Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

பத்துவை விட.. வேணுவும் வேலுவும் நெருக்கமாகினர் வீராவிற்கு. அடிக்கடி வெளியே பார்த்துக் கொண்டார்.. சிங்கப்பூர், ஹான்ஹாங்.. என வீராவும் அவர்களோடு வெளிநாடு சுற்றுலா சென்றனர். 

பத்துவையும் அழைப்பர்.. பத்துவிற்கு தொழிலை விட்டு வர கூடிய அளவில் நம்பிக்கையான ஆட்கள் யாரும் அப்போது இல்லை. எனவே இவர்கள் மட்டுமே நெருக்கமாகினர். 

அத்தோடு வீரா, தயாரிப்புத் துறையில் ஆர்வம் காட்டினார். திரை துறை பற்றி தெரிந்துக் கொண்டார்.. படபிடிப்பின் போது அவர்கள் அழைத்தால் வெளியூர் சென்றார். தாரளமாக செலவும் செய்தார் வீரா. மூவருமே அப்படிதான் இருந்தனர்.. செலவு செய்ய தயங்கவில்லை.

வேலுவும், வேணுவும் சேர்ந்து எடுத்திருந்த படம் தீபவாளியில் ரீலீஸ் ஆகி, பெரிதாக வரவேற்பில்லாமல்.. எங்கும்  ரீச் ஆகாமல்.. பெரிய பிரச்சனையாகி கொண்டிருந்தது. எல்லா இடத்திலும் சம்பளம் பாக்கி.. என டைரக்டர், ஹீரோ.. எல்லாம் புகார் செய்ய தொடங்கியிருந்தனர்.  

இருவருக்கும் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். அடுத்த இரண்டு மாதத்தில் சொத்துக்களை விற்று.. இருக்கும் தொழிலையும் காப்பாற்ற முடியாமல் திண்டாடிப் போகினர். 

அடுத்து, பத்துவிடம் உதவி கேட்டனர்.. வீராவிடமும் உதவி கோரினர்.. கோடிகளில் எனும் போது பத்துவிடம் அதற்கான சோர்ஸ் இல்லை. வீராவும், ‘தொழிலிருந்து எப்படி எடுப்பது அவ்வளவு தொகையை.. வட்டிக்கு வாங்க தருகிறேன்.. ஏதேனும் அடமானம் வேண்டும்’ என்றார். இப்படி பல இடங்களில் முயன்றும் இன்னும் கடன் அடையாததால் விரக்தியில் இருந்தனர் வேணுவும், வேலுவும். முன் போல கையில் பணம் புழங்கவில்லை.. பேர் புகழ் எல்லாம் போகிற்று.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!

ஒருநாள் பொங்கல் விடுமுறை தினம்.. அதாவது தொடர் விடுமுறை தினம். பத்து, இரண்டுநாள் தன் கம்பெனிக்கு விடுமுறை விட்டிருந்தார். எனவே வீராவிடம் பேசினார், நலம் விசாரித்தார். 

உள்ளூர் என்றாலும், தொழில் முறையில் எங்கேனும் சந்திப்பது மட்டும்தான், மற்றபடி இப்படிதான், ஏதேனும் விசேஷம் கூட்டம் என்றால்தான் நட்பான பேச்சுகள் எழுகிறது அவர்களுக்குள்.

வீராவை, வீட்டுக்கு அழைத்தார் பத்மநாபன். வீராவும் தன் மனைவியோடு வீட்டுக்கு வந்தார். பத்மநாபனின் பிள்ளைகளை பார்த்ததில்லை வீரா, எனவே, என்ன வாங்குவது என தெரியாமல் வெள்ளியில் விளக்கு வாங்கிக் கொண்டு வந்தார் பத்துவை பார்க்க. 

ம்… பத்துவை, திருமணத்தின் போது பார்த்தது.. அப்போதும் ஒரு இரண்டு நிமிடம் வந்து நின்றுவிட்டு வீரா சென்றுவிட்டார். உள்ளூர் என்றாலும், பத்துவின் சின்ன சின்ன விழாவிற்கு அவரால் வர முடியவில்லை. அது பத்மநாபனிற்கும் புரியும். எனவே நீண்ட வருடங்கள் சென்று இருவரும் குடும்பமாக சந்தித்தனர்.

பொங்கல் விழா சிறப்பாக சென்றது. 

பத்மநாபன், பிள்ளைகளை அப்போதுதான் பார்க்கிறார் வீரா. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் பவானி, ஹரீஷ் ஐந்தாம் வகுப்பு. முறையாக அறிமுகம் செய்துக் கொண்டு பேச தொடங்கினர் வீராவும், வேதாவும். 

வேதா பிள்ளைகளோடு சற்று இணக்கமாக பேசினார்.. ‘என்ன! தன் பெருமையும், தன் மகன் பெருமை அதிகம் பேசினார்.. பிள்ளைகளுக்கு அதெல்லாம் புரியவில்லை.. இரெண்டொரு வார்த்தைப் பேசிவிட்டு மேலே சென்றுவிட்டனர்.

வாசுகி, அதையெல்லாம் பெரிதாக எடுக்கவில்லை.. நன்றாகவே பேசினார். ஆண்கள் தங்களின் பெதுவான நபர்கள் பற்றி பேசினர்.  வேதாவிற்கு.. அப்போதுதான், பத்து மூலமாகத்தான் வேலுவும், வேணுவும் பழக்கம் என தெரிய வந்தது. அடிக்கடி அவர்களோடு வெளியே செல்வதுமாக இருப்பது தெரியுமே, பத்துவும் அப்படிதான் செல்லுகிறார் போல.. தன் கணவனிடமிருந்து அவ்வபோது கடன் வாங்குகிறார்.. என புரிந்துக் கொண்டார் வேதா. எனவே, மனதில் குறித்துக் கொண்டார்.. யாரிடமும் கேட்கவில்லை வேதா.

மதியம் பொங்கல் விருந்து முடித்துதான் இருவரும் கிளம்பினர்.

பொங்கல் விழா, எனவே.. வீராவிற்கு வேலை ஏதும் பெரிதாக இல்லை. அத்தோடு எல்லா நண்பர்களும் குடும்பம், விழா என பிஸி. எனவே வீரா, வேணுவையும், வீராவையும் தானேதான் அழைத்தார் மைசூர் போகலாம் என.

நீண்ட நாட்கள் ஆகிற்று இருவரையும் பார்த்து. அவர்கள் கடனில் இருக்கிறார்கள் என தெரியும், ‘கடன் வாங்கி தருகிறேன்.. சொத்தை காட்டுங்க, இல்லை, ஜாமீன் கையெழுத்து போடுகிறேன்..’ எனவும் சொல்லிவிட்டார் வீரா. 

ஆனாலும், அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை, அத்தோடு, அவர்கள் எந்த விதத்திலும் தொந்திரவு செய்யவில்லை வீராவை. எனவே வீரா ஒதுங்கிக் கொண்டார். இப்போது, அவர்களுக்கும் ரிலாக்ஸ்சாக இருக்கும் என எண்ணி விடுமுறைக்கு அழைத்தார் வீரா. ஆனால், வினையாக போவது தெரியாமல்.

எனவே திடீர் பயணமாக மறுநாள் கிளம்பினர் மூவரும். ம், பொங்கல் இரவு.. அவர்கள் ஈரோடு வந்து சேர்ந்தனர்.. ஹோட்டலில் தங்கி பிரெஷ்ஷப்பாகி வீராவை அழைத்தனர்.. வீரா, காரோடு வந்து சேர்ந்தார் அடுத்த அரைமணி நேரத்தில்.

மைசூர் நோக்கி வண்டி நகர்ந்தது.. வீரா திப்பம் செக் போஸ்ட் தாண்டியதுமே.. தன் கையில் கோப்பையை எடுத்துக் கொண்டார்.. வேணும் வேலுவும், தங்களின் நிலையை பற்றிப் புலம்பிக் கொண்டே தங்களுக்குண்டான பாட்டிலை எடுத்துக் கொண்டனர். வீராதான் வண்டியை ஓட்டினார்.. அத்தனை வளைவு நெளிவுகளிலும் வண்டி தடுமாறாமல் சென்றது. 

அழகான புதத்தம் புது சொகுசு கார், ஆசையாக வீரா.. புக் செய்து இந்த கலர்தான் வேண்டுமென கேட்டு.. எப்போதும் அவர் உபயோகிக்கும் ‘எண்ணுக்கு’ என காத்திருந்து பணம் கட்டி எடுத்திருந்தார்.

அலுங்காமல் குலுங்காமல் மலையேறி முடித்து, ஒரு சிறிய பெட்டி கடையில் நின்றது, கார். உச்சி வெயில் நேரம்.. பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை. வாகணங்கள் சென்ற வண்ணம் இருந்தது.. மற்றபடி பொட்டல் காடுதான் எல்லா பக்கமும்.

வேணுவும், வேலுவும் இறங்கி, எதிரே, அங்கே இருந்த.. கடைக்கு சென்றனர். வீரா, இறங்கவில்லை. வீரா, மேலும் ஒரு கோப்பையை தன்னுள் சரித்துக் கொண்டு.. நிமிர்ந்தார். 

அப்போது, இரண்டு தடியன்கள்.. எங்கிருந்து வந்தனர் என தெரியவே இல்லை.. அவரின் பக்கம் திறந்திருந்த கதவை ஒருவன் மறைத்து நிற்க.. அவரின் வாயில்.. எதோ துணி வைத்து அழுத்தி, அவரை அடுத்த சீட்டிற்கு நகர்த்தி.. சீட் பெல்ட் போட்டு, ஒருவன்  பின்னால் அமர, இன்னொருவன் காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

வேணுவும், வேலுவும் இயற்கை உபாதையை முடித்து வந்து பார்க்க.. கார் அங்கு இல்லை. ஒன்றும் பெரிதாக அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. அடுத்து இன்னொரு கார் வந்து நின்றது, அதில் ஏறி அமர்ந்தனர் நண்பர்கள் இருவரும்.

அடுத்த அரைமணி நேரத்தில்.. அந்த தடியங்களிடமிருந்து போன் வந்தது.. வேணுவிற்கு “அண்ணா.. எல்லாம் சேஃப் ண்ணா” என்றான்.

அப்போதுதான் இரு நண்பர்களுக்கும் முகத்தில் புன்னகையே வந்தது. உடனே, வேதாவின் எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டனர், அந்த ஆட்களிடமிருந்து. 

அடுத்த நொடியே வேதாவிடம் போன் செய்து மிரட்டினர்.. இருவரும். மாலையே, தங்களுக்கு தேவையான பணம் வேண்டும் என அதுவும் உடனே வேண்டுமென மிரட்டினர்.

பத்து நிமிடத்திற்கு ஒரு போன் ஏதேதோ எண்ணிலிருந்து. வேதாவை யோசிக்க விடகூடாது என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. பணம் பணமாக வேண்டும் என மிரட்டல்.

வேதா அடுத்த இரண்டு மணி நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றார், ஓயாமல் போன் அடித்துக் கொண்டே இருந்தது.. அதை, எடுப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. 

வீட்டில் உள்ள நகை, பணம் என சேர்த்தாலும் அவர்கள் கேட்கும் தொகையில் ஒரு பங்கு கூட வரவில்லை. எப்படி இருந்தாலும் அடுத்த இரண்டு நாட்கள் மில்லினை திறக்க முடியாது. அத்தோடு பாங்கும் இல்லை.. அவரின் PA என யாரிடம் சொல்லுவது என தெரியவில்லை.

ஒரு முடிவோடு வீராவின் PAவை அழைத்தார், வேதா. விவரமெல்லாம் சொன்னார்.. உடனே அவர் கிளம்பி வீடு வந்தார். போலீசில் சொல்லாம் என்றார். வேதா பயந்தார். 

யோசிக்க யோசிக்க.. மீண்டும் வேதாவின் போன் அலறியது. வேதா அழுகையும், தேம்பலுமாக எடுத்தார். மீண்டும் அதே கட்டை குரல்.. ‘பணம் ரெடியா?.. உங்களுக்கு தெரியாத இடமா, கேளுங்க.. சீக்கரம் இன்னும் ஒன் ஹௌவர் டைம்.. அப்புறம் உங்களுக்கு, உங்க புருஷன் இல்லை’ என சொல்லி வைத்துவிட்டனர்.

Advertisement