Advertisement

 நீயொரு திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 12 2
அவர் சென்ற பிறகு, “ஹ்ம்ம். இது சம்பந்தமாத்தான் காலைலேர்ந்து சுத்திட்டு இருந்தீங்களா?”
“ம்ம்.இது இல்லன்னா பின்னால கஷ்டப்படவேண்டி வரும். சுந்தர் சார் பிஸின்னு தெரியும், ரங்கா ஊர்ல இல்ல, சோ முக்கியமான சிலதை பாக்கணுமில்லியா?”
“நோ நோ இட்ஸ் ஓகே. ஜஸ்ட் காணோமேன்னு கேட்டேன்.”
“தேடினீங்களா எ யூனிட்-லேயே ன்ன?”
“யா,நேத்து நைட் படுக்கும்போது உங்க ரூம் பாத்தேன். லைட் எரியலை ..”
“நேத்து நைட் இங்க புரொடக்ஷன் யூனிட் -லேயே படுத்திட்டேன். காலைல குளிச்சு ப்ரெஷப் ஆறதுக்குத்தான் வீட்டிற்கு வந்தேன்.”
“ஓ!”
“அப்பறம் ஒரு விஷயம், நா இங்க ஆபீஸ் பக்கத்துல ஒரு ரூம் இல்லனா வீடு பாத்துக்கலாம்னு இருக்கேன், இனிமே இப்படி அடிக்கடி நைட் தங்கவேண்டி இருக்கும்.”
“ஓ! ஆனா..?”, ஏன் என்று கேட்க நினைத்தவள், அப்பா இல்லாத வீட்டில் அவன் சகஜமாக இருக்கவில்லை, தனியே உண்கிறான். கிட்டத்தட்ட உறங்க மட்டுமே அங்கே செல்வது என்று வைத்துக் கொண்டுள்ளதை உணர்ந்தவள், “ஓகே உங்க இஷ்டம் பட்.. நா அப்ராட் போயிடுவேன், அண்ணாவும் வீட்ல இல்ல, சுந்தரண்ணா ஃபேமிலி இருபங்களான்னு தெரில. சோ எதுக்கும் நீங்க மொத்தமா வெக்கெட் பண்ணாதீங்க, நோ நோ நா உங்கள வீட்டை பாத்துக்க சொல்லல. ஆனா நீங்க இருந்தா நல்லாயிருக்கும்”, என்றாள்.  
‘இவள் நன்றாக பேசத் தெரிந்தவள்’, “பாக்கறேன்.என் வசதிக்கு இங்க பக்கத்துல ரூம் எடுத்துக்கறேன்”, என்றவன், “ஓகே நா ஃபாக்டரி போறேன். ஏதாவது தேவைன்னா கால் மீ”, என்று விட்டு சென்றான். 
தினசரி அலுவல்களை முடித்து மாலை ஐந்து மணி சுமாருக்கு தனது அலுவலகத்தில் இருந்து மஹதி புறப்பட நினைக்க, சொல்லி வைத்தாற்போல் சுந்தர் அலுவலகம் வந்தான். 
“ஹாய் அண்ணா”
“ஹாய் டா, பேப்பர்ஸ்-லாம் ரெடி பண்ணிட்டியா மஹி? ஆடிட்டர் அங்கிள் வந்தாரா?”
“வந்தாருன்னா, ஏட்டி அங்கிள் வீட்டுக்கே போயி கூட்டிட்டு வந்திட்டார்.”
தங்கை யாரைச் சொல்கிறாள்? என்பதுபோல பார்த்த சுந்தர், ஆஷுவைத்தான் AT என்று சுருக்கி விளிக்கிறாள் எனப் புரிந்து,  “ஆஷு? ஆஷுதானே? அவன்ட்ட இது சம்பந்தமா ஞாபகப்படுத்துன்னு சொல்லியிருந்தேன் வேலையே முடிச்சிட்டான்.சரி, உனக்கொண்ணும் வேலை இல்லியே?புறப்படலாமா?”, என்று அண்ணன் கேட்க..
“இதோ..”, என்று தனது கைப்பையை எடுத்துக் கொண்டாள். வெளியே லிப்ட்டில் இறங்கும்போது முரளியின் ஞாபகம் வந்தது. வீட்டிலிருந்து வரும்போது தன்னோடு வந்தான், இப்போது எப்படி அவனை விட்டு செல்வது? ‘சரி, ஒரு போன் பண்ணி நா வந்த கார்-ல வந்துட சொல்லிட்டு கிளம்பிடலாம்’, என அவனை பேசியில் அழைக்க நினைத்தாள்.
“அண்ணா, கொஞ்சம் முரளி நம்பர் சொல்லுங்க”
“உன்கிட்ட இல்லயா? சரி மெசேஜ் அனுப்பறேன். நோட் பண்ணிக்கோ”,என்றான்.
சுந்தர் அனுப்பிய தகவலில் இருந்த எண்களை அழுத்திவிட்டு மறுமுனை தொடர்பு கொள்ளக் காத்திருந்தாள். அது முழுவதுமாக அடித்து ஓய, “ம்ச், அண்ணா ஆட்டோமேஷன் டிபார்ட்மென்ட் நம்பர் குடுங்க..”
“முரளி ஆட்டோமேஷனுக்கா போறேன்னு சொன்னான்?”
“அவர் சொன்னதால ஏட்டி அங்க அனுப்பினாரா  என்னன்னு தெரியாது, ஆனா, முரளி ஹாப்பி, அவ்ளோதான்”, என்று மஹதி சொல்லும்போதே, சுந்தர், ‘XXXX”, என்று துறைவாரி அணுகல் எண்களை பகிர்ந்தான். சில நொடிகளில், அதில், “ஹலோ”, என்று அழுத்தமாக ஏட்டியின் குரல் கேட்க..
‘இவன் அங்கே என்ன செய்கிறான்?’, “ஏட்டி..?”, அவன்தானா என்று சந்தேகமாக மஹதி கேட்க..  
“எஸ் சொல்லுங்க..”, சற்றே பொறுமையிழந்த குரலில் ஏட்டியும், அதே நேரத்தில் இந்த பக்கம் சுந்தரண்ணாவும், “ஆஷுவா மஹி..?”, என்று கேட்டு கைநீட்டி அலைபேசியைக் கேட்க..
“ஆமாண்ணா”, சொல்லி மஹதி பேசியை அண்ணனிடம் கொடுத்தாள். 
“ஹலோ ஆஷு நா சுந்தர், வீட்டுக்கு போறேன்.உன் வேலை முடிஞ்சுதுன்னா எங்களோட ஜாயின் பண்ணிக்கோ, கொஞ்சம் பேசணும்”
“ஒரு பத்து நிமிஷமாகும் சார்”
“சரி வெயிட் பண்ணட்டா? இல்ல வீட்டுக்கு போகட்டுமா?”
“வெயிட் பண்ணுங்க சார் வந்துடறேன்.”
“ஓகே”,என்ற சுந்தர் தொடர்பை துண்டிக்க நினைக்க..
“அண்ணா ண்ணா, ஒரு நிமிஷம்”, சொல்லி பேசியைஅவசரமாக  கை மாற்றிக்கொண்டு, “ஏட்டி, முரளி இருக்காரா?”
“ம்ம். பிசியா இருக்கார். ஏதாவது சொல்லனுமா?”
“ஆமா, நா அண்ணாவோட கிளம்பறேன், அவர் வரும்போது என்னோட கார்ல வந்துட சொன்னேன்-ன்னு இன்ஃபார்ம் பண்ணிடுங்க.”
“ம்ம்”, டொக்.
காதிலிருந்து போனை எடுத்து ஒரு முறை பார்த்துவிட்டு, ‘என்ன அவசரமோ?’ என்று உதடு சுழித்தாள்.
சுந்தர்க்கு அடுத்தடுத்து கால்கள் வர, பேசியபடி நடந்து போர்டிகோவிற்கு வந்தார்கள். இவர்கள் வெளியே வரவும், கார் ட்ரைவர் காரை கொணர்ந்து அருகே நிறுத்தினார். 
போனில் பேசியவாறே வந்த சுந்தர் எப்போதும்போல் வழமையாக முன்னிருக்கையில்  ஏற, மஹதி பின்னால் அமர்ந்தாள். சில நொடிகளில் ஆஷுதோஷ்ம் வந்துசேர, சுந்தர் ‘ஏறிக்கொள்’, என்பது போல அவனைப் பார்த்து கையசைத்தான். 
காரும் கிளம்பியிருந்ததால், ‘எதற்கு வர சொல்லி இருப்பான்?’, என்ற யோசனையோடு சுந்தரையே பார்த்தபடி, மஹதி பின்னால் இருப்பது தெரியாமல் படக்கென கதவைத் திறந்து தனது ஷோல்டர் பேகை உள்ளே சீட்டில் போட, அது மஹதியின் முகத்தில் மோதி மடியில் விழுந்தது.
திடீரென கனமான பை ஒன்று முகத்தில் விழுமென யூகிக்காத மஹதி, ‘ஷ்..’, என்று சத்தம் போட, அவளை பார்த்ததும் திகைத்த ஆஷு, ‘ஓ.. மை..’ விலுக்கென நிமிர்ந்தான். பின்னிருக்கையில் ஏறுவதற்காக ஆஷு பாதியாக குனிந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு காலையும் உள்ளே வைக்க தயாராக நின்றான். 
தன்னியல்பாக “ஸாரி, ஸாரி, கவனிக்கல”, ஆஷுவிடமிருந்து வந்தது. அதற்குள் அவனது தோள் பையின் மேல்புற ஜிப் மஹதியின் நெற்றியில் கோடு கீற்றாக கிழித்திருந்தது. மஹதிகுத் தெரியவில்லை அதனால் அதை கவனிக்காமல், ஆஷுதோஷுக்கு அமர்வதற்கு இடமளித்து தள்ளி அமர்ந்தாள்.
இவன்தான் மஹதியையே பார்த்துக் கொண்டுள்ளானே? அவளது நெற்றியில் முதலில் இளஞ்சிவப்பு நிறமாக தெரிந்த கோடு, ஓரிரு நொடிகளில் சிகப்பாய் மாறியதை கவனித்தானே? “மை குட்னஸ்.பிளட்!”, என்று அதிர்ந்து தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து அவள் கீறலில் வைத்து அழுத்த, மஹதி அதை நெற்றியோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள். பின் ‘ரத்தமா வருகிறது?’, என்று கைக்குட்டையை எடுத்துப் பார்த்தாள்.
அதுவரை யாருடனோ போனில் பேசிய சுந்தர், திரும்பி இவர்களை பார்த்து “என்னாச்சு மஹி?”, என்று வினவ,
கைக்குட்டையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பொடிப்பொடி ரத்தத் துணுக்கு. “ஒண்ணுமில்லன்னா, ஜிப் லைட்டா கீறிடுச்சி”, என்ற மஹதி கைக்குட்டையை நீக்க நினைக்க, அருகிலிருந்த ஆஷுவோ “ம்ப்ச். கொஞ்ச நேரத்துக்கு அப்டியே இருக்கட்டும்”, என்று கடிந்து சொல்லிவிட்டு சுந்தரிடம் திருப்பி, “சார் அவசரமா வரச் சொன்னீங்கன்னு வந்தேன். உங்க மேல கவனமா இருந்ததால பின்னால இவங்க இருக்கறத பாக்கல”, என்றான் குற்றம் சாட்டும் குரலில்.
சுந்தர் ஆஷு சொன்னதை பாதி காதில் வாங்கி, “மஹி? ஆர் யூ ஓகே?”, தங்கையைப் பார்த்து கேட்டான்.
மஹதி, “ஐம் ஆல் ரைட்-ண்ணா”, சொல்ல..
சுந்தர் ஆஷுவிடம் திரும்பி, “ஆங். ஆஷு..அது என்ன அவசரம்னா ரெண்டு கோடி கடன் வாங்கினோமில்லையா? அதை திருப்பி குடுத்துடலாம்னு நினைக்கறேன். பார்கவி ப்ரொடக்ஷன்ஸ்-ல டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் குடுத்த பணம் இருக்கு. சோ..”
‘இதான் அந்த அவசரமான வேலையா? கடன் வாங்கறதுக்கும் அவசரம் திருப்பி குடுக்கறதுக்கும் அவசரம்.முன்ன பின்ன யோசிக்கறதெல்லாம் இவர் அகராதில இல்ல போல’, பொதுவாக ஆஷு அவரசப்படுபவன் அல்ல. தீர ஆலோசித்து பின் வேகமாக செயல்படுபவன், சுந்தரோ இரண்டாம் ரகம். வேகமாக செயல்பட்டு பின் தீர ஆலோசிப்பவன்.
“இல்ல சார், இப்போ அதை ரீ பே பண்ண வேண்டாம். இண்டிஸ்ட்ரிக்கு லோன் மூலமா வந்த தொகைங்கிறதால, உங்க கம்பெனி ஃபன்ட்ஸ் வச்சு இந்த லோனை அடைக்க முடியாது. அதனால மாசாமாசம் உங்களுக்கு வர்ற டிவிட்டன்ட-ல ஒரு பங்கை, நாம இப்போ தயாரிக்கிற மெஷினுக்கு உண்டான ராயல்டியோட சேர்த்துக் குடுங்க. அதை வச்சே ஈ எம் ஐ  கட்டிடலாம்.”
“ம்ம்.அப்படியா சொல்ற?”, தாடை சொறிந்தான்.
“பேங்க் வட்டி ரொம்ப கம்மி. இந்த வட்டிக்கு வெளிய எவனும் கடன் தரமாட்டான். சோ முதல்ல வெளிக் கடன்களை முடிங்க, தென் நெக்ஸ்ட் பில்ம் பாருங்க. இப்போ இருக்கிற அமௌண்ட்டை உங்க ரெண்டாவது படம் பாதில நிக்கிதுன்னு சொன்னீங்கல்ல  அதுல போடுங்க.””, என்று ஆலோசனை தந்தான்.
“எஸ் எஸ். நீ சொன்னாலும் சொல்லலைனாலும் இன்னும் டென் டேஸ்-ல பாதில நிக்கற அந்த படத்தை ஆரம்பிக்கத்தான் போறேன்”, சுந்தர் முகம் மலர சொன்னான். முதல் வெற்றியை சுவைத்து விட்டான் அல்லவா? அதைப் போல ஊக்கம் தரும் உணர்வு வேறேதுமில்லை.
அதன் பின்னர் முழுக்க முழுக்க நிறுவனம் குறித்த விபரங்களை ஆண் மக்களிருவரும் பேச, மஹதி அவ்வுரையாடலை அமைதியாக கவனித்தவாறு வந்தாள். ஏனெனில் இதில் மஹதி கத்துக்குட்டி. சுந்தர், ஏட்டி இருவருக்கும் அனுபவசாலிகள்.
மேலும் சில நிமிடங்கள் அவர்களது பேச்சு தொடர, நெற்றியில் இருந்து ஆஷுவின் கைக்குட்டையை மெல்ல எடுத்தாள். காரிலிருந்து வந்த ஏசி காற்று பட்டதும் கீறல் சற்றே காந்தியது. கைப்பையில் இருந்து டிஷ்யூ எடுக்கலாம் என மஹதி நினைக்க, அப்போதுதான் தனது இடது கையின் மீது ஏட்டி அவனது கையை வைத்துப் பிடித்திருப்பதை உணர்ந்தாள்.
சில நிமிடங்களுக்கு முன்பு, கர்சீப்பை நெற்றியில் இருந்து எடுக்காதே, அப்படியே கொஞ்ச நேரம் இருக்கட்டும் என்று கடிந்தபோது ஆஷு மஹதியின் கை பிடித்து தடுத்தானல்லவா? அப்போது பிடித்த பிடி, இன்னும் அப்படியே தொடர்வதைக் கண்டவள், மெல்ல கையை அவன் பிடியில் இருந்து உருவிக் கொண்டாள்.
காரின் பின் இருக்கையில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் கண்ணியமான இடைவெளி இருக்கவே செய்தது. ‘இல்ல ஸார், டாக்ஸ் வந்தா பரவால்ல, நம்ம டர்ன் ஓவர்தான் முக்கியம்..’, சுந்தரண்ணாவோடு பேசிக்கொண்டிருந்தான்.

Advertisement