Advertisement

பார்ப்பதற்கு நாற்பது வயதில் இருந்தனர், ஆண்கள் இருவரும்.. ஒரு பெண் அவளும் சிறு பெண் என சொல்ல முடியாத அளவிலான தோற்றம். மற்ற இரு ஆண்களும்.. ஐம்பதில் ஒருவரும்.. இன்னொருவன் இருபது வயதில் இருப்பான் போல. பார்ப்பதற்கு குற்றவாளிகள் என சொல்ல முடியாதபடி நன்றாக இருந்தனர். 

அவர்கள் உபயோகித்த கார்கள் வந்து நின்றது இப்போது.. நல்ல விலை உயர்ந்த கார்கள்.. ஆட்களும் அப்படிதான் பாலீசாக இருந்தனர். அந்த ஸ்டேஷனில் அத்தனை நபர்களை நிற்க வைக்க கூட இடமில்லை.. அப்படி சின்ன ஸ்டேஷன். எனவே வெளியவே நின்றிருந்தனர் எல்லோரும்.

போலீசார்கள் எல்லோரும் பொருட்களை எல்லாம் இறக்கி வைத்து.. அப்படியே ஓவ்வொருவராக நகர்ந்தனர்.. டீ, தண்ணி என அருந்த. இப்போது அந்த இன்ஸ்பெக்ட்டரும், குற்றவாளிகள்  அந்த நான்கு பேரும் இருந்தனர், ஸ்டேஷனுள். 

இப்போது விசு உள்ளே வந்தான். செந்தில் பின்னாலேயே வந்தார்.. இன்ஸ் “உட்காருங்க சர்..” என்றார்.

விசு “என்ன சொல்றாங்க..” என்றான்.

இன்ஸ் “என்னத்த சொல்லுவாங்க.. தப்பு செய்து பழகினவங்க இல்ல.. ஒரே குடும்பம் போல.. அந்த பொண்ணு மட்டும்தான் எதோ லவ், கல்யாணம்ன்னு சொல்லுது.. சரியா விசாரிச்சாதான் தெரியும். நீங்க ஈரோட்டில் கேஸ் எழுதறீங்களா.. இங்கையான்னு பார்க்கணும், இன்னும் கமிஷனருக்கு சொல்லலை.. நாங்களே.. இவரோடு உதவியோட செய்துட்டோம்.. கமிஷனர்கிட்ட பேசணும்” என செந்திலை பார்த்தபடி சொன்னார்.

விசு “நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

இன்ஸ் “எதுக்கு சார்.. நீங்க உங்க வைப்பை பாருங்க சர்.. வேண்டாம், ஏதாவதுன்னா நான்தான் பதில் சொல்லணும்.. செந்தில் ப்ளீஸ் சொல்லுங்க..” என்றார்.

விசு “நான், கமிஷனர்கிட்ட பேசறேன்.. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்.. அவங்ககிட்ட பேசணும்” என்றான்.

செந்தில் ‘விடுங்க..’ என்பதாக பார்த்தார், இன்சை.

இன்ஸ் “சரி சீக்கிரம்..” என்றார்.

விசு, சேரை திருப்பி போட்டுக் கொண்டான்.. அவர்களை பார்த்தபடி “உன் பேரென்ன “ என ஆரம்பித்தான்.

இப்படியாக யார் வேணுவின் மகன், வேலு மகன் என கேட்டு தெரிந்துக் கொண்டான். 

சற்று நேரத்தில் அந்த சைகோ.. நாற்பது வயது அவனிற்கு “என்ன, வலிச்சுதா..“ என கேட்டு சிரித்தான், இப்போது. 

விசு, வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

மீண்டும் அவனே “அப்படிதானே எங்களுக்கும் இருந்திருக்கும்.. ஹா… ஹா…. ஹா…” என இருக்குமிடம் கூட உணராமல் சிரித்தான்.

விசு, அருகில் நின்றிருந்த அந்த தெளிவான மனிதன் அதுதான், வேலுவின் மகனை ஒரு அடி விட்டான், கன்னத்தில். இப்போதுதான் அடுத்தவனின், அந்த சிரிப்பு நின்றது.

விசு, வெளியே வந்துவிட்டான்.. இந்த காரணங்களை எல்லாம் ஆராய்ந்து அறிய அவனுக்கு பொறுமையில்லை.. ‘கோவம்தான் வந்தது.. பழி வாங்குகிறார்கள் என புரிந்து போனது.. இனி அவர்களின் தலைஎழுத்து கோர்ட் கேஸ் என அலைவது..’ எனவே, தன் அட்வகேட்டிற்கு அழைத்தான்.

செந்தில் ஏற்கனவே அழைத்து சொல்லிவிட்டார்.. அதனால் இப்போது அவரும் வந்துக் கொண்டிருக்கிறார்.. போனில் பேசினான் விசு.

அட்வகேட் “நீங்க போங்க விசு, இங்கெல்லாம் ஏன் வரீங்க.. நான் கமிஷனர்கிட்ட பேசிட்டேன். நம்ம ஈரோட்டில் கேஸ் எடுத்துக்கலாம். நான் வந்து பேசிக்கிறேன்.. நீங்க கிளம்புங்க..” என்றார் அவர்.

விசு “இல்ல சர், அந்த சைகோ.. அவனை பார்க்கவே பாவமா இருக்கு.. அவனை நம்பி பொண்ணு ஒன்னு நிக்குது.. இதெல்லாம், சரியா வராது.. போகட்டும் விடுங்க..” என்றான்.

அட்வகேட் “ஹா… ஹா… என்னப்பா.. நைட்டிலிருந்து எத்தனை பேர் உழைப்பை போட்டிருக்காங்க.. அவன் பெண்ணை ஏதும் செய்யலை சரி, ஆனால், இது தொடர்ந்தால் என்ன செய்வது.. நான் பார்த்துக்கிறேன். இதுக்குதான் உன்னை இங்கே வர வேண்டாம்ன்னு சொல்றேன். நீங்க போங்க விசு.. இதையெல்லாம் உங்ககிட்ட விட முடியாது..” என்றார்.

விசு ஏதும் பேசாமல் போனை வைத்தான்.

மீண்டும் உள்ளே வந்தான்.. அந்த சுவரின் ஓரமாய் நின்றிருந்த அந்த ஆளை மீண்டும் ஒரு அடி வைத்தான்.. கோவம்தான்.. ஆனால், அந்த சைக்கோவை அடிக்க முடியவில்லை. பாவமாக இருந்தது விசுவிற்கு. ‘ஆனால், இப்போது அட்வகேட் பேச்சை கேட்ட்பதை தவிர.. தன்னால் ஒன்னும் செய்ய முடியாது. ம்.. வேண்டாம் என்றால் பிடிவாதமாக நின்று தடுக்கலாம்.. ஆனால், இவன்.. மற்றொருவன்.. அவனை பார்த்தால், ஏதும் தெரியாதவன் போல இல்லையே. அதனால், தானாக ஏதும் செய்ய கூடாது’ என வெளியே சென்றுவிட்டான் விசு.

செந்திலுக்கு, விசுவை பார்க்க பாவமாக இருந்தது.. ‘முழு கோவம் அவனிற்கு என புரிகிறது.. ஆனாலும், அந்த ஆளை பார்க்க பவாமாகவும் இருக்கிறது.. விசுவிற்கு.. தன் முழு அதிகாரத்தை அந்த ஒன்றுமில்லாதவன் மேல் செலுத்த யோசிக்கிறான் விசு’ என புரிகிறது.. செந்திலுக்கு. 

எனவே  செந்தில் “வா விசு, இனி எங்க பொறுப்பு.. நீங்க போய் முதலில் தங்கச்சியை பாருங்க.. கண் விழிச்சா உங்களை தானே தேடுவாங்க.. அவங்களுக்கு நீங்கதானே தைரியம் சொல்லணும்” என சொல்லி காரில் அமர்ந்தி.. காரெடுத்தார், செந்தில். 

மணி மதியம் ஒன்று.

விசு, வந்து சேர்ந்தான் மருத்துவமனைக்கு. செந்தில், விசுவை அங்கே விட்டு, அட்வகேட் உடன் சென்றுவிட்டார்.

விசு, மருத்துவமனையின் உள்ளே வர.. அவனின் குடும்பம் அங்கே நின்றது.

வேதா தனி அறையில் இருந்தார். அவரை போய் பார்த்தான். அன்னை “விசுப்பா..” என அழுகை. மகன் பொறுமையாக அன்னையை கட்டிக் கொண்டு, அவரின் முதுகை தடவிக் கொடுத்தான்.. “ம்மா, ஒண்ணுமில்ல ம்மா, எல்லாம் நார்மல்.. நீங்க அமைதியா இருங்க, அவளை பார்த்தீங்களா” என்றான்.

வேதா “ம்.. பார்த்தோம் இன்னிக்கு முழுக்க இங்கதான் இருக்கனும்ன்னு சொன்னாங்க.. மயக்கமே இன்னும் தெளியலை போல.. பத்து அண்ணா கிட்ட கேளு..” என்றார்.

விசு “சாப்பிட்டீங்களா..” என்றான், அக்கறையாக.

வேதா “ம்.. நீ சாப்பிட்டியா” என்றார்.

விசு “இனிதான் ம்மா..” என்றான். பின் “அவளை பார்த்துட்டு வரேன்” என அந்த அறை விட்டு வெளியே சென்றான்.

பத்மநாபன் வாசுகி இருவரும் நின்றிருந்தனர்.. இருவரையும் பார்த்தான்.. அந்த மூவருக்கும் என்ன பேசுவது என தெரியவில்லை.. தொண்டையை அடைத்தது துக்கம் என்பார்களே அப்படி மூவருக்கும் ஒரே வலி. நல்ல வேலை ஒரு நர்ஸ் வந்தார்.. இவர்களின் இந்த அமைதியை கலைக்க. எதோ ரேசெபிப்ட் போல ஒன்றை பத்மநாபனின் கையில் கொடுத்தார். பத்மநாபன் அதை வாங்கிக் கொண்டு சென்றார்.

விசு அமைதியாக அங்கிருந்த சேரில் அமர்ந்துக் கொண்டான்.

வாசுகி, பத்து நிமிடத்தில் ஒரு கப்பில் டீ கொண்டு வந்து கொடுத்தார். ஒன்றும் பேசாமல், அவரை நிமிர்ந்தும் பார்க்காமல் வாங்கிக் குடித்தான்.

பத்து, வந்தார். இப்போது வாசுகி முணுமுணுப்பாக கணவரிடம் எதோ சொன்னார்.. பத்மநாபன் சென்றுவிட்டு, வந்தார்.

சற்று நேரத்தில் சப்பாத்தியும் ஒரு தயிர் சாதமும் வாங்கி வந்தார் டிரைவர் ஒருவர். அதை கொடுத்தார் வாசுகி… விசுவிடம்.

விசு, அதை வாங்கி ஓரமாக வைத்தான்.. வாசுகி “பவானி நல்லா இருக்கா மாப்பிள்ளை. மயக்கத்தில் வைத்திருக்காங்க.. தலையில்தான் எதோ இருப்பு கம்பியினால் அடிப்பட்டிருக்கு.. ஒன்னும் இல்லை.. எதோ மயக்க மருந்தை கொடுத்திருக்காங்களாம் ஊசி வழியா.. ப்ளேட் டெஸ்ட் முதல் MRI வரைக்கும் எடுத்தாச்சி.. ஒண்ணுமில்லை அவளுக்கு… அப்சர்வேஷனில் வைச்சிருக்காங்க.. கடவுள் புண்ணியத்தில் நல்லா இருக்கா.. நீங்க கொஞ்சம் சாப்பிடுங்க மாப்பிள்ளை” என்றார்.

விசு, தலையாட்டிக் கோட்டுக் கொண்டான்.

பின், அவர்களிடம் ஏதும் பதில் சொல்லாமல், நேரே அவள் இருக்கும் இடத்திற்கு சென்றான் விசு. அங்கிருந்தவர்களிடம்.. பேசி, உள்ளே சென்றான்.

தனியறையில்தான் இருந்தாள் பவானி.. ட்ரிப்ஸ் இருந்தது.. ECG ஓடிக் கொண்டிருந்தது. மற்றபடி அந்த இடம் அமைதியாக இருந்தது. அவளின் அருகில் இருந்த.. சேரில் அமர்ந்துக் கொண்டான், கணவன். 

இப்போது மனையாளின்  முகத்தை பார்க்கவே முடியவில்லை அவனால்.. தாங்கவியில்லை அவனுக்கு. அவளின் கைகளை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன்.. மெதுவாக அவளின் விரல்களை முத்தமிட்டான் “சாரி பேபி.. சாரி டா…” என்றபடி ஒவ்வொரு விரல்களுக்கும்.. மென்மையான முத்தங்களை.. இதமாக கொடுத்துக் கொண்டிருந்தான். கணக்கில்லை எத்தனை.. என குறைந்தா கூடுதலா என தெரியவில்லை கணவனுக்கு.

விசு “எப்போ முழிப்ப… சீக்கிரம் வா.. வீட்டுக்கு போலாம்.. ப்ளீஸ் டி பேசு.. “ என்றான் முணுமுணுப்பாக.

அதுவே காதில் விழுந்துவிட்டது போல.. மனையாளுக்கு, லேசாக அசைந்தாள். கணவன் அவளின் கைகளை இன்னும் அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.. “ம்.. கண்ணை திற… பார்பி.. பப்பு.. பவானி..” என்றான் அவளின் நெற்றியில் கை வைத்து வருடிய வண்ணம்.

அஹ..  முதல் தொடுகை.. கணவனின் முதல் வருடல்.. பவானி மெதுவாக கண்களை திறந்தாள்.

விசு “எப்படி இருக்க.. ஓகேவா..” என்றான், புன்னகை முகமாக.

மனையாள் மெதுவாக கணவனின் கண்களை பார்த்தாள்.. அவளிற்கு ஒன்றுமே புரியவில்லை.. குழப்பமாக இருந்தது. 

விசுவிற்கு, அவளின் குழப்பமான விழிகளை பார்க்க முடியவில்லை. அவசரமாக “பேபி.. நீ சூப்பரா இருக்க.. இரு டாக்டர கூப்பிடுறேன்..” என்றவன் அவசரமாக அவளின் நெற்றியில் முத்தமிட்டான், அழுத்தமாக சொல்லாமல் சொல்லும் அழுத்தமான.. சந்தோஷத்தை,  அவசரமாக.. ஒரு முத்தத்தில் சொல்லினான் போல கணவன்.

“கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி.. 

கடல் உள்ள போறவன் நானில்லடி..

கடல் மண்ண போல உன் காலோடு ஒட்டி..

கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி…

கண்ணான கண்ணே நீ கலங்காதடி…

என் உயிரோட ஆதாரம் நீதானடி…”

 

கணவனின் அழுத்தமான முத்தம் மட்டுமே அந்த நேரத்தில் அவளுக்கு புரிந்த பாஷையானது.. இப்போது. ‘இன்னமும் ஒன்று தருவானா..’ என ஏக்கமாக பார்த்திருந்தாள் போல.. கண்கள் கணவனை தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை.

விசு அவசரமாக வெளியே சென்றான்.

Advertisement