Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

2௦

பொட்டால் காடு… மரங்கள் என சொல்லிக் கொள்ளும்படி ஏதும் பெரிதாக இல்லை, எல்லாம் முட்புதர்கள்.. ஆங்காங்கே, கொஞ்சம் பச்சையும் கண்ணில் தெரிகிறது.. இப்போது, கூடவே ரயில் செல்லும் பாதை.. அதை தொடர்ந்து ஒரு சில குடோன்கள் கண்ணில் படுகிறது.. அதில் எதுவென புரியவில்லை.. பவானியை தேடிக் கொண்டு வந்த செந்திலின் ஏஜென்சியின் இரண்டு நபர்கள் கொண்ட குழுவிற்கு குழப்பம். 

அமைதியாக தங்களின் காரை நிறுத்தி விட்டு.. பொறுமையாக வேடிக்கை பார்க்க எதுவாக மறைந்துக் கொண்டனர். வேறு பாதையில் தேடிக் கொண்டிருந்த, மற்ற குழுக்களுக்கு இப்போது அழைத்தனர். போலீஸ், அங்கே ஹைவேயில் நின்ற மற்றொரு கார், இங்கே நிற்கிறது.. என தகவல் சொல்லி, போனை வைத்தனர்.

ஆக, மொத்தம் பத்து நபர்கள் பிரைவேட் ஏஜென்சி நபர்கள்.. மேலும், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்க்கும் அழைத்து சொல்லி அங்கிருந்தும் ஆட்களை வர சொல்லிவிட்டனர்.

இப்போதுதான் இருள் விலக தொடங்கி இருந்தது.. மெல்ல மெல்ல சிவப்பு சூரியன்.. பூமியை வெப்பமாக்க எண்ணியிருக்கிறது. எனவே.. எல்லோரும், பொறுமையாக.. காத்திருந்தனர். மற்ற எல்லோரும் வருவதற்காக.

பக்கத்தில், ஒரு முக்கால்கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு குடியிருப்பு.. எதோ வேலை செய்பவர்கள் தங்குவார்கள் போல.. விடியல் வரவும்.. ஆள் நடமாட்டம் கொஞ்சம் வந்தது. 

அந்த இடத்திற்கு சம்மந்தமே இல்லாமல் மூன்று கார்கள் நின்றிருந்தது.  அங்கிருந்த நான்கு குடோன்களிலும் எந்த சத்தமும் இல்லை.. எல்லாம் பூட்டிதான் இருந்தது.

சற்று நேரத்தில் பளபளவென பொழுதும் விடிந்துவிட்டது. ஆட்களும் வந்து சேர்ந்துவிட்டனர்.. ஒரு இருபத்தைந்து நபர்கள் மொத்தமாக.. அந்த அமைதியான அமானுஷ்யமான.. இடத்தில்.. தங்களின் அதிகாரத்தால்.. அங்கே வேலை செய்யும் பணியாளர்களை விசாரிக்க தொடங்கினர். கூடவே ஒரு குழு கார்களின் அருகில் சென்றது.

பணியாளர்கள் யாருக்கும் ஏதும் தெரியவில்லை.. அப்படிதான் சொல்லினர். கார் ஏது.. உங்க முதலாளி யார் என விசாரணை. அதற்குள் காரின் அருகில் யாரும் இல்லை. ஆனால், ஒரு குடோனில் மனிதர்கள் அசையும் சத்தம் கேட்கவும்.. இப்போது பவானியை தேடி வந்த எல்லோரும் அங்கே விரைந்தனர்.. அந்த குடோனை சுற்றி வளைத்துக் கொண்டனர்.. ஒரே ஒருநபர்.. வெளியே வந்தார்.. அவ்வளவுதான்.. தெரியும், அங்கிருந்த எல்லோருக்கும்.

வெளியே வந்த நபரை, இவர்கள் நான்கு நபர்கள் பிடித்துக் கொண்டனர். அதன்பின் போலீஸ் உள்ளே சென்றது. ப்பா, எவ்வளவு வசதி அந்த குடோனில். அது ஒரு தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன். மதுரையை சேர்ந்த வேலுவின் மாப்பிள்ளை.. அங்கே லேபௌர் காண்ட்ராக்ட்டர்.

மற்றபடி அந்த குடோன் அங்கிருக்கும் இரும்பு சாமான்களை பாதுகாக்கும் ஒரு இடம். இப்போது வேணுவின் மாப்பிள்ளையின் வசம் அந்த நான்கு குடோன்களும்.. அந்த இடத்தில்தான் பவானியை கட்டி வைத்திருந்தனர், ஒரு இரும்பு சங்கிலியில். கூடவே அவளின் கண்களும் கட்டப்பட்டிருந்தது.. அவள் மயக்கத்தில் இருந்தாள், தலையில் காயம்.. மற்றபடி வெளிகாயம் ஏதும் தெரியவில்லை. அருகினில் ஒரு பெண்.. இருந்தாள். மற்றபடி ஒரு நான்கு நபர்கள் ஆண்கள், அவ்வளவுதான். 

போலீஸ்.. வந்து நிற்கவும் எல்லோரும் எழுந்தனர். பவானி மட்டும் அசைவே இல்லாமல் இருந்தாள். போலீஸ் கையில் துப்பாக்கியை எடுக்கவும்.. மற்ற இரு ஏஜென்சி நபர்களும், பவானியை மீட்டனர். அதுவரை வாயே திறக்கவில்லை.. யாரும்.

அவசர அவசரமாக ஒரு கார் வந்து நின்றது.. அதில் பவானியோடு ஏறிக் கொண்ட நபர், செந்திலுக்கு அழைத்து தகவலை சொன்னார்.

இனி அந்த இடம் போலீசின் கட்டுபாட்டில் வந்தது.

செந்தில் “பிடிச்சிட்டீங்களா.. பவானி எப்படி இருக்காங்க….” என்றார். 

அவர்களும் “ஹாஸ்ப்பிட்டல் போய்ட்டிருக்கோம்.. மயக்கமாக இருக்காங்க.. நீங்க அங்கே வந்திடுங்க… ghக்கு “ என்றார்.

செந்தில் “இல்ல.. இங்கே போங்க..” என சொல்லி ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரை சொல்லி, அங்கே அனுப்பி வைத்தார்.

செந்தில், விசுவிடம் வந்து “வாங்க விசு.. —–ஹாஸ்ப்பிட்டல் போலாம். பவானி கிடைச்சிட்டாங்க, வாங்க விசு.. கிளம்புங்க” என அமர்ந்திருந்த விசுவை உலுக்கினார், செந்தில்.

விசு “எங்க, எ..எங்க இருக்கா.. நல்லா இருக்காளா..” என்றான்.

செந்தில் “ம்… வாங்க ஹாஸ்பிட்டல் போலாம்.. அங்க போய் பார்த்துக்கலாம்” என்றார்.

விசு வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தான்.. காரெடுத்தான், அவனே.

செந்தில் இப்போது, வேதாவிற்கு அழைத்து பேசினார், பத்மநாபனுக்கு அழைத்து பேசினார்.

பத்மநாபன் கோவை கிளம்பிவிட்டார் என சொன்னார்.

எனவே, பெண்கள் இருவரும் சற்று நேரத்தில் டிரைவரோடு கிளம்பி வருவதாக சொல்லினர் செந்திலிடம். செந்தில் பாதுகாப்பான டிரைவர் ஏற்பாடு செய்து, அந்த தகவலை.. வாசுகிக்கு சொன்னார்.

சற்று நேரத்தில் விசு மருத்துவமனையை அடைந்திருந்தான். இன்னமும் பவானி வந்திருக்கவில்லை. காத்திருந்தான் அவளின் கணவன். 

செந்தில், அங்கே என்ன நடக்கிறது என விவரம் கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்து என்ன செய்வார்கள் என ஏஜென்சியில் இருப்பவர்களும் விவரம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அரைமணி நேரம் சென்றுதான் போலீஸ் வண்டி வந்தது.. விசு, எல்லோருக்கும் முன்னே ஓடினான்.. அவசர சிகிச்சை பிரிவின் பக்கம் வந்தது வண்டி, அதனால் கூட்டம் இல்லை. 

பவானியை நடு சீட்டில் படுக்க வைத்திருந்தனர். விசுவிற்கு பயம்தான் மனதில்.. ஆனாலும் பொறுமையாக கதவை திறக்க.. அவளை பார்த்ததும், அய்யோ என்றானது.. கைகள் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்தது, தலையில் காயம்.. ரத்தம் உறைந்து போய்.. அந்த காயம்  நன்றாக தெரிந்தது. பார்த்த விசுவிற்கு, கைகள் நடுங்கியது.. முயன்று தன்னை சமாளித்துக் கொண்டு.. அவளை தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை அவனால். ம்.. அவள், தலை அந்தபக்கம் இருந்தது.. இவன் கால் பக்கம் நின்றான்.. எங்கே! தொட்டால் வலிக்குமோ என.. மெதுவாக அவளை தூக்கத் தொடங்கினான்.. அந்த நேரத்தில் மென்மை ஆகாது..’ என தெரியவில்லை அவனிற்கு.

செந்தில் “ம்.. விசு, தூங்குங்க.. சீக்கிரம்” என ஒரு அதட்டல் போட்டார்.

அப்போதுதான் விசு திடமாக அவளின் கால்களை பிடித்து இழுத்து, அவளின் முதுகில் கை கொடுத்து வெடுக்கென தன் நெஞ்சோடு அணைத்து எடுத்துக் கொண்டான் மனையாளை.. நெஞ்சில் அத்தனை படபடப்பு.. ஆனாலும் பொறுமையாக அவளை கொண்டு வந்து, உள்ளே உள்ள அந்த ஸ்டேச்சரில் விட்டான்.

அதன்பின் பவானி மருத்துவர்கள் வசம்.

விசுவிற்கு, அவளை பார்த்ததும் நிறைய குற்றயுணர்ச்சி.. நிறைய பயம்.. நிறைய கோவம்..  நிறைய காதல்.. என எல்லாம் ஒருங்கே எழுந்தது. உணர்வே இல்லாமல் இருக்கிறாள் அவள், கைகள் துவண்டு விழுகிறது.. தலை அவனின் நெஞ்சில் சாய்ந்தும் நிற்காமல் சட்டென துவளுகிறது.. அவனின் பிடியை தாண்டியும். எத்தனை திடம் வேண்டும் கணவனுக்கு இதனை காண.. உணர.. அமர்ந்துக் கொண்டான் விசு.

செந்தில் “நீ இங்க பாரு விசு.. நான் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வரேன்..” என்றார்.

விசு இப்போது நெற்றியிலிருந்து தன் தலையை கோதிக் கொண்டன் “எங்க இருக்காங்க செந்தில்.. ஸ்டேஷன் வந்துட்டாங்களா.. யாரு என்னான்னு தெரிஞ்சதா..” என்றான்.

செந்தில் “இல்ல பா, நம்மதானே போய் பார்க்கணும்.. நான் போயிட்டு வரேன்..” என்றார்.

விசு “வாங்க போகலாம்..” என்றான்.

செந்தில் “நீ இங்க இருப்பா..” என்றார்.

விசு “வாங்க செந்தில், அங்கிள் வந்திடுவார்.. யாருன்னு நானும் பார்க்கணுமில்ல.. நேராக பேச தைரியமில்லாதவங்களை நானும் பார்க்கணுமில்ல” என்றான் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டு.

செந்தில் “விசு.. வேண்டாம் என்ன பேச்சு இது” என்றார்.

விசு, ஏதும் பேசாமல் கார் சாவி எடுத்துக் கொண்டு முன்னே போனான்.. செந்திலால் ஒன்றும் சொல்ல முடியாமல் பின்னால் போனார்.

விசு இப்போது, தன் மாமனாரை அழைத்து பேசினான் “நான் ஸ்டேஷன் போறேன்.. நீங்க எங்க இருக்கீங்க” என்றான்.

அவர் பதில் சொல்லவும், விசு “ம்.. பார்த்துக்கோங்க.. செந்தில் ஆபீசில் இரேண்டுபேர் இருக்காங்க, நீங்க வந்ததும் போலீஸ் வந்திடுவாங்க.. மேனேஜ் பண்ணிக்கோங்க.. கூப்பிடுங்க..” என சொல்லி காரெடுத்தான்.

எங்கே ஸ்டேஷன் என கேட்டுக் கொண்டு வண்டியை செலுத்தினான், விசு.

வேகம்தான்.. என்னமோ அப்படி ஒரு வேகம்.. காரின் டயர் இந்த ஆறுமணி நேரத்தில் தேய்ந்திருக்கும்.. அவன் ஒட்டிய வேகத்திற்கும், அடித்த பிரேக்கும்.. இப்போதும் அதே வேகத்தோடு சந்துபொந்தில் நுழைந்து ஸ்டேஷன் வந்துவிட்டான்.

அது ஒரு சின்ன ஸ்டேஷன்.. அங்கிருந்த குடோன் அந்த போலீஸ் ஸ்டேஷன் ஆளுகைக்குள்தான் வந்தது. இனிதான் இந்த கேஸ்சை எங்கே போடுவது என யோசிப்பார் போலீசார். 

மீண்டும் காத்திருப்பு விசுவிற்கு.. யாராக இருக்கும் என யோசனை.. ஆனாலும் இப்போது அவனின் மனம்.. தெளிவாக இருந்தது.. பொறுப்பாக செந்திலிடம் பேச்சுக் கொடுத்தான் “அந்த கார் நம்பரை காட்டுங்க” என்றான்.

செந்தில் போனை சார்ஜ் போட்டிருந்தார்.. இப்போது அந்த நம்பரை மனப்பாடமாக சொன்னார். 

விசு “என்ன மதுரை ரெஜ்ஸ்ட்டேர்ஷ்ன் அப்படிதானே.. என்ன சொல்றாங்க போலீஸ்.. அப்புறம் உங்க ஏஜென்சி.. இன்னுமா தேடுறாங்க” என்றான்.

செந்தில் எல்லாம் சொன்னார் “அதுங்க விசு… வேலு வேணு, நம்ம அப்பாவை கடத்தியவர்கள் மகன்தான் இப்போது செய்தது. அதிலும் வேலு பையன்… அவன்தானான்னு சரியாக தெரியலை..  கணிப்புதான். ஒருவன் சைகோ போல.. ஒருமாதிரியா பேசுறான்னு விசாரிச்சு.. பார்த்த வரை, நம்ம ஆளுங்க சொல்றாங்க. அத்தோடு கூட அவனோடு ஒரு பெண்ணும் வேற சம்மந்தப்பட்டிருக்கு.. அதுவும் இதுக்கு காரணம்ன்னு சொல்றாங்க.

அந்த வேணுவோடு மாப்பிள்ளை நல்லா இருக்கான்.. பெரிய வேலை.. அதான் லேபர் காண்டாக்டர் வொர்க்.. டெண்டர்ன்னு கொஞ்சம் நல்லா இருக்கான். ரெண்டு பேரும் சேர்ந்து எதோ செய்திருக்காங்க போல.. முன்னாடியே, பவானியை கடத்தவும் ட்ரை செய்தது அந்த பையன்தான் காரணமாம். ஒன்னும் செய்யலை பவானியை. கூடவே இருந்த பொண்ணு எதோ ஹை டோஸ் மயக்க மருந்தை கொடுத்திருக்காம்.. பேர் சொல்லுச்சாம்.. அந்த பொண்ணு, எதோ நர்ஸ் போல.. அந்த சைக்கோவைதான் கல்யாணம் அது இதுன்னு இருக்கும் போல.. இவன், அப்பா அப்பான்னு புலம்பிகிட்டு இருக்கவும்.. எல்லாம் சேர்ந்து எதோ… தெரியலை..” என கோர்வையாக இல்லாமல், அவர்கள் பயந்து உளறியதை சொன்னார் செந்தில்.

விசு, பைத்தியம் பிடித்தவன் போல நின்றான்.. ‘ஒரு சைகோ.. அதே வேணு, வேலு’ என தன் தலையை அழுந்த கோதிக் கொண்டான், விசு.

சற்று நேரத்தில் போலீஸ் வேன் வந்து நின்றது.. மொத்தம் நான்கு வண்டிகள்.. ஏஜென்சி ஆட்கள்.. போலீஸ்.. குற்றவாளிகள் என எல்லோரும் வந்து சேர்ந்தனர்.

.

Advertisement