Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

4

இப்படியே அரைமணி நேரம் கடந்தது. 

இப்போதுதான் வாசலில்.. கதவை இடிக்கும் சத்தம் கேட்கிறது. ஸ்ரீக்கு எழவே முடியவில்லை.. அவளை விட்டு நகர முடியவில்லை.

வனியின் குரலை போனில், கேட்டுவிட்டு, ராகவ் பயந்துக் கொண்டு.. தன்னோடு இரண்டு நண்பர்களை அழைத்துக் கொண்டு, ஸ்ரீயின் வீட்டிற்கு வந்துவிட்டான். 

வாசலில் வனி, உள்ளே இருப்பதற்கான அடியாளம் தெரிய.. பலமாக மூவரும் கதவை இடிக்கின்றனர். ஸ்ரீக்கு, எதோ புரிகிறதே தவிர, விளங்கவில்லை.. தன்னவளை எழுப்புவதும் முத்தமிடுவதுமாக  அவள் மீதே விழுந்தான்.

ராகவ்க்கு, பின்பக்க மதில் சுவர் நினைவு வர, அதன் வழியாக மூன்று நண்பர்கள் ஏறி குதித்து.. உள்ளே வந்தனர். அவசர அவசரமாக.. உள்ளே வந்து பார்க்க.. ஸ்ரீயும், பவானியும் இருந்த நிலை பார்த்து முதலில் முக சுழித்தனர். பின்னர்தான் புரிந்தது.. எதோ தவறாக இருக்கிறது என.

ராகவ் “ஸ்ரீ..” என அழைத்தபடி அருகில் வர… ஸ்ரீ “யா… யாரு… வனி பேபி..” என எதோ புலம்பி நிமிர்ந்தான். இப்போதுதான், நண்பர்களுக்கு புரிந்தது, பவானியின் அசைவில்லா நிலை.. அவளுக்கு உணரவில்லை.. ஸ்ரீ புலம்பிக் கொண்டிருக்கிறான் என.

அவசர அவசரமாக பவானியை ஸ்ரீயிடமிருந்து மீட்டு.. அவளை பார்க்க.. ஆராய, என்னமோ ஸ்ரீ கொடுத்திருக்கிறான் என புரிந்தது. காலம் தாழ்த்தாமல் காரெடுத்துக் கொண்டு.. பவானியை அழைத்து சென்றனர், மருத்துவமனைக்கு.

அருகில் இருந்த ஒரு சின்ன கிளினிக் செல்ல.. அங்கே, பவானி இருந்த நிலையை பார்த்தே.. ‘இங்க முடியாது.. பெரிய ஹாஸ்பிட்டல் போங்க..’ என்றுவிட்டனர்.

நண்பர்கள், ஸ்ரீயை வீட்டிலேயே விட்டு சென்றனர். 

பதறியபடியே மீண்டும் ஒரு பெரிய மருத்துவமனைக்கு தன் தோழியை கூட்டி சென்றனர். மூன்று நபர்கள் ஒரு பெண்ணை அந்த பெரிய மருத்துவமனைக்கு கொண்டு வரவும்.. பெண்ணை உள்ளே அனுமதிக்கவே நிறைய கேள்விகள் எழுந்தது.

சட்டென அங்கே நின்றிருந்த.. யாரோ ஒரு மருத்துவர் வந்தார் அந்த வாக்குவாதத்திற்கு நடுவில். பெண்ணின் பல்ஸ் பார்த்து.. உடனே, சிகிச்சையை தொடங்க சொன்னார். தீவிர சிகிச்சையில் அனுமதித்து சிகிச்சை நடந்தது. நண்பர்கள் தங்களிடம் இருந்த சொற்ப பணத்தை கட்டினர்.. “அவங்க பேரண்ட்ஸ் வந்துட்டு இருக்காங்க..” என சொல்லி சிகிச்சையை தொடங்க சொல்லினர்.

மருத்துவர்கள் அதற்கு காத்திறாமல் சிகிச்சையை தொடங்கினர்.

அடுத்த பத்து நிமிடத்தில்.. ஒரு கான்ஸ்டபில் வந்து நின்றார்.. அவரோடு எதோ நிருபர்.

மருத்துவர்களும், நண்பர்களிடம் எதோ கேட்டு முடித்து.. அப்போதுதான் வெளியே வர.. என்ன எது என தெரியாமல், அந்த பத்திரிகை நபர் வந்து “என்னாச்சுங்க..” என இயல்பாய் பேச்சுக் கொடுக்க.. “ஒன்னுமில்லைங்க.. எங்க பிரெண்ட்.. ஆக்சிடண்ட்..” என சொல்லி தள்ளி சென்றனர்.

கேள்விகள் எழுந்தது.. சிகிச்சை நடந்தாலும் நண்பர்களை நோக்கி கேள்விகள் எழுந்தது. நண்பர்கள், பவானியின் தோழிக்கு அழைத்து.. பவானியின் தந்தைக்கு அழைத்து சொல்ல சொல்லினர்.

இங்கே மருத்துவமனையில் போலீசும்.. பத்திரிக்கையும், தங்கள் வேலையை தொடங்கி இருந்தனர்.

பவானியின் தந்தை சென்னையில் ஒரு விழாவில் இருந்தார். இந்த மாலை வேலையில்தான் ஒரு கருத்தரங்கில் பங்கேற்க சென்றிருந்தார் மனிதர்.

பவானியின்  தோழிகளும், அவருக்கு அழைத்து.. ‘வனிக்கு, ஒரு ஆக்சிடண்ட் அங்கிள்… நீங்க வாங்க..’ என மருத்துவமனையின் பெயர் சொல்லி.. பேசினர் ‘என்னாச்சு..’ என்றார் பதட்டமாக, பவானியின் தந்தை..

தோழி “நாங்களும் இப்போதான் போகிறோம்.. தெரியலை.. நீங்க வாங்க..” என்று வைத்துவிட்டனர்.

பத்மநாபன், தன் மனைவியிடம் சொல்லி.. “நீ போ.. நான், பார்த்துக் கொண்டு வருகிறேன்.. ஏதாவது சின்னதாகத்தான் இருக்கும்.. நீ போ.. டிரைவர் யாரை கூப்பிட்டுக்கிற.. திருவை கூட்டிட்டு போ.. கொஞ்சம் பொறுப்பா கூடவே இருப்பான்.. நீ பேசு அவன்கிட்ட.. இல்லை, நான் கூப்பிட்டு சொல்லவா” என ஆயிரம் யோசனைகள் சொல்லி, மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பினார்.

வாசுகி வந்து சேர்ந்தார் அடுத்த இரண்டுமணி நேரத்தில். ஆனால், அதற்குள் விஷயம் கைமீறி போயிருந்தது. விஷயம் போலீசில் கசிந்து.. பத்திரிக்கை வரை.. கசிந்துவிட்டது.

மருத்தவமனை நிர்வாகம்தான் முதலில் பயந்தது. எனவே, போலீசிடமும், பத்திரிக்களையிடமும் காத்திருக்கும் படி கேட்டுக் கொண்டது. ‘வெயிட் பண்ணுங்க.. இன்னும் அந்த பெண் கண்விழிக்கலை..‘ என சொல்லி சமாளித்ததுக் கொண்டிருந்தது.

மருத்துவமனைக்கு, மாணவர்களின் கல்லூரியை கேட்டதும்.. கொஞ்சம் யோசனை.. எனவே, நிர்வாகத்திற்கு இப்போது தலைவலி.. ‘என்ன டா இது…’ என. எனவே கல்லூரியில் அழைத்து சொல்லினர் அவர்கள். இப்படி விஷயம் பரவத் தொடங்க.. வந்துவிட்டார்.. வாசுகி. 

தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு.. உள்ளே செல்ல.. அந்த பெண் இருந்த நிலையில் சிறப்பு வரவேற்பு கிடைத்தது வாசுகிக்கு.. ஏனெனில் பவானியின் நிலை அப்படி. பெண், போதை மருந்து உட்கொண்டிருக்கிறார் அளவுக்கு அதிகமாக என பரவிற்று செய்தி.

முதலுதவி சிகிச்சையே ஒருமணி நேரம் ஆகிற்று.. என்ன எது என்ன வகை ட்ரக்ஸ் என கண்டுபிடித்து, அதை க்யூர் செய்ய மருந்து கொடுத்து என பரபரப்பாக இருந்து அந்த icu.

இப்போது வாசுகியை.. பெண்ணை பார்க்க அனுமதித்தனர். ‘சிவந்த கன்னங்கள்.. கீறலினால் சத்தம் கட்டி சிவந்த உதடு.. நினைவில்லாமல் பெண்..’ பார்த்த தாய், பிரம்மை பிடித்தது போல நின்றார்.

நடுங்கும் குரலில் அங்கிருந்த மருத்துவரிடம் வினவினார் “என்னாச்சு டாக்டர்” என.

மருத்துவர்கள் அந்த அன்னையிடம் எப்படி சொல்லுவது என எண்ணினார் முதலில். ஆனால், மறைக்க முடியாதே.. எனவே, அளவுக்கு அதிகமாக ட்ரக்ஸ் எடுத்திருக்காங்க..’ என தொடங்கி, பிஸிகல் அப்யூஸ் நடந்திருக்கும்ன்னு நினைக்கிறோம், அவங்க கான்ஷியஸ் வந்த பிறகுதான்.. அதெல்லாம் பார்க்கணும். இப்போ நினைவை கொண்டு வர முயன்றுக் கொண்டிருக்கிறோம்..’ என்றார்.

கேட்டுக் கொண்டிருந்த, அன்னையின் முகம் வேர்த்தது.. கண்கள் கண்ணீரை நிறுத்தாமல் வார்த்துக் கொண்டிருந்தது.

இங்கே நிலை அறிந்தார் போல.. பத்மநாபன் அழைத்தார் தன் மனைவியை. அவசரமாக வெளியே வந்த வாசுகி.. ‘ஏங்க.. என்னமோ சொல்றாங்க.. பாப்பாக்கு மருந்து.. பல்ஸ் ரேட் குறைஞ்ச்சிடுச்சாம்.. இன்னமும் என்ன என்னமோ சொல்றாங்க, நீங்க வாங்க.. வெளியில் போலீஸ் இருக்காங்க… எனக்கு புரியலை..” என்றார் திக்கி திக்கி.

பத்மநாபனுக்கு புரியவில்லை.. போனை மருத்துவரிடம் கொடுக்கும் படி சொல்ல.. மருத்துவர் பொறுமையாக எல்லாம் விளக்கினார்.

பத்மநாபனுக்கு, கண்ணில் நீர் துளிர்த்தது.. பார்த்து பார்த்து வளர்த்த பெண்.. போதை மருந்தை எடுத்துக் கொண்டிருக்கிறாள்.. இன்னும் எதோ காயங்கள்.. தந்தையின் மனம் பதை பதைப்பதை வார்த்தையில் எப்படி சொல்ல முடியும்.

ஓய்ந்து போய் கண்களை துடைத்துக் கொண்டார் ‘சங்கமேஸ்வரா.. என் பெண்ணுக்கு நீயே துணை’ என வேண்டிக் கொண்டு.. விசுவிற்கு அழைத்தார்.

விசு போனை எடுக்கவும், அமைதியான குரலில் பத்மநாபன் “விசு.. என் பொண்ணுக்கு எதோ ப்ரோப்ளேம்.. இந்த ஹாஸ்ப்பிட்டலில் இருக்கா.. வாசுகி, என் வைஃப் அங்கதான் இருக்கா.. நான் சென்னையில் இருக்கேன் ப்பா.. டாக்டர் என்ன என்னமோ சொல்றாங்க.. நீ போ கொஞ்சம்.. விஷயம் பெருசுன்னு நினைக்கிறன்.. பார்த்துட்டு கூப்பிடு, நான்.. சொல்லிட்டு கிளம்பிடுவேன்.. ” என்றார்.

விசு “அங்கிள், நான் கோவையில்தான் இருக்கேன்.. செந்தில்..” என அழைத்து, மருத்துவமனையின் பெயர் சொல்லி, அங்கே போக சொன்னான்.

விசு “பிப்டீன் மினிட்ஸ்ல போயிடுவேன். நீங்க டென்ஷன் எடுக்காதீங்க.. நான் கூப்பிடுறேன்.. பெண்ணு பேர் என்ன அங்கிள்..” என்றான்.

பத்மநாபன் ‘தன் பெண்ணின் விவரங்கள் சொன்னார்.. தன் மனைவியின் எண்..’ என எல்லாம் கொடுத்து விசுவை அங்கே பார்க்க செய்தார். ஏனெனில்.. பத்மநாபனுக்கு தெரிந்து, தன் பெண்ணை யாரோ எதோ செய்துவிட்டனர் என புரிந்துக் கொண்டார் அப்போது.. அத்தோடு போலீஸ் என, தன் மனைவி சொல்லவும்.. விஷயம் வெளியே வராமல் இருக்கத்தான் பார்த்தார் முதலில். எனவே, விசு.. அங்கிருந்தால் நல்லது என தோன்றியது அவருக்கு. எனவே அழைத்தார் விசுவை.

சொன்னது போல விசு மருத்துவமனைக்கு வந்துவிட்டான். விசு, செந்திலிடம் “செந்தில், என்ன பேச்சு அடிபடுதுன்னு பாருங்க, நான் ஆன்ட்டியை பார்க்கிறேன்..” என சொல்லி காரிலிருந்து இறங்கி, வாசுகியின் எண்ணிற்கு அழைத்து எங்கே இருக்கிறார் என கேட்டுக் கொண்டு சென்றான், விசு.

வாசுகிக்கு, அடையாளம் தெரிந்தது விசுவை.. அவனை பார்க்கவும் இன்னும் அழுகைதான் வந்தது வாசுகிக்கு.. பொறுமையாக தன் மகளை பார்க்க கூட்டி சென்றார். 

உணர்வே இல்லாமல் இருந்தாள் பவானி.. உதட்டில் கன்றிய நிலையில் காயம், கன்னம் சிவந்து இருந்தது.. ஒரு பெண்ணை எதோ செய்ததற்கான அடையளமாக இதெல்லாம் தெரிந்தது அவனுக்கு.. மனதில் ‘இன்னமும் எதோ இருக்குமோ..’ என யோசனையோடு வெளியே வந்தான்.

விசு, பவானியை கவனிக்கு மருத்துவரை பார்க்க வேண்டும் என்றான். அழைத்து சென்றனர்.

விசு, தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான். ‘பெண்ணின் தந்தை வந்துக் கொண்டிருக்கிறார்.. என்னிடம் எல்லாம் சொல்லலாம்..’ என முதலில் மருத்துவருக்கு புரிய வைத்தான். பின்தான் கேட்டான்  “என்னாச்சு டாக்டர்” என.

மருத்துவர் ‘யாரோ.. இந்த பெண்ணுக்கு.. கொடுத்திருக்காங்க, இங்க ட்ரக் அடிக்ட் கிடையாது அது உறுதி..’ என சொல்லி, ட்ரக் எடுத்த, அதன் அளவு சொன்னார்.. இது ரொம்ப அதிக அளவு. டெஸ்ட் எடுத்து பார்த்ததில்.. அது மூளையை தாக்கமும் சூழலில் வந்து சேர்த்துட்டாங்க, நல்லவேளை. ஆனால், கான்ஷியஸ் இன்னும் வரலை.. அப்சர்வெஷ்னில் வைத்திருக்கிறோம்.. இன்னும் டூ ஹௌர்ஸ் சென்று மீண்டும் ஒரு டெஸ்ட் எடுப்போம்.. அதில் கொஞ்சம் கிளாரிட்டி கிடைக்கும்.. பார்ப்போம்’ என்றார்.

விசு எல்லாம் கேட்டுக் கொண்டான். பின் போலீசுக்கு இவர்கள் ஏதேனும் விஷயம் சொன்னார்களா என கேட்டுக் கொண்டான். ‘இனி நீங்க ட்ரீட்மென்ட் மட்டும் பாருங்க, நான் இதை ஹன்டுல் செய்துக்கிறேன்’ என்றான்.

செந்திலும் வந்துவிட.. விசு, தனக்கு தெரிந்த இடங்களின் மூலமாக மூவ் செய்து.. இந்த விஷயத்தை வெளியே வராமல் பார்த்துக் கொண்டான். பத்மநாபனுக்கு அழைத்து பேசினான். பத்மநாபனை பெங்களூர் வர பணித்தான்.

காரணம், இங்கே இருந்தால் மீண்டும் விஷயம் வெளிவரலாம் என போலீஸ் உயர்மட்டத்தின் கருத்தாக.. சொல்லபட்டது, விசுவிடம்.

அதன்பின் விசுதான் அங்கு எல்லாம் பார்த்துக் கொண்டான். இரவோடு இரவாக பவானியை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தான். தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான்.

செந்திலை, இதற்கு காரணமானவர்கள் பற்றி விசாரித்து.. இங்கே பார்த்துக் கொள்ளும்படி சொல்லி, விசுவும் அவர்களோடு பெங்களூர் சென்றான்.

பெங்களூர் வரும் போதே தன் அன்னைக்கு அழைத்து சொல்லி இருந்தான்.. ‘பத்து அங்கிள், பெண்ணுக்கு உடம்பு முடியலை, அவங்களை கூட்டிட்டு பெங்களூர் போறேன்.. நான் கூப்பிடுறேன்’ என சொல்லி இருந்தான்.

அன்னை ‘நீ எதுக்குடா அவங்க கூட போற.. வேற ஆளே இல்லையா அவங்களுக்கு..’ என்றார் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல்.

விசு, இப்போது தனக்கு பேச நேரமில்லை என சொல்லி வைத்து விட்டான் போனை.

பத்மநாபன் இரவே, விசு சொன்ன மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவர் முன்பே சென்றுவிட்டார், காத்திருந்தார் பெண்ணை பார்க்க. வந்ததும், பெண்ணை பார்த்து.. பதறிதான் நின்றார். ஒன்றும் புரியவில்லை அவருக்கு. யாரிடமும் ஏதும் பேசவில்லை.. அமைதியாக அந்த icu அருகில் அமர்ந்தவர்தான் ஏதும் பேசவில்லை. மனைவியை கூட, தன் அருகே விடவில்லை.. அவர். பெற்றோர் இருவரும்,  இரு துருவமாக அமர்ந்துக் கொண்டார். விசுதான் எல்லாம் பார்த்துக் கொண்டான். என்னென்னமோ சிகிச்சை என்றனர்.. எதற்கும் பவானி அசையவில்லை, கண் விழித்து எழவில்லை. 

நேரம் மதியத்தை நெருங்கவும் பயம் வந்தது பெற்றோரிடம். பெண் கண்விழிக்கவில்லை எனவும். பத்மநாபன் பெண் இருக்கும் அறையின் வாசலிலேயே நின்றார்… நீர் கூட அருந்தவில்லை. விசுவிற்கு, அவர்களை வற்புறுத்தி உண்ண வைக்கத் தெரியவில்லை.

விசுவிற்கே, அவர்களை பார்க்க சங்கடமாகிப் போனது. மருத்துவர்களிடம் விசாரித்தான் ‘டெஸ்ட் எடுத்திருக்கிறோம், இன்னும் இரண்டு மணி நேரத்தில் சொல்லுவோம்’ என்றனர்.

விசு, எப்படி தன் அங்கிளுக்கு சமாதானம் சொல்லுவது என தெரியாமல் நின்றான். 

மாலையில் மூவரையும் அழைத்து, பவானியின் நிலை பற்றி,  மருத்துவர்கள் சொல்லினர் ‘பிஸிகல் அப்யூஸ் ஆகவில்லை..’ என்ற நல்ல செய்தியை முதலில் சொல்லினர், கூடவே ‘கோமா நிலைக்கு சென்றுவிட்டார் பவானி’ என்ற தகவலையும் சொல்லினர். 

ஆடிப்போயினர் பெற்றோர். ஏதேனும் பேசி, அழுத்து புலம்ப கூட தெரியவில்லை அவர்களுக்கு.. விக்கித்து நின்றனர்.

எல்லாம் கேட்டுக் கொண்டு வெளியே வந்த பத்மநாபனுக்கு.. தன் பெண்ணின் நிலை குறித்த.. அழுத்தம் தாளாமல், நெஞ்சு வலி வந்தது. மனிதர் தடுமாறினார்.. மகள் விஷயத்தில் இவ்வளவு சென்ஸிட்டிவ் என வாசுகிக்கே அப்போதுதான் புரிந்தது.

அவருக்கும் சிகிச்சைகள் நடந்து.

விசுவிற்கே ‘என்ன டா’ என கலக்கம் வந்தது. வாசுகிக்கு கொஞ்சம் திடம் வந்தது தன் பெண்ணிற்கு யாரோ மருந்தை கொடுத்திருக்கிறார்கள்.. அவலும் மானத்திற்காக போராடித்தான் இப்படி என தெரிந்ததும்..  மனது கொஞ்சம் திடமாகியது.. திடம் ஆக்கிக் கொண்டார், வாசுகி. 

தன் கணவரின் கிகிச்சை நடக்கும் இடத்திற்கு முன் நின்றுக் கொண்டார்.

எனவே விசு, பவானியின் icuமுன் அமர்ந்திருந்தான். பத்மநாபன் வேறு இடத்தில், இவள் வேறு இடத்தில் இருந்தனர். எனவே ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்துக் கொண்டனர்.

விசுவிற்கு, அப்போதுதான் செந்தில் அழைத்து, பவானிக்கு நடந்தது பற்றி விசுவிடம் சொன்னான். விசுவிற்கு கேட்க கேட்க அதிர்ச்சி இருவரும் லவர்ஸ் என்றதும்.. கோவமாக வந்தது ‘பொறிக்கியோட என்ன லவ்’ என கோவமே வந்தது. பொறுமையாக எல்லாம் கேட்டுக் கொண்டான்.

செந்தில் ‘என்ன விசு, கம்ப்ளைன்ட் பண்ணிடவா..’ என்றார்.

விசு ‘செந்தில்… அவன் பேரென்ன.. யாரு.. என்ன.. ’ என்றான்.

செந்தில் ‘ஸ்ரீகாந்த்..’ என விவரம் சொன்னார்.

விசு ‘போலீஸ் எல்லாம் வேண்டாம்.. பொண்ணு மேல கை வைச்சிருக்கான்.. ம், அதுக்கு ஏதாவது பண்ணனும். அந்த கையை ஏதாவது பண்ணுங்க செந்தில்.. போதும். படிக்க அனுப்பிச்சா.. ஒரு பெண்ணோட வாழ்க்கையில் விளையாடிகிட்டு ராஸ்கல்..’ என கோவமாக நாலு கெட்டவார்த்தையில் திட்டினான்.

செந்தில் ‘விசு..’ என்றார்.

விசு அமைதியானான்.

விசு ‘இவங்களை பத்தி ஏதும் காலேஜ்ல பேச வேண்டாம்ன்னு,  இவங்க ப்ரெண்ட்ஸ் எல்லோர் கிட்டயும் சொல்லிடுங்க.. பேச்சு ஏதும் வர கூடாதுன்னு. எதுவாக இருந்தாலும்.. இவங்க கண் விழிச்சதுக்கு அப்புறம் பேசிக்கலாம்.. அவன் அங்க இருக்க கூடாது.. அனுப்பிடுங்க. நீங்களே செய்யுங்க.. அந்த பையன் ஒருத்தன்  இருந்தானே.. பேர் என்ன என்றான்” நிதானமானக் குரலில்.

செந்தில் “ராகவ்..” என்றார்.

விசு “ம்.. அவனை கூடவே வைச்சுக்கங்க.. நீங்க மட்டுமே பார்த்து அனுப்புங்க. எனக்கு கோவமாக வருது.. இங்க ஒரு குடும்பமே தத்தளிக்குது. எல்லாம் இந்த பிள்ளைகளை சொல்லணும்.. யாரு எப்படின்னு தெரியாமல் போய் விழுந்து..’ என ஒரே மூச்சில், திட்டி.. கோவம் கொண்டு.. என கலவையான மனநிலையில் நின்றான் விசு. 

விசுவிற்கு, என்னமோ அழுத்தம்.. தாங்கவே முடியவில்லை. தன் அங்கிள் பற்றி தெரியும் அவனிற்கு. மிகவும் திடமான மனிதர். ‘அன்று, என் தந்தையின் இறுதி காரியங்களில் எப்படி நின்றார். என்னை எப்படி ப்ரோடக்ட் செய்தார்.. என் சொந்தம் ஏதும் இல்லாமல் நாங்கள் நின்ற போது, மில்லின் பொறுப்பை எடுத்துக் கொண்டு, என்னை படிக்க அனுப்பி வைத்தார்.. சுற்றி சுற்றி ஊரே அவரை குற்றம் சொன்ன போது.. அத்தனை தைரியமாக இருந்தவரா? இப்படி.. உடைந்து போய்விட்டார்..’ என யோசனையோடு.. தன்னெதிரே இருந்த மற்றொரு சேரில் கால் நீட்டி அமர்ந்துக் கொண்டான்.

இரவு முழுவதும் இப்படியே நகர்ந்தது. விசுவிற்கு உறக்கமும் விழிப்புமாக இருந்தது.

அதிகாலையில், icuவில் ஒருமுறை விசிட்டர் டைம். அவளின் அன்னை அங்கே இருப்பதால்.. யாரேனும் செல்ல வேண்டுமே என சென்று பவானியை பார்த்தான் விசு.

இப்போது முகத்தில் கொஞ்சம் வீக்கம் குறைந்திருந்தது.. என எண்ணிக் கொண்டே வெளியே வர எத்தனித்தான்.. எதோ அசைய.. என்னவென திரும்பி அவளை பார்த்தான்.

போர்வைக்கு வெளியே இருந்த, அவளின் மலர் பாதங்களில் இருந்த மெல்லிய விரல்கள் அசைந்தது. விசுவிற்கு, சட்டென உடல் சிலிர்த்தது… மெல்ல, அது ‘உண்மைதானா’ என அறிய, அவளின் பாத விரல்களை.. தீண்டினான்.. ‘உண்மைதான்..’ என மீண்டும் அந்த விரல்கள் அசைந்தது.

விசு “நர்ஸ்…” என்றபடி வெளியே வந்தான்.

“நீயும் நானும்..

எந்திரமா..

யாரோ செய்யும் மந்திரமா..

பூவே..”

 

 

Advertisement