Advertisement

வேதாவும் “என்ன அண்ணா, எப்படி இருக்கீங்க.. ” என ஆரம்பித்தார். பத்து, மெதுவாக தலையசைத்தார்.. பெண் கண் விழித்து விட்டாள்.. என்பதில் கொஞ்சம் திடம் வந்திருந்தது போல.. அமர்ந்து இருந்தார்.

வேதா ஆரம்பித்தார் “என்ன இப்போ, எதுக்கு பயப்படுறீங்க.. எல்லாம் சரியாகும். இப்போவெல்லாம் இப்படிதானே இருக்காங்க பிள்ளைகள்.. இதுக்கு போய் நீங்க அலட்டிக்கலாமா.. விடுங்க சரியாகிடும். என்ன, கல்யாணம் தான்.. டிலே ஆகும். ஏதாவது சொந்தத்தில் பார்க்கலாம் பொறுமையாய்..” என்றார், பேசிக் கொண்டிருக்கும் போதே.. இதெல்லாம் பேச்சில் சொல்லிவிட்டார் வேதா.. படபடவென பேசவில்லை, ஆனால், பேச்சில்.. ஆங்காங்கே இந்த வார்த்தைகளை தகுந்த அர்த்ததுடன் சொல்லிவிட்டார் வேதா.

விசுவிற்கு தன் அன்னையின் பேச்சு முதலில் புரியவில்லை.. கடைசியாக  கல்யாணம்தான் லேட் ஆகும் என சொன்னதில்தான் .. அன்னை எதோ பேசுகிறார் என புரிந்தது அவனிற்கு, இப்போது சட்டென அங்கிளின் முகத்தை பார்த்தான் விசு. 

பத்மநாதனுக்கு முகம் வாடி போகிற்று. வாசுகிக்கு இப்போது மீண்டும் கண்ணீர் வர தொடங்கியது.. நேற்றிலிருந்து தன் கணவனுக்கு முடியவில்லை என்றதிலிருந்து.. ஒரு திடத்துடன் இருந்தவர், இந்த பேச்சில் கொஞ்சம் கலங்கினார். 

விசு “ம்மா, பவானியை பார்க்கலாம், அங்க டைம்தான்.. இப்போ பார்த்துட்டு வந்திடலாம், அங்கிள்கிட்ட அப்புறம் பேசலாம்..” என்றான் பொதுவாக.

வாசுகிக்கு, விசுவின் வார்த்தை புரியவும் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்துக் கொண்டார் உடனே.. தன் கணவரிடம் விடைபெற்று “வாங்க அண்ணி, பவானியை பார்க்கலாம்” என அழைத்து சென்றார்.

வேதா, இப்படிதான் என தெரியும் வாசுகிக்கு. மிதப்பாகதான்  பேசுவார்.. பழகுவார்.. ஆனால், இப்படி, நேரம் காலம் தெரியாமல் இது போல பேசி வைப்பார் என தெரியாது வாசுகிக்கு. எனவே விசு சொல்லவும் எதோ அலராம் வைத்தவர் போல எழுந்துக் கொண்டு, அவரை கூட்டிக் கொண்டு சென்றார் மகளை பார்க்க.

விசு, இங்கேயே இருந்தான். பத்மநாபன், தம் மகள் கண் விழித்துவிட்டாள் என அறிந்ததிலிருந்து.. விசுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.. மகளை பார்க்க வேண்டும் என. அவனும் மருத்துவரிடம் கேட்டு சொல்லுவதாக சொல்லி இருந்தான்.

இப்போது விசு, பத்மநாபனிடம் “ஒரு ஐந்து நிமிஷம் இருங்க.. நர்ஸ் உங்களை, கூட்டி வருவாங்க..” என சொல்லி அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.

பத்மநாபன் “என்ன ப்பா.. கஷ்ட்டப்படுத்திட்டேனா.. நீயில்லைன்னா.. என்ன ஆகியிருக்கும்ன்னு தெரியலை ப்பா..” என பேசினார்.

விசுக்கு பயம் மீண்டும் ஏதேனும் ஆகிவிடுமோ என அவசரமாக “அங்கிள், ப்ளீஸ்.. அமைதியா இருங்க.. உங்க பெண்ணை பார்க்கனுமா வேண்டாமா.. நீங்க டெம்பர் ஆகாமல் இருந்தால்தான் கூட்டி போவேன்” என்றான் சற்று உரிமையாக.

பத்மநாபன் சிரித்துக் கொண்டே அமைதியானார்.

சற்று நேரத்தில் நர்ஸ் வந்தார்கள், பத்துவை, தூக்க நினைத்தனர்.. ஆனால், பத்து தானே எழுந்து நிற்க முயன்றார்.. இருவரும் பிடிக்க வர, பத்து அவர்களை கை காட்டி நிறுத்தி, தானே பொறுமையாக அமர்ந்தார், அந்த வ்ஹீல் சேரில்.

விசு ‘திடமாகதான் இருக்கார் ‘ என நினைத்துக் கொண்டான்.

பவானியின் அறையில் வந்தார் தந்தை. பெண் விழித்திருந்தாள்.. மயக்க நிலையிலேயே இருந்தாள். அடிக்கடி கண் விழிக்கிறாள்.. ஆனால், பேசவில்லை., எல்லோரையும் பார்ப்பவள் கண்களை மூடிக் கொள்கிறாள்.. மருந்தின் வீரியம் அப்படி போல. மூச்சு சீராக வந்தது.. ஆனால், யார் பேசுவதற்கும் பதில் சொல்ல முடியவில்லை, இன்னும் உணவு கொடுக்கவில்லை.

தன் மகளை அப்படி பார்த்தவருக்கு மீண்டும் அதிர்ச்சி, தன் பெண்ணின் கையை பிடித்துக் கொண்டார் “அப்பா உன்னை கவனிக்கலையாடா… என்ன டா இப்படி பண்ணிட்ட” என்றார்.

ரூமில் நால்வர் மட்டுமே இருந்தனர், செந்தில் அறையின் வாசலில் தள்ளி நின்றார்.. 

வாசுகி அழ தொடங்கினார் கணவனின் பேச்சில். தந்தை மீண்டும் “பாரு என் பொண்ணு எப்படி இருக்கா பாரு.. எல்லாம் சரியாகிடுச்சின்னு சொன்னீங்க.. பாரு.. எப்படி இருக்கான்னு, வாசுகி, இவ ஆசைப்பட்டான்னு தானே, அங்கே சேர்த்தேன்.. இப்போ பாரு.. எப்படி இப்படி பார்ப்பேன் என் பெண்ணை.. ஏன் வாசுகி சரியாகிடுமா இவளுக்கு, பேசுவாளா என்கிட்ட, நான்தான் தப்பு பண்ணிட்டேன்.. சாரி ம்மா.. அப்பாவை மன்னிச்சிடு..” என உணர்ச்சி மிகுதியில் குரல் கரகரத்தது.

விசு, அவரின் தோளைத் தொட்டான் ஆறுதலாக.. அவனை நிமிர்ந்து பார்த்தார்.. பத்மநாதன் “எப்படி இருப்பா தெரியுமா.. கோவமா இருந்தாதான் பேசமாட்டாள், மத்தபடி பேசிட்டே இருப்பாள்.. ஓயவேமாட்டா. ஒரு இடத்தில் அமரமாட்டாள்.. எல்லாம் சரியாகிடும்ன்னு சொன்னீல்லா, பாரு” என்றார்.

விசுவிற்கே இப்போது சங்கடமாக போனது. வேதா, இதை பார்க்க முடியாமல்.. ‘ஐயோ, தாங்கமுடியலை’ என எண்ணி வெளியே வந்தார்.

விசு இப்போது “அங்கிள், உங்களுக்கு தெரியாத, அவங்களுக்கு, ஹெவ்வி ட்ரக்ஸ் கொடுத்திருக்காங்க.. இன்னும் ஒன்டே போனால்தான், கொஞ்சம் நார்மல் ஆகும்ன்னு சொல்லி இருக்காங்க.. அவங்க இவ்வளவு தூரம் ரெகவர்ஆகி இருக்காங்க.. இதோ பாருங்க.. எல்லா ட்ரீட்மென்ட்டும் போயிட்டிருக்கு.. கண்டிப்பா, முழுசா ரெகவர் ஆகிடுவாங்க.. நீங்க பயப்படாதீங்க..” என்றான். கூடவே “டென்ஷன் ஆகாதீங்க, வாங்க போகலாம்.” என சொல்லி, அவரை அழைத்தான்.

பத்மநாபன் தன் பெண்ணின் கையை விடவேயில்லை.. “ஏன் விசு, எனக்கு ஏதாவது ஆச்சுன்னா.. இப்படி இருக்கிற பெண்ணை யாரு பார்ப்பார்கள்.. ம், எல்லோரும் சொல்ற மாதிரி எப்படி கல்யாணம் செய்வேன் என் பெண்ணுக்கு.. ஐயோ எனக்கு அந்த  பாக்கியம் இல்லை போல..” என்றார் குரல் நடுங்க.

விசு “அங்கிள், நான் சொல்றேனில்ல.. அவங்க சரியாகிடுவாங்க… நான் பார்த்துக்கிறேன், நீங்க வாங்க..” என்றான், அதட்டலாக..

பத்து “என்ன நீ பார்ப்ப.. ம், என்ன பார்ப்ப..” என்றவர், திடீரென விசுவை  பார்த்து திரும்பினார் “நீ என் பெண்ணை பார்த்துப்பியா.. சொல்லு” என்றார், ஆவேசமாக.

பத்மநாபன் முழு ஆவேசத்தில் இருந்தார்.. தன் பெண்ணுக்கு இப்படியானது, அவளை இந்த நிலையில் பார்க்க முடியாதது, தனக்கு ஆபரேஷனில் ஏதேனும் ஆகிவிட்டால்.. இப்படி இருக்கும் பெண்ணை என்ன செய்வது என யோசித்தது அவரின் பதறிய மனது.

பத்து “சொல்லு, நாளைக்கு ஆப்ரேட் பண்ணுவாங்க, எனக்கு.. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா என் பெண்ணை பார்த்துப்பியா..” என்றார்.

விசு “அங்கிள், இது சும்மா சின்ன ஆபரேஷன்.. சொல்ல போனால்  இப்போவெல்லாம் ஈசியா பண்றாங்க. அத்தோட உங்களுக்கு ஒன்னும் ஆகாது உங்களுக்கு.. நீங்க வாங்க..” என்றான் சமாதானமானக் குரலில்.

பத்து விடாமல் கேட்டார் இரண்டுமுறை.. விசுவும் சமாதானம்தான் செய்துக் கொண்டிருந்தான்.. 

பத்மநாபனிற்கு, மூன்றாம் முறை கேட்கும் போது குரல் நடுங்கிய.. கண்களில் நீர் வழிந்தது.. விசு அதை கவனித்து “அங்கிள் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க கிளம்புங்க” என்றான் கட்டளையாக.

பத்மநாபனின் விழிகளில் இப்போது மினுமினுப்பு “உண்மையா பார்த்துப்பியா..” என்றார்.

விசு அமைதியாக தலையாட்டினான்.

பத்மநாபன் “அம்மா வேதா.. வேதா.. எங்க இருக்க” என்றார். வாசுகி “என்னங்க.. இதென்ன பேச்சு, எல்லாம் சரியாகிடும், வாங்க.. ரெஸ்ட் எடுங்க நீங்க” என்றார் அதட்டலாக.

பத்மநாபன் “நீ சும்மா இருடி, என் வீராவாக இருந்திருந்தால்.. இந்நேரம், என் மனதை புரிந்துக் கொண்டிருப்பான்.. வேதா..” என்றார் கண்ணில் ஒரு ஒளியுடன்.

செந்தில், வேதாவை உள்ளே அழைத்து வந்தார்.

வேதாவிடம், பத்து “வேதா.. இங்கே வா, வா..” என்றார்.

வேதா, விசுவின் அருகே வந்து, பத்துவின் கண்ணில் படும்படி நின்றார்.

பத்மநாபன் “வேதா, என் வீரா இருந்திருந்தால் இந்நேரம் என் எண்ணம் புரிந்திருக்கும் அவனுக்கு.. இன்னிக்கு, இல்ல, நாளைக்கு எனக்கு ஆப்ரேஷன்.. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, என் பெண்ணை, இ..இவன் பார்த்துக்கிறேன்னு சொன்னான்.. நீ, என்ன சொல்ற வேதா..” என்றார், புதையலை கண்ட கஞ்சனாக.

வேதநாயகிக்கு, ‘இதேது டா புது குழப்பம்’ எனதான் தோன்றியது. தன் மகனை பார்வையால் எரித்தார் வேதா..

விசு கீழே குனிந்துக் கொண்டான். அவனின் இதயம் “லப் டப் லப் டப்..” வேகமெடுத்தது.

பத்து கைகள் நடுங்க “ஆமாம் தானே விசு..” என்றார், கெஞ்சலாக.

விசு, இப்போது தன் அங்கிளை பார்த்தான் அமைதியாக.. ஆனால், உள்ளே அத்தனை படபடப்பு.. நேற்றிலிருந்து இவர் படும் அவஸ்த்தையை பார்க்கிறவனுக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை. அதைவிட அன்னை.. அவரை, அவனால் நிமிர்ந்துக் கூட பார்க்க முடியவில்லை.

வாசுகி “என்னங்க, வாங்க.. நம்ம பொண்ணுக்கு ஒண்ணுமில்ல.. எல்லாம் சரியாகிடும். நீங்க அலட்டிக்காதீங்க. அவ, நல்லா ரெக்வர் ஆகிட்டு இருக்கான்னு, டாக்டர்ஸ், சொல்றாங்க.. நீ..நீங்க வாங்க.. விசு, எங்கே போய்ட போறார்.. பேசிக்கலாம்.. தம்பி, வாங்க ரூமிற்கு கூட்டி போலாம்..” என சொல்லி, தன் கணவரின் வ்ஹீல் சேரை நகர்த்தினார்.

அவ்வளவுதான் பத்மநாபன் “இரு டி, என் பொண்ணு விஷயம் பேசிகிட்டு இருக்கேன், விடு நீ..” என்றார், ஆவேசமாக.

விசு “ஆன்ட்டி.. இருங்க” என்றான்.

விசு, தன் அம்மாவை ஒருமுறை தீர்க்கமாக பார்த்தான்.. கண்மூடி திறந்தான் மன்னிப்பை வேண்டும் விதமாக.. வேதா அதிர்ந்த நெஞ்சோடு, தன் மகனை பார்த்திருந்தார்.

விசு “அங்கிள், நீங்க டென்ஷன் ஆகாதீங்க, நான் பொறுப்பு, இனி இவங்களுக்கு..” என சொல்லி நிதானமாக தன் கழுத்திலிருந்த, தங்களின் பரம்பரை செயினை.. கழற்றினான்.

வேதா “என்ன டா, என்ன.. விசு ப்பா.. இரு.. ப்பா..” என பதறினார்.

விசு “அம்மா.. ப்ளீஸ்..” என்றான் அவ்வளவுதான். பின் பேச்சே வரவில்லை அவனிடமிருந்து. தன் கையால், அவளுக்கு செயினை அணிவித்தான்.. நுனி விரல் கூட அவளை தீண்டாமல்.. அவளின் முகத்தை கூட பார்க்காமல்.. பேர் என்னவென சரியாக தெரியாமல்.. தன் அங்கிளை சமாதானம் செய்ய  சட்டென செய்துவிட்டான் விசு. அப்படிதான் அங்கிருந்த எல்லோருக்கும் தோன்றியது. திருமணங்கள் எப்போதும் சொர்க்கத்தில் நிச்சயப்பதில்லை போல.

பத்மநாபன் “என் வீரா பையன் டா நீ.. அப்படியே இருக்கான் பாரு.. வேதா.” என சொல்லி நெகிழ்ந்து, அந்த சேரில் அப்படியே சாய்ந்துக் கொண்டார், மனிதர்.

பெண்கள் இருவருக்கும் பல்வேறு  யோசனைகள். வாசுகிக்கு, நம்பிக்கையே இல்லை, விசுவின் செயலில்.. ‘இவரை, சமாதானம் செய்ய செய்திருக்கிறார்’ எனதான் தோன்றியது  எனவே, யாரும் ஏதும் பேசவில்லை.. வாசுகி சேரை நகர்த்த.. விசு, அழகாக தள்ளிக் கொண்டு.. அங்கிள் இருந்த அறைக்கு சென்றான்.

வேதாவிற்கு அப்படி ஒரு அவமானமாகி போனது, ‘என்னை பற்றி இவனுக்கு தெரியாத.. சும்மா என்றாலும் இப்படி செய்யலாமா.. இதென்ன சினிமா.. டிராமாவா..  அறிவுகெட்டவன்.. எல்லோருமாக சேர்ந்து அவனை எமோஷனல் அப்ரோச் செய்யறாங்க.. இடியட்.. இவனுக்கு ஏதாவது புரியுதா பாரு.. என்னை மதிக்கலை..’ என பலவாறாக எண்ணியபடியே.. “செந்தில் வரியா.. இல்ல, நானேதான் போகனுமா” என்றார், எல்லா திசையிலும் கோவமான வார்த்தைகளோடு.

செந்தில் “விசு சர்..” என, விசுவிடம் சொல்லிக் கொண்டு வர செல்ல..

வேதா விருட்டென விரைந்தார் வாசல் நோக்கி.. செந்திலுக்கு, என்ன செய்வதென்றே தெரியவில்லை, விசுவிற்கு அழைத்துக் கொண்டே காரெடுக்க சென்றார்.

 

 

Advertisement