Advertisement

“ஆனாலும் அப்பப்போ ‘அம்மா இல்லாத பொண்ணுக்கு செல்லம் அதிகம் குடுக்காதீங்கன்னு பாட்டிமா சொல்லுவாங்க. அந்த பேச்சு எப்படியும் காதுல விழுந்துடும். ‘அம்மா இல்லாத பொண்ணு’ன்னு . “
“ஒருநாள் அப்பாகிட்ட கேட்டேன். ஏம்ப்பா அம்மா சின்ன வயசுலயே செத்துபோனாங்க? நா பிறந்ததாலயான்னு கேட்டேன்.”
“அதுக்கு அப்பா சொன்னாரு, அவ ஜர்னி முடிஞ்சு போச்சுடா. அவளோட டெஸ்டினி ஆங்.. விதி முடிஞ்சி போச்சு. சோ  ரெஸ்ட் எடுக்க போய்ட்டா. ஆனா, அவ இருந்த வரைக்கும் அவளோட தடத்தை பதிச்சிட்டுத்தான் போனா. நீ நா ரங்கா சுந்தர் பூர்ணா எல்லாரும் அப்படித்தான். நமக்கான நேரம் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான்.”
“ஆனா அது முடியற வரைக்கும் நாம நம்ம கடமைகளை செய்ஞ்சிட்டே இருக்கனும்-ன்னு சொல்லிட்டு, மஹி.., உனக்கு ராபர்ட் ஃப்ராஸ்ட்-டோட கவிதை தெரியுமா-ன்னு கேட்டார்.”
“அப்போ நா டென்த் படிச்சிட்டு இருந்தேன். நல்லா ஞாபகம் இருக்கு. சம்மர் ஹாலிடேஸ், நாங்க நாலு பேரும் இங்க அப்பாவோட இருந்தோம். அப்போதான் அந்த கவிதைக்கு அர்த்தம் சொல்லித் தந்தார். ஸ்டாப்பிங் பை வுட்ஸ் கவிதை.”
“அப்போதான் அவர் எவ்ளோ தெளிவான மனுஷனா இருக்காருன்னு எனக்குத் தெரிஞ்சுது. எங்கயும் எதிலேயும் தங்கிடாம, தேங்கி நிக்காம இருக்க அவரை பாத்துதான் கத்துக்கிட்டேன். அதுக்கப்பறம் யார் என்ன சொன்னாலும் அது என்னை பாதிக்காம இருக்க கத்துக்கிட்டேன். அவர் சொன்னதெல்லாம் ஃபாலோ பண்ணினேன். அப்பா சொன்னா சரியா இருக்கும்னு அபார நம்பிக்கை.”
“ஆனா, ப்ச். அவர் எனக்கு செலக்ட் பண்ணின க்ரூம் முரளின்னு சொல்றாங்க. முரளிகிட்ட எனக்கு அப்படியொரு பீலிங்கே வரல. ஹஹ அதுக்குள்ளஎன்னமோ நா அவங்க மருமகளாவே ஆயிட்டா மாதிரி,  முரளி அம்மா நா ஸ்விம் சூட் போட்டுட்டு பார்ட்டிக்கு வந்தா மாதிரி பேசறாங்க. தட் சேம் தாயில்லா பொண்ணு டையலாக். ஹெல் வித் ஹர்.”
“அண்ணியை பொறுத்தவரைக்கும் ஓகே. ஆனா மத்தவங்க..? எங்கப்பா கண்டிப்பா இப்படி ஓர் பேமிலியோட என்னை சேர்த்து வைக்க நினைச்சே இருக்க மாட்டாரு. ஆனா.. அவர் கடைசியா எனக்கு அனுப்பின வீடியோல என்னமோ சொல்ல வந்து சொல்லாம விட்டுட்டார். நிறைய தடவ போட்டு பாத்துட்டேன். ப்ளாங்க்ஸ்..  ஒரு முடிக்காத வாக்கியம்.. அதுல இருக்கு. என்னனு எனக்குத் தெரில.”
“ப்ச். அப்பா நீங்க போனதுக்கப்பறம்தான் லோன்லினஸ் -ன்னா என்னன்னு புரியுது. என்னவோ இவ்ளோ பெரிய உலகத்துல, சுத்தி இத்தனை ஆட்கள் இருக்கும்போதும் நா மட்டும் தனியா இருக்கா மாதிரி ஒரு ஃபீல்”, ஆஷுவை மறந்துபோனவளாக தந்தையோடு பேசினாள்.
பின் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். “தொண்டையெல்லாம் ட்ரை-யா இருக்கு. குடிக்க ஏதாவது வேணும்”, என்றாள்.
கடிகாரம் பார்த்தான், மணி அதிகாலை இரண்டு நாற்பது  என்றது. சுற்றி ஆளரவம் காணப்படவில்லை. முன்பே இருள் சூழ்ந்த இடம்தான் இப்போது அலங்கார விளக்குகளும் இல்லாமல்போய் நீச்சல் குள விளக்கு மட்டும் சோபையாய் எரிந்து கொண்டு இருந்தது.
உணவு ஏற்பாடு செய்தவர்கள் டேபிள் சேர்களை நாளை வந்து எடுத்து வைப்பார்கள் போலும், என்று எண்ணியவன், அங்கிருந்த சீல் பிரிக்காத தண்ணீர் பாட்டில் ஒன்றை  கொணர்ந்து மஹதியிடம் குடுத்தான்.
பின் மெதுவாக, “மதி நா ஒன்னு சொல்லணும்”, என்றான் ஆஷு. இன்னமும் மஹியின் அருகேதான் நின்று கொண்டு இருந்தான்.
அண்ணாந்து தண்ணீர் குடித்தவாறே மஹதி, “ம்ம்.?”, என்று வினவ..
“அந்த பிளாங்க் -ல ராஜ் ஃபில் பண்ண நினைச்சது  என்னைத்தான்”, என்றான்.
மஹிக்கு.,  குடித்த தண்ணீர் புரை ஏறியது. “வாட்? வாட்வாட்?”, தண்ணீர் திடீரென சுவாசப்பாதையில் போனதால் லொக் லொக் கென்று இருமல் வர, அவள் மனசுக்குள் மத்தாப்பூ சிதறல்.
குனிந்து தனது விரல் நகங்களை ஆராய்ச்சி செய்த  ஆஷுதோஷ், “ராஜ் போறதுக்கு கொஞ்ச நாள்  முன்னாடி இருக்கும். எனக்கு மாப்பிள்ளையா வர்றியா யங் மேன்-ன்னு என்கிட்ட கேட்டார். எனக்கு என்ன சொல்றதுன்னு சட்டுனு பதில் வரல. பட் அதுக்கப்பறம் ‘ராஜ், டீல் எனக்கும் உங்களுக்கும்ன்னா எப்பவும் ஒத்துப்போகும். தவிர, நீங்க சொன்னா கண்ணை மூடிட்டு மறு  பேச்சில்லாம செய்வேன். ஆனா இதுல  மூணாவதா ஒரு ஆள் சம்பந்தப்படறாங்க அதுவும் குறிப்பா உங்க டாட்டர். அவங்க மனசுல என்ன வச்சிருக்காங்களோ?, ஸோ அப்பறம் பாக்கலாம்ன்னு அந்த டாபிக்கை முடிச்சிட்டேன்.”
ஆஷு பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாலும் பெண்ணவளின் மனதுக்குள், ‘ஷப்பாடி..  ஓ மை காட் ! கடைசில இவன்தானா? அப்பா நினைச்சது இவனத்தானா?’, மகிழ்ச்சியில் உள்ளம் துள்ள,எதிரே இருந்தவனை விழுங்கி விடுபவளைப் போல பார்த்தாள் மஹதி.
இன்னமும் குனிந்த தலை நிமிராமல், “ஆனா, அது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்ப தெரியுது”, என்றவன், நிமிர்ந்து மஹதியைப் பார்த்து அவளது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா மதி?”, என்று கேட்டான்.
மதி ஆனந்தத்தில் திக்கு முக்காடியவளின் கண்களில் நீர் திரையிட எழுந்து நின்றவள், ஒன்பதாவது மேகத்தில் மிதந்தாள் என்றே சொல்லலாம்.
“நீங்க..?”, அடுத்து என்ன சொல்வதெனத் தெரியாமல்.. திகைத்து..
“எஸ் எஸ்”, என்று தனது சம்மதத்தை சொல்லி சிரித்து..
“அப்பா செலெக்ஷன்?”, என்று திணறிய மஹதி ஆஷுதோஷின் கையை இறுக பற்றியிருந்தாள்.
மஹதியின் முகம் காட்டிய நவரசத்தில் தனக்கான பிடித்தம் தெரிய, “ம்ம்ம்”, என்று தலையசைத்த ஆஷு, தன்னவளை இடையோடு அனைத்துப் பிடிக்க, விருப்பத்தோடு ஒன்றினாள் ஏந்திழையாள்.
மேலும் சில நிமிடங்கள் நீடித்த அணைப்பு, உணர்வுகளை தட்டி எழுப்பி இன்னுமின்னும் முன்னேறத் தூண்ட,  எல்லாவற்றுக்கும் கடிவாளமிட்டு விலக நினைத்தனர். நிச்சயமாக விலக நினைத்தார்கள்தான். என்னவோ மதிக்கு அவன் முகம் பார்க்க தயக்கம் வர.. மஹதி நிமிர்ந்தாள் இல்லை.
மதியின் நாணம்கொண்ட மதிமுகம் பார்க்க அழகாய் இருக்க.. அவளின் இதழீர்ப்பு விசையால் இழுபட்டு, அதரங்களை முற்றுகையிட நினைக்க, திடுக்கிட்ட பெண் கையால் அவன் வாய் மூடி, கண்ணால் வேண்டாம் என்றாள்.
“வொய் மதி..?”,சருகாய் குரல்.
“அது.. நா ட்ரின்க் பண்ணியிருக்கேன்..”, என்றாள் மதி.
“ஹஹஹ”, உடல்குலுங்க சிரித்த ஆஷு, “நீ குடிச்சது ஒரு அம்பது எம்.எல் இருக்குமா? என்னவோ மொடாக் குடிகாரி மாதிரி  சொல்ற?”, நகைப்பினூடே கேட்டான். ஒருமை அவனுக்கு இப்போது இயல்பாக வந்தது.
“உவ்வக். கொஞ்சமா குடிச்சாலும் நிறையா குடிச்சாலும் ஸ்மெல் ஸ்மெல்தானே?”, முகத்தை சுளித்தாள்.
“அப்பறம் ஏன் குடிச்ச?”
“நான்லாம் குடிக்கக்கூடாதுன்னு சொன்னீங்க இல்ல? அதான். ஆனா, இப்போ… தட் டூ ஃபர்ஸ்ட் டைம்..”, என்று பொல்லாத காரண காரியம் சொல்ல…
“ஓகே நீ குடிச்சிருக்கறதுதான உன் ப்ராப்ளம்?”, என்ற ஆஷு பக்கவாட்டில் இருந்த மேஜையின் மீது அவன் கொண்டு வந்திருந்த மதுக்கிண்ணம் இருக்க, அதை ஒரு கையால் எடுத்து மடக்கென விழுங்கி.. “இப்ப நானும் குடிச்சிருக்கேன், ஸ்மெல்க்கு ஸ்மெல் சரியா போயிடும்தான?”, என கூறி கண்சிமிட்டி அவன் காரியத்தைத் தொடர.., மஹதியின் முகம், அதிகாலை வானம் போல செஞ்சூரியனாய் பிரகாசித்தது.
“ஏட்டி ஐ லவ் யூ”, சொன்னாள்.
ஆணுக்குப் பெண்ணை காதலிப்பதிலா கர்வம் வரும்? இல்லவே இல்லை. இதோ இளங்காளை இவன் கட்டியங்கூறுவான்.. ‘தன்னவளால் காதலிக்கப்படுவதில்தான் அவனுக்கு மேலான கர்வம் வரும்’. ரேவாவின் வெற்றித் தருணத்தை விட ஆஷுதோஷ்க்கு இது இனித்தது.
இனி தன் வாழ்வில் தனிமை என்பதே இல்லை என்ற உணர்வு உவகை தர, விருப்பத்தோடு மீண்டும் இதழினைத்தாள் பெண்.

Advertisement