Advertisement

PAவிற்கு போலீசை தவிர வேறு ஆப்ஷன் வேறு இருக்கவில்லை. ஆனாலும், வேறு வழியில்லாமல் பணத்தை ரெடி செய்ய.. தனக்கு தெரிந்த, வீராவின் நண்பர்களிடம் கேட்க தொடங்கினார். அப்படி கேட்க்கும் போது பத்மநாபனிற்கும், அழைத்து PA கேட்டார்.

பத்மநாபன், வீராவின் வீடு வந்து சேர்ந்தார்.. தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு. அதன்பின்தான், நிலைமை தெரிந்தது. யோசிக்காமல் உடனே கமிஷனருக்கு சொல்லிவிட்டார், பத்மநாபன்.

வேதாவிற்கு அப்போதே பத்மநாபன் மேல் கோவம்.. ஆனாலும், தனக்கும் என்ன செய்வது என தெரியவில்லையே, நேரம் சென்றுக் கொண்டே இருக்கிறதே.. பணமும் வேண்டுமே பதட்டமானர் வேதா. 

இப்போது அதி விரைவாக விசாரணையை தொடங்க, சத்தமில்லாமல் இரண்டு போலீஸ்காரர்கள் வந்து சேர்ந்தனர். எனவே அடுத்த போனிற்காக என சத்தமில்லாமல் எல்லோரும் காத்திருந்தனர்.

அத்தோடு இங்கே, காவலர்கள், இவர்களிடம் விசாரணையை தொடங்கினர்.. அப்போதுதான்.. வேதா, சுற்றுலா சென்றது பற்றி சொல்லினார்.. மைசூர் என. ஆனால், யாருடன் என தெரியவில்லை, மனையாளுக்கு.

வீராவின் கார் எண்ணை சொல்லி விசாரணையை தொடங்கினர் ஒரு பிரிவு. அத்தோடு,  போனும் வந்தது.. வேதா பேசினார்.. ‘பணம் ரெடியா’ என்றனர்.

வேதா ‘இல்ல, அவ்வளோ ரெடியாகலை.. கொஞ்சம் கம்மியா இருக்கு..’ என்றார். அதற்கு அவர்கள் எதோ குதர்க்கமாக சொல்லி போனை வைத்துவிட்டனர். போலீசாரால் ட்ராக் செய்ய முடியவில்லை.

ஆனால், அங்கிருந்த வேணுவுக்கும், வேலுவுக்கும் வேதாவின் நிலையில் எதோ மாற்றம் இருப்பதாக உணர்ந்தனர். உடனே, இங்கிருக்கும் ஆட்களிடம் அவர்கள் வீட்டை ஆராய ஆட்களை அனுப்பினர்.

காவலர்கள் முந்திக் கொண்டனர்.. வீராவின் கார் திப்பம் மலை பகுதியில் சென்றது உறுதியானது. அதை தொடர்ந்து.. அங்கே விரைந்தனர்.. அங்கிருந்த போலீசுக்கும் தகவல் பறந்தது.. 

ஆகிற்று அடுத்த அரைமணி நேரம்தான்.. வீராவை கண்டுக் கொள்ளலாம் என வேதாவிற்கு உறுதியளித்து.. பத்மநாபன்.. போலீசோடு கிளம்பினார். இங்கே PA இருந்தார். வீட்டில் எந்த சத்தமும் இல்லை.. அமைதியாகத்தான் எல்லாம் நடந்தது.

அப்படிதான் அவர்கள் எண்ணிக் கொண்டனர்.

இப்போது இங்கே நோட்டம் பார்க்க வந்த ஆட்கள்.. போலீஸ் இருப்பை, உடனேயே வேணுவிற்கு போனில் சொல்லிவிட்டனர். முடிந்தது ஆட்டம். வேணுவிற்கும், வேலுவிற்கும் என்ன செய்வது என தெரியாமல்.. போனில் அந்த ஆட்களிடம் வீராவை கொன்றே விட சொல்லிவிட்டனர்.

வீரா போதையிலிருந்தார் அப்போது, அதன்பின் மயக்கத்தில் இருந்தார்.. லேசாக நினைவு வந்த நேரம், அந்த தடியர்களிடம் பேசினார்.. ‘யாருடா.. யாருடா நீங்க எல்லா,.. என்ன டா.. பணம் தானே..’ என சொல்ல சொல்ல, அடித்தே போட்டனர் இருவரும் சேர்ந்து வீராவை.. பலமிழந்த வீரா, மீண்டும் மயங்க மயங்க.. உயிர் போகும் வலி நடுவயிற்றில்.. பின் முதுகில், அதை தொட்டு.. தலையில் ஒரு இடி போன்று இறங்கியது.. துடித்துக் கொண்டிருந்தார்.. கடைசி நிமிடங்களுக்காக.. இப்போது அந்த கழுத்தில் மீண்டும் ஒரு அடி.. வீராவின்  உயிர்  துடிக்க துடிக்க பிரிந்தது.

போலீஸ், வீராவின் வண்டியை சுற்றி நெருங்கவும்.. வீரா உயிர் தூரப் போகிக் கொண்டிருந்தது.

அங்கிருந்த இருவரும் தானாகவே வந்து சரணடைந்தனர்.

அதன்பின் என்ன.. எல்லாம், சட்டத்தின் வசம்.. 

வேணு, வேலு இருவரும் வந்து நின்றனர், பத்துவோடு.  அன்று இரவே வீராவின் உடல் வீடு வந்து சேர்ந்தது. 

வேதா நிலையிழந்து போனார். வாயே திறக்கவில்லை.. சொந்தம் பந்தம் எல்லோரிடமும் பேசவில்லை, வாய்விட்டு கூட அழவில்லை. பையனும் இல்லை, புருஷனும் இல்லை.. ஒரு சேரில் அமரவைக்கபட்டிருந்தார்… அப்படியே அமர்ந்திருந்தார்.

பத்துவும், ஒன்றுவிட்ட வீராவின் தம்பியும்தான் எல்லாம் பார்த்து செய்தனர். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த விசுவிற்கு, தகவல் சொல்லி வர வைக்க ஏற்பாடு செய்தனர். எனவே, வீராவின் உடல் காத்திருந்தது அடுத்த 36 மணி நேரம்.

காவல்துறை விடவில்லை.. யாரையும். எனவே இந்த நேரத்தில்.. அந்த தடியர்களையும்.. வேணுவையும், வேலுவையும் துருவி துருவி விசாரித்ததில் உண்மை வெளிவந்துவிட்டது. அந்த நேரமே, வேணுவும், வேலுவும் உள்ளே சென்றனர்.

இது தெரிந்த வேதா..அமைதியாக இருந்தார்.

மகனும் வந்து சேர்ந்தான். விசுவிற்கு ஒன்றும் புரியவில்லை.. படிக்கும் பையன்.. கனவில் கூட அவன் அழுததில்லை.. இப்போதும் அழுகை என வரவில்லை.. ஆனால், தன் அம்மாவை பார்த்தும் தன் போல இறுகி இருந்த மனம் கரைந்தது. 

வேதா, மகனை பார்த்ததும்தான் அழுது தீர்த்தார்.. பத்மநாபனை வீராவின் அருகிலேயே விடவில்லை ‘உன்னாலதான் என் கணவர் போயிட்டார்..’ என கத்தினார். ‘நீ உள்ள வராத’ என்றார்.. இப்படி அப்போதே வேதா பத்துவை வெறுத்தார். 

இதெல்லாம் சகஜம்தான். மன அழுத்தத்தில் இருக்கும் போது.. அதுவும் இறந்த வீட்டில் இப்படி யார் மேலாவது கோவம் வரும்… சண்டை வரும். அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும் பத்மநாபன் பற்றி. எனவே, வேதாவின் கோவத்தை யாரும் பெரிதுப்படுத்தவில்லை.

பத்மநாபனும், வேதாவின் கண்ணில் படாமல் நின்றுக் கொண்டார். எல்லாம் செய்தார்.. கூடவே இருந்தார்.

ஒருமாதம் முழு விடுமுறையில் இருந்தான் விஸ்வநாதன். இன்னும் ஒரு வருடம் படிப்பு இருக்கிறது. ஆனால், செல்லவில்லை, நான் இங்கேயே இருக்கிறேன் என சொன்னான். 

அவனின் எண்ணத்தை மாற்றி படிக்க அனுப்பினார் பத்மநாபன். மில்லினை சரியான ஆட்களை நியமித்தார். வீட்டில் செக்யூரிட்டி போட்டார். வேதாவை மில்லிற்கு வர வைத்தார். மாரல் சப்ஃபோர்ட் என்ன தேவையோ அதெல்லாம் செய்தார், பத்மநாபன்.

ஒருவழியாக விசு.. ஒருவருட படிப்பை முடித்து வரும் வரை பத்மநாபன்தான் அந்த மில்லை கவனித்துக் கொண்டார்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!

பத்மநாபனும் வாசுகியும் திருமணத்திற்கு சென்றிருந்தனர். எனவே, வாசலில் நின்று ஹாரன் அடித்தான் விசு, வேலையாட்கள் வந்து பார்த்துவிட்டு, பவானியிடம் சொல்லினர். பவானி வெளியே வந்தாள்.

ஓட்டுனர் யாரேனும் வந்திருப்பார் என எண்ணி, பவானி எப்போதும் போல பின்பக்க கதவை திறக்க, கதவு அன்லாக் ஆகவில்லை. 

அவளிற்கு தெரியாதே விசு வந்திருப்பான் என, எனவே, எரிச்சலாக கண்ணாடியை தன் விரலால் தட்டினாள், பதிலில்லை. ‘யாரென’ குனிந்து பார்த்தாள் பெண்.. இப்போது விசு, சற்று நகர்ந்து.. முன்பக்கம் இருந்த கதவை திறந்துவிட்டான்.

பவானிக்கு அதிர்ச்சிதான். ஒன்றும் காட்டிக் கொள்ளாமல்.. அமர்ந்தாள்.

அவள், ஏறி அமர்ந்ததும்.. வாசுகி அழைக்கவும் சரியாக இருந்தது, போனெடுத்து பேசினாள்.. பவானி. மெல்லிய குரல்.. அந்த ஏசி போட்டிருந்த எட்டடி இருக்கும் காருக்குள்.. இவள் பேசுவது அவன் காதில் விழவேயில்லை. அப்படி மென்மையாக பேசினாள். குசுகுசுவென சத்தமும் இல்லை.

விசுவிற்கு, முதலில் பெரிதாக ஏதும் தோன்றவில்லை.. ஆனாலும், ஐந்து நிமிடம் பேசினாள் பெண். அப்படி சத்தமே இல்லாமல் எப்படி பேசுகிறாள் என எண்ணி காதினை அவள் பக்கம் வைத்தான். ‘சரி.. ம்… தெரியலை..’ என ஒரு வார்த்தைகளாக கேட்டது, அவனுக்கு.

காரில் மெல்லிய இசை.. எந்த பாடலும் அல்லாமல்.. ஒரு ஃப்ளூட் இசை ஒலிக்க, இனிமையாக தொடங்கியது அவர்களின் பயணம். 

எந்த அலட்டலும் இல்லை பவானியிடம்.. தன் சீட்டை சாய்த்துக் கொண்டாள் லேசாக.. அவன் போல கூலரை எடுத்து அணிந்துக் கொண்டாள்.. காதில் ப்ளூ தூத் ஹெட்செட் எடுத்து அணிந்துக் கொண்டாள். சற்று நேரம் போன் பார்த்தாள்.. பின் கண்களை மூடிக் கொண்டாள். 

ஒரு வார்த்தை அவனும் பேசவில்லை, அவளும் பேசவில்லை. விசு, அவள் பேச வேண்டும் என எதிர்பார்க்கவில்லை.. ஆனால், இப்படி கண்களை மூடிக் கொள்வாள் எனவும் எண்ணவில்லை. 

இந்த செய்கை, அவனை என்னமோ செய்தது.. தனக்குள் அவளின் நிலையை ஓட்டி பார்த்துக் கொண்டான் ‘டேய்.. அவளுள் என்ன இருக்குன்னே தெரியாது உனக்கு.. உனக்கே பிடிக்காமல் எல்லாம் நடந்தது, அந்த பெண்ணுக்கு நினைவே இல்லாமல் நடந்தது..’ என உள்ளதை சொல்ல..  அமைதியாக வந்தான்.

விசு, ஒரு இடத்தில் காரை நிறுத்தினான் உண்பதற்காக. கார் நிற்கவும், பவானி என்ன என்பதாக பார்க்க.. ஹோட்டல் அது. 

எனவே பவானி “நான் பாக் பண்ணி எடுத்துட்டு வந்திருக்கேன்..” என்றாள் சின்ன குரலில்.

விசு இறங்கி இருந்தான்.. தன் சிகையை சரி செய்துக் கொண்டே “பரவாயில்லை, எனக்கு கம்பெனி கொடுங்க.. எடுத்துட்டு வந்ததை பிரெட்ன்ஸ் கூட சாப்பிட்டுங்க.. “ என்றவன் தன் போனேடுத்துக் கொண்டு முன்னே நடந்தான்.

பவானியும், இறங்கி நடந்தாள். இருவரும் ஆளுக்கொரு தோசையை ஆர்டர் செய்து உண்டனர். நிர்மிர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை.. ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால், விசுவிற்கு இப்போது எதோ தோன்ற.. அவளின் கழுத்தை பார்த்தான்.. மஞ்சள் நிற தோள்பட்டைக்கும்.. மெரூன்  குர்த்திக்கும் இடையே அவன் இட்ட செயின் நன்றாக தெரிந்தது. பின் மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான். என்னமோ ஒரு குறுகுறுப்பு அவனுக்கு.. அன்று தோன்றவேயில்லை.. இன்று, அவளிருக்கும் நிலைமையயும் மீறி, ஆவலாக பார்த்துக் கொண்டான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்லூரியில் சேர்த்துவிட்டான், அவளை.

பவானி இறங்கும் போது “தேங்க்ஸ்..” என்றாள்.. விசு லேசாக புன்னகைத்தான், கூலரை கழற்றியபடியே. 

விசுவிற்கு, அவளிடம் ‘நான் வருவேன் பிக்கப் செய்ய ..’ என சொல்ல தோன்றியது. ஆனால், பவானியின் முகத்தை பார்த்தவனுக்கு.. ‘அது தெரியும்’ என்ற ப்பாவம் இருந்தது போல.. எனவே தலையசைத்து கிளம்பினான்.

பவானிக்கு, விசுவை பற்றி எந்த தாக்கமும் இல்லை, அவள் இறங்கியதும் முதலில் தேடியது.. ஸ்ரீயைத்தான்.. ‘இன்றாவது கண்ணில் பார்ப்பேனா..’ என கண்கள் தேடியது. எக்ஸாம் பற்றியெல்லாம் கூட யோசனை ஓடவில்லை அவளுக்கு.

ராகவ் வந்து நின்றான். அவனை தொடர்ந்து தோழிகள் இருவர் வர.. எல்லோரும் பேசிக் கொண்டே இருப்பிடம் சென்றனர்.

விசு, தங்களின் தொழில்முறை நண்பர்களை சந்திக்க சென்றுவிட்டான்.

 

Advertisement