Advertisement

அடுத்த வாரம். 

இன்று பவானியின் பரீட்சை. வாசுகி உடன் வர, கல்லூரி கிளம்பினாள் பெண். நன்றாக படித்திருந்தாள். இந்த நாட்களில் என்னமோ ஒரு உறுதி.. படிக்கணும் நான் மேலே என உறுதி வந்திருந்தது பவானியிடம். எனவே, நன்றாக படித்தாள். கூடவே, ஸ்ரீ வருவான் என்ற எண்ணமும் மனதில் இருந்தது.

முதல்நாள் எக்ஸாம் போதே கண்கள் ஸ்ரீயை தேடியது. ஆனால், தன் தோழிகளிடம் கூட ஸ்ரீ பற்றி கேட்கவில்லை. யாரிடம் கேட்டாலும் ராகவ் வந்து திட்டுவான் என தெரியும் எனவே, அமைதியாக இருந்துக் கொண்டாள்.

மனம் சொன்னது.. ‘அவன் வந்திருப்பான்’ என மனம் சொன்னது. ஒவ்வொரு பரீட்சையின் போதும் மனது அவனை தேடியது ‘ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டேனா’ என தேடியது.

எல்லா பரீட்சையும் முடிந்தது.. கடைசி இரண்டு மட்டும்தான் மீதி, அதற்கும் ஒரு வாரம் விடுமுறை. இத்தனை நாள் தேடியும் ஸ்ரீ கண்ணில் படவில்லை.. பவானி தேடி தேடி ஓய்ந்து போனாள். அழுகைதான் மிச்சமாக இருந்தது.

ஒருவாரம் முடிந்தது, நாளை எக்ஸாம். வாசுகிக்கு முக்கிய சொந்தத்தில் திருமணம். எனவே, வர.. போக.. முடியாத நிலை. 

பத்மநாபன் முதல்நாளே செந்திலிடம் விஷயத்தை சொல்லி.. ‘நீ கூட்டி போய்ட்டு கூட்டி வரியா’ என கேட்டார்.

செந்தில், பத்து சொன்னது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு..  ‘நான் விசு சர்ரை, கேட்டு சொல்லுகிறேன்..’ என்றார்.

அப்படியே பத்து நிமிடத்தில் அழைத்தார் செந்தில்.. ‘கோவையில் உள்ள வேலையை பார்ப்பதாகவும்.. எங்கள் காரிலேயே கூட்டி போகிறோம்.. எக்ஸாம் முடிந்து நாங்கள் அழைத்து வருகிறோம்’ என சொல்லி பேசினார்.

பத்மநாபனிற்கு, விசுவும் செல்லுகிறான் என்றதும் மேற்கொண்டு ஏதும் கேட்கவில்லை.. சந்தோஷமாக சம்மதித்தார்.

விசுவிற்கு, எந்த வேலையும் இல்லை.. கோவையில். சும்மா அவள் வருகிறாள் எனவும், இவனும் வருகிறான், இங்கிருக்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு. அப்படிதான் செந்தில் நினைத்தார்.

ஆனால், மறுநாள் காலையிலேயே அழைத்தான் செந்திலை.

விசுவிற்கு, இது ஒரு நல்ல சான்ஸ்சாக தெரிய, காலையில் எழுந்ததும் செந்திலிடம் போனில்  “செந்தில், நீங்க இங்க பாருங்க.. நான் அவங்களை கூட்டி போறேன்” என்றான், தடாலடியாக.

செந்திலுக்கு அதிர்ச்சி ‘விசுவை தனி அனுப்ப கூடாது என்பதுதான் அவரின் வேலையே.. இதுவரை, அப்படி அனுப்பியதே இல்லை..’ எனவே, என்ன சொல்லுவது என தெரியாமல் விழித்தார் செந்தில்.

விசு “என்ன, செந்தில்.. கல்யாணம் செய்துக்கனுமில்ல.. அப்போது கொஞ்சம் அவங்களை தெரிஞ்சிக்கனும்.. எப்படி, நீங்க எங்க கூடவே இருப்பீங்களா” என சொல்லி, சிரித்தபடி போனை வைக்க போனனான்.

செந்தில் “அம்மா.. விடமாட்டாங்க விசு சர்” என்றார்.

விசு “நீங்க எதுக்கு, சொல்றீங்க.. சொல்லாதீங்க..” என்றான் என்னமோ விளையாட்டு பையன் போல தோளை உலுக்கிக் கொண்டு.

செந்தில், “ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்..” என்றவர் “நான்  மட்டும் ஆபீஸ் போறேன்.. எப்படி போவீங்க, அம்மா கிட்ட என்ன சொல்லுவீங்க” என்றார்.

விசு “ம்.. தெரியலையே.. கிளம்பிட்டேன்.. சொல்லிட்டு, உங்க கிட்ட சொல்றேன்..” என்றான் சிரித்தபடி.

செந்தில் அமைதியான குரலில் “ஜாக்கிரதை.. எதுனாலும் கூப்பிடுங்க, சர்..” என சொல்லினார்.

விசு “டோன்ட் வொர்ரி செந்தில்.. நீங்க இங்க பாருங்க.. கூப்பிடுங்க.. பை” என சொல்லி கீழே வந்தான் நேரமாக.

வேதா பூஜை அறையில் இருந்தார், இவனும் அங்கே சென்று.. வங்கி சந்தனம் வைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

வேதாவும் பூஜை முடித்து வந்து, தன் மகனுக்கு திருநீறு வைத்தார் ‘எங்கே செல்லுகிறாய் இந்த நேரத்தில்’ என்பதாக ஒரு பார்வை பார்த்தார், அவன் கிளம்பி நின்ற தோரனையை பார்த்து.

ம்.. ரௌன்ட் நெக்.. ப்ரௌன்னும் ஃக்ரேவும் கலந்த டி-ஷர்ட், ஜீன்.. கூலர், ஸ்போர்ட் ஷூ அணிந்துக் கொண்டு அமர்ந்திருந்த மகனை பார்வையாலேயே கேள்வி கேட்டார் வேதா.

விசுவின் ப்ரௌன் நிற விழிகள்.. அன்னையை பார்க்காமல் நியூஸ் பேப்பர்ரை மேய்ந்துக் கொண்டே.. ‘இல்ல, ஒரு ப்ரெண்ட் வரான்.. ஏன் கூட படிச்சவன், வெளியே போறேன்.. அ..அதான்.” என்றான்.

வேதாவிற்கு பயம்.. என்னது ப்ரிண்ட்டா.. வெளியே போறானா என பயம். அன்னை “செந்தில் எப்போ வரார்.. நீ கிளம்பிட்ட” என்றார்.

விசு “இல்ல, இப்போதான் எனக்கே தெரிந்தது, அவர்கிட்ட நைட் சொல்லல, நா..நான்தான் அவரை பிக்கப்செய்யணும்..” என்றான், அவரை பார்க்காமல்.

வேதா மகனை உற்று பார்த்தார்.. விசு நிமிரவேயில்லை.

வேதா “ஜாக்கிரதை.. எந்த ப்ரிண்ட்.. பேரென்ன” என விசாரிக்க தொடங்கினார்.

விசுவிற்கு முச்சு முட்டியது. பொறுமையாக பொய் மேல், பொய் சொன்னான்.. ‘ஆர்டர் கிடைக்க, பயர்ஸ் கேட்க்கிறத விட, அம்மா கேட்க்கிற கேள்விதான் பயமா இருக்கு..’ என எண்ணிக் கொண்டு பொறுமையாக எல்லாம் சொன்னான்.. பொய் சொன்னான்.

உணவு அந்த நேரத்திற்கு தயாராகவில்லை.. சத்துமாவு கஞ்சி குடித்துவிட்டு, கிளம்பினான் விசு.

பவானியின் வீடு நோக்கி செலுத்தினான். 

காலை நேரம் ஆறரை மணிதான் இருக்கும், தனது வெள்ளை நிற, பென்ஸ் காரை.. லாவகமாக கேரேஜ்ஜிலிருந்து எடுத்துக் கொண்டு.. நகர்ந்தான். கூலர் எடுத்து அணிந்துக் கொண்டான்.. மனது பரவசமாக இருந்தது.. 

“ஹேய்.. விழும் இதயம் ஏந்தி பிடி..

ஹேய்.. அதில் கனவை அள்ளிக் குடி..

ஹேய்.. குருஞ்சிறகு கோடி விறி..

வா.. என் இதழிலேறி சிரி..” என சத்தமில்லாமல் பாடிக் கொண்டே, பவானி வீடு நோக்கி காடியை செலுத்தினான்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!

வேதாவின் பயம்..

வீரசேகர் வேதநாயகியின் ஒரே மகன்தான் விஸ்வநாதன். வீரசேகர், தன் தந்தையின் நூற்பாலையையே கவனித்துக் கொண்டார். முன்பு இருந்த ஆலையை விரிவுப்படுத்தினார், பெரிதாக்கினார், உள்நாடு முழுவதும் தனது வர்த்தகத்தை பரப்பினார். அதன் மூலம் இன்னும் நிறைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினார்.

ஆனால், நிறைய எதிரிகளையும் சம்பாதித்துக் கொண்டார், அவருக்கே தெரியாமல். எப்படி இருந்தாலும் தொழில்துறை என்பது போட்டிகளும் பொறாமைகளும் கொண்டதுதானே. அப்படி தெரியாமல் இரு நண்பர்களிடம் சிக்கிக் கொண்டார் வீரா.

பத்மநாபனும்.. வீராவும் சிறுவயது நண்பர்கள். பத்மநாபனின் வசதி வாய்ப்புகளை பார்க்காமல்.. இலகுவாக பழகுவார் வீரா. அப்படிதான், பத்துவின் தொழிலை விரிவுப்படுத்த.. தன்னால் முடிந்த உதவியை செய்தார். 

பணம் கொடுக்கவில்லை.. ஆனால், தெரிந்த மனிதர்கள் மூலம் அவருக்கு ஒப்பந்தகள் கிடைக்க செய்துவது.. வேலைக்கு ஆட்கள் கிடைக்க செய்தவது.. தொழில் முறையில் சிக்கல் என்றால்.. தனக்கு தெரிந்த அதிகாரிகளை அறிமுகம் செய்வது என, எல்லா உதவிகளும் செய்து கை தூக்கி விட்டவர் வீரா.

பத்மநாபனை விட வீரா பொருள்படைத்தவர். ஆனால், தன் நண்பனிடம் அதை காட்டியதே இல்லை வீரா. தொழில்முறை நண்பர்கள் என வரும் போது தன்னிடத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டார் மனிதர். எல்லோரிடமும் சகஜமாக பழகுவார், அதே சமயம் அளவாகத்தான் நட்பு பாராட்டுவார். உதவிகள் என வந்தால் வேண்டியதை செய்வார். ஒரு நல்ல மனிதர்.

வருடங்கள் சென்றது.

பத்மநாபன்.. வீரா.. இருவரின் நட்பும் நன்றாகவே இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளியே செல்லுபவார்கள் இருவரும்.. வீராவிற்கு தொழில்முறை சந்திப்புகளே அதிகம். மனவிட்டு யாரிடமும் தனது யோசனைகளை பகிரவே முடியவில்லை. பத்து இன்னும் ஒருசிலர் மட்டுமே வீராவின் உற்ற நண்பர்கள். அதிலும் அவர்கள் எல்லாம் வெவ்வேறு ஊர். பத்மநாபன் மட்டுமே அருகில் இருக்கிறார்..

இப்போதெல்லாம் பத்துவையும், பார்க்கவே முடியவதில்லை.. அவரிடம் சரியாக பேச முடிவதில்லை என எண்ணி.. வீரா, சொன்னார் ‘எங்காவது போலாம் பத்து’ என.

அதனால், 1௦ வருடங்களுக்கு முன்பு, பத்மநாபனின் பிறந்தநாள் விழா, அதை கொண்டு இருவரும் கோவா சென்றனர். வீட்டில் சொல்லி சமாளித்துவிட்டு சென்றனர். ஒருவார பயணமாக.

முதல் இரண்டு நாட்கள் நன்றாக சென்றது. அடுத்த நாளில் பத்மநாபனின் கல்லூரி நண்பர்கள் நால்வரை அங்கே சந்தித்தார் பத்து. அவர்கள் எல்லோரும்  கல்லூரி காலத்து நண்பர்கள்.

ஆக, அடுத்த இரண்டு நாட்கள் அவர்கள் எல்லோரும் பழகினர்.. அதில் முக்கியமாக வேணுகோபால் என்கிற வேணு, இரத்தினவேல் என்கிற வேல். இருவரையும் அறிமுகம் படுத்தினார்.

எல்லோரும் சமகாலத்தில் இருந்தனர்.. எல்லோரும் ஒரளவு வசதி வாய்ப்புகள் கொண்டவர்கள். ஆனால், வீரா பரம்பரையாக தொழிலதிபர். எனவே, வேணு, வேல் இருவருக்கும்.. பத்து மீது கொஞ்சம் பொறாமை கூட வந்தது. வீரா யாரிடமும் ஒதுக்கம் காட்டவில்லை, தள்ளி நின்று பேசவில்லை.. கிட்டத்தட்ட தன் நிலையிலிருந்து இறங்கி வந்து பேசினார். பொழுதுகளும் கொஞ்சம் கலகலப்பாக சென்றது.

இந்த இருவரும், வேறு ஊர், அங்கே மால் தியேட்டர் என சேர்ந்து தொழில் செய்பவர்கள்.. அவர்களுக்கு சினிமா எடுக்க வேண்டும் என ஆசை. அது அவர்களின் பேச்சில் எப்போதும் தெரியும். இப்போதும் அப்படியே.. ஒரு படத்தின் செலவு, அதன்மூலம் வரும் வரவு என பேச பேச வீராவிற்கும் அந்த ஆசை ஒட்டிக் கொண்டது போல. தானும் அந்த பேச்சில் இணைத்துக் கொண்டார். வீராவிற்கு, இந்த தொழில் குறித்து ஈர்த்தது. அதன்பின் இயல்பான நேரம் சென்றது.

எல்லோரும் முன்பின் என கிளம்பி ஊர் வந்தனர்.

நாட்கள சென்றது.. அவ்வபோது பேசுவார்கள்.. வேணுவும் வேலுவும், வீராவும் ஆவலாக பேசுவார்.. நட்பு கொஞ்சம் விரிவடைந்தது.. ‘கொஞ்சம் கையை கடிக்குது..  ரொட்டஷ்ணுக்கு பணம் வேணும்.. அடுத்த் வாரம் தந்திடுவோம்..’ என கேட்கும் அளவுக்கு அடுத்த் இரண்டு வருடங்களில் நட்பு வளர்ந்தது.

 

Advertisement