Advertisement

மறுநாள் அதிகாலையில் விழித்தாள் பவானி. நர்ஸ் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வந்து பார்க்கும் போது சத்தமில்லாமல் விழித்துக் கொண்டு.. உறங்கும் தன் கணவனையே பார்த்திருந்தாள் பெண்.

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை செக்கப் செய்வதற்கு வரும் நர்ஸ் வந்து பார்த்து, பல்ஸ் செக் செய்து.. குடிப்பதற்கு கொடுத்து சென்றார். பவானியும் பால் குடித்துவிட்டு.. தன் கணவனை, பார்த்துக் கொண்டே மீண்டும் உறங்கிவிட்டாள்.

விசு, காலை எட்டு மணிக்குதான் எழுந்தான்.. டாக்டர்கள் ரௌண்ட்ஸ் வந்து சென்றனர். பவானி விழித்து விட்டதால்.. நீங்கள் காலையில் அழைத்து செல்லலாம் என சொல்லி சென்றனர். எனவே, அதற்கான வேலைகள் நடந்தது. 

பவானி, விழித்துக் கொண்டாள்.. இயல்பாக அமர்ந்து காலை உணவையும் உண்ண தொடங்கினாள். கணவன் மனைவி இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. பார்வையால் தொடர்ந்தபடி தங்களின் வேலைகளை பார்த்தனர்.

மதிய உணவையும் மருத்துவமனையிலேயே முடித்துக் கொண்டு, பவானியும்.. விசுவும்.. வீடு கிளம்பினர்.

காரில் செல்ல செல்ல அத்தனை போன் கால்ஸ் விசுவிற்கு.. செந்தில், வக்கீல், மில் என அவனை அழைப்புகள் தொடர்ந்துக் கொண்டே இருந்தது.

பவானி, கண்மூடிக் கொண்டாள்.. காலையிலிருந்து யோசித்து யோசித்து அவளிற்கு குழப்பம் தீரவேயில்லை. கழுத்தில் தாலி இல்லை.. தான் அணிந்திருந்த சின்ன செயின் இல்லை.. கையில் இருந்த வளையல் மோதிரம்.. என எந்த நகைகளும் தன்னிடம் இல்லை’ என உணர்ந்தவளுக்கு மனது என்னமோ செய்தது. அத்தோடு தன் உடல்நிலைக்கு என்னவாகிற்று எனவும் தெரியவில்லை.. ஓர கண்ணில் கணவனை பார்த்தவளுக்கு.. சின்ன குரலில் பேசிக் கொண்டே வந்த, அவனின் இறுகிய முகம்தான் கண்ணில் பட்டது. அதை பார்க்க பார்க்க என்னமோ போலானது பெண்ணுக்கு.. திகிலோடு கண்களை மூடிக் கொண்டாள்.

வீடு வந்து சேர்ந்தனர். பவானியை அன்னைகள் இருவரும் சந்தோஷமாக.. கண்ணில் நீரோடு வரவேற்றனர். 

வேலை செய்பவர் வந்து ஆர்த்தி எடுத்து தேங்காய் சுற்றி உடைத்த பின்தான் உள்ளே விட்டார், அவர்களின் எஜமானியை. வாட்ச்மேன் வந்து நலம் விசாரித்து சென்றார்.. விசுவிடம் ‘ஐயா , நான்தான் சரியா கவனிக்கலை அய்யா.. மன்னிச்சிடுங்க’ என மன்னிப்பு வேண்டி சென்றார். விசு சமாதானம் செய்து ‘ஒண்ணுமில்லை’ என சொல்லி அனுப்பினான் அவரை.

இப்படியாக ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வாசுகி, ஜூஸ் எடுத்து வந்தார்.. பெண் மாப்பிள்ளை இருவருக்கும். வேதா மதிய உணவுக்கு தேவையானதை சொல்லிக் கொண்டிருந்தார்.

விசு, ஜூஸ் குடித்து முடித்து “பேபி..” என தன் மனையாளை அழைத்தான். பவானிக்கு அந்த அழைப்புதான் சொன்னது தன்மேல் கோவமில்லை என.. ஆசையாக நிமிர்ந்து பார்த்தாள்.

விசு “நீ, ரெஸ்ட் எடு.. நான் மில் வரை போயிட்டு வந்திடுறேன்.. பார்த்துக்கோங்க..” என அவளிடம் சொல்ல ஆரம்பித்தவன்.. தன் அன்னை, மாமியார் என இருவரையும் பார்த்து கடைசி வாக்கியத்தை முடித்து  கிளம்பிவிட்டான் அங்கிருந்து.

பவானிக்குதான் முகம் வாடி போனது. கணவன் அருகில் இல்லாமல் விட்டு சென்றது.

சற்று நேரத்தில், வேதாவும் வாசுகியும் பவானியை அவளை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர் அவர்களின் அறைக்கு.

வேதாவும், வாசுகியும் பேசியபடியே அமர்ந்திருந்தனர். இன்று, மருமகளுக்கும்.. மகனுக்கும் தாலிபெருக்குவிழா நடக்கவிருந்தது.. அது இல்லாமல் போக.. அதை குறித்து வேதா வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.. தன் சம்பந்தி வாசுகியிடம். அவருக்கும் வருத்தமே.. பேசிக் கொண்டிருந்தனர்.. இருவரும்.

பவானி, எதையும் யாரிடமும் கேட்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள்.. அசதியில் உறக்கமும் வந்து சேர்ந்தது அவளிடம்.

மாலையில் மணி ஏழாகியது இன்னமும் பவானி எழவில்லை. வாசுகி வந்து வந்து பார்த்து சென்றார் மகளை, அசந்து உறங்குவதால் எழுப்பவில்லை.

இப்போது விசு வந்து சேர்ந்தான். வேதா மகனிடம் “சாப்பிட்டியா” என்றார்.

விசு “ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பும் போதே.. சாப்பிட்டேன்.. எங்க பவானி” என்றான்.

வேதா “மேலே இருக்கா… இன்னும் எழவில்லை..” என்றார்.

விசு “சரி.. நான் மேலே போறேன்” என்றவன் கிளம்பிவிட்டான். படிகள் ஏற ஏற ‘என்ன ஆச்சு.. ஏன் இவ்வளவு நேரம் தூக்கம்..’ என எண்ணியபடியே சென்றான்.

கதவை திறக்க.. குழந்தையென அவளின் உறக்கம் அவன் கண்ணில் பட்டது.. இப்போது இருந்த டென்ஷன் சற்று மட்டுப்பட்டது.. அமைதியாக அவளின் அருகில் சென்று நின்றான்.. ஆழ்ந்த உறக்கம் போல அவள், கண் திறக்கவில்லை பெண். என்னமோ ஒரு ஒரு நிம்மதி வந்தது கணவனின் மனதுள். ‘நிறைந்து போனது என் மனது’ என எண்ணிக் கொண்டான். முத்தமிட தோன்றியது.. தன்னவளை.. விழித்துக் கொள்வாளோ என எண்ணி அமைதியானான்.

விசு, ப்ரெஷ்ஷப்பாகி வந்தான். அதற்குள் போன் ஒலிக்க தொடங்க.. சத்தம் வராமல் மெதுவாக பேசியபடியே.. உடைமாற்றிக் கொண்டு அவளின் அருகில் மறுபக்கம் வந்து அமர்ந்துக் கொண்டான். 

இவன் போன் பேசும் சத்தத்தில் விழித்துக் கொண்டாள் பவானி. என்னவென தெரியாமல் திரும்பி படுக்க.. அருகில் மசமசவென உருவத்தில்.. கணவன். பவானி லேசாக அதிர்ந்து எழுந்தாள்.

விசு போன் பேசிக் கொண்டே “ஏன்.. தூங்கு..” என்றான், போனின் ஸ்பீக்கரை மறைத்துக் கொண்டு.

பவானி ‘இல்லை’ என்பதாக தலையசைத்து.. எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.

விசு தன் பேச்சை போனில் தொடர்ந்தான்.

இப்போது வேலை செய்பவர் வந்து கதவை தட்ட.. விசு எழுந்து திறந்தான்.. “காபி தரட்டுமா கேட்டுட்டு வர சொன்னாங்க” என்றார்.

விசு, பவானியை பார்த்தான்.. பவானி “ம்.. க்கா..” என்றாள்.

பவானி எழுந்து ரெஸ்ட்ரூம் சென்றாள்.

சற்று நேரத்தில் ப்ளாஸ்க்கில் காப்பியும், சின்ன ஹாட்பாக்கில் லெமன் சேவையும்.. தொட்டுக் கொள்ள சட்னி.. உண்பதற்கு சின்ன பவுள், ஸ்பூன் என எல்லாம்  வந்து சேர்ந்தது. 

பவானி, முகத்தை துடைத்தபடி வந்து காபியை உற்றினாள் கப்பில். விசு போன் பேசி முடித்து வந்தான். கணவனிடம் தன்போல காபியை நீட்டினாள் பெண். 

விசு “எப்படி இருக்க.. பரவாயில்லையா?” என்றான், அவள் கொடுத்த காபியை வாங்கி வைத்தபடி.

பவானி, காபியை அருந்த தொடங்கினாள். விசு, சேவையை அந்த கிண்ணத்தில் போட்டு.. அவளிடம் நீட்டினான். பவானி ‘என்ன’ என்பதாக பார்க்கவும் விசு “சாப்பிடு..” என்றான், இணக்கமான குரலில்..

பவானி, என்ன செய்வது என தெரியாமல் விழித்து நிற்க.. கணவன், உணவினை ஒரு ஸ்பூன் எடுத்து அவளின் முன் நீட்டினான்.. இப்போதும் என்ன செய்வதென தெரியவில்லை பெண்ணுக்கு.. கணவன் “ம்..” என்க. தன்போல அவளின் செப்பு இதழ்கள் திறந்து அந்த உணவை வாங்கிக் கொண்டது.

விசு “சாப்பிட்டு, காபி குடி.. மதியமும் சரியா சாப்பிடலை.. இவ்வளவு நேரம் தூங்கி இருக்க.. இப்படி இருந்தா மயக்கம்தான் வரும்..“ என சாதரணக் குரலில் சொல்லிக் கொண்டே அவளுக்கு ஊட்டினான். பவானி ஒன்றும் சொல்லாமல் கணவன் ஊட்ட ஊட்ட உண்டாள். தானே வாங்கி உண்ண தோன்றவில்லை பெண்ணுக்கு.. 

சற்று நேரத்தில் இருவரும் உண்டு காபி குடித்து முடித்தனர்.

பவானி, மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள். விசு “வா, வெளிய வா.. பால்கனியில் நிற்கலாம்” என சொல்லி அவளை வெளியே அழைத்து வந்தான்.

பவானி வெளியே வந்தாள்.. விசுவும் பின்னாலேயே வந்து நின்றான் அவளோடு. அவளின் கைபிடித்துக் கொள்ள மனம் விழைய.. விசு “பார்பி..” என்றான் சின்ன குரலில்.

பவானி, அதிர்ச்சியாக  திரும்பி பார்க்க.. அவளின் கையை தானாக நாடி பற்றிக் கொண்டான் கணவன். 

பவானி அதை உணர்ந்து லேசாக புன்னகைத்தாள்.. முகம் குழப்பத்தை விடுத்து.. ஆராய்ச்சியாக கணவனை பார்த்தது.

விசு “என்ன” என்றான்.

பவானி “எங்க என் தாலியை காணோம்.. உங்ககிட்ட இருக்கா..” என்றாள் தயக்கமாக குரலில். அவளிற்கு ஏதும் தெரியவில்லை.. என்ன நடந்தது என புரியவில்லை.. எனவே, குழப்பம் தீர்ந்தால் தானே என்னால் மூச்சுவிட முடியும் என தன் குழப்பத்தை கணவனிடம் கேட்டாள்.

விசு, அவளை இயல்பாக்க எண்ணி “அது எதுக்கு.. அதான் நானே இருக்கேனே..” என்றான், அவனுக்கும் யோசனைதான் ‘எங்க தாலி..’ என. அவசரத்தில் கவனிக்கவில்லை அவன்.. கேட்கவும் இல்லை செந்திலிடம்.. எனவே, மனையாளை சமாளிக்க எண்ணி இப்போது பேசினான்.

பவானிக்கு இந்த பதில் ரசிக்கவில்லை.. கோவமாக வந்தது, விளையாட்டான கணவனின் பதிலில். பவானி “இப்போதானே இருக்கீங்க.. இத்தனைநாள் நீங்க விட்டு போயிட்டீங்க, அதுதானே கூடவே இருந்தது.. எங்க என் தாலி..” என்றாள் அழுகையோடு. அவளிற்கு குழப்பம்.. கோவம், யாரும் என்னிடம் ஏதும் சொல்லவில்லையே என பயம்.. இப்போது கேட்கும் போதும் கணவன் விளையாட்டாக பதில் சொல்லுவதாக தோன்ற.. மனையாள் அழுகைக்கு தயாரானாள்.

விசு, அவளின் கையை விடுத்து.. மென்மையாக அவளின் தோள்களை பற்றினான்.. “ஏன் இவ்வளோ டென்ஷன்.. இனி நான் கூடவே இருப்பேன்..” என்றான்.

பவானி “இல்ல, எனக்கு பயமா இருக்கு.. நீங்க பிஸினெஸ் விஷயமா போயிட்டீங்க… நான் தனியாதானே இருந்தேன். விடுங்க… என்ன ஆச்சு எனக்கு, ஏதாவது த்..தப்பா நடந்துடுச்சா.. ஸ்ரீயா?.. யார்? என்ன செய்ததது.. என்னாச்சு எனக்கு.. சொல்லுங்களேன் தலையே வலிக்குது..” என சொல்ல சொல்ல அவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

விசுவிற்கு கோவம் வந்துவிட்டது “எதுக்கு அழற.. உனக்கு என்ன ஆகும். ஒன்னும் ஆகலை.. சும்மா மனசை போட்டு குழப்பிக்காத.. டென்ஷன் எடுக்காத.. ரிலாக்ஸ் டா..” என்றான், அவளின் தோள்களை இறுக்கி பிடித்தபடி.

பவானி இப்போது கணவனின் பக்கம் திரும்பினாள் “ப்ளீஸ் என்ன ஆச்சு” என்றாள்.

விசுவிற்கு, மருத்துவர்கள் சொன்ன.. அவளின் குழப்பம் நினைவு வர.. பொறுமையாக நடந்ததை விளக்கினான். பாதி மறைத்து.. சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி என அவ்வளவு பெரிய செய்தியை ‘ஒன்றுமே இல்லை..’ என்பதாக சொன்னான் கணவன்.

ஆனால், பவானிக்கு அழுகையாக வந்தது “நைட் புல்லாவா.. யாரு? அங்கிளோட எனிமீஸ்சா… எ.. எனக்கு எதுவும் ஆகலை தானே.. நா.. நல்லா இருக்கேன் தானே..” என்றாள் இப்போது கணவனை பார்த்து.

விசு தன் ப்ரவுன் நிற விழிகளால் தன்னவளை பார்த்த்தான்.. பவானியும் இந்த அமைதியில்.. கணவனின் கண்களை பார்த்தாள்.. மிகவும் கூர்மையாக அளவிட்டுக் கொண்டிருந்தது தன் மனையாளை.. ‘என்னிடம் இப்படி கேட்கலாமா?.. என்ற கேள்வியையும், என்னை பார்த்து இப்படி கேட்டுக்கும் நிலையில் நானிருக்கிறேனே..’ என குற்றயுணர்ச்சியும் எழுந்தது அவனுள்.. தவித்து போனான் பதில் சொல்ல முடியாமல், கணவன்.

நொடிகள் கடந்தது.. மனையாள் பதிலுக்காக காத்திருக்க.. கணவன், அவளை பார்க்க முடியாமல் திரும்பி நின்றுக் கொண்டான். பவானி “ஏங்க..” என்றாள் அழுகையோடு.

விசு, இப்போது கனலாக திரும்பி நின்றான் அவள்புறம் “என்ன என்ன இவ்வளவு பயம்… உனக்கு. அப்படி எல்லாம் ஒன்னும் ஆகலை சொன்னேனே.. உன்னை மயக்க மருந்து கொடுத்து வைத்திருந்தார்கள் அவ்வளவுதான்.. ப்ளீஸ் இனி இப்படி கேட்க்காத..” என சொல்லி அவளை கடந்து சற்று தள்ளி நின்றுக் கொண்டான் கோவமாக.

அவளிடம் கோவம் கொள்ள கூடாது என தெரிகிறது.. ஆனால், இந்த க்ஷ்னம் முடியவில்லை அவனால்.. திரும்பி நின்றுக் கொண்டான்.

“தொடுவானம் இன்று..

நெடுவானம் ஆகி..

தொடும் நேரம் தொலைவாகுதே..

கண்ணம்மா கண்ணாம்மாஆ…

கண்ணிலே என்னம்மா…”

Advertisement