Advertisement

பவானி, வீடு வந்த பிறகுதான், வெளியே சென்றிருந்தவர்கள் வந்தார்கள். அவர்களை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.. அவர்களும் பவானியிடம் பேசி.. புதிதாக வாங்கியிருந்த தாலியை அவளுக்கு காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த ஒருமணி நேரம் இப்படியாக சென்றது.

பின் பவானி மேலே சென்றாள்.. கல்லூரியின் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள். இரவு உண்பதற்கு வேதா அழைத்தார் பவானியை. அப்போதும் விசு வரவில்லை. மாமியார் மருமகள் இருவரும் உண்டு முடித்தனர்.

பவானி, கணவனுக்காக காத்திருந்தாள்.. ஆனால் அசதியில் உறக்கம் வர.. மெதுவாக பெட்டில் படுத்துக் கொண்டாள்.. அப்படியே கண்கள் மூட உறக்கிவிட்டாள் பெண்.

எப்போதும் போல பதினொரு மணிக்குதான் வந்தான் விசு. பவானிக்கு அரைகுறையான உறக்கம் போல.. உறங்கியிருந்தாள்.

விசு, சத்தமில்லாமல் கதவை திறந்துக் கொண்டு நின்றான்.. அவள் உறங்கியிருப்பாள் என தெரியும்.. எனவே, அமைதியாக உள் அறைக்கு சென்று.. குளிக்க சென்றான்.

வந்து பார்த்தவனுக்கு சின்ன அதிர்ச்சி, மனையாளை பெட்டில் காணவில்லை.. விசுவும், ஒரு வெள்ளை நிற ஷர்ட்ஸ் அணிந்துக் கொண்டு.. வெள்ளை நிற வி-நெக் டி-ஷர்ட் அணிந்துக் கொண்டு.. கொஞ்சமாக பெர்ஃப்யூம் போட்டுக் கொண்டு வெளிய வந்தான். 

பவானி, பால்கனியில் அமர்ந்திருந்தாள். இவர்களின் அறையை பார்த்தபடி அமர்ந்துக் கொண்டிருந்தாள். இவன் வெளியே வரவும் எதிரே அவளின் காட்சிதான்.

கணவன் அமைதியாக அவளின் அருகில் நின்று நிலவை பார்த்தான்.. அவள் பேசுவாள் என எதிர்பார்த்தான். அவனும் பேசவில்லை, அவளும் பேசவில்லை. 

நொடிகள் நிமிடங்களானது.. அவளுக்கு, காலையிலிருந்து ஒன்னும் ஓடவில்லை.. நேரமும், தினபடி வேலைகளும் அவளை இழுத்துக் கொண்டாலும்.. மனது ஒன்றவில்லை, கணவனின் பேச்சில்லா மௌனத்தில். ஆனால், கணவனோ கண்டுக் கொள்ளவில்லை அவளை ‘இப்போது என் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு வந்து அமர்ந்திருக்கிறேன்.. என்னான்னு கூட கேட்கமாட்டேங்கிறார்..’ என பொருமிக் கொண்டே அமர்ந்திருந்தாள் பெண்.

கணவனும் பொறுமையாக அவள் பேசுவாள் என காத்திருந்தான் ஐந்து நிமிடம்.. அவள் வாய் திறக்கவில்லை எனவும், தானே “என்ன பார்பி, தூங்கலை” என்றான் கோவமில்லா குரலாக கேட்டான்.

பவானி “போங்க.. நான் பேசமாட்டேன்.. உங்களுக்கு என்ன, செயின் வேண்டும் அப்படிதானே, இந்தாங்க…” என தன் கழுத்திலிருந்து செயினை கழற்றினாள்.

விசு “குட், தாலி வேண்டாமில்ல.. நான்தானே வேண்டும்?” என்றபடி அவளின் அருகில் அமர்ந்தான்.

பவானி முறைத்தாள். விசுவும் ஏதும் பேசவில்லை.

பவானி காலையில் போல, இப்போதும் கணவனின் முழங்கையை பிடித்துக் கொண்டாள்.. விசு “என்ன! நான் வேணுமா இல்லை, செயின்னா” என்றான்,விடாமல்.

பவானி “சாரி, ரெண்டுமே வேண்டும்” என்றாள்.. கெத்தாக.

விசு “இல்ல.. எனக்கு, ஏதாவது ஒண்ணுதான் சொல்லணும்..” என்றான் கறாராக.

பவானி நிமர்ந்து கணவனின், முகம் பார்த்தாள் “உங்ககிட்ட ஜாக்கிரதையா பேசணும் போல இருக்கு.. எதோ கோவத்தில் சொல்லிட்டேன்.. அதை இப்படியா ஞாபகம் வைச்சிருப்பீங்க..” என்றாள்.

விசு “கோவத்தில் நிறைய சொன்ன.. ஆனா, எனக்கு வலிச்சது இதில்தான்.. நான் இல்லைன்னு சொன்ன.. அதான் நான் இருக்கேன்.. உனக்கு எதுக்கு செயின்னு கேட்க்கிறேன்.” என்றான், விதண்டாவாதமாக..

பவானி அமைதியாக இருந்தாள்.. 

விசுவிற்கு, தான் பேசுவது தனக்கே அதிகபடியாகதான் தெரிந்தது. ஆனால், அவனிற்கு என்னமோ உறுத்துகிறது.. வேண்டுமென்றே நான் ஏதும் செய்யவில்லை.. என்னைவிட தாலியை எப்படி அவள் பெரிதாக சொல்லலாம்… என ஒரு வீம்பு.. எனவே, பேசுகிறான்.. குடைகிறான்.. தன்னவளை.

இப்போது விசு, அவளின் கையிலிருந்து செயினை வாங்கி தன் கழுத்தில் போட்டுக் கொண்டான்.. தானும் அமைதியாக அமர்ந்துக் கொண்டான். என்னமோ அவனுக்கு, அது அவளிடம் இருப்பது உறுத்தியது போல.

பவானிக்கு என்ன செய்வதென தெரியவில்லை.. கணவன் சமாதானம் ஆகுவதாக இல்லை போல.. அவளும் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.

விசு “வா, உள்ளே போலாம்” என்றான், எழுந்து நின்றுக் கொண்டு.

பவானி “நீங்கதான் சரியாகவே பேசவில்லையே.. போங்க.. அப்படியே கோவமாகவே இருங்க..” என்றாள், எழாமல்.

விசு “அதான் செயினை எடுத்துகிட்டேனே.. இப்போது நான் ஹாப்பி.. வா…” என்றான், எதோ போனால் போகுது எனும் குரலில்..

பவானி அமைதியாகவே இருந்தாள்..

விசு, கொஞ்சம் தளர்ந்தான்.. தான் வீம்புக்கு செய்கிறோம் என தெரிகிறதே, அவள் கோவமாக இருக்கிறாள் என தெரிகிறே.. நேரமும் ஆகிறதே என.. சமாதானத்திற்கு தயாரானான். 

மனையாளோடு கீழே அமர்ந்துக் கொண்டான் மீண்டும். பவானி “சாரி.. நான் எதோ வருத்தத்தில் சொல்லிட்டேன்.. நீங்க இப்படி என்னை கார்னர் செய்தால் எப்படி.. இப்போது காலையில் செயின் வேண்டும் அப்போதும் இப்படிதான் கோவப்படுவீங்களா..” என்றாள்.

விசு “ம்.. என்னமோ நீ இப்படி இருந்தால்தான் எனக்கு பிடிக்குது.. என்ன செய்ய..” என சொல்லி அவளின் கழுத்தில் தன் இருவிரல் கொண்டு கிச்சு கிச்சு மூட்டினான்.

பவானி அவனின் கையை தட்டிவிட்டாள்.

விசுவிற்கு “காலையிலும் செயின் வேணுமா.. அப்போது, எனக்கு ஏதாவது கிப்ட்கொடு” என்றான், கணவன் குரலில்.

பவானி “என்ன கிப்ட்.. எல்லாம் கொடுத்தாச்சு” என்றாள் மனைவி குரலில்.

விசு “ம்… இல்ல, எதோ மிஸ்ஸிங்.. ஒரு பாட்டு பாடு..” என்றான்.

பவானி “அவ்வளவுதானே..” என போனை எடுத்தாள் கையில்.

கணவனுக்கு யோசனை ‘ஈசியா சொல்லிட்டமோ..’ என எண்ணி கணவன் “ம்கூம்… ஒரு ப்ஸ்ட்  நைட் சாங் பாடேன்.. கொடுத்திடறேன்.. காலையில்.. செயினை” என்றான்.. அவளின் வெட்க முகத்தையோ.. ஒவ்வாமை முகத்தையோ பார்க்க எண்ணி.

பவானி, மிகவும் கவனமாக “இப்போ பாடணுமா இல்ல, காலையில் பாடணுமா” என்றாள், அப்பாவி பார்வையில்.

விசு, ‘இவளை சீண்டுவதற்காக சொன்னால்.. நம்மை கலைய்ப்பாள் போலிருக்கே’ என எண்ணி.. விசு எதையும் முகத்தில் காட்டாமல் கீழுதட்டை மடித்துக் கொண்டு, தாடையை நீவிக் கொண்டே “அப்படியா.. அப்போ, இப்போவே பாடு” என்றான்.

பவானி, கல்லூரியில் சீனியர்ஸ் ராகிங் செய்வார்களே அப்படி நினைத்துக் கொண்டாள் போல.. யோசித்தாள்.. என்னமோ உடனே பாடுபவள் போல.. போனை எடுத்தாள் மீண்டும். 

விசுதான் இப்போது அரண்டு போனான்.. ‘என்னடா இது..’ என.

பவானிக்கு ‘ரேவதி கமல் பாட்டுதான் நினைவு வந்தது சட்டென. மனையாள் “க்கும்..” என தொண்டையை சரி செய்துக் கொண்டாள்.

விசு, கண்கள் விரித்து, ஸ்தம்பித்து.. அவளை பார்க்க தொடங்கினான்..

மனையாள் போனில் அந்த பாட்டின் பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு ரகசிய குரலில் மெதுவாக 

“இஞ்சி இடுப்பழகா..ஹ..அ…

மஞ்ச சிவப்பழகா…ஹ..ஆ…

கள்ள..ள.. சிரிப்பழகா..

வெறும் காத்துதாங்க வருது…” என்றாள் கண்ணடித்து..

கணவன் அதிர்ந்து.. உரைந்து.. தன்னவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பெண் போனை, கணவனிடம் கொடுத்தாள்.. கண்ணால் ‘பாடுங்க..’ என குறிப்பு கொடுக்க.. விசு இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனின் நிலா பாடுகிறது..

பவானியே மீண்டும் “மறக்க மனம் கூடுதில்லையே…யே…

மறக்குமா மாமன் எண்ணம் 

மயக்குதே பஞ்ச வர்ணம்.. 

மடியிலே ஊஞ்சல் போட..

மானே வா..” என  போனை விடுத்து பாடினாள்.

கணவன் அவள் பாட தொடங்கவும் ஸ்தம்பித்து நின்றான். ஒரு க்ஷனம் கூட  மனையாள் இப்படி எல்லாம் பாடுவாள் என அவன் எண்ணவே இல்லை.. குழந்தையாக மாறி, குதுகலமாக சொன்னதெல்லாம்.. செய்தவளை என்ன செய்வதென.. ஒருகணம் ஸ்தம்பித்துதான் நின்றான், கண்ணாளன்.

அந்த நொடி வாழ்க்கை, அழகானது அவனுக்கு.. எனக்காக.. என்னவள்.. என்னவெல்லாம் செய்ய்கிறாள்.. என சந்தோஷத்தில்.. சின்ன சந்தோஷத்தில்.. திக்கு முக்காடி.. ஸ்தம்பித்து  நிற்கும் நொடியில்.. அந்த கணவனுள் காதல் ப்ரபாவமாக கிளர்ந்தெழுந்தது. 

“அன்னக்கிளி கையை தொட..

வண்ண வண்ண கோலமிட..

உள்ளம் மட்டும் உன்வழியே…

மானை..

உள்ளம் மட்டும் உன்வழியே…

மானே..” என தன்னிருகைகளில் அள்ளிக் கொண்டான் மனையாளை.. பவானி புருவம்  உயர்த்தி “என்ன..” என்பதாக வினவ.

விசுவின் கண்கள்தான் பதில் சொன்னது.. ம்.. அவனின் ப்ரவுன் நிற விழிகள் மின்னியது பளிச்சென.. கரைகடந்த காதல் பார்வையால் மனையாளை இமைக்காமல் பார்த்தான்.. தங்களின் அறைக்கு வந்துவிட்டனர் இருவரும்.. வார்த்தைகள் பஞ்சமாகி போனது இப்போது.. ஆனால், காதலின் செய்கையாக அவளை தனக்குள் புதைத்துக் கொண்டான், கணவன். 

விசு அவளை கட்டிக் கொண்டு “பைத்தியமாக்குற என்னை.. லவ் யூ சோ மச்சு..” என்றான்.

பவானியின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. கணவன் தன் பெருவிரலால் அவளின் இமை வருடி கண்ணீரை துடைத்தான்.. “திரும்ப சொல்லணும் மீ டூன்னு” என்றான்.

பவானிக்கு வார்த்தைகள் வரவில்லை.. தொண்டை அடைத்தது.. கண்ணீரை விழுங்கினாள் ‘ஆம்’ என்பதாக தலையசைத்து.. கணவன் அவளின் நிலை உணர்ந்து.. இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டான் ‘உன்னை அறிவேன்’ என்பவனாக.

திருமணம் எனும் பந்தம் எந்த நொடியில் அர்த்த்மாகியது என நிறைய தம்பதிகளால் சொல்ல முடியாது.. ஆனால், இவர்களால் அதை சொல்ல முடியும். 

Advertisement