Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

24

மறுநாள், பவானி கல்லூரி செல்லக் கிளம்பினாள். அப்போதுதான் கழுத்தில் தாலி, தான் அணியவில்லை என்பதையே உணர்ந்தாள், பெண். கணவனை ஓரகண்ணால் பார்த்தாள்.. அவன் மும்முரமாக தன் ஷர்ட் அணிந்துக் கொண்டிருந்தான்.

‘அய்யோ இப்போது இவரிடம் கேட்கனுமே.. பெரிய செயினை.. அன்னிக்கு வேற.. நீ வேண்டாம் தாலிதான், வேணும்ன்னு பேசிட்டேன். நேற்று, செயின் இல்லாமல் அவரோடு வெளியே சென்றுவிட்டேன்.. இப்போது கல்லூரியில் எல்லோரும் கேட்பார்களே தாலி எங்கேன்னு.. ஏதேனும் அணிந்து செல்ல வேண்டுமே..’ என ஓரக்கண்ணால் கணவனை பார்த்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள் பெண்.

பவானி, சின்ன குரலில் தன் கணவரிடம் “என்னங்க, அந்த பெரிய செயின் எங்கே…” என்றாள்.

விசு, நிமிர்ந்து மனையாளை பார்த்தான். விசுவிற்கு, நேற்றே அன்னை சொன்னதும் ‘சரிதான் அவளையும் கேட்பார்களே’ என தோன்றியதுதான். ஆனால், அன்று எதோ கோவத்தில் ‘நீங்க எங்க இருந்தீங்க.. அதுதான் கூட இருந்தது..’ என அவள் சொன்னது அவனின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. மேலும் அன்னை, காலையில் எல்லாவற்றையும் கட்டளையாக சொல்லவும்.. அவனிருந்த மனநிலையில் எதையும் கேட்க்க கூடாது என எண்ணம்.. அதனால் மனையாளை கூட்டிக் கொண்டு நேற்று கிளம்பிவிட்டான்.

இன்று, மனையாள் கல்லூரி செல்லவும், செயின் பற்றி கேட்கவும், சுதாரித்துக் கொண்டான் கணவன்.. “எதுக்கு, அது” என்றான். 

மனையாளோ அவசரத்தில் இருந்தாள்.. பவானி “என்னங்க, நான் காலேஜ் போகணும்..” என்றாள், ராகமாக.

விசு “அதான் இப்போ நானிருக்கேனில்ல.. தாலி எல்லாம் வேண்டாம்” என்றான் ஒருமாதிரி குரலில், சிரிக்காமல் கிண்டலாக சொன்னான் கணவன்.

பவானி “நீங்க இருக்கீங்க…” என சொல்லியவள் யோசனையோடு திரும்பி சந்தேகமாக கணவனை பார்த்தாள். கணவனோ.. ஏதும் அறியாதவன் போல இடக்கையில் வாட்ச் அணிந்துக் கொண்டு.. குனிந்துக் கொண்டே நின்றான்.

பவானி, கணவனின் அருகில் வந்து நின்றாள்.. நிமிரவில்லை விசு. பவானி குனிந்து “என்ன சொன்னீங்க.. என்ன சொன்னீங்க” என்றாள்.. கணவனின் முகத்தை பார்த்து.

விசு, மிகவும் சிரமப்பட்டு.. அவளை பார்க்காமல் “நான்தான் இருக்கேனே, எதுக்கு தாலின்னு கேட்டேன்” என்றான் நக்கலாக.

பவானியும், நன்றாக கணவனை முறைத்து பார்த்தவள்.. “ஓ.. அப்படியா” என்றவள்.. அறையை விட்டு வெளியே சென்றுக் கொண்டே “நான் இப்படியே காலேஜ் போறேன்.. எல்லோரும் என்னைத்தானே கேட்பாங்க.. அப்போது, என்னை கடத்திட்டு போன கதையையும் சொல்றேன்.. அப்போ எங்க உன் ஹஸ்பண்ட்ன்னு கேட்பாங்க, அப்போ சொல்றேன்.. அவர் அப்போ அப்ரோட் போகியிருந்தான்னு.. அதனால தாலி போட்டிருந்தேன்.. இப்போ அவர் வந்துட்டார் அதனால தாலி போடலன்னு சொல்றேன்” என்றாள்.. படியிறங்க எத்தனித்வளாக.. கணவனின் நக்கலுக்கு பதில் என நினைத்துக் கொண்டு விளையாடினாள் பெண்.

விசு “ஓகே.. சமாளிச்சிக்கோ.. எனக்கென்ன.. உன்னைத்தானே கேட்பாங்க..” என்றான் அவனும் அலட்டாமல்.

பவானி கீழே வந்தாள். வேதா “என்னடா, உடம்பு சரியாகிடுச்சா.. ஒன்னும் பிரச்சனையில்லையே..” என்றாள் அவள் கல்லூரிக்குதான் கிளம்பி வந்திருக்கிறாள் என தெரிந்து.

பவானி “இல்ல அத்த, அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் நல்லாயிருக்கேன்..” என்றாள்.

வேதா “ம்.. எங்க அவன்… நீ வா சாப்பிடு நேரமாகிட போகுது” என்றார்.

பவானியும் ஒன்றும் சொல்லாமல் பூஜை அறைக்கு சென்றாள். கைகூப்பி சிறிது நேரம் வணங்கினாள்.. பின் குங்குமம் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

வேதா, மகனிடம் “என்ன டா.. அவளுக்கு அந்த செயினை போடேன்.. வெறும் கழுத்தா இருக்க கூடாது டா..” என பேசியது கேட்டது பவானிக்கு.

விசு “ம்மா, இதென்ன காலேஜ்க்கு தானே போறா.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. ப்ரீயா இப்படியே இருக்கட்டும்” என  ஓரக்கண்ணால் மனையாளை பார்த்துக் கொண்டே அன்னைக்கு பதில் சொன்னான்.

பவானி அலட்டவேயில்லை “வாங்க சாப்பிடலாம், அத்தை நீங்களும் வாங்க” என சொல்லி முன்னாள் சென்றாள் உணவு மேசைக்கு.

விசுவும் அதிகமாக எதிர்பார்த்தான் போல, இன்னொரு முறை தன்னை கேட்டபாள் செயின் பற்றி என. ஆனால், மனையாள் ஏதும் கேட்கவேயில்லை.

உண்டு முடித்து கிளம்பினர். விசு “வா பவானி” என சொல்லி காரெடுக்க சென்றான்.

வேதா “என்ன டா மனசில நினைச்சிகிட்டு இருக்க.. செந்திலை வர வேண்டாம்ன்னு சொல்ற.. நீ தனியா போக கூடாதுன்னு நான் சொல்றோம் கேட்க மாட்டேங்கிற.. இவளை கேசில் சேர்க்காதே என சொல்லியும் பிடிவாதமா இவளை முன்னே வைத்து கேஸ் பையில் பண்ணியிருக்க.. இப்போது கோவில் போகணும் சொல்றேன் மாட்டேன்கிற.. மறுதாலி கட்ட நாள் பார்த்திருக்கு.. அதுவரைக்கும் செயினை அவ கழுத்தில் போட மாட்டேங்கிற.. என்னதான் உன் நினைப்பு.. கொஞ்சம் கூட சரியில்ல நீ” என அன்னை உறுமினார்.

விசு “மணியாச்சு ம்மா “என்றான், பதில் ஏதும் சொல்லாமல்.

வேதா “சொல்லிட்டு போ” என்றார் கோவமானக் குரலில்.

விசு “என்ன ம்மா, ஏன் நான் தனியாக போக கூடாது. இனி அப்படிதான் நடக்கும். செந்தில் இனி மில் வேலை மட்டும்தான் பார்ப்பார். கேஸ் பத்தி ஏதும் கேட்க்காதீங்க… அவ என் வைஃப்.. எனக்கு தெரியும். அப்படிதான் தாலி எல்லாம்.. அதான் நீங்க நாள் பார்த்திருக்கீங்கல்ல.. அப்புறம் என்ன.. அதுக்கு ஏதாவது சொன்னேனா.. “ என்றான் கடுப்பாக.

வேதா “டேய், அவங்க காலேஜ்ஜில் யாராவது கேட்டா என்ன டா செய்வது.. சங்கடமாக இருக்காதா அவளுக்கு.. செயினை போட்டுவிடேன்.. நீ போடலைன்னா போ.. பவானி, இந்த என்னோட செயினை போடு” என்று சொல்லி தன்னுடைய செயினை கழற்றி தந்தார் மாமியார்.

விசு, எதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் மனையாள் கணவனையே உற்று பார்த்தாள்.. வேதா “ம்.. பிடி பவானி” என்றார் அவரும் அதிகாரமாக.

விசு கண்ணால் ‘வேண்டாம்’ என சொல்லிக் கொண்டிருந்தான்.

பவானியும் ‘ஏன்..’ என கேட்பது போல பார்க்க.. அதற்குள் வேதா “ஏன் பவானி நீயும் நான் சொல்றத கேட்டகமாட்டியா” என அதட்டலாக கேட்க.

பவானி “இல்ல அத்த..” என சொல்லி, கணவனை பார்க்காமல் தன் கையை நீட்டினாள், தன் அத்தையிடம்.

விசு “ம்மா… நீங்க அதை கழுத்தில் போடுங்க..” என சொல்லி, தன் கழுத்தில் இருந்த அந்த பெரிய செயினை எடுத்தான், அன்னை அதிர்ந்து நிற்க.. அவசரமாக வலது கையால்.. மனையாளின் கழுத்தில் அணிவித்தான்.

பவானி, கண்சிமிட்டி.. புன்னகை முகமாக தலை குனியாமல் நிமிர்ந்து கணவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.. இதனை கணவன் கண்டும் காணாமல் “வா போலாம்” என்றபடி முன்னே நடந்தான்.

இருவரும் காரில் ஏறினர். கொஞ்சம் உறுமிக் கொண்டே நகர்ந்தது கார்.. பவானி, கணவனின் இறுகியிருந்த முகத்தை பார்த்தாள்.. கணவனின் விளையாட்டு காலையிலிருந்து புதிதாக இருந்தது.. அவளும், அதனை ரசித்தாலும், கல்லூரிக்கு எப்படி செல்லுவது என பயம்தான் இருந்தது. 

ஆனால், அன்னையின் முன், கணவனின் எல்லாம் மாறி போயிருக்க.. மனையாளுக்கே.. கொஞ்சம் அது சங்கடமாக இருந்தது.. எனவே, மனையாள் “விசு…” என முழங்கையை பிடித்துக் கொண்டு, இயல்பாக அவனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள். 

விசுவிற்கு கோவமே வந்தது அமைதியாக இருந்தான்.. கொஞ்சமும் இளகவில்லை. 

பவானிக்கு, என்னமோ அன்று தான் பேசியது.. கணவனை காயப்படுத்தி இருக்கிறது என.. கணவனின் இறுக்கத்தில் புரிந்தது மனையாளுக்கு. ஆனால், கல்லூரி செல்லும் இந்த நேரத்தில் என்ன பேசுவது என புரியாமல் அமைதியாக கணவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

விசு ஏனோ ஏதும் பேசவில்லை. கல்லூரியில் இறக்கிவிட்டு “பார்த்து.. ஏதும் நடந்தது பற்றி ஷேர் பண்ணாத… கேர் புல்.. பை..” என்றபடி கிளம்பிவிட்டான்.

பவானி கல்லூரிக்கு சென்றாள். 

வேதா, பத்மநாபன் தம்பதி.. மற்றும் விசுவின் பங்காளி வீட்டில் ஒரு தம்பதி என ஐவர் இன்று மாங்கல்யம் வாங்க செல்லுகின்றனர். எனவே கோவிலுக்கு சென்றுவிட்டு, எப்போதும் செல்லும் நகைக்கடைக்கு சென்றனர்.

நேரம் சென்றது. மாலையில் பவானி வந்து சேர்ந்தாள். கணவன்தான் அவளை கல்லூரியிலிருந்து அழைத்து வந்தான். வாசலிலேயே இறக்கிவிட்டு கிளம்பிவிட்டான். வரும் வழியில் கூட பவானி “செயின் திரும்ப தந்திடவா.. பேசவே மாட்டேங்கிறீங்க..” என்றாள் கணவனை பேச வைக்கும் எண்ணத்துடன்.

விசு, யோசனையாக இருந்தான்.. பதில் சொல்லவில்லை. மனையாளும் அதன்பின் பேசவில்லை. வீட்டில் இறக்கிவிட்டு சென்றுவிட்டான்.

Advertisement