Advertisement

வேதாவிற்கே, ஒரு மாதிரி ஆனது.. தன் மூக்கு கண்ணாடியை தன் ஆட்காட்டி விரலால் மேலேற்றி விட்டுக் கொண்டு.. தன் மருமகளை உற்று பார்த்தார். 

பவானி “ஏன் அத்தை.. எவ்வளோ பெரிய விழா.. நீங்க எப்படி எல்லாம் உதவுகிறீர்கள் என நான் பார்த்திருக்கிறேன்.. இப்போது உங்கள் குழுவிற்கு பாராட்டு.. எனும் போது நீங்க இருக்கனுமில்ல, அதான் சொன்னேன்.. நீங்க போயிட்டு வாங்க அத்தை..” என்றாள்.

வேதாவிற்கு சந்தோஷமாகவே இருந்தது.. எனவே “சரி டா… நீ சும்மா போயிட்டு வா மில்லிற்கு, போதும். காலையில் செந்திலை வர சொல்லலாம்..” என்றார் அதே அமைதியான குரலில்.. முகம் இப்போது இயல்பு நிலைக்கு வந்திருந்தது.

பவானி “அத்தை ஏதாவது குடிச்சீங்களா.. “ என்றாள்.

வேதா, தனது போனை கையில் எடுத்தபடி “இல்லை டா.. பூங்கொடிகிட்ட சொல்லிட்டு போ.. போய் ப்ரெஷ் ஆகிட்டு வா..” என்றார்.

பவானி கிட்சேன் சென்றாள்.

வேதா, போனை எடுத்து.. மில்லில் யார் இருக்கிறார்கள் என பார்த்து.. பவானி வருவது பற்றி சொல்லி.. பேசி வைத்தார் போனை.

பூங்கொடி இவருக்கு சங்குபூ தேநீர் கொண்டு வந்து கொடுக்க.. வேதா “பவானிக்கு, டிபன் ரெடியா” என்றார்.

அவரும் பதில் சொல்லி உள்ளே சென்றார்.

வேதா, வேறு உடைமாற்றிக் கொண்டு வந்தார். பவானியும் வந்து சேர்ந்தாள். பவானி சிற்றுண்டி உண்டு முடிக்கவும்.. இருவரும் கிளம்பினர்.

வேதா, மருமகளை மில்லில் இறக்கிவிட்டு.. GM கிளம்பி விடுவார் இன்னும் சற்று நேரத்தில் என்பதால், சூப்பெர்வைசரிடம் பவானியையை கவனித்துக் கொள்ளும்படி பணித்து, தன் வேலையை பார்க்க சென்றார் மாமியார்.

வேதாவிற்கு, மருமகளை அனுப்பும் எண்ணம் இல்லைதான் என்றாலும்.. தானே முன்வந்து நின்றவளை பார்க்கவே ஆசையாக இருந்தது.. என் முகம் வாடுவது பிடிக்காமல், ‘நான் போறேன் அத்தை’ என சொல்லுகிறது பெண்.. என எண்ணிக் கொண்டே பயணித்தார். ஒரே பெருமைதான் மருமகளை நினைத்து வேதாவிற்கு.

!@!@!@!@!@@!@!@!@!@

பவானிக்கு, மில்லில் ஏதும் வேலை இல்லை.. இதுவரை மில்லிற்கே வந்ததில்லை அவள்.. விசுவின் அறை என ஒன்றை காட்டினார் சூப்பெர்வைர். நீங்கள் போய் அமருங்கள் என்றார்.. பவானி, முதலில் அந்த மில்லை சுற்றி வர எண்ணினாள். எனவே “எனக்கு, எக்ஸ்ப்ளைன் செய்வீங்களா” என்றாள் அவரிடம்.

அவரும் “கண்டிப்பா மேடம் வாங்க..” என அந்த பெரிய மில்லின் செயல்பாடுகளை விளக்க தொடங்கினார்.

மதியம் இரண்டு மணிக்கு, ஒரு ஷிபிட் முடிந்து இருந்தது.. இப்போது அடுத்த ஷிபிட் வேலை செய்யும் ஆட்கள்.. பதினோரு மணி வரை இருப்பர் ஆட்கள். 

எனவே, மில்… பெரிதாக பறந்து விரிந்திருந்தது. முதலில் பஞ்சினை தரம் பிரிக்கும் இடத்திற்கு சென்றாள். அதற்கே.. அலுவலக அறையிலிருந்து காரில் செல்ல வேண்டி இருந்தது.. இப்படி இன்று மட்டும் இரண்டு யூனிட் மட்டுமே பார்க்க முடிந்தது அவளால். யாரிடமும் பேச முற்படவில்லை அவள். எல்லோரும் மிஷினோடு.. கை வேலையில் இருந்தனர்.. ஆண்கள் பொருட்களைக் கொண்டு செல்வதும்.. வேலை செய்யும் பஞ்சை சுத்தம் செய்யும் போது விழும் குப்பைகளை அகற்றுவதுமாக.. பொதிகளை மாற்றி மாற்றி அந்த ட்ரலியில்.. இன்னொரு மிஷிணிற்கு அனுப்பிக் கொண்டும் இருந்தனர்..

பவானி, அமைதியாக பார்த்தவிட்டு வந்து விசுவின் அறையில் அமர்ந்துக் கொண்டாள். ஒரு செல்பி எடுத்துக் கொண்டாள் தன் கணவன் இருக்கையில் அமர்ந்து. 

மணி எட்டு.. பவானி மில்லிருந்து கார் ஏற்பாடு செய்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். தன் அத்தைக்கும் மெஸ்சேஜ் அனுப்பிவிட்டாள்.

இரவு பவானிக்கு மனது அமைதியாக இருந்தது. வேதா உணவிற்கு வரவில்லை என்றுவிட்டார். எனவே, இவளும், உண்டு முடித்து மேலே வந்துவிட்டாள்.

ஒரு குளியலை போட்டுவிட்டு, இலகு உடையில் அமர்ந்தாள் பால்கனியில்.. மனதே இதமாக இருந்தது.. என்னமோ கணவனுக்கு தெரியாமல், அவனிற்கு எதோ நல்லது செய்துவிட்டதாக எண்ணம் அவளுக்கு. ‘எப்போதடா அவன் போன் செய்வான்.. சொல்லலாம்..’ என நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பறந்து விரிந்த பால்வெளி.. அந்த நிலவை மட்டும் இன்னும் காணோம்.. எனவே, அந்த நிலவின் இடத்தில் கணவனை வைத்து யோசித்துக் கொண்டிருந்தாள் பெண்.

இன்னும் போன் வந்தபாடில்லை.. இவள் போன் செய்யலாம்.. ஆனால், இதுவரை இவள் அவனிற்கு அழைதத்தேயில்லை.. இப்போதும் அழைக்க தயக்கமாக இருக்க.. உள்ளே வந்து படுத்துக் கொண்டாள்.

வேதா, பத்து மணிக்குதான் வந்தார்.. வந்தவர், முதலில் மருமகளை அழைத்து பேச எண்ணினார். அவள் அசதியில் இருப்பாள் என எண்ணி, வாசுகிக்கு அழைத்தார். மருமகள் மாலையில் சொல்லியது.. மில்லிற்கு சென்றதும் பெருமை தாங்கவில்லை வேதாவிற்கு.

வாசுகிக்கு முதலில் இந்த நேரத்தில், வேதா அழைக்கவும் பயம்தான். ஆனால், எடுத்தவருக்கு, வேதாவின், சந்தோஷ பேச்சும், பெண் பற்றி பெருமையாக பேசியதும்.. கேட்க கேட்க.. ‘வேற என்ன வேண்டும்’ என்ற நிலை பெண்ணை பெற்ற அன்னைக்கு. 

வாசுகியும் “சந்தோஷம் அண்ணி.. அவ இவ்வளவு பொறுப்புன்னு எங்களுக்கே தெரியாது.. எல்லாம் உங்க வீட்டுக்கு வந்துதான் தெரியுது..” என வேதாவிற்கும் ஒரு மறைமுக பாராட்டை கொடுத்தார் வாசுகி.

இப்படியாக விசு வரை வேதா மருமகளின் புகழ் பாடிவிட்டார்.

விசுவிற்கு, தன் அன்னையிடம் என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. முகத்தில் புன்னகையோடு கேட்டுக் கொண்டான் தன் அன்னை சொல்லுவதை. ‘பாரேன் சொல்லவேயில்லை..ம்…’  என முகத்தில் ஆச்சர்யத்துடன் ஒரு புன்னகை மின்னிக் கொண்டே இருந்தது, அன்னை பேசி முடிக்கும் வரை. இறுதியில், மகன் இப்போது வருவான் என கேட்டே விட்டார் மறக்காமல், வேதா.

விசு “ம்மா.. இன்னும் டூ வீக்ஸ் ம்மா… மார்க்கெட் தேடிகிட்டு இருக்கேன்.. எல்லாம் ஏஜென்சி மூலம்தான் என்றாலும்.. இங்கிருந்தால், உடனே போய் பேசி முடிக்கலாம்ன்னு இருக்கேன்.. நான் பவானிகிட்ட பேசறேன்.. ஈவ்னிங் கொஞ்ச நேரம் அவள் மில்லிற்கு பழகட்டுமே..” என்றான்.

வேதா “அதானே, இந்த பிசினஸ் பண்றவங்க புத்தி இப்படிதானே போகும்.. எங்களுக்குன்னு என்ன நினைக்கிறோமோ செய்ய முடியாது.. உங்க பின்னாடியே ஓடனும், போட படிக்கிற பொண்ணு அது. சீக்கிரம் வா..” என்றார் அதட்டலாக.

விசு,  மறுவார்த்தை பேசவேயில்லை “சரி ம்மா.. சரி” என கேட்டுக் கொண்டான் அதே புன்னகையோடு.. பேசி முடித்து போனை வைக்கவும், அந்த காலை அவனுக்கு அழகாக தெரிந்தது.

நேரம் பார்த்தான், கிளம்பனும்.. டைம் ஆச்சு என்றது மூளை. கொஞ்சம் நேரம் பேசிடலாம்.. என மனம் சொன்னது. காதல் என்பதே மனம் சார்ந்ததுதானே.. இப்போதும் மனமே வென்றது.

அழைத்தான் மனையாளுக்கு.. 

லேசாக உறக்கத்திற்காக கண் சொருகியது பவானிக்கு. இவ்வளவு நேரம் காத்திருந்தாள் மனையாள்.. இப்போது அழைப்பு வரவும்.. எடுத்தாள்.

விசு “மேடம் பெரிய பெரிய வேலை எல்லாம் செய்யறீங்க போல.. சொல்றதும் இல்ல.. ஒண்ணுமில்ல..” என்றான்.

பவானிக்கும் புன்னகை.. விசுவிற்கும் புன்னகை.. என்னமோ சொல்ல தெரியாத, இருவரு மட்டுமே விளங்கிக் கொள்ள கூடிய புன்னகை.. பவானி “என்ன சொல்லன்னும்மாம்.. அதான் உங்களுக்கு எல்லாம் தெரியுதே..” என்றாள் புன்னகையை மறைத்துக் கொண்டு.

விசு “அப்போ சொல்லலமாட்ட..” என்றான்.

பவானி “என்ன சொல்லணும்..” என்றாள் அதே புன்னகையோடு.

விசு மீண்டும் “சொல்லமாட்ட..” என்றான்.

பவானிக்கு இவன் விடமாட்டான் என புரிந்தது.. ஆனாலும், அவனுக்கு தெரியும் போது என்ன சொல்ல முடியும். என அமைதியாக இருந்தாள்.

விசு அவளின் அமைதி பார்த்து, பொறுமையானக் குரலில்.. ”என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ற..” என்றான், ஒன்றுமில்லா குரலில்.. சட்டென சொல்லிவிட்டான் அவளிடம்.

பவானிக்கு, முகமெல்லாம் வேர்த்து வெட்க புன்னகை வந்துவிட்டது “நா..நான் உங்களை இம்ப்ரெஸ் பண்ண ஏதும் செய்யலை… என் மாமியார் கஷ்ட்டபடுறாங்கன்னு போனேன்..” என்றாள்., பெருந்தன்மையானக் குரலில்.

விசு “ஆனா, நான் இம்ப்ரெஸ் ஆகிட்டனே என்ன செய்ய” என்றான், தன் தாடையை தடவிக் கொண்டு, தன் உதட்டிற்குள் புன்னகையை மறைத்துக் கொண்டு சொன்னான்.

பவானி அமைதியானாள்.

விசு “தேங்க்ஸ்” என்றான்.

பவானி “அதெல்லாம் சொன்னா அப்புறம் நான் போகமாட்டேன்.. தினமும் போகலாம்ன்னு நினைத்திருக்கேன்.. இப்படி சொன்னா போக மாட்டேன்.. நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொன்னேனா..” என்றாள் இப்போது குரல் சத்தமாக வந்தது, என்றுமில்லாமல் கொஞ்சம் மனைவியின் அதிகாரமும் ஒட்டிக் கொண்டு வந்தது.

விசு “ஹப்பா… சண்டை போடற, பயமா இருக்கு.. நான் ரொம்ப சாஃப்ட் டா..” என்றான், இதமான குரலில்.

பவானி ஒன்னும் சொல்லவில்லை.. அதிகமாக பேசிட்டமோ என யோசனையில் அமைதியாக இருந்தாள்.

விசு “ஒகே ஒகே மேடம். மேடம், எப்படி சொல்றீங்களோ அப்படி பொல்லொவ் செய்துக்கிறேன்” என்றான் விளையாட்டுக் குரலில்.

பவானி “இல்ல.. உங்ககிட்ட பெர்மிஷன் கேட்கணும்ன்னு நினைச்சேன்.. அ..அது நான் தினமும் ஈவ்னிங் மில்லிற்கு போகவா.. அத்தைக்கு, அவங்க வொர்க் இருக்குல்ல..” என்றாள்.

விசு “ஹேய்.. நான் சொல்லிட்டனே.. நீதான் மேடம்ன்னு. அப்புறம் என்ன உங்கள் உத்தரவுகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.. நீங்க எப்போவேனா போகலாம், முடியலைன்னா இருக்கலாம்.. நோ ப்ரோப்ளேம்” என்றான் இலகுக் குரலில்.

பவானி ஒன்றும் சொல்லவில்லை.

விசு “உன் படிப்பையும் பார்த்துக்கோ.. நான் வரும்வரை போ.. முடியலைன்னா, என்கிட்டே சொல்லிடு, நான் மேனேஜ் செய்துக்கிறேன் இங்கிருந்தே, இன்னும் டூ வீக்ஸ்சில் வந்திடுவேன்.. ஒகே.. அப்புறம் எல்லாம் நார்மல்.” என்றான் அதே இலகு குரலில் புன்னகையோடு.. திட்டமிட்டவனாக பேசினான் விசு.

பவானி அவளையும் அறியாமல் “இன்னும் டூ வீக்ஸ்சா..” என்றாள்.

விசு “ஜஸ்ட் டூ வீக்ஸ்…” என்றான், அவளின் அதே வலி அவனையும் தாக்கியது. ஆனாலும், அவளை சமாதானம் செய்ய.. அப்படி சொன்னான்.

“நடக்கிற வரை நகர்கின்ற தரை..

அதன் மேல் தவிக்கிறேன்..

விழிகளில் பிழை.. விழுகிற திரை..

அதனால் திகைக்கிறேன்…

எனை சாய்த்தாளே..

உயிர் தேய்த்தாலே..

இனி வாழ்வேனோ இனிதாக…”

பவானி “ம்..” என்றாள் வேறு என்ன சொல்லுவது என தெரியாமல்.

விசு படிப்பு பற்றி கேட்டு, அவளை கொஞ்சம் பேச வைத்தான்.. அதன்பிறகுதான் பிறகு “டைம் ஆச்சு, அப்புறம் கூப்பிடுறேன் பை” என சொல்லை வைத்தான் போனை.

பவானிக்கு உறக்கம் இப்போது வரவில்லை, கணவனின் பேச்சே காதில் கீதம் பாடிக் கொண்டிருந்தது.

Advertisement