Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

7

விசு, நேரே தன் நபர்களை சந்திக்க வந்தான். அவர்கள் எப்போதும் மீட் செய்யும் இடத்தில், எட்டுமணிக்கே தொடங்கிவிட்டது, இன்றைய மீட்டிங். அந்த ஊரில் உள்ள முக்கிய வியாபாரிகள்.. முதலாளிகளின் வாரிசுகள் என மொத்தம் எட்டு நண்பர்கள் அந்த கேகில் எப்போதும் உண்டு. இன்று ஐவர் மட்டுமே இருந்தனர்.. மீதி மூவர், எதோ வேலை என அவுட் ஒப் ஸ்டேஷன்.

இளம் முதலாளிகள்.. இவர்கள். ஒரே ஊர்.. தொழிலில் பழக்கம், தந்தை மூலம் பழக்கம்.. சிறுவயது நண்பர்கள் என சேர்ந்தவர்கள் இவர்கள். அதிலும் முக்கியமாக மதுவிற்கு அடிமையாக கூடாது என கொள்கை கொண்டவர்கள். எனவே வாரத்தில் ஒருநாள் இப்படி ஒன்று சேர்ந்து பார்ட்டி செய்வர். வேறு எந்த பிஸினெஸ் மீட் என்றாலும், தங்களின் நிலையிலிருந்து இறங்கி அங்கே ட்ரிங்க்ஸ் ஏதும் செய்யமாட்டார்கள். நண்பர்களோடு வாரம் ஒருநாள் மட்டுமே.. தங்களின் கவலைகளை மறந்து பேசி சிரித்து என பொழுதை கழிப்பர்.

இந்த கேங்கில்.. விசுவும், இன்னொருவரும் மட்டுமே திருமணம் ஆகாதவர்கள். மற்றபடி எல்லோரும் குடும்பஸ்தர்கள். இன்று இருவர் ஆப்சென்ட்..  விசுவும் ஆப்சென்ட் என எண்ணி மற்றவர்கள் ஐவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு நண்பரின் பண்ணை வீடு.. இது. நிலவு உச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்க.. முன்புறம் கேரளாபாணியில் ஓடுகள் வேய்ந்த அழகான வராண்டாவில்.. கச்சேரி ஆரம்பமாகியது. இப்போது விசுவும் வந்து சேர்ந்துக் கொண்டான்.

விசு, காலையில் அணிந்திருந்த அதே போர்மல் உடைதான்.. அசதியும் சந்தோஷமும் அவனின் ப்ரௌன் நிற விழியில் தெரிய.. அது அந்த இரவு வேளையில் மின்னியது.. தன் முழு கை சட்டையை முழங்கைவர மடித்துவிட்டுக் கொண்டு..  நண்பர்களை பார்த்ததும், காரிலிருந்து துள்ளி குதித்து இறங்கி.. ஓட்டமும் நடையுமாக வந்தான் நண்பர்களிடம். 

வரும் போதே விசுவின் முகத்தை கவனித்து விட்ட நண்பர்கள் “என்ன விசு.. குட் நியூஸ் எதோ இருக்க போலருக்கே..” என ஆரம்பித்தனர். விசுவும், தனக்கு நடந்த பிஸினெஸ் ஆர்டர் சொன்னான்.. எல்லோரும் அதற்கு வாழ்த்து சொல்லினர்.

அதை எல்லாம் ஏற்றுக் கொண்டவனது மனது பவானியை நினைத்துக் கொண்டது, சட்டென. அந்த பெரிய நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு தனக்கான ஒரு கிளாஸ்சை எடுத்துக் கொண்டு, அவளை தள்ளி வைத்து, நண்பர்களோடு பேச தொடங்கினான், விசு. 

ஒவருவரை ஒருவர் கிண்டல் செய்துக் கொண்டு.. பழைய கதைகளையும் பேசிக் கொண்டு.. என அந்த இடம் களைகட்டியது.

இப்போது, செந்திலும் வந்திருந்தார் அந்த வீட்டின் உள்ளே. அவர், தனக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டு அமர்ந்து உண்ணத் தொடங்கினார். நண்பர்கள் இருக்கும் பக்கம்  செல்லவில்லை அவர். எப்ப்டோதும் இப்படிதான் விசு இருக்கும் இடத்தில் செந்தில் இருப்பார். 

விசு, எங்கு சென்றாலும் செந்தில் இருப்பார். விசு தனியாக காரை எடுத்ததேயில்லை இதுவரை. அதுவும் இது போன்ற நேரங்களில், செந்திலின் இருப்பு முக்கியம். எனவே உண்டு முடித்து, கயிற்றுக் கட்டிலில் உறங்கிவிடுவார். விசு, வீடு கிளம்பும் போது எழுப்புவார்.  

இன்றும் இரண்டுமணி வரை கச்சேரி நடக்க.. அதற்குமேல்தான் விசு வீடு வந்தான். விசுவை வீடு விட்டுதான் செந்தில் வீடு செல்லுவார். இன்றும் அப்படியேதான் நடந்தது. 

விசு வீடு வந்து சேறும் வரை, அன்னை விழித்தே இருந்தார். விசு சத்தமில்லாமல் மேலே செல்லுவதை பார்த்ததும்தான், நிம்மதியாக உறங்கினார் வேதா. இது என்னமோ அவருக்கு பழகிவிட்டது.. தன் கணவர் இறந்ததிலிருந்து.. விசுவை கண்போல காக்கிறார் இவரும். ம்.. இன்னொருவர் பத்மநாபன். 

எனவே விசு எப்போதும் அன்னை வேதாவின் கண்ணுக்கும் தப்ப முடியாது.. வெளியே பத்மநாபன் கண்ணுக்கும் தப்ப முடியாது.. இதில் ஏதேனும் பிசகினாலும் செந்திலின் கண்ணிலிருந்து தப்பவே முடியாது. ஆக, அவன் எப்போதும் கண்காணிப்புக்கு உற்பட்டவன். கண்காணிப்பு என்பது.. தவறாக இல்லை, அவனை பாதுகாக்கும் விதமானதாக இருக்கும் அவ்வளவே.

!@!@!@!@!@!@!@!@!@!@!

பவானி, இப்போதெல்லாம் படிப்பில்தான் கவனம், ஸ்ரீ என்ற எண்ணம் வரும் போதெல்லாம் படிப்பை கையிலெடுத்துக் கொண்டாள். ஆனால், அது அவ்வளவு ஈசியாக இல்லை, கடினமானதாக இருந்தது பெண்ணுக்கு, என்னமோ மேலே படிக்க வேண்டும் என தோன்றிவிட்டது அவளுக்கு.

காரணம், மருத்துவமனையிலிருந்து வந்த சில நாட்களில்.. தந்தை, பெண்ணின் திருமணம் பற்றி பேசினார். அதுவும்  விசுதான் உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என மீண்டும் மீண்டும் அவளிடம் சொல்லினார், ‘விசு, உன் எக்ஸாம் முடிஞ்சதும்.. பெண் கேட்டு வருவான்.. உடனே திருமணம்‘ என பேசியிருந்தார். 

அதனாலோ என்னமோ பவானிக்கு, கோவமும்.. பயமும்.. ஒருங்கே வந்தது. ‘எங்கே தன் தந்தை.. விசுவிற்கே தன்னை கட்டிக் கொண்டுத்து விடுவாரோ’ என பயம். அத்தோடு ‘எப்படி என் விருப்பம் இல்லாமல் திருமணம் பேசிலாம்’ என கோவம். எனவே படிப்பின் பின் நின்றுக் கொண்டாள் பெண்.. திருமணத்திலிருந்து தப்பிக்க.. படிக்க கற்றுக் கொண்டாள், பவானி.

மேலும், தன் தந்தை பேசும் போதெல்லாம் சொல்லுவாள் பவானி ‘அப்பா.. இப்போ கல்யாணம் வேண்டாம், கொஞ்சம் நாள் போகட்டும் நான், இன்னும் கொஞ்சம் படிக்கிறேன்’ என சொல்லுவாள். 

ஆனால், தந்தையால்.. பெண்ணின் பேச்சை ஏற்க முடியவில்லை ‘இந்த விஷயத்தில் நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்’ என்பது போல, தந்தை பிடிவாதமாகதான் பேசுவார் ‘விசுதான் உனக்கு மாப்பிள்ளை’ என. 

அதனால் பவானியும், கத்துவாள்.. ‘செயினை கழற்றுகிறேன்’ என்பாள்.. ‘முடியாது.. யாரையும் கல்யாணம் செய்யமாட்டேன்’ என்பாள். இப்படி சண்டைகள்தான். இப்படி சண்டைகள் தொடர.. இருவருக்கும் பேச்சு நின்று போனது.. முயன்று படிப்பில் கவனம் சென்றது, பவானிக்கு.

எனவே படிப்பு படிப்புதான் அவளுக்கு.. எப்படியேனும் மேல் படிப்பு மூலம் தன் திருமணத்தை தடுத்துவிடலாம் என எண்ணுகிறாள் பவானி.

பவானி, இன்று தன் தந்தையோடு ஹால்டிக்கெட் வாங்க சென்றாள். வழி முழுவதும் ஒருவார்த்தை பேசவில்லை இருவரும், அமைதிதான்.

பெண்ணுக்கு கல்லூரி உள்ளே நுழைந்ததுமே ஸ்ரீயின் நினைவு.. கண்கள் ‘எங்கே.. எங்கே அவன்..’ என தேடியது. மனது ‘இங்கேதான் நாங்க மீட் பண்ணினோம்.. இப்படி பேசினோம்.. இங்கே அவன் ப்ரபோஸ் செய்தான்.. இங்கே கைகோர்த்து பேசினோம்..’ என நினைவுகளை திருப்பிக் கொண்டே சென்றாள்.

பத்மநாபன், நேரே முதல்வரை சந்தித்து பேச.. பவானிக்கு, போதும் போதும் என்கிற அளவுக்கு அறிவுரை. பவானி, தலை நிமிராமல் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் பத்மநாபன் எதோ பேச.. முதல்வர் அதற்கு பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், இவளுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது அதில்.. ‘ம்.. ஸ்ரீ, எக்ஸாம் எழுத வருவான்’ என்ற நற்செய்தி கிடைத்தது பெண்ணுக்கு.

அதற்குப்பின், அவர்கள் பேசியது ஏதும் காதில் விழவில்லை அவளுக்கு. ‘ஸ்ரீ வருவான்.. வருவான்.. அவன், படிப்பு கெடவில்லை.. அவன் நன்றாகத்தான் இருக்கிறான்..’ என பல்வேறு செய்திகளை அவளுக்கு சொல்லியது, அந்த உரையாடல்.

பவானிக்கு முகம் மலர்ந்தது.. தானே வந்து காரில் ஏறி அமர்ந்துக் கொண்டாள். மீண்டும் ஈரோடு கிளம்பினர் இருவரும். 

பத்மநாபன், எப்போதாவதுதான் பெண்ணோடு வெளியே செல்லுவது, அப்படி வரும் நேரத்தில் அவளுக்கு.. மிகவும் பிடித்த அந்த சிஸ்லிங் ஐஸ்கிரீம் கேட்பாள். இப்போதெல்லாம் ஏதும் கேட்பதில்லை பெண், ‘ஏன் பார்ப்பதே இல்லை என்னை’ என எண்ணிக் கொண்டார் தந்தை.

இன்று அவள் கேட்காமலே அங்கே கூட்டி வந்தார் தந்தை. பெண் முகத்தில் அப்போதேனும் ‘மாற்றம்  வருமோ.. என்னை பார்ப்பாளோ..’ என எண்ணி கூட்டி வந்தார்.

நடந்தது, தந்தை எதிர்பார்த்தபடி பெண்ணின் முகம் லேசாக சாந்தமாகியது.. ரசனையாகியது.. விரும்பி உண்டாள்.. அந்த சிஸிலிங் ஐஸ்கிரீமை. அப்படியே சுட சுட சாக்லெட் சாஸ்ஸோடு.. குளிர்ந்த வெண்ணிலாவும் ஐஸ்கிரீமும், பிரௌனியும் தொண்டையில் இறங்க..  அஹ.. சற்று நேரம் தன்னை மறந்து சுவைத்தாள் பவானி. என்ன! தன் தந்தையை நிம்ரிந்து பார்க்கவில்லை, பவானி.

பத்மநாபனும் ஏதும் பேசவில்லை, மகளை ரசித்துக் கொண்டே, யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். இன்னமும் மகள் கோவம் கொண்ட ஐந்தாம் வகுப்பு பெண் போலவே தெரிந்தாள், தந்தைக்கு.

சிறுவயதில், இப்படிதான் சண்டை என்றால் இருவரும் கிளம்பி ஐஸ்கிரீம் உண்ண வருவர். வரும் போது கோவமாக வருவர்.. செல்லும் போது, சமாதானமாகி செல்லுவர். ஆனால் அந்த நிலை மாறிற்று போல.. இப்போது. எந்த சமாதானமும் இல்லை.. பெண், தந்தையை நிமிர்ந்தே பார்க்கவில்லை. உண்டு முடித்து.. நேரே அதிகாரமாக காருக்கு சென்றுவிட்டாள். தந்தைக்கு ஆற்றாமை.. கூடவே, மெல்லிய சிரிப்பு.. சிரிப்புதான் வந்தது.. அவளின் அதிகாரத்தில், இவர் சிரித்துக் கொண்டே பில் பே செய்து கிளம்பினார், காரெடுக்க.

காரில் வர வர, தந்தைக்கு.. ‘அந்த பையன் எக்ஸாம் எழுத வருவான்’ என முதல்வர் சொன்னது ஓடிக் கொண்டே இருந்தது. என்ன கொஞ்ச நேரம்தானே.. எக்ஸாம் முடித்த உடன் கூட்டி வந்தவிட வேண்டும்.. ப்ரிண்ட்ஸுடன் பேச அனுமதிக்க கூடாது.. வசுவை துணைக்கு அனுப்ப வேண்டும் என பல யோசனைகளோடு வந்தார்.

ஆனால், பவானிக்கு அப்படி ஏதும் இல்லை, இந்த சின்ன செய்கையை நிரம்ப என்ஜாய் செய்தாள்.. ‘எத்தனை நாட்கள் சென்று அப்பாவே வந்திருக்கிறார்.. சூப்பர்.. கேட்க்காமலே கூட்டி போயிட்டார்..’ என அந்த சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டு, மெல்ல கண்மூடி.. எதோ பாட்டை, தன் போனில் வைத்துக் கொண்டு.. ப்ளூடூத் வைத்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!

Advertisement