Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

9

நேரம் வேகமாகத்தான் சென்றது, மதியம், செந்தில் கால் செய்தார் விசுவிற்கு.. “டைம் ஆச்சு சர்.. இன்னும் பத்து நிமிஷத்தில் எக்ஸாம் முடிந்திடும்.. நீங்க கிளம்பினாள் சரியாக இருக்கும்” என அறிவித்தார்.

விசு, கிளம்ப எத்தனிக்கும் போதுதான் அவனின் இன்னொரு நண்பன், விசு வந்திருப்பது அறிந்து.. அந்த அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான். ஆக நேரம் எடுத்துக் கொண்டான் விசு.

இங்கே கல்லூரியில்.. எப்போதும் எக்ஸாம் முடிந்ததும், வாசுகி வந்து நின்றுவிடுவார்.. பவானி எக்ஸாம் எழுதும் ஹால் வாசலில். எனவே, கிளம்பி விடுவாள் பவானி. இன்று பத்து நிமிடம் ஆகியும் விசு வரவில்லை எனவும்.. ‘ஸ்ரீயை பார்த்துட்டு வரலாமா..’ என எண்ணம் வந்தது.

ஆனாலும், ராகவ் தன் நண்பர்கள் குழாம்முடன் இருந்தான், சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டிருந்தான். பவானி “ராகவ்..” என்றாள். வந்து நின்றான்.

பவானி “ஸ்ரீ, எந்த ரூம்” என்றாள்.

ராகவ் அவளை முறைத்தான்.. கூடவே “நான் அவன் கூட பேசறதில்லை, பார்க்கறதில்லை. எனக்கு தெரியாது. நான் உன் கார் வந்ததும் சொல்றேன்.. போ..” என்றான் சின்ன குரலில்.

பவானி, எங்கும் நகராமல் அந்த திட்டிலேயே அமர்ந்துக் கொண்டாள். ஸ்ரீயை பார்க்கும் ஆவல் வந்தது.. இருந்தும் ராகவ் பேச்சை கேட்டு அமர்ந்து கொண்டாள், பெண்.

ராகவ், கேண்டீன் சென்றான்.. இவளுக்கு கொறிக்க ஏதேனும் வாங்கி வருவதற்கென. பவானியும் உடன் செல்ல, மற்ற இரு நண்பர்களும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர்.

கேண்டீனில் சற்று கூட்டமாக இருக்க.. பவானி தனக்கு தேவையானதை சொல்லி, வெளியே நின்றுக் கொண்டாள். இப்போதும் அவளின் கண்கள் தேடலை நிறுத்தவில்லை.

சற்று நேரத்தில் ஸ்ரீயின் நண்பன் ஒருவனை அங்கே பார்க்கவும்.. பவானியின் கண்கள் கூர்மையாகியது.. ‘ஸ்ரீ.’ என முணுமுணுத்துக் கொண்டே கண்களால் தேடினாள்.

ஐம்பது மீட்டர் தூரத்தில், இவளிற்கு முதுகுகாட்டிக் கொண்டு, தன் நண்பனின், தோளில் கை வைத்துக் கொண்டு, நின்றிருந்தான். பார்த்தவளுக்கு, அது ஸ்ரீதான் என உணர ஒரு நொடியே போதுமானதாக இருந்தது, பவானிக்கு.

பெண்ணுக்கு, மனமெல்லாம் அதிருகிறது.. எத்தனை நாள் காத்திருப்பு.. சந்திக்காமலே போய் விடுவேனோ.. என அல்லாடிய  நேரம்தான் எத்தனை.. இங்கே கண்ணுக்கு எட்டும் தூரத்தில் நிற்கிறான் ஸ்ரீ.. என மெதுவாக நடந்து அவன் முன்னே சென்று நின்றாள், பவானி.

பவானியின், வலியும் ஆனந்தமும் கண்ணீர் வழி வழிந்துக் கொண்டிருந்தது.. பெண்ணின் கண்கள் அவனை மேலிருந்து கீழாக அளவிடுகிறது ‘எதோ,  விழுந்து வாரிய குழந்தையை, தாயின் கண்கள் ஆராயுமே.. அப்படி ஆராய்கிறது.. அவளின் கண்கள்.. நல்லா இருக்கானா..’ என ஆராய்கிறது. ‘நன்றாக இருக்கிறான், அவனுக்கு ஏதும் ஆகவில்லை..’ என மனதிற்கு புரியவும்தான், காதலை தேடி அவன் கண்களை சரணடைகிறது, பெண்ணவளின் பார்வை. 

ஸ்ரீக்கும், இவளை பார்த்தது அதிர்ச்சிதான்.. ம், அப்படிதான் அவனின் கண்கள் வெளிப்படுத்தியது. ஸ்ரீ, தன் நண்பனிடமிருந்து விலகி நின்றான்.. இவள் ஆராய்ந்து முடித்து, தன் கண்களை பார்க்கவும் ஸ்ரீயால் அவளின் பார்வையை எதிர்க் கொள்ள முடியவில்லை.. லேசாக தன் பார்வையை அந்த பக்கம் திருப்பிக் கொண்டான். 

பழைய நினைவுகள்தான் அவன் நினைவுக்கு வந்தது முதலில், அதுவும்  அன்று நடந்தது, அவனுக்காக ஏதும் நினைவு இல்லை. ஆனால், ராகவ்வும் செந்திலும் சொல்லியதும், செந்தில்.. சொல்லி சொல்லி அடித்ததும்தான் நினைவு வந்தது. மனம் வலித்து அவனுக்கும்.. எவ்வளவு பெரிய அவமானம் எனக்கு, எதோ சின்ன பையன் மாதிரி என் அப்பாவை கூப்பிட்டு, கல்லூரியில் சொல்லி.. என் கையை உடைத்து..’ எத்தனை நடந்துவிட்டது என ஒரு மூச்சு வந்தது அந்த நொடியே.. அதான் திரும்பிக் கொண்டான் ஸ்ரீகாந்த்.

இன்னமும் அவனால் அந்த வலது கையை வலிக்காமல் அசைக்க முடியவில்லை.. இடது கையில் இன்னும் சிகிச்சை முடியவில்லை. அவனிற்கும் வலிதான் மனமெல்லாம்.. ‘என்னவள் அவள், என்ன ஆகிவிட போகிறது.. எதுவாக இருந்தாலும் எங்களுக்குள்.. அன்று, எதோ கொஞ்சம் அவளை பார்த்ததும் நிலையிழந்துவிட்டேன்.. அத்தனை நாள் அப்படி நடந்திருக்கிறதா? இல்லையே, அன்று ஏன் அவள் வந்தாள் என் வீட்டிற்கு.. ச்ச.. என்னமோ, என்னவளாக இருந்திருந்தால் எப்படி என்னை நம்பாமல் போகியிருப்பாள்.. தப்புதான் அ..அந்த.. ட்ரக்ஸ் கொடுத்தது தப்புதான்..  ஆனால், அவளாக வந்தால்.. ச்ச..’ என எண்ணிக் கொண்டே “ஹாய்..” என்றான் விருப்பமே இல்லாத குரலில்.

பவானிக்கு முகமே மலர்ந்தது.. “எப்படி இருக்க ஸ்ரீ” என்றாள், கைகள் நடுங்க, அவனின் கையை பிடிக்க எத்தனித்து, தன் வலக் கையை நீட்டிக் கொண்டே.. கேட்டாள் பெண்.

ஸ்ரீ “ம்.. குட்.. “ என சொல்லி தன் வலது கையால் தன் உயரத்தையே, மேலிருந்து கீழ் பாவனையாக கைகாட்டி சொன்னான். அப்போதுதான் கவனித்தாள்.. அவனின் மணிக்கட்டு சரியாக இல்லை என.

பவானி “ஏன்.. ஸ்ரீ  என்னாச்சு..” என சொல்லி அவனின் வலது கையை தொட வர..

ஸ்ரீ, அவசரமாக பின்னால் நகர்ந்துக் கொண்டான் “என்ன வேணும் உனக்கு” என்றான், சத்தமில்லா குரலில். அவனுக்கு எரிச்சல்.. அவளால், தான் பட்ட அவமானம் அதிகம்.. அடியும் அதிகம்.. என எண்ணம் அவனுள், அதில் அவனின் காதல் காணாமல் போகிற்று போல.. இப்போது வந்து நிற்க்கும் இவளை பார்க்கவும் எரிச்சில்.

பவானிக்கு, பெரிதாக தன் வீட்டார் அவனை அடித்து கையை உடைத்தது.. அவன் அப்பாவை அழைத்தது.. கல்லூரியில் கண்டித்து அனுப்பியது.. என ஏதும் தெரியாது. அவளுக்கு காதல் மட்டுமே தெரிந்தது.. 

பவானி “என்னாச்சு ஸ்ரீ, ஏன் நா..நான் தொட கூடாதா.. நான் கேட்க கூடாதா.. தினமும் நீ எப்போ போன் செய்வேன்னு பார்த்துட்டே இருந்தேன்.. என்னை பாரு ஸ்ரீ” என்றாள் ஒருமாதிரி மிரட்சியாக கேட்டாள். 

ஸ்ரீ “போதும் பவானி சீன் கிரீயேட் பண்ணாத, போயிடு..” என்றான் இழுத்து பிடித்துக் கொண்ட பொறுமையானக் குரலில். 

பவானி அதிர்ந்து போனாள், ‘வனி பேபி’ என்ற கொஞ்சல் மொழிதானே அவளுக்கு பழக்கம்.. இப்போது தன் ஸ்ரீயின் ஒதுங்கும் பாவம் பார்த்து தடுமாற்றம் வந்தது.. மிரண்ட பார்வையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. இன்னும் அவளின் மனதுக்கு, அவனின் ஒதுக்கத்தையும் பேச்சுக்களையும் ஏற்க தெரியவில்லை போல.

ஸ்ரீக்கு, அப்போது நடந்ததில் தன்மானம் அடிவாங்கிய வலி.. அவளிடம் பேசவோ பார்க்கவோ விரும்பவில்லை.. எனவே “ப்ளீஸ், போய்டு.. நான் எக்ஸாம் முடிச்சிட்டு போய்டுவேன்.. என் லைப்பில் மீண்டும் விளையாடாதே..” என்றான். இவள் பேசி, ராகவ் அதை பார்த்து.. இல்லை, ஸ்டாப்ஸ் யாரேனும் பார்த்து.. மீண்டும் நிர்வாகம் வரை தன் பேர் செல்லுவதை விரும்பவில்லை அவன்.. எனவே எரிந்து விழுந்தான் அவளிடம்.

பவானி “என்ன உன் லைப்பில் நான் விளையாடினேன்.. புரியலை, உ.. உன்னை விடவா..” என்றாள் கேள்வியாக.

ஸ்ரீ “என்ன விளையாடினேன் நான்.. என் கேர்ள் ப்ரெண்ட், நான் லிமிட் கிராஸ் பண்ணினேன்.. அவளுக்கு பிடிக்கலை, ஜஸ்ட்.. ஜஸ்ட் நான் கான்ஷியஸ்சில் இல்லை, அ..அதான் எதோ ஆகிபோச்சு, அவ்வளோதான். இ..இது ஒரு ஸப்பெரேட் மேட்டர்.. பட் சாரி போர் திஸ்… சாரி. ஆனால், நீ..நீங்க என்னை உயிரோடு கொன்னதுக்கு, நான் செய்தது ஹன்டர்ட் டைம்ஸ் பெட்டெர்..” என்றான் சின்ன குரலில் பல்லை கடித்துக் கொண்டு சொன்னான் நல்லவன்.

பவானி “எ..என்ன ஸ்ரீ” என்றாள் அதிர்ந்து.

ஸ்ரீ கோவமானான் “என்ன, என்ன… நான், அப்போ லவ் பண்ணினவ மேல உயிரையே வச்சிருந்தேன்.. அதான், அந்த நிலையிலும் அவளைத்தான் தேடினேன்.. அது தப்பா.. என்னமோ யாரும் செய்யாத தப்பை நான் செய்த மாதிரி, என்னை.. எப்படி எல்லாம் இன்சல்ட் செய்துட்டீங்க..” என நியாம் கேட்டான் ஆவேசமாக.

பவானி “எ..என்ன யார்.. எ.. என்ன செய்தோம்..” என்றாள்.

இப்போது, சரியாக விசு.. வந்துவிட்டான். விசுவோடு, ராகவ்.. நண்பர்கள்.. என எல்லோரும் சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்தனர். 

ஸ்ரீக்கு, அதை சொல்ல சங்கடமாக இருந்தது.. தன் வாயாலேயே எப்படி, தான் அடிவாங்கியதை சொல்லுவான், எனவே “தெரியாதே.. உனக்கு எதுவுமே தெரியாதே.. நான் கூட உனக்கு சரியாகனும்ன்னு ப்ரே பண்ணினேன்.. ச்ச.. பீலிங்க்ஸ் புரியாத பீப்புள்ஸ்.. ப்ளீஸ்..” என்றவன் இப்போது அவளின் கழுத்தில் இருந்த செயினை பார்த்தான்.

ஸ்ரீ, இப்போது நக்கலான குரலில் “கமிட்டாகிட்ட போல.. ப்ரெண்ட்ஸ் சொன்னாங்க.. ம்..அப்புறம் எப்படி நா..நான் போன் செய்வேன்னு வெயிட் பண்ணின.. ம்..” என்றான் புரயுவம் உயர்த்தி நக்கலாக பவானியை பார்த்து கேட்டான்.

பவானிக்கு, முதல்முறை ஸ்ரீயின் வார்த்தை வலித்தது.. இத்தனை நாட்கள் அவன் சுயநினைவில்லாத போது செய்த தவறு என எண்ணி, ஆயிரம் நபர்கள் அவனை தப்பு சொன்னாலும்.. தன் காதலை காத்துக் கொண்டிருதவள்.. இப்போது விதிர்விதித்து போனாள்.. அவனின் கேள்வியில்.

பவானி “அ..அது என் விருப்பமில்லாமல் நடந்தது.. அப்பா, அம்மாக்காக அ..அது ஹாஸ்பிட்டலில், நடந்தது.. இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல ஸ்ரீ..” என்று விளக்கம் தந்தாள்.

ஸ்ரீ “ஹா..ஹா..ஆ ஹா…” என நக்கலாக சிரித்தான் பின் “அன்னிக்கு என்மேல விருப்பமில்லை, இப்போது அப்பா அம்மாக்காக.. ஆனா, உனக்கு விருப்பமில்ல.. உனக்கு என்னதான் விருப்பம்.. நிச்சயம் ஆகிடுச்சின்னு சொன்னாங்க.. இப்போது என்கிட்டே வந்து பேசிகிட்டு.. என்ன நீ.. எதுதான் நீ.. “ என்றான், ஆராயும் குரலில்..

பவானி “ஸ்ரீ கோவத்தில் இருக்கியா.. நாம் அதெல்லாம் மறந்திடலாம் ஸ்ரீ. என் அப்பா அம்மாகிட்ட பேசறேன்.. நா..நான் பேசறேன்.. வி லவ் ஈச் அதர்ன்னு சொல்றேன்.. எல்லாம் சரி ஆகிடும் ஸ்ரீ.” என்றாள் பரபரப்பாக.

ஸ்ரீ “ஏன் நரௌர்ஸ் ஆகுற.. உனக்கு அவனையும் பிடிக்கலையா..” என்றான்.

பவானி அவனின் வார்த்தையை காதில் வாங்கவில்லை, இப்போது அவளுக்கு எதோ யோசனை.. “நீ சும்மாதானே கோவமா இருக்க.. என் ஸ்ரீயால் என்னை வெறுக்க முடியாது.. இப்படி எல்லாம் பேச முடியாது.. யாராவது சொன்னாங்களா.. நான் மாறிட்டேன்.. எனக்கு நிச்சயமாகிடுச்சு.. இனி டிஸ்டர்ப் பண்ணாதேன்னு சொன்னாங்களா.. அதான் இ..இப்படி எல்லாம் பேசறியா..” என்றாள் கண்ணில் கண்ணீரும்.. உதட்டில் சிரிப்பும் கலந்த நிலையில் கேட்டாள் பெண்.

ஸ்ரீ “நோவே… என்ன உளற.. எனக்கு என்ன பைய்த்தியமா.. இனியும் உன்னை தேட. என் அம்மா ஞாபகத்தோட வந்தேன் இங்கே.. தெரியாமல் உன்னை பார்த்துட்டேன்.. அதுக்கு அப்புறம் எல்லாம் வழி மாறிடுச்சி. எஸ், நான்தான் மிஸ்டேக் பண்ணிட்டேன்.. அன்னிக்கு.. அன்னிக்கு ஈசியா ஒரு சின்ன விஷயத்தோடு முடிய வேண்டியது.. இ..இப்படி எ..என் பெயரை கெடுத்து.. என் அப்பாவை பேசி.. காலேஜ்ஜில் இன் இமேஜை ஸ்பாயில் பண்ணி.. ச்ச.. எல்லாம் உன்னால.. நீ, என்னை டிரஸ்ட் பண்ணி இருந்தீனா.. அன்னிக்கு அது  ஒரு விஷயமே இல்லை. என்னை எப்போ டமேஜ் பண்ணியோ அப்போவே.. அந்த நிமிஷமே டிசைட் பண்ணிட்டேன்.. நான் தப்பு செய்திட்டேன்னு.. ப்ளீஸ் என்னை விடு.. இன்னும் ரெண்டு மாசத்தில் நான் அப்ரோட் போறேன்.. இப்போ ஏதும் சீன் போட்டு, பிரச்சனையாக்கிடாத.. போ… ப்ளீஸ் போ…” என கை காட்டி அவளுக்கு, வழிகாட்டினான் ஸ்ரீகாந்த்.

பவானியின் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.. அவன் பேசியதும், ‘நான் என்ன செய்தேன்.. இவனை நான்தான் ட்ரக் எடுக்க சொன்னேனா.. அ..அன்று நா.. நான் சம்மதித்திருக்க வேண்டுமா.. ஸ்ரீ!.. நடந்ததைவிட.. நீ பேசும் போது வலிக்குது ஸ்ரீ..’ என எண்ணி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அவள் ஏதும் பேசாமல் இருக்கவும் ஸ்ரீ கிளம்பினான். 

பவானி “ஸ்ரீ “ என்றழைத்தாள். திரும்பி நின்றான் ஸ்ரீகாந்த்.

பவானி “நான் அன்னிக்கு சரியாதான் இருந்தேன் ஸ்ரீ.. நீதான் ட்ரக் எடுத்திருந்த.. நான் இல்லை.. நா.. நான் பார்த்த ஸ்ரீ அப்படி நடந்துக் கொண்டவனும் இல்லை.. “ என்றாள் அமைதியாக.

ஸ்ரீ “தெரியுதுல்ல.. தெரியுதுல்ல..” என்றான் கோவமாக.

பவானி “அன்னிக்கு உனக்கு நினைவு இல்லை சரி, இன்னிக்கு உனக்கு சென்சே இல்லை போல ஸ்ரீ. நான் எல்லாத்துக்கும் ஓகே சொல்லுவேன்னு நினைச்சியா ஸ்ரீ..” என்றாள் சின்ன குரலில்.

ஸ்ரீ எங்கோ பார்த்துக் கொண்டு நின்றான் எரிச்சலோடு.

பவானி “எ.. எனக்கு என்ன ஆச்சுன்னு கேட்பேன்னு நினைச்சேன் ஸ்ரீ.. எ..என் கையை பிடிச்சிகிட்டு.. என்கிட்ட சாரி சொல்லுவன்னு பார்த்தேன் ஸ்ரீ. எ..என்னை, இன்னும் அதிகமா லவ் பண்ணுவேன்னு நினைச்சேன் ஸ்ரீ. எ..என்னை தேற்றுவேன்னு நினைச்சேன் ஸ்ரீ. எனக்கு இப்படி, நா..நான் இப்படி இருந்தாலும்.. நீ சரியாகி வருவ.. என்னை தேடுவேன்னு நினைச்சேன் ஸ்ரீ.. என் அப்பா என்மேல உள்ள கோவத்தில் செய்துட்டார் அப்படின்னு சொல்ல வந்தேன் ஸ்ரீ.. வேஸ்ட் ஸ்ரீ, எல்லாம் வேஸ்ட் ஆகிடுச்சு ஸ்ரீ.. நான் பார்த்த ஸ்ரீயை காணோம்.. இல்ல, தொலைச்சுட்டேன்.. நீ எங்க வீட்டில் சொல்லி பேசறேன்னு நினைச்சேன் முதலில்.. இல்ல, அப்படி இல்ல.. நீ உண்மைதான் பேசறேன்னு என் மனசு சொல்லுது.. நான் எந்த சீன்னும் போடவில்லை ஸ்ரீகாந்த. நீங்க போங்க.. உங்களை மிரட்டி இருக்காங்க.. அதான், நீ என்கிட்டே பேசலைன்னு நினைச்சேன்.. இல்ல, இல்ல.. உனக்கு பிடிக்கலை அதான் போல.. ஸ்ரீ” என்றவள் இன்னும் ஏதோ பேச வர..

ஸ்ரீ “எனக்கு டைம் ஆச்சு.. பை” என்றவன் நிற்காமல் சென்றுவிட்டான்.

பவானி பார்த்துக் கொண்டே நின்றாள் ஸ்ரீகாந்தை. குடும்பத்தில் இருந்த அனைவரின் பேச்சையையும் காத்து கொடுத்து கேட்கவேயில்லை, நண்பர்களும் தோழிகளும் சொன்ன போது கூட.. அவனை நேரில் பார்த்து உண்மையை கேட்கவேண்டும்.. அவன் எப்படியும் சாரி சொல்லுவான்.. அன்னிக்கு எதோ தப்பாக போய்விட்டது என வருந்துவான்.. என கனவு கண்டவளின் கண்கள் கண்ணீர் மழைதான் பொழிந்தது. அவளை சூழ்ந்திருந்த பிரச்சனை மேகம் விலகியது என இங்கே நண்பர்கள்.. விசு பார்த்திருக்க.. பெண்ணுக்கு, கண்ணீர் மழைதான் வந்தது.

உடையும் இதயத்தின் சப்தம் மட்டுமே கேட்க்கிறது பவானிக்கு.. அருகில் வந்து நின்ற தோழர்களின் தேறுதல் வார்த்தைகள் அவளுக்கு கேட்கவேயில்லை. எங்கோ சென்று மறைந்தவனின் காலடிதடத்தைதான் பார்த்திருந்தது பெண்ணின் விழிகள்.

“போ உறவே.. என்னை மறந்து..

நீ உந்தன் கனவுகள் துரத்தியே..

போ உறவே..

சிறகணிந்து நீ உந்தன்.. 

கணங்களை உதறியே.. 

போ.. உறவே..”

 

Advertisement