்பாடி.. நல்ல வேளை பேசிட்டு இருக்கும்போதுதான் வந்தாங்களா?’, என்று ஆசுவாசம் ஆனவள், “நீங்க வந்தது தெரியாது அண்ணி,  அப்போவே எங்கிட்ட கேட்டிருக்கலாமில்ல?”
“ஐயையே, அதெப்பிடி நா கேக்கறது? கூட வந்த உங்க அண்ணாதான், உன்கிட்ட போகக் கூடாதுன்னு சொல்லிட்டாரே?”
“என்னது? அண்ணாவா? அவருமா வந்து பாத்தாரு?”, சங்கடத்தோடு  லஜ்ஜையும் சேர, நெளிந்தாள் பெண்.
“ஆமா, பார்ட்டி முடிச்சு உங்கண்ணா படுக்கப்  போயிட்டாரா?  அதுக்கப்பறமும் நா இங்க ஹால்லயே சுத்திட்டு இருந்தேனா?  நா தூங்க வரலைன்னு தெரிஞ்சு உங்கன்னா இங்க (ஹாலுக்கு) வந்து ‘என்ன பண்ற? ஏன் ரெஸ்ட்லஸ்ஸா இருக்க’ன்னு கேட்டாரா? அப்போதான்.., எங்கம்மா உன்னோட ட்ரஸ்க்கு கமெண்ட் பண்ணினதும் நீ அவங்களோட பேசினதை யும் சொன்னேன். அப்பறம் நீ கோச்சுக்கிட்டு அங்க பார்ட்டில ஓரமா தனியா உக்காந்துட்டு இருக்க-ன்னு அவர்கிட்ட சொன்னேனா?. உடனே அப்டியா-ன்னு கேட்டுட்டு உன்னைப் பாக்க வந்தார். நானும்தான். அப்போதான் நீ..”, என்று மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் நிறுத்தினாள் பார்கவி. 
‘சரிதான் முழுக்க நனைந்தபின் முக்காடெதற்கு?’ என்று எண்ணிய மஹதி, “ஆமா அண்ணி”, என்று சொல்லி, அண்ணியைப் பார்த்து, “நா ஏட்டிய மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்”, என்றாள்.
மஹதியின் பதிலைக் கேட்ட பார்கவியிடம் சில நொடி மௌனம். பின் மெதுவாக, “இதை நீ முன்னாடியே சொல்லியிருக்கலாமில்ல?, வீணா அம்மா வீட்ல ஆசைய வளத்துட்டு இருக்க மாட்டாங்க பாரு?”, என்று பார்கவி கேட்க..மஹதிக்கு என்ன பதில் சொல்வதெனத்  தெரியவில்லை. 
நேற்று இரவுதான் அப்பா பார்த்த மாப்பிள்ளை ஆஷு என்று தனக்குத் தெரிந்தது என்றா சொல்ல முடியும்? “இல்ல அண்ணி, லவ்வா இல்லையான்னு யோசிச்சிட்டே இருந்தோம். எங்களுக்கே உறுதியா தெரியாம சொல்லகூடாதில்ல? அதான்…”
“ஹ்ம்ம். சரி போ இன்னாருக்கு இன்னார்-ங்கிறதெல்லாம் ஏற்கனவே எழுதி வச்சாச்சு.அது படிதான் எல்லாம் நடக்கும். சரி சரி அப்படியே ஆஷுகிட்ட அவங்க வீட்ல பொண்ணு கேக்கற பழக்கமெல்லாம் இருக்கா, என்ன ஸம்ப்ரதாயம்னு  கேட்டுக்கோ. இல்ல நா ஆஷுகிட்ட பேசட்டுமா?”
“அடடா அண்ணி, மூச்சு விடுங்க. நேத்துதான் ப்ரபோஸ் பண்ணி ஓகே ஆயிருக்கு.”, என்று சிரிக்க..
“இப்போவே லேட்டாயிடுச்சு மஹி, சட்டுனு மேரேஜ் முடிச்சிடலாமே?”
“நாங்களும் அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கோம் அண்ணி. முதல்ல எங்க விஷயத்தை அண்ணா கிட்ட சொல்றேன். ஓகே சொல்வாரா தெரில..?”
“அதல்லாம் நேத்தே ஓகே சொல்லிட்டார்.”
“ஆங்..?”
“ நீ அங்க ஆஷுவோட பேசிட்டு இருந்த இல்ல? அப்போ நா உன்னைக் கூப்பிடலாம்னு வந்தேன். ஆனா உங்கண்ணா என்னை பிடிச்சு தரதரன்னு உள்ள இழுத்துட்டு வந்தார். எனக்கா நீ அங்க ஆஷுகூட தனியா இருக்கியேன்னு டென்ஷன். ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டதுக்கு அவங்க ரெண்டு பேரும் சின்னப்பசங்க கிடையாது. அவங்க லைஃப் அவங்க முடிவு பண்ணிக்கட்டும்’ ன்னு சொல்லிட்டாரு.”
“அப்போ உங்கண்ணா கிட்ட, ‘ஏங்க? முரளிக்கு மஹிய குடுத்தா சொந்தம் விட்டுப்போகாதேன்னு ..ன்னு சொன்னேனா?”, பார்கவியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கோபமுகமாக மாறியது. 
“ம்ம்?
“உங்கண்ணா கேட்டாரே ஒரு கேள்வி, ‘எனக்கு உதவின்னு தேவைப்படறப்போ சொந்த பந்தம் யாரும் கூட நிக்கல. ஆஷுதான் அவன் பேர்ல லோன் போட்டு குடுத்தான். அவனுக்கு என்ன தேவை எனக்கு லோன் போட்டுத் தரணும்னு?’ங்கிறார். என்னவோ என் தம்பி கைல பணத்தை வச்சிக்கிட்டு இல்லன்னு சொன்னா மாதிரி. ஏதாவது தேவைன்னா வாயத் திறந்து கேட்டாத்தான தெரியும்?. அமுக்குளி மாதிரி எல்லாத்தையும் மனசுல வச்சிக்கிட்டு இருந்தா அடுத்தவங்களுக்கு எப்படி தெரியும்?”, முசுமுசுவென மூச்சிரைத்தது. 
சுந்தரண்ணா தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘பார்கவி ப்ரொடக்ஷன்’, என்று பெயர் வைத்து விட்டு, அதே நேரத்தில் விவாகரத்துக்கு சம்மதம் என்று கையெழுத்திட்ட விளைவு இப்படி கோபமாக கொப்பளிக்கிறது என்று புரிந்து கொண்டாள் மஹதி.  
“அடுத்தவங்களுக்குத் தெரிலைன்னா பரவால்ல அண்ணி, ஆனா பெட்டர் ஹாஃப்க்கே தெரிலைன்னுதான் அண்ணாவோட கோபம்னு தோணுது.”
“அதான பாத்தேன். தனித்தனி தீவு மாதிரி இருந்தாலும் நீங்க நாலு பேரும் ஒண்ணுதான். உங்கண்ணனை விட்டுக் குடுப்பியா நீ? சரி சரி இப்போ என் பஞ்சாயத்து எதுக்கு?  உன் லவ்-க்கு அவர் க்ரீன் சிக்னல் தந்துட்டார். அதத்தான் சொல்ல வந்தேன்”, என்றாள் பார்கவி.
“ஈஸிட்!?”
“ம்ம்”, என்று தலையை மேலும் கீழுமாக பார்கவி ஆட்ட.., மஹதிக்கு ஸ்ரீநிதியின் நினைவு வந்தது. 
“வாவ்.! அண்ணா இவ்ளோ ஈஸியா ஓகே சொல்வாருன்னு நினைக்கலண்ணி”,  பார்கவியின் கன்னத்தை கிள்ளி, “லவ்லி அண்ணி”, மஹதி சிரித்தாள். 
“நா ஆஷுகிட்ட கேக்க சொன்ன விஷயம்..?”
அவளைப்போலவே தலையாட்டி, “கேக்கறேன்.. கேக்கறேன். ஞாபகம் இருக்கு”, என்று சொல்லி, “சரி அண்ணி, வேலை இருக்கு. அப்பறம் பாக்கலாம்”
“ஓகே மஹி”
)))))))))))
தனது அறைக்கு வந்த மஹதி அடுத்ததாக  தொடர்பு கொண்டது தனது சின்ன அண்ணனான ரங்காவை. இரண்டாவது ரிங்-கில் அவன் தொடர்பு கொண்டு, “மஹி?”, என்றான்.
“யா. இட்ஸ் மீ.”
“ம்ம். சொல்லு மஹி, ஏதாவது இம்பார்ட்டெண்ட் மேட்டரா?”  
“நா விஷயத்தை சொல்றேன் அது முக்கியமா இல்லையான்னு நீதான் சொல்லணும்”, பீடிகையோடு ஆரம்பிக்க..
மஹ்தியின் குதூகலம் மற்றொன்றை நினைவு படுத்த, ரங்காவிற்கு மென் சிரிப்பு ஒன்று தோன்றி மறைந்தது. “சரி சொல்லு”
“அண்ணா, நா ஏட்டியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கறேன்”
“………….”, நீண்ட நிசப்தம்.
“அண்ணா இருக்கியா..?”, “அண்ணா.. ரங்கண்..ணா…ஆ”, என மஹதி கத்தினாள்.
“ஷ்.. மஹி”, என்று கடிந்து காதைத் தேய்த்துக் கொண்டான்.
“சத்தமே இல்லாம இருந்தியா அதான்..”
“ஜஸ்ட், ஐ வாண்ட் டு .. டு டைஜஸ்ட் தி மேட்டர்”. கொஞ்சம் குளறலாக இருந்ததோ?
“ஓகே…நீங்க என்ன சொல்றீங்க?”
“அவன் ரொம்ப லக்கி-ன்னு சொல்லுவேன்”, எனறு தனது சம்மதத்தை மறைமுகமாகத் தெரிவித்தான்.   மேலும் சிறிது நேரம் பேசிய பின் அலைபேசியை வைத்த ரங்கராஜன் எதிரே இருந்த சுவற்றை வெறித்தான். அவன் கண்களில் வெறுமை. 

Advertisement